சென்னை மாநகர பேருந்து (பகுதி/2)


முதல் பகுதிக்கு பெருவாரியான ஆதரவு தந்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்...

அப்போது சென்னையில் தனி ஒருவனாக கஷ்டபட்டுக்கொண்டு இருந்த காலம் அது...காலையில் ஒரு டீ சாப்பிட்டு விட்டு... மதியத்துக்கு இரண்டு பரோட்டாவை தின்று அதிகம் தண்ணீர் குடித்த காலம் அது... எதை தின்னால் பித்தம் தெளியும்... எந்த வேலை செய்தால் வசந்த காற்று வீசும் என்று தெரியாமல் திகைத்து போய் சுற்றிக்கொண்டு இருந்த காலம் அது...

கைத்தொழில் தெரியாமல்... விலாசம் இல்லாத, உறவுகள் இல்லாத ஊரில் வேலை தேடுவது என்பது சாமானிய காரியம் அல்ல... சபையரில் படம் பார்த்து விட்டு மெரினாவுக்கு போக வேண்டும்... திநகரில் இருந்து 13ம் நம்பர் பஸ் வருகின்றது... அந்த பேருந்தை தவறவிட்டால் அடுத்து நடராஜா பயணம்தான்...அது தவுசன்ட் லைட் மசூதி அருகே சிக்னலில் வேகம் குறைத்து வளைய வேண்டும்... அந்த வேகம் குறைப்பின்... அந்த கனம் எனக்கு போதுமானதாக இருந்தது...

புரஜெக்ட் ஏ படத்தில் எனது தலைவர் ஜாக்கியை மனதில் நினைத்துக்கொண்டேன்... ஜாக்கிசான் ஓடுவது போல் பின்னங்கால் பிடரியில் பட ஓட... ஜன்னல் ஓர யுவதிகள் தலை நீட்டி பார்க்க.... இன்னும் ரத்த நாளங்களில் சூடேறி... கட்டுபடுத்த முடியாத குதிரை போல் பாய்ந்து ஓட ஆரம்பித்தேன்... பகலாக இருந்தாலும் டிராபிக் இருக்கும் ஆனால் இரவு என்பதால்.. பஸ் கவிழாமல் இருக்கும் அளவுக்கு.... வேகத்தை பேருந்து குறைத்து கொண்டது...

நான் ஓடி பேருந்தின் கடைசி ஜன்னலை தாவி பிடித்து விட்டேன்.. அந்த நேரத்தில் பேருந்து ராய பேட்டை பக்கம் வளைவில் வளைய... நான் அந்தரங்கத்தில் என் உடல் பறந்து தொப் என்று பேருந்தின் பாடியில் இடித்து நின்றது... எனது காலால் படிகட்டை துழவி ...படியில் கால் வைத்து பேருந்து உள்ளே போகும் போதே நடத்துனர் என்னை அர்சனை செய்வார் என்பது, தெரிந்து விட்டதால் நான் தயராக இருந்தேன்...

ஏனென்றால் என் மீது தவறு இருக்கின்றது....தவறு என் பக்கம் இருந்தால் ரொம்பவே அடக்கி வாசிக்கிறது இந்த ஜாக்கியோட ஸ்டைல்...

வேற எதாவது பஸ்ல இத போல அடிபட்டு சாக வேண்டியதுதானே... ?என் பஸ்ஸா கெடச்சுது...? புக்கிங் குளோஸ் பண்ணறப்ப கூட என் தாலியை அறுக்காம விடமாட்டிங்களா? என்று இன்னும் ஏகத்து அர்ச்சனை... இருப்பினும் பேருந்தில் வெற்றிகரமாக ஏறிய பெருமிதம் என்னிடத்தில்...



அதன் பிறகு சென்னை செங்குன்றத்தில் லாரி கிளினர் வேலை இருப்பதாக நண்பர் ஒருவர் சொல்ல... சரி லாரி டிரைவர் ராஜா கண்ணுவாக மாறிவிடலாம் என்று எண்ணி... நான் சாந்தம் தியேட்டரில் ஹாட் ஷாட் ஆங்கில படம் பார்த்து விட்டு மாநகர பேருந்தில் ஏறினேன்... புறநகர் பக்கம் போவது என்பதால் கூட்டம் அதிகம்.. வேர்வைநாற்றம் வேறு.. நாசியை துளைத்து கார்பன் டை ஆக்சைடாக உருமாற்றம் அடைந்து கொண்டு இருந்தது.....

நான் ஏறியதும் டிக்கெட் எடுத்து விடும் ரகம்... இப்போது மட்டும் அல்ல எப்போதுமே வித்தவுட்டில் ஏறியது இல்லை... ஒரு முறை அப்படி ஏறி டிக்கெட் எடுக்க மறந்து போய் நான் இறங்க வேண்டிய இரண்டாவது ஸ்டாப்... அருகில் நினைவு வந்து தொலைக்க இப்போது போய் கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டால் எறிந்த விழுவார் என்பதால்.... நான் வாயே திறக்க வில்லை... ஆனால் அடுத்த பஸ் ஸ்டாப்பில் டிக்கெட் செக்கர் இருந்தால் அவ்வளவுதான்.... இந்த ஜன்னல் ஓரம் உட்கார்ந்து இருக்கும் அந்த அழகு பெண் எதிரில் அசிங்க பட வேண்டி வருமே... என்று எல்லாம் கற்பனையில் பயந்து கழுத்து வியர்வை பிசு பிசுக்க வண்டி விட்டு இறங்கிய போது... நல்ல வேலை டிக்கெட் செக்கர் இல்லை... அது மட்டும்தான் மாநகர பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் மறந்து போய் வித்தவுட்டில் போனது...

உம்... சரி செங்குன்றம் பேருந்ததுக்கு வருவோம்...


செங்குன்றம் பேருந்தில் பயணித்து கொண்டு இருந்தேன்... எப்போதும் என் கையில் ஒரு டைரி வைத்துக்கொண்டு இருக்கும் பழக்கம் அப்போது என்னிடத்தில் உண்டு... நிறைய பள்ளி பிள்ளைகள் பேருந்தில் ஏறியதாலும் பெண்கள் கூட்டம் அதிகம் என்பதாலும் நான் சட்டென இறங்கி படியில் தொத்திக்கொண்டேன்.....பேருந்து நின்றது.. பேருந்து நிறுத்தம் எனக்கு இப்போது நினைவில் இல்லை...

பொதுவாக டிக்கெட் செக்கர்களுக்கு படிகட்டில் பயணம் செய்யும் அனைத்து இளைஞர்களும் பொறுக்கி பசங்க என்ற... தவறான எண்ணம் அவர்களுக்கு எப்போதும் உண்டு.... அதை இன்னும் ஈரேழு ஜென்மத்துக்கும் அதை மாற்ற முடியாது...

பேருந்தில் இருந்து இறங்கியதும்... டிக்கெட் கேட்டார்கள்... இருவர் கண் எதிரில் மாட்டிய போது... ஒரு டிக்கெட் செக்கர் மட்டும் பயங்கர கோபமாக பொங்கி எழுந்து டிக்கெட் எடுக்காதவர்களை பிடறியில் அடித்து ஜீப்பில் ஏற்றிக்கொண்டு இருந்தார்...

நான் எப்படி இவர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ய முடிகின்றது என்ற வியப்போடு அவர்களை நக்கல் பார்வை பார்த்து விட்டு என் பாக்கெட்டில் துழவினாள் டிக்கெட் இல்லை... எல்லா பையிலும் தேடி விட்டேன்... டிக்கெட் சத்தியமாக இல்லை... ஆனால் டிக்கெட் எடுத்தேன்.. ஆனால் இல்லை...10 ரூபாய்க்கே ததிகனத்தோம் போட்டு கொண்டு இருக்கும் போது ஸ்பாட் பைன் 100 எனும் போது அவசரமாக எனக்கு பயத்தில் சிறு நீர் வேறு வந்து தொலைந்தது...

டிக்கெட் எடுத்தேன்.. ஆனால் இல்லை... என்று எஸ்ஜே சூர்யா கணக்காக புலம்பிக்கொண்டு இருந்தேன்... டிக்கெட் எண்களை குறித்துக்கொண்டு பேருந்து புறப்பட... எல்லா பெண்களும் என்னை கேவலமாக பார்த்தார்கள்.. ஆண்களும் பார்த்தார்கள்... அவர்கள் பார்த்தால் என்ன ? பார்க்காவிட்டால் என்ன???

கழுத்து காலரை பிடித்து எல்லோர் முன்னிலையிலும் என்னை ஜீப்பில் ஏற்றி உட்கார வைத்து விட்டார்கள்... அதற்க்குள் எனது புகைபடம் தினத்ந்தியில் வருவது போலவும்... கோர்ட்டுக்கு அழைத்து போவது போலவும்.. அதை பார்த்து ,என் அப்பா நாண்டிகிட்டு சாவது போல் எல்லாம் கற்பனை இறக்கை கட்டி பறக்க... அக்னி நட்சத்திரம் கார்த்திக் போல ஜீப்பில் உட்கார்ந்து இருந்தேன்...

ஜீப் புறப்பட்டது.. என் எதிரில் உட்கார்ந்து இருந்த செக்கர்.. டிக்கெட் எடுக்க வக்கில்லை துரைக்கு டைரி வேறு கேட்குதோ? என்று என் டைரியை வாங்கி பார்த்தார்... சத்தியம் , தேவி, சாந்தி எல்லாம் சினிமா டிக்கெட் இங்கெல்லாம் டிக்கெட் எடுத்தாதான் உள்ளையே விடுவான்... பஸ்ல மட்டும் டிக்கெட் எடுக்காம போறதுக்கு எப்படி உங்களுக்கு எல்லாம் மனசு வருகின்றது என்று கேட்டபடி அடுத்த பக்கத்தை திரும்ப... சார் என் டிக்கெட் என்று நான்உற்சாகத்தில் கத்த... ஜீப் சற்றே ரோட்டில் அலைபாய்ந்து நின்றது...

டிக்கெட் எண்கள் சரிபார்க்க பட்டது....சரியாக இருக்கு என்று சொன்னதும்... ஜீப்பில் இருந்து இறக்கபட்டேன்...ஜீப்பில் ஒருவர் ... ஏதோ படிச்ச பையன் போல இருக்கானே என்று எனக்கு அப்பயே நவுட் ஓடிச்சி ...என்று சொன்னவரை ரொம்ப கேவலமாக ஒரு பார்வை பார்க்க... அவர் வாயை லபக்கென முடிக்கொண்டார்...


அடுத்த பகுதியில் மாநகர பேருந்தில் காதல்.. காமம்...

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்...
நன்றி.....

28 comments:

  1. hmm nalla anubavam intrestinga irunthathu sir

    ReplyDelete
  2. பஸ் பயண அனுபவத்தையே ராஜேஷ்குமார் நாவல் போல எடுத்து சென்றது அருமை..

    ReplyDelete
  3. இந்த தொல்லைக்குத்தான் டிக்கெட் எடுத்ததும் அதைப் பத்திரப்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன். நல்ல அனுபவம். பலருக்கும் இது பாடமாக இருக்கட்டும்.

    ReplyDelete
  4. அண்ணே உங்க அனுபவம் ஸ்வாரசியமா இருக்குண்ணே
    எனக்கு பஸ் அனுபவம் ரொம்ப கம்மி
    எவ்வளவு தூரம் இருந்தாலும் சைக்கிளில் போறதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்

    ReplyDelete
  5. நாட்குறிப்புக்குள் பயணச்சீட்டு அருமை ................ உங்களது ஏளன பார்வையும் அவரது அவமானமும் உங்கள் தரப்பு நியாயத்தின் உச்சம் ....... திரு. ஜாக்கி(தல) ......... சூப்பர் ........................

    ReplyDelete
  6. நாட்குறிப்புக்குள் பயணச்சீட்டு அருமை ................ உங்களது ஏளன பார்வையும் அவரது அவமானமும் உங்கள் தரப்பு நியாயத்தின் உச்சம் ....... திரு. ஜாக்கி(தல) ......... சூப்பர் ........................

    ReplyDelete
  7. இவ்வளவு கஷ்டப் பட்டிருக்கீங்களா ? படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.

    அந்த டிக்கெட் கிடைத்த உடன் சம்பவம் அருமை.

    ReplyDelete
  8. hi Jackie,

    I am reading your all post...Now a days you are not posting on hollywood movies as much .. i watch english movies after reading your post only ...keep more posting on movies tooo...your writing style is very nice..

    ReplyDelete
  9. நானும் கூட பல்லவனில் டிக்கெட் இல்லாமல் ஒரே ஒருமுறை பயணித்ததுண்டு... எல்லாம் ஒரு த்ரில்லிங்குக்காகத் தான்.. ஆனால் அந்த பயணம் முடிவதற்குள் செக்கிங்கில் மாட்டினால் என்னவாகும் என்ற பயமும் பதட்டமும் என்னை பாடாய்ப் படுத்திடுச்சு.. அதுக்கப்புறம் எப்போது பேருந்தில் ஏறினாலும் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் சரி, எப்படியாவது டிக்கெட் வாங்கிடுவேன்.. :)

    ReplyDelete
  10. சென்னை எவ்வளவு பேருக்கு பாடம் எடுக்குது!!

    ReplyDelete
  11. மாநகர பேரூந்து-- ஜாக்கி சேகர்.

    வெளியீடு--கிழக்கு பதிப்பகம்.

    கனவு வருகிறது, நிஜமாகுமா? ஜாக்கி

    ReplyDelete
  12. படிக்கும்போதே அதே பஸ்ல உங்ககூடவே வர மாதிரி பீலிங் வரது.

    ReplyDelete
  13. அந்த டைரி ..........உங்கள் காப்பாத்திடிச்சு.....அன்றாட வாழ்கையை சொல்லும் பதிவு.
    உங்களுக்கு என் புதுவருட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. ஜாக்கிசேகர், பரவாயில்லயே.. நல்லா ஞாபகம் வச்சுருக்கிங்க பழைய நினைவுகளை. எனக்கு போன வருஷம் நடந்ததே ஞாபகத்தில் வராது. நல்ல பதிவு.

    ReplyDelete
  15. hmm nalla anubavam intrestinga irunthathu sir--//

    நன்றி வினோத் உங்கள் தொடர் வருகைக்கும் பின்னுட்டத்துக்கும் என் நன்றிகள்

    ReplyDelete
  16. பஸ் பயண அனுபவத்தையே ராஜேஷ்குமார் நாவல் போல எடுத்து சென்றது அருமை..//

    நன்றி ராஜா ராமன்.. மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கும் பின்னுட்டத்துக்கும்

    ReplyDelete
  17. இந்த தொல்லைக்குத்தான் டிக்கெட் எடுத்ததும் அதைப் பத்திரப்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன். நல்ல அனுபவம். பலருக்கும் இது பாடமாக இருக்கட்டும்.//
    நன்றி அன்பு மணி... தியேட்டர்ல கூட சைக்கிள் டோக்கனை படம் பார்க்கற பதட்டத்துல மிஸ் பண்ணிடுவாங்க.. சில பேர்...

    ReplyDelete
  18. அண்ணே உங்க அனுபவம் ஸ்வாரசியமா இருக்குண்ணே
    எனக்கு பஸ் அனுபவம் ரொம்ப கம்மி
    எவ்வளவு தூரம் இருந்தாலும் சைக்கிளில் போறதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்//

    நன்றி பிஸ்கோத்து பயல் இந்த ஜாக்கியின் சைக்கிள் சுத்தாத இடமே சென்னையில் இல்லை... அந்த அனுபவங்கள் நேரம் கிடைக்கும் போது...

    ReplyDelete
  19. நாட்குறிப்புக்குள் பயணச்சீட்டு அருமை ................ உங்களது ஏளன பார்வையும் அவரது அவமானமும் உங்கள் தரப்பு நியாயத்தின் உச்சம் ....... திரு. ஜாக்கி(தல) ......... சூப்பர் ...//

    நன்றி ராஜ பிரியன் உங்கள் அழமான வாசிப்புக்கு.. தொடர் பின்னுட்டத்துக்கும் ஓட்டளி்புக்கும்..

    ReplyDelete
  20. இவ்வளவு கஷ்டப் பட்டிருக்கீங்களா ? படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.

    அந்த டிக்கெட் கிடைத்த உடன் சம்பவம் அருமை.//

    நிறைய பின்னோக்கி அத எல்லாம் நேரம் கிடைக்கும் போது... உங்களுடன் பகிருவேன்... அப்புறம் உங்கள் தொடர் பின்னுட்டத்துக்கு மிக்க நன்றி பின்னோக்கி..

    ReplyDelete
  21. hi Jackie,

    I am reading your all post...Now a days you are not posting on hollywood movies as much .. i watch english movies after reading your post only ...keep more posting on movies tooo...your writing style is very nice..//

    நன்றி பெரியார் மதி அடுத்த பதிவு உங்களுக்காக தான்..

    ReplyDelete
  22. நல்ல அனுபவ பதிவு//
    நன்றி சங்கரராம் மிக்க நன்றி வாசிப்புக்கு

    ReplyDelete
  23. ஆனால் அந்த பயணம் முடிவதற்குள் செக்கிங்கில் மாட்டினால் என்னவாகும் என்ற பயமும் பதட்டமும் என்னை பாடாய்ப் படுத்திடுச்சு.. அதுக்கப்புறம் எப்போது பேருந்தில் ஏறினாலும் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் சரி, எப்படியாவது டிக்கெட் வாங்கிடுவேன்.. :)//

    உண்மைதான் மணி அந்த பயம் இருக்கே அதுக்கு டிக்கெட் எடுத்து தொலைச்சிடலாம்..

    ReplyDelete
  24. சென்னை எவ்வளவு பேருக்கு பாடம் எடுக்குது!!//

    நன்றி வடுவூர் குமார்... உங்கள் வருகைக்கும் பின்னுட்டத்துக்கும்

    ReplyDelete
  25. மாநகர பேரூந்து-- ஜாக்கி சேகர்.

    வெளியீடு--கிழக்கு பதிப்பகம்.

    கனவு வருகிறது, நிஜமாகுமா? ஜாக்கி//

    கனவு நிஜமாகும் ... நிச்சயம் உங்கள் கனவு நிஜமாகும்...

    நன்றி காவேரி கனேஷ்

    ReplyDelete
  26. படிக்கும்போதே அதே பஸ்ல உங்ககூடவே வர மாதிரி பீலிங் வரது.//
    நன்றி சைவ கொத்து பரோட்டா...உங்கள் தொடர் வாசிப்புக்கும் பின்னுட்டத்துக்கும்..

    ReplyDelete
  27. ஜாக்கிசேகர், பரவாயில்லயே.. நல்லா ஞாபகம் வச்சுருக்கிங்க பழைய நினைவுகளை. எனக்கு போன வருஷம் நடந்ததே ஞாபகத்தில் வராது. நல்ல பதிவு.//
    கோபி நானே நிறைய மறந்துட்டேன்னு வருத்தத்துல இருக்கேன்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner