சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(12/01/10)

ஆல்பம்....

எப்போதும் போல் ரகுமானின் இசை... முதல் முறை கேட்கும் போது விண்ணைதாண்டி வருவாயா படப்பாடல்கள் சட்டென நெஞ்சை தொடவில்லை... பாடல் வெளியிட்டதும் எனக்கு தெரிந்து பட்டி தொட்டி எல்லாம் ரொம்பவும் பிரபலமான பாடல்கள் என்றால்... அது ஜென்டில்மேன்,காதலன்,இந்தியன், அலைபாயுதே, போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்....

ஓமனே பெண்ணே... என்ற பாடல் முதல் முறை கேட்கும் போது மனதில் பதியாட்டாலும்.. மறுமுறை கேட்கும் போது பதிவது ரகுமானின் சிறப்பு என்பேன்..

இரண்டாவது பாடலாக அன்பில் அவள் பாடல் இந்த 2010ம் ஆண்டின் இளைஞர்களின் தேசியகீதமாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை... சின்மயின் அலட்சிய குரல் அற்புதம்...

மன்னிப்பாயா பாடலில் தலைவர் ரகுமான் ஹைபிட்சில் பொலந்து கட்டி இருக்கின்றார்... அதில் வரும் உருகி உருகி என்று வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் அற்புதம்....

விண்ணை தாண்டி வருவாயா... படப்பாடல்கள்... கேட்க கேட்க நெஞ்சை கொள்ளை கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை...



வேண்டுகோள்...


வீடு பார்த்து கொண்டு இருக்கின்றேன்... ரொம்ப விலை குறைவாக அடுக்குமாடி குடியிருப்பில் செகன்ஹேண்ட் பிளாட் , வளசரவாக்கம்,ராமபுரம், நெசப்பாக்க்ம், ஆலப்பாக்கம்,சின்ன போருர், விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர், போன்ற இடங்களில் டபுள் பெட்ரூம் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்... சென்னை பதிவர்களும், அவர்களின் நண்பர்களும் இதனை படிக்க நேர்ந்தால் என்னை இ மெயிலில் தொடர்பு கொள்ளவும்... தனி வீடு என்பது பட்ஜெட்டுக்கு சாத்தியமில்லை என்பதால், புது அடுக்குமாடி வீடு மற்றும் செகண்ட்ஹேண்டில் பிளாட் பார்க்கின்றேன்...... 18 லட்சத்துக்கு கீழே பார்க்கின்றேன்... மேலுள்ள குறிப்பிட்ட இடங்களை நான் பார்க்க ஒரே காரணம்... பக்கத்தில் வடபழனி ,ஸ்டுடியோக்கள் இருப்பதால் இப்படியாக பார்க்கின்றேன்... வேறு இடத்தில் இருந்தாலும் சொல்லுங்கள்... பிடித்தால் பார்க்கலாம்.... புரோக்கர்கள் கையில் பல வீடுகள் அகபட்டுக்கொண்டு இருக்கின்றன....

மிக்சர்....
ஜடியா மொபைலின் விளம்பரத்தில் மரத்தை வெட்டக்கூடாது ... பேப்பருக்காகதானே மரம் வெட்ட படுகின்றது... எல்லாவற்றிலும் மொபலை உபயோகித்தால் மரம் வெட்டப்படுவது தடுக்கப்படும் என்ற அந்த விளம்பரம் அற்புதம்...

அதே போல் கேரள கல்யான் ஜீவல்லர்சின் விளம்பரத்தில் ஒரு வயதுக்கு வந்த பெண் வீட்டை விட்டு ஓடுகின்றாள்... விடியலில் அவள் எழுதி வைத்து விட்டு போகும் கடிதத்தை பார்த்து, அம்மாவும் அப்பாவும் நிலைகுலைகின்றார்கள்... பேருந்தில் போகும் போது அம்மாவையும் அப்பாவையும் நினைத்து பார்க்கின்றாள்... திரும்ப உடனே விட்டுக்கு வர முடிவு செய்கின்றாள் அந்த பெண்... அப்பாவுக்கு கோபம் கை முஷ்ட்டிகளில் தெரிந்தாலும் ... மகள் திரும்ப வந்தது குறித்து சந்தோஷம் கொண்டு கட்டி தழுவுகின்றார்... விஸ்வாசம் அதில் எல்லாம் என்பதோடு விளம்பரம் நிறைவு பெருகின்றது... அப்பாவுக்கும் மகளுக்குமான காதலை மிக உயர்வாய் சொன்ன இந்த விளம்பர படம் எனக்கு மிகவும் பிடித்து ஒன்று...



அதையே கொஞ்சம் மாற்றி நம்ம தமிழ் நேட்டிவிட்டிக்கு ஏத்தது போல....




டிஸ்கவரி சேனல் தமிழில் அசத்திக்கொண்டு இருக்கின்றது...எப்போது வைத்தாலும் எதாவது ஒரு விஷயத்தை விஷுவலாக தமிழில் பார்த்து ரசிக்கலாம்.. என்பது கூடுதல் சிறப்பு... நன்றி டிஸ்கவிரி சேனலுக்கு....

நான்வெஜ்....

நண்பர் தண்டோரா.... தோளில் தூக்கி போட்டுக்கொண்டு திரிந்து கொண்டு இருந்தேன்.. என்று கவிதை எழுத போவதாக சொன்னதும் இந்த ஜோக் ஞாபகம் வந்து தொலைத்தது....

தமிழகத்தில் எந்த ஆணுக்கு பிறப்புறுப்பு ரொம்ப பெரிதானது என்ற போட்டி நடை பெற்றுக்கொண்டு இருந்தது... போட்டி நடை பெற்ற இடம் ... எல்ஐசி கட்டிடத்தின் 14 மாடியில் நடை பெற்றுக்கொண்டு இருந்தது... வெளிநாட்டுகாரர்கள் யாருக்கும் அனுமதியில்லை... இது சுதேசி போட்டி என்று செய்திதாளில் அறிவித்து விட்டார்கள்.... ஜெயிப்பவருக்கு 10 லட்சம் பணமும்.... 2010கிங் பிஷர் காலாண்டரில் உள்ள 12 நாயகிகளும் மாதத்திற்க்கு ஒன்று என்று அனுபவித்து கொள்ளலாம் என்றும் கட்டன் ரைட்டாக சொல்லி இருந்த காரணத்தால்... மவுன்ட் ரோடில் செம டிராபிக் ஜாம்.... இவ்வளவு கூட்டத்தையும் மாடியில ஏத்தினா... பழைய கட்டிடம் தாங்காது என்பதால்... எல்ஐசி தரைதளத்திலேயே.. விழாக்குழுவினர் ஆர்வ கோளாறுகளை கழிச்சி கட்ட துவங்கினர்....

விழாக்குழுவினர் மயக்கம் மற்றும் பொறாமை வரும் கணக்கில் பல சைஸ்களில் பார்த்து தொலைத்தனர்...
ஒரு அடி ஸ்கேல் அளவில் இருந்து .பலர் தோளில் தொங்க போட்டுக்கொண்டு எல்லாம் போட்டிக்கு வந்து இருந்தார்கள்...ஒருவர் போத்திஸ் கட்டை பையில் ஒரு 20 அடிக்கு சுருட்டி வைத்து இருந்தார்... ஒருவர் டிராவல் பேகில்50 அடிக்கு சுருட்டி வைத்து இருந்தார்... இப்படியாக பல போட்டியாளர்களை தேர்வு செய் கொண்டு.... 14 வது மாடிக்கு சென்று விட்டார்கள்...கதவு இழுத்து பூட்ட பட்டது....


அவன் லேட்டாக போட்டிக்கு வந்தான்... கதவு பூட்டி இருந்த காரணத்தால் பக்கத்தில் தொங்கி கொண்டு இருந்த ரோப்பை பிடித்து சர சரவென 14 மாடி ஏறி... அங்கு நின்று கொண்டு இருந்தவரிடம்... ஏங்க போட்டி முடிஞ்சிடுத்தா? என்று கேட்க? சரி உன் சைஸ் எத்தனை என்று கேட்க? ஏறி வந்தவன் நக்கலாக உன் சைஸ் என்ன என்று கேட்க... இப்ப நீ ஏறி வந்தியே அது ரோப்பு கிடையாது அது என்னோட.... என்று சொல்வதற்க்குள் அவன் மயக்கமாகிவிட்டான்....

விழா குழுவினர் எல்ஐசி உயர ரோப் பார்ட்டிக்கு தமிழகத்தின் மிகப்பெரிய என்ற பட்டத்தை வழங்க அவரை மேடைக்கு அழைக்க.... அனகோண்டா போல் ஒன்று, சட்டென ஜன்னல் கண்ணாடிகளை எல்லாம் உடைத்துக்கொண்டு அது உள்ளே நுழைந்தது... அதன் நுனியில் வீடு வாடகைக்கு விடப்படும் என்று எல்லோர் வீட்டிலும் ஒரு போர்டு தொங்க விட்டு இருப்பார்களே... அது போல போர்டு தொங்கி கொண்டு இருக்க... விழாக்குழுவினர் பீதியில் அதில் என்ன எழுதி இருக்கின்றது என்று, ஆர்வத்துடன் படித்து பார்க்க இப்படி எழுதி இருந்தது...

என் பெயர் வேலாயுதம்.. நான் இப்போதுதான் செங்கல்பட்டில் பஸ் ஏறி இருக்கின்றேன்... தயவு செய்து போட்டியை முடிக்கவேண்டாம் என கேட்டு்க்கொள்கின்றேன்.. என்று எழுதி இருக்க.... இப்போது ஒருவர் மயக்ம் போட்டு விழும் சத்தம் கேட்க... யார் என்று பார்த்தால்... நம்ம ரோப் பார்ட்டி.....

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

38 comments:

  1. லேபிள் கரரக்ட் தான் கலக்கல் சாண்ட்வெஜ்

    ReplyDelete
  2. மன்னிப்பாயா பாடலை காலையில் தான் கேட்டேன். கேட்டதும் பிடிச்சது.

    வீடு வாங்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ஜோக் எங்க பிடிச்ச ஜாக்கி, ஆபிஸ்ல தனியா ஒக்காந்து சிரிச்சிக்கிட்டு இருக்கேன்...
    அந்த போட்டிக்கு நீயும் போனதா PTI செய்திக்குறிப்பு ஒண்ணு சொல்லுதே, உண்மையா??
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  4. சாண்ட்வெஜ் ஸூப்பர்..
    வீடு வாங்க வாழ்த்துக்கள்..::)

    ReplyDelete
  5. விளம்பரம் கவிதை, நான் வெஜ் லக... லக...

    ReplyDelete
  6. லேபிள் கரரக்ட் தான் கலக்கல் சாண்ட்வெஜ்//
    நன்றி அக்னிபார்வை.. நீ இல்லாம சென்னை பதிவர் சந்திப்பு கலை கட்ட மாட்டேங்குது...

    ReplyDelete
  7. மன்னிப்பாயா பாடலை காலையில் தான் கேட்டேன். கேட்டதும் பிடிச்சது.

    வீடு வாங்க வாழ்த்துக்கள்.//
    நன்றி அகில் பூங்குன்றன்.. உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்....
    அன்பில் அவள் சாங் செம சூப்பர்...

    ReplyDelete
  8. ஜோக் எங்க பிடிச்ச ஜாக்கி, ஆபிஸ்ல தனியா ஒக்காந்து சிரிச்சிக்கிட்டு இருக்கேன்...
    அந்த போட்டிக்கு நீயும் போனதா PTI செய்திக்குறிப்பு ஒண்ணு சொல்லுதே, உண்மையா??
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்//

    ஸ்ரீ இது பழைய ஜோக்... அந்த ரோப்பை புடிச்சிகிட்டு எறினது யாருன்னு நினைக்கறே???

    ReplyDelete
  9. சாண்ட்வெஜ் ஸூப்பர்..
    வீடு வாங்க வாழ்த்துக்கள்..::)//
    நன்றி பலா பட்டறை வாழ்த்துக்கும் தொடர் வருகைக்கும்..

    ReplyDelete
  10. விளம்பரம் கவிதை, நான் வெஜ் லக... லக...//

    சைவ கொத்துபரோட்டா.. எனக்கு ரொம்ப பிடிச்ச விளம்பரம் இது...

    ReplyDelete
  11. சாண்ட்விட்ச் சூப்பர்..
    "ஹோசன்னா" பாட்டை விட்டுட்டீங்களே..
    நான்வெஜ் ஜோக்கு ரொம்ப பழசு.. அதை தூசு தட்டி.. இன்னிக்கு ஏத்த மாதிரி சொன்ன விதம் அருமை..

    ReplyDelete
  12. செங்கல்பட்டில் பஸ் ஏறி இருக்கின்றேன்... ////

    சேச்சே.... பொதுவுல வச்சா சொல்றது :)

    ReplyDelete
  13. ஐயோ போதும்டா சாமி............. ரோப்பு வளந்து போச்சு, எனக்கு யார், யாரதுன்னு அடையாளம் கண்டுபிடிக்க முடியலை நான் ஒரு "குத்து" மதிப்பாதான் தேடிகிட்டு இருக்கன் ..................:D

    ReplyDelete
  14. A.R.R இன்ஸ்டண்ட் ஹிட்ல “கிழக்கு சீமையிலே” இருக்கு

    ReplyDelete
  15. செங்கல்பட்டுன்னு போட்டுட்டீங்க! பேரையும் போட்டுயிருக்கலாம்...
    குட் சாண்ட்வெஜ்..

    ReplyDelete
  16. நல்ல வீடு கிடைக்கட்டும் ஜாக்கி சேகர் உங்களுக்கு

    உங்க வலைத்தளம் அப்பபோ வந்து வாசிப்பேன் இப்போ ஃபாலோ பண்ணுறேன்

    ReplyDelete
  17. Kalakkal Sandwich. You may try moderate cost Apts in Avadi area.

    ReplyDelete
  18. LIC 14 மாடி வரைக்கும் ஏற்கனவே படிச்ச ஞாபகம். செங்கல்பட்டு மேட்டர் சூப்பர் தல

    ReplyDelete
  19. கொஞ்சம் பழைய ஜோக் தான். ஆனா நம்மூர் நேட்டிவிட்டிக்குக் கொடுக்கிறப்போ கலக்கல்.

    சஹாராவில் பனிமழை ஜோக் தெரியுமா ;-) ?

    ReplyDelete
  20. பாடல்கள் எல்லாமே நல்லாருக்கு!
    படம் ஓடலீனா பாடல்களும் கேக்க போரடுச்சுடுமே.

    இந்தமாதிரியே பெண்களுக்கு ஒரு போட்டி வெச்சாங்களாமா அதேமாதிரி பரிசு அறிவிக்கும் கடைசி நேரத்துல வந்த ஒரு பொம்பளய போட்டிலயே இல்ல “நீ யாரும்ம?னு” கேக்க போட்டியே ‘என்ற’துலதான் நடக்குதுனு சொன்னாளாமா.
    அந்த ஜோக் ஞாபகத்துக்கு வருதுங்க சார்

    ReplyDelete
  21. Nice post, interesting to read.

    as PInnokki said, Kilakku seemaiyile, tirudaa tirudaa, Duet also were in ARR'S instant hits.

    But when I see Simbu as Hero, I am scared to see the film Vinnaitaandi varuvaaya.
    We should appreciate ARR's tolerance, impartiality level, of composing music to Oscar type and also for Simbu kind of films. ARR u r really great. I salute u buddy.

    LIC joke is nice.

    ReplyDelete
  22. Jackie,

    Joke was enjoyable after though it was old. It remined my college days when some of us were trying to have a similar comptetion in my hostel.

    All best to buy a house in Chennai. Since I don't have a Chennai address, even I am trying to buy one house in South Chennai- around Nanganallur area- but I need an independent house with land area min 2400 sq ft and built area 3000 sq ft. Budget is not a problem. If you come across something during your search, please let me know.

    Regards,

    Bala.
    +234 708 999 69 84

    ReplyDelete
  23. பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
    எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
    www.radaan.tv

    http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

    ReplyDelete
  24. சாண்ட்விட்ச் சூப்பர்..
    "ஹோசன்னா" பாட்டை விட்டுட்டீங்களே..
    நான்வெஜ் ஜோக்கு ரொம்ப பழசு.. அதை தூசு தட்டி.. இன்னிக்கு ஏத்த மாதிரி சொன்ன விதம் அருமை..-


    நன்றி மணி...

    ReplyDelete
  25. செங்கல்பட்டில் பஸ் ஏறி இருக்கின்றேன்... ////

    சேச்சே.... பொதுவுல வச்சா சொல்றது :)//

    வேற எப்படி உன்னை பத்தி சொல்லறது பாப்பு... நன்றி பாப்பு வருகைக்கு

    ReplyDelete
  26. ஐயோ போதும்டா சாமி............. ரோப்பு வளந்து போச்சு, எனக்கு யார், யாரதுன்னு அடையாளம் கண்டுபிடிக்க முடியலை நான் ஒரு "குத்து" மதிப்பாதான் தேடிகிட்டு இருக்கன் ..................:D//

    நன்றி ராஜபிரியன்.. மிக்க நன்றி

    ReplyDelete
  27. A.R.R இன்ஸ்டண்ட் ஹிட்ல “கிழக்கு சீமையிலே” இருக்கு//

    கிழக்கு சீமையிலே வ்நதாலும்... அது கிராமத்து மியிசிக் சாயல்ல இல்லைன்னு ஒரு அலை இருந்தது உண்மை..

    ReplyDelete
  28. நல்ல வீடு கிடைக்கட்டும் ஜாக்கி சேகர் உங்களுக்கு

    உங்க வலைத்தளம் அப்பபோ வந்து வாசிப்பேன் இப்போ ஃபாலோ பண்ணுறேன்//
    நன்றி தேனம்மை.. உங்களை போன்ற கவிதாயினிகளின் என் வலைதளப்பக்கம் வீச வேண்டும்.. மிக்க நன்றி

    ReplyDelete
  29. Kalakkal Sandwich. You may try moderate cost Apts in Avadi area.//

    ஆவடி பக்கம் ரொம்ப தொலைவு ராஜ்... அது மட்டும் அல்ல எனக்கு ஷுட்டிங் போக எனக்கு சரியான இடம் இதுதான்..

    ReplyDelete
  30. LIC 14 மாடி வரைக்கும் ஏற்கனவே படிச்ச ஞாபகம். செங்கல்பட்டு மேட்டர் சூப்பர் தல//
    நன்றி குரு தொடர் வருகைக்கும் மறக்காம போடற உங்க பின்னுட்டத்துக்கும்.. நன்றிகள்

    ReplyDelete
  31. கொஞ்சம் பழைய ஜோக் தான். ஆனா நம்மூர் நேட்டிவிட்டிக்குக் கொடுக்கிறப்போ கலக்கல்.

    சஹாராவில் பனிமழை ஜோக் தெரியுமா ;-) ?//

    ஏங்க கேவிஆர் இது போல ஜோக் இருந்தா அனுப்பி வைங்க சாண்ட்விஜ்க்கு யூஸ் ஆகும்..

    ReplyDelete
  32. இந்தமாதிரியே பெண்களுக்கு ஒரு போட்டி வெச்சாங்களாமா அதேமாதிரி பரிசு அறிவிக்கும் கடைசி நேரத்துல வந்த ஒரு பொம்பளய போட்டிலயே இல்ல “நீ யாரும்ம?னு” கேக்க போட்டியே ‘என்ற’துலதான் நடக்குதுனு சொன்னாளாமா.
    அந்த ஜோக் ஞாபகத்துக்கு வருதுங்க சார்///

    நல்ல ஞாபகம் வந்துச்சு போங்க..

    ReplyDelete
  33. Nice post, interesting to read.

    as PInnokki said, Kilakku seemaiyile, tirudaa tirudaa, Duet also were in ARR'S instant hits.

    But when I see Simbu as Hero, I am scared to see the film Vinnaitaandi varuvaaya.
    We should appreciate ARR's tolerance, impartiality level, of composing music to Oscar type and also for Simbu kind of films. ARR u r really great. I salute u buddy.

    LIC joke is nice.//

    நன்றி குப்பன்...
    சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்... இன்னும் நிறைய ரகுமான் படங்கள் சொல்லலாம்...


    ஒரு கலைஞன் பல தளங்களில் இயங்க வேண்டும் அதுதான்... ஒரு கலைஞனுக்கு பெருமையும் கூட...

    உங்களுடன் சேர்ந்து...ரகுமானை நானும் வாழ்த்துகின்றேன்..

    ReplyDelete
  34. செங்கல்பட்டுன்னு போட்டுட்டீங்க! பேரையும் போட்டுயிருக்கலாம்...
    குட் சாண்ட்வெஜ்..//

    நன்றி கலையரசன்...தொடர் வருகைக்கும் பின்னுட்டத்துக்கும்..

    செங்கல்பட்டுகாரன் பேர்தான் வேலாயுதம்னு போட்டு இருக்கேனே..

    ReplyDelete
  35. Joke was enjoyable after though it was old. It remined my college days when some of us were trying to have a similar comptetion in my hostel.// ஓல்டுதான் கொஞ்சம் நகாசு பண்ணி கொடுத்தேன்.. நீங்க சொல்லறதை மைன்ட்ல வச்சி இருக்கேன்... கண்டிப்பா பாலோ பண்ணுகின்றேன்..

    ReplyDelete
  36. New templet is good...

    என்னை பற்றி...very touching

    சாண்ட்வெஜ்...superb

    நான்வெஜ்.....I know up this "இப்ப நீ ஏறி வந்தியே அது ரோப்பு கிடையாது"...the climax is very funny.

    - rajkumar

    ReplyDelete
  37. அண்ணே.....
    சூப்பரா இருக்குண்னா..... இந்த வார சாண்ட்விச் அண்ட் நான்வெஜ்.... முக்கியமா அந்த

    நன்றிகளூடன்
    தமிழ் உதயன்...

    ReplyDelete
  38. JACKIE, non veg joke romba plan panni yosichigalo

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner