சவரக்கத்தி திரைவிமர்சனம்.



கற்றது தமிழ் ராமும் சரி மிஷ்கினும் சரி   இரண்டு பேருமே டென்ஷன் பார்ட்டிங்க… ஆனா  இதுங்க ரெண்டும் டார்க் காமெடி பண்ணி அது  பெரியஅளவுல ஒர்க் அவுட்  ஆகி இருக்கற படம்தான்  சவரக்கத்தி.
மிஷ்கின் தம்பி  ஆதித்யா இயக்கத்துல இரண்டு வருஷத்துக்கு  முன்ன ஆரம்பிச்சி  ரிலிஸ் எப்ப  ஆவும்ன்னு கேள்விகளோடு சுத்தி வந்து படம் ஒரு வழியா ரிலிஸ்  ஆயிடுச்சி.


கீரல் / ஜாக்கிசேகர் சிறுகதை-




சென்னை திருவான்மியூரில் சிவன் கோவில் அருகே அந்த மாமி கடை இருக்கின்றது…

எச்சரிக்கை… நானும் திருவான்மியூர்தான் எங்க இருக்கு சொன்னா நல்லா இருக்கும் என்று ஆர்வத்தோடு கேட்பவர்கள் இந்த வரியோடு அபீட் ஆகிகொள்ள வேண்டுமாய் தமிழ் சமுகத்தை கேட்டுக்கொள்கிறேன்.


சார் ரம்பா சார்.






வாழ்க்கையை 100 சதவிகிதம் சிஸ்ட்ட மேட்டிக்காக நான் அமைத்துக்கொண்டதே இல்லை… அப்படி அமைத்துக்கொண்டு வாழ்ந்தவர்களுக்கு இந்த இயற்கையும் சரி.. சமுகமும் சரி.. பெரியதாய் கிழித்து விடவில்லை.. அவ்வப்போது அபத்தங்களை வாழ்வில் சரிபாதியாக சேர்த்துக்கொள்வதும் உண்டு..

அபத்தம் என்பதற்கு பைத்தியக்காரதனம் என்று சொல்லலாமா?????

உதாரணத்துக்கு வீட்டுக்கு செல்ல சுத்து வழி என்று தெரிந்தும் … பிடித்த தெருவில் பயணிக்க அரை கிலோ மீட்டர் செவழிக்கிறேன்...

அந்த தெருவில் என்ன இருக்கும்..--?

ஒரு பரந்து விரிந்த அழகான மரம் இருக்கும்…

கொஞ்சம் தள்ளி முன் பக்கம் கார்டன் பூத்து குலுங்க ஏக்கத்தோடு பார்த்து மனதை தேற்றிக்கொள்வது போல அழகான வீடு இருக்கும்..


தி ரியல் பேட் மேன் அருணாச்சலம் முருகானந்தம்.




நேசவு வேலை செய்யும் குடும்பம்.. சின்ன வயதில் இருந்து  நூல் பஞ்சு என்று போனது   #அருணாச்சலம் #முருகானந்தம் மின் வாழ்க்கை

 அப்பாவின் மரணம் குடும்ப   பொறுப்பை ஏற்றுக்கொள்ள வைத்தது....
 எட்டாம் வகுப்பை முடிக்கவில்லை..  முருகானந்தம்...


நிமிர் திரைவிமர்சனம்.



#நிமிர் #Nimir Movie Review

மககேஷின்ட பிரதிகாரத்து பாகத்தை உதயநிதியோடு  எந்த விதத்திலும் கம்பேர் செய்ய முடியாது… ஆனால் நிமிர் படத்தில்  உதயநிதி மோசமில்லை,

 அதற்கு இன்னோரு காரணமும் இருக்கின்றது.. பிரியதர்ஷன் தவிர்த்து வேறு   எந்த இயக்குனர் இந்த  திரைப்படத்தை இயக்கி இருந்தாலும் படம்  கொத்து பரோட்டா ஆகி இருக்கும்.. அப்படி மலையாத்தில் இருந்து ரிமேக் செய்த முந்தைய தமிழ்  திரைப்படங்கள் சொல்லும்  சேதியும்  அதுதான்.


#பத்மாவதி திரைவிமர்சனம்.


#பத்மாவதி திரைவிமர்சனம்.
ஏன்டா இந்த படத்துக்கு இப்படி ஒரு விமர்சனத்தை வச்சிங்க… ?? தீபிகபடுகோன் நாக்கை வெட்டிக்கிட்டுவா தலைய வெட்டிக்கிட்டு வான்னு  கசாப்புகடைக்காரன் ரேஞ்சிக்கு அறிக்கை விட்டுக்குடுட்டு இருந்தானுங்க…

  படத்தை பார்த்த அப்படி ஒரு கருமமும் இல்லை..
 13 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த மேவர் நாட்டு ராஜபுத்திர அரசிதான் பத்மாவதி… அலவுதின் கில்ஜி கொடுத்த கொடைச்சலையும் மீறி எப்படி தன் கணவனை  காப்பாற்றினாங்க என்பதுதான் திரைப்படத்தின் சுவாரஸ்ய கதை.


Darkest Hour 2017 movie Review | டார்க்கஸ்ட் ஹவர் திரைவிமர்சனம்




#Darkesthour 2017  movie Review

டார்க்கஸ்ட் ஹவர்.

 கிரிஸ்டோபர் நோலன்  டங்க்ரிக் திரைப்படம் எடுத்தார்…  டங்கரிக் கடற்கரையில்  மூன்று  லட்சம் இங்கிலாந்து  வீரர்கள் வாழ்வா சாவா  போராட்டத்தை மிக நெருக்கமாக பதிவு செய்தார்…

அதே வேளையில்  மூன்று லட்சம் இங்கிலாந்து வீரர்கள் வாழ்வா சாவா போராட்டத்தை சந்தித்த போது இங்கிலாந்து அரசியல் தலைவர்கள் முக்கியமாக இங்கிலாந்து பிரமர் வின்சன் சர்ச்சில் என்ன முடிவுகளை எடுத்தார்… தன் பிள்ளைகள் டங்கிரிக் கடற்கரையில் இருக்கும் போது அவர் சந்தித்த பிரச்சனைகள் என்ன -  நாடு சரணகதி என்ற ஒற்றை   வார்த்தையில் சிக்கி தவித்த போது   அவர் எடுத்த நிலைப்பாடு என்ன என்பதுதான்  டார்க்கஸ்ட் ஹவர்  திரைப்படத்தின் கதை….

வின்சன்ட் சர்ச்சில் ஆக கேரி ஓல்ட் மேன்… ஏர் போர்ஸ் ஒன் திரைப்படத்தில் ஹரிசன் போர்ட்டு கெட் அவுட் மை பிளேன் என்று தள்ளி விடுவாரே.. அந்த படத்தில் தீவிரவாதி வேஷம் போட்டவர்தான்… இந்த படத்தில் வின்சன் சர்ச்சிலாக அசத்தி இருக்கின்றார்…

ஸ்கெட்ச் திரைவிமர்சனம்.


#ஸ்கெட்ச்… நமக்கா விக்ரமுக்கா….??
பார்த்து சலித்து போன பழிக்கு  பழிவாங்கும் ஆக்ஷன் திரில்லர் கதைதான்… அதை கொடுத்த விதத்தில்  அசத்தி இருக்கின்றார்கள்..

விக்ரம் வடசென்னையில் ஒரு  சேட்டுகிட்ட வேலை செய்யறாப்பள… அது என்னன்னா..  வண்டிக்கு லோன் போட்டு வண்டி எடுத்துட்டு அப்பாலிக்கா   பணம் கட்டலைன்னா..?


2017 ஆம் ஆண்டின் பெஸ்ட் டாப்டென் தமிழ் கிரைம் திரில்லர்




2017 ஆம் ஆண்டின் பெஸ்ட் டாப்டென்   தமிழ் கிரைம் திரில்லர் திரைப்படங்களை பட்டியல் இட்டு இருக்கிறேன்.

இளைஞர்கள்தான்  திரையரங்கிற்கு  வருகின்றார்கள் என்பதால்..  கிரைம் திரில்லர் திரைப்படங்கள் இந்த வருடம் நிறைய வெளியாகின...

சில திரைப்படங்கள் கொஞ்ம்  நன்றாக மெனக்கெட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக வந்து இருக்கும்... மக்கள் மனதிலும் நின்று இருக்கும்...


யாழினி சான்டாவுக்கு எழுதிய கடிதம்.....





நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிருஸ்மஸ் தின நல்வாழ்த்துகள்.

யாழினி சான்டாவுக்கு எழுதிய கடிதம்.....

அப்பா  ஐ வான்ட் மேக் வீடியோ?

 வாட் கைன்ட் ஆப் வீடியோடா...--??

எ லட்டர்  டூ சான்டா...

 சான்டாவுக்கு லட்டர் எழுத போறியா???

 ஆமாம்பா...


கோவலன் கண்ணகி குறும்பட விமர்சனம்.






 காதல் மறுக்கப்பட்ட தேசத்தில் காதல் பெரிய விஷயம்தானே.. இந்த குறும்படமும்  காதலை  மையப்பபடுத்துகின்றது என்றாலும் ஏனைய குறும்படங்கள் போல  அமெச்சூர்தனம் இல்லாமல் மேக்கிங்கில் அசத்தி இருக்கின்றார்கள்.

ஒரு காதல் கதையை.. காதலன்   அவனுடைய பாயிண்டாஆப் வீயூவில் தன் நண்பனிடமும்.. காதலி அவன் பாயிண்டாஆப் வியூவில் அவள் நண்பியிடமும் கதை சொல்வதில் விரிகின்றது.. இந்த  குறும்படத்தின் கதை..  சாரி பைலட் பிலிமின் கதை..

இசையமைப்பாளர் ஆதித்யன் சில நினைவுகள் மற்றும் அஞ்சலிகள்


1992 ஆம் ஆண்டு பொங்கலுக்கு கடலு ரமேஷ் தியேட்டரில் அமரன் திரைப்படம் ரிலிஸ் ஆனாது..

கார்த்திக் இரண்டு பாடல்கள் பாடி இருந்தார்... கார்த்திக் பீக்கில் இருந்த நேரம்... வெத்தலை போட்டோ ஷோக்குல.... முஸ்தபா என்று இரண்டு பாடல்கள்..

ஸ்ரீவித்யா பாடிய டிரிங் டிரிங் சாங் பட்டி தொட்டி எங்கும் பின்னி பெடல் எடுத்துக்கொண்டு இருந்தது..

Jack Reacher: Never Go Back 2016 Movie Review



Jack Reacher: Never Go Back  2016  Movie Review Tamil By Jackiesekar
#ஜாக்ரீச்சர்...

 முதல் பாகத்தில் நிறைய சாகசங்கள் செய்த மேஜர்... அந்த இரண்டாம் பாகத்தில் அப்பா மகள் சென்டிமென்டோடு சாகசங்கள் செய்கின்றார்...

சமுக பணியில் ஈடுபட்டு ஆள் கடத்தலை கட்டுப்படுத்தி நேராக மிலிட்டரி பள்ளியில் இருக்கும்  தனது தோழி டுயுனரை பார்க்க போகின்றார் ஜாக் ரீச்சரான டாம் க்ரூஸ் ...


#திருட்டுபயலே… #திரைவிமர்சனம்



#ThiruttuPayale2 Tamil Movie Review By Jackiesekar | #BobbySimha #AmalaPaul #Prasanna

பேஸ்புக்கில்  மட்டுமல்ல சமுகவலைதளங்களில் இயங்கும்  பெண்கள் எப்படி எல்லாம் குறி வைக்கப்படுகின்றார்கள் என்பதை அற்புதமான திரில்லரோடு  விருந்து வைத்து இருக்கின்றார் சுசிகணேசன்.

ஹீரோவுக்கு ஓப்பனிங் சீன்  போல அமலாபாலுக்கு ஒரு ஓப்பனிங் சீன் வைத்து இருக்கின்றார்கள்… அமலாபால்  ஓப்பனிங் சீனை தமிழ் ரசிக கண்மணிகளால் மறக்கவே முடியாது..

பாபி சிம்ஹா பின்னி இருக்கின்றார்… அவரது கேரியரில் முக்கிய திரைப்படம்.. அதே போல பிரசன்னா சான்சே இல்லை… கட்டுமஸ்த்தாக உடம்பை   ஏற்றி வைத்து இருக்கின்றார்.  அதுவும் அஞ்சாதேவுக்கு பிறகு முக்கிய திரைப்படம் பிரசன்னாவுக்கு…

வெட்காமாயில்லை.. கோவாவில் உலக திரைப்பட விழா நடத்த.. ?


நம்ம ஊர் போல முரண்பாடுகளின் மொத்த  உருவமான  ஒரு தேசத்தை பார்க்கவே  முடியாது....

 சொந்த தேசத்தில் பல கோடி ரூபாய்  செலவு செய்து எடுத்த பத்மாவதி திரைப்  படத்தை வெளியிட ஆயிரம் எதிர்ப்புகள். அதில் நடித்த நடிகையின் தலைக்கும் இயக்குனரின் தலைக்கு   பத்து  கோடி  விலை நிர்ணியித்து இருக்கின்றார்கள்.

ஆனால்  கோவாவில் உலக திரைப்பட விழா கோலாகலமாக  தொடங்கி இருக்கின்றார்கள்..150க்கு  மேற்பட்ட நாடுகளில் இருந்து திரைப்படங்கள் திரையிட இருக்கின்றார்கள்...

 வெட்கமாக இல்லை... கோவா திரைப்பட விழா நடத்த.... ----????






நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

ஜாக்கி சினிமாஸ் பற்றி வேர்ல்ட் சினிமா மியூசியம் சிவசங்கர்.





******** 3 Years Celebration ********


வாவ்.. வாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா.. Jackie Sekar.. ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா..
நம்ப ஜாக்கி அண்ணே சேனல் மூன்று வருடத்தை(nov 18) வெற்றிகரமாக கடந்து வந்துள்ளது.. யார் துணை இல்லாம ,ஒரு சேனலை ஒத்த ஆளா நின்னு கவனிப்பது, என்பது சாதாரண விஷயம் இல்லை.. ஆம் இவரின் இந்த சேனலுக்கு கேமரா மேன் ஓ , இல்லை எடிட்டரோ.. இல்ல ஒரு ஸ்டூடியோ செட்டப் ஓ கிடையாது.. அனைத்தும் அவரே தான்.. அப்படி இருந்தும் படம் வெளிவந்த அன்றே , திரைப்படங்களை பார்த்தும் அதற்கு நேர்மையான அதே நேரத்தில் சினிமா ரசிகனாகவும் விமர்ச்சனம் செய்தும், அப்லோடும் செய்துவிடுகிறார். . தமிழ் திரைப்படம் மட்டுமே என்றில்லாமல் , பல மொழி திரைப்படங்களின், தரமான தொகுப்பு இவர் தளத்தில் நிறையவே உண்டு.. இவரின் விமர்ச்சன பார்வையும் சரி, எழுதாக்கமும் சரி ,அந்த வீடியோ வையோ அல்ல பதிவையோ பார்த்து, படித்து முடித்த உடனே, படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு நீங்க வந்துவிடுவீங்க.. அது நிச்சயம் உறுதி, 101% கேரண்டி....

2014 ம் வருடம் நான் கல்லூரியில் சேரும் முன்பு, இணையத்தில் எதார்ச்சயாக ஒரு வெளிநாட்டு திரில்லர் பட விமர்ச்சனத்தை இவர் தளத்தில் படிக்க முடிந்தது, அப்போது தான் எனக்கு மாற்று மொழி திரைப்படங்களின் அறிமுகம்..



என் ஆளோட செருப்பைக்காணோம் திரைவிமர்சனம்.




#EnAalodaSeruppaKaanom Review By jackiesekar
என் ஆளோட  செருப்பைக்காணோம்

எங்கள் ஊர் கடலூரில் எடுத்து இருக்கின்றார்கள்...

 பெரியார் ஆர்ட்ஸ் காலேஜ் மற்றும் அதனை சுற்றி  உள்ள இடங்கள்... அதே போல  செயின்  டேவிட் கோட்டை போன்ற இடங்களில் ஷூட் செய்து இருக்கின்றார்கள்.

இசை பாடல்கள்  எடிட்டிங்  ஒளிப்பதிவு என ரசிக்க வைத்து இருக்கின்றார்கள்... இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் மெனக்கெட்டு இருந்தால் இந்த திரைப்படத்தை இன்னும் ரசிக்க வைத்து    இருக்ககலாம்..


தீரன் அதிகாரம் ஒன்று திரைவிமர்சனம்


தீரன் அதிகாரம் ஒன்று திரைவிமர்சனம்

ஒரு வழிப்பாறி கொள்ளையனின் ஒப்புதல் வாக்கு மூலம் என்று ஒரு புத்தகம்.. பிரிட்டிஷ் இந்தியாவில் 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டில் தக்கிகள் என்ற ஒரு கொள்ளை கூட்டம் இருந்தது.. அவர்கள் மிக மோசமானவர்கள்… அவர்களை பிரிட்டிஷார் வேர் அறுத்தார்கள்…   அதை எல்லாம் ரொம்ப டிடெயிலாக இந்த திரைப்படத்தில் பார்க்கலாம்.

 சதுரங்க வேட்டை திரைப்படத்துக்கு பிறகு அடுத்து அடுத்து என்று மள மள என்று படம் பண்ணாமல் இயக்குனர் வினோத்  மீனுக்காக காத்து இருக்கும்  கொக்கு போல  கால்  மாற்றி கால்  மாற்றி காத்து இருந்து பிடித்த  மீன்தான் தீரன் அதிகாரம் ஒன்று,.. சான்சே இல்லை… வினோத் நிச்சயம் வாசிப்பு அனுபவம் கொண்ட சுவாரஸ்யமாக உண்மை சம்பவங்களை   கோர்த்து திரைமொழியில் ரசிக்க வைக்கும் இயக்குனர்தான் என்பதில்  சந்தேகமே இல்லை..


கேமரா பரிசளித்த ஜாக்கி சினிமாஸ் அமெரிக்க ரசிகர்.



யூ டியூப்ல ஒருத்தர் சேனலை பார்க்கறிங்க..

 அந்த சேனல் ஒங்களுக்கு புடிக்குதுன்னா..  என்ன செய்விங்க...  சப்ஸ்கிரைப் செய்விங்க...

 அப்புறம்  நல்லா இருக்கும்  வீடியோவுக்கு வாழ்த்து சொல்வீங்க...

 அதன் பிறகு என்ன செய்விங்க... போன் நம்பர் கிடைச்சா.. போன்ல பாராட்டுவீங்க. அல்லது திட்டுவிங்க.-..


லட்சுமி குறும்படம் என்னதான் உங்க பிரச்சனை.??



#லட்சுமி #லக்ஷ்மி #lakshmi
சிந்துபைரவி, மோகமுள் திரைப்படம் போல இரண்டரை மணி நேர படத்துல நீட்டி முழங்கி பார்... ங்கோத்தா பார் அவளும் என்னதான் செய்வா..? ஒரு கட்டத்துல சிலிப் ஆயிட்டான்னு மிடில்கிளாஸ் மைன்ட் ரெடி பண்ணி கொஞ்சம் கர்நாட்டிக் கலந்து, மேட்டர் பண்ணுறாங்கன்னு கொஞ்சம் சுத்தி வளைச்சி மூக்கை தொட்டு இருந்தா லக்ஷ்மி படத்தை இப்படி பேசி இருக்க மாட்டாங்க...

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner