1992 ஆம் ஆண்டு பொங்கலுக்கு கடலு ரமேஷ் தியேட்டரில் அமரன் திரைப்படம் ரிலிஸ் ஆனாது..
கார்த்திக் இரண்டு பாடல்கள் பாடி இருந்தார்... கார்த்திக் பீக்கில் இருந்த நேரம்... வெத்தலை போட்டோ ஷோக்குல.... முஸ்தபா என்று இரண்டு பாடல்கள்..
ஸ்ரீவித்யா பாடிய டிரிங் டிரிங் சாங் பட்டி தொட்டி எங்கும் பின்னி பெடல் எடுத்துக்கொண்டு இருந்தது..
பிசி ஸ்ரீராமின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம் என்றாலும் சந்திரனே சூரியனே.. வசந்தமே அருகில் வா பாட்டுக்கும் ரமேஷ் தியேட்டரில் தம் அடிக்க வெளியே போனார்கள்.
அப்ப எல்லாம் மெலடி என்றாலே வெளியே தம் அடிக்க போய் விடுவார்கள்.... கவர்ச்சிக்கு டிஸ்கோ சாந்தியும், சிலுக்கும் இரண்டு பாடலுக்கு இருப்பார்கள்.. இப்போது காநாயகியே போதுமானதாக இருக்கின்றார்கள்...
பாடல்களால் அமரன் ஒரளவுக்கு தப்பித்தது என்று சொல்லாம்.. ஸ்டிரியோ போனிக் சவுண்டில் ஒளிப்பதிவானது என்று எல்லாம் விளம்பரம் செய்ததாக நினைவு...
அமரனில் ஆரம்பித்த அதித்யனின் இசைப்பயணம் 2003 கோவில் பட்டி விரலட்சுமி திரைப்படத்தோடு முற்று பெற்றது.. மொத்தமே 20 திரைப்படங்களுக்கு இசையமைத்து இருக்கின்றார்.....
நடுவில் எட்டு ஆண்டுகள் ஜெயா டிவியில் சமையல் எபிசோட்கள் செய்துக்கொண்டு இருந்தார்...
ஒரு சவுண்ட் என்ஜினியர் இசையமைப்பாளராக ஆகி சமையல் கலைஞராக மாறினார்... ஆனாலும் 1990 களில் நிறைய தமிழ் பாப் ஆல்பங்களின் முன்னோடிகளின் பெயரை சொல்லும் போது ஆதித்யனின் பெயரையும் சொல்ல வேண்டும்...
ஏஆர் ரகுமான் இவரிடம் கிபோர்ட் வாசித்தார் என்பது உபரி தகவல்... அதே நேரத்தில் 1992 ஜனவரி மாதம் ஆதித்யன் இசையமைப்பாளராக அறிமுகமான அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரோஜா படத்தின் மூலம் அறிமுகமான ஏஆர் ரகுமானின் திரைப்பட எண்ணிக்கையும் வளர்ச்சியையும் அதித்யனோடு கம்பேர் பண்ணும் போது தலை சுற்றுகின்றது..
திறமை மட்டும் ஒரு மனிதனை உயரத்துக்கு அழைத்து செல்வது இல்லை... மறைந்த இசையமைப்பாளர் ஆதித்யனின் வாழ்வோடு அசைபோடும் போது நேரம் காலம் எல்லாம் கருமத்தையும் நம்பி தொலைக்க வேண்டி இருக்கின்றது...
இதய அஞ்சலிகளுடன்
ஜாக்கிசேகர்
06/12/2017
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment