ஜாக்கி சினிமாஸ் பற்றி வேர்ல்ட் சினிமா மியூசியம் சிவசங்கர்.

******** 3 Years Celebration ********


வாவ்.. வாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா.. Jackie Sekar.. ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா..
நம்ப ஜாக்கி அண்ணே சேனல் மூன்று வருடத்தை(nov 18) வெற்றிகரமாக கடந்து வந்துள்ளது.. யார் துணை இல்லாம ,ஒரு சேனலை ஒத்த ஆளா நின்னு கவனிப்பது, என்பது சாதாரண விஷயம் இல்லை.. ஆம் இவரின் இந்த சேனலுக்கு கேமரா மேன் ஓ , இல்லை எடிட்டரோ.. இல்ல ஒரு ஸ்டூடியோ செட்டப் ஓ கிடையாது.. அனைத்தும் அவரே தான்.. அப்படி இருந்தும் படம் வெளிவந்த அன்றே , திரைப்படங்களை பார்த்தும் அதற்கு நேர்மையான அதே நேரத்தில் சினிமா ரசிகனாகவும் விமர்ச்சனம் செய்தும், அப்லோடும் செய்துவிடுகிறார். . தமிழ் திரைப்படம் மட்டுமே என்றில்லாமல் , பல மொழி திரைப்படங்களின், தரமான தொகுப்பு இவர் தளத்தில் நிறையவே உண்டு.. இவரின் விமர்ச்சன பார்வையும் சரி, எழுதாக்கமும் சரி ,அந்த வீடியோ வையோ அல்ல பதிவையோ பார்த்து, படித்து முடித்த உடனே, படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு நீங்க வந்துவிடுவீங்க.. அது நிச்சயம் உறுதி, 101% கேரண்டி....

2014 ம் வருடம் நான் கல்லூரியில் சேரும் முன்பு, இணையத்தில் எதார்ச்சயாக ஒரு வெளிநாட்டு திரில்லர் பட விமர்ச்சனத்தை இவர் தளத்தில் படிக்க முடிந்தது, அப்போது தான் எனக்கு மாற்று மொழி திரைப்படங்களின் அறிமுகம்..
இதற்கு முன்பு சில ஆங்கிலப்படங்களும், தமிழில் மொழிமாற்றம் செய்து வந்துள்ள படங்களும் மற்றும்,தமிழ் ,ஹிந்தி, தெலுங்கு மட்டுமே என் வீட்டு கேசட் பெட்டியை நிரம்பி வழிய வைத்தன..


அதன் பிறகு இவர் blog தொடங்கிய நாளிலிருந்து அன்றைய நாள் வரை உள்ள அத்தனை படங்களையும் தேடி தேடி சேகரித்து பார்க்க ஆரம்பித்தேன்..
ஒரு படைப்பை உருவாக்கிய களைஞன்க்கு, அந்த படைப்பின் வெற்றி எந்த அளவு மகிழ்ச்சி தருகிறதோ, அதே போல அதனை தேடி தேடி பார்க்கும் மகிழ்ச்சியும் சுவாரசியமானது... அந்த சுவாரஸ்யத்தை எனக்கு கொடுத்த இவரை நிச்சயம் மறக்க முடியாது.. அதன் பிறகு எனக்கு சினிமா கட்டுரைகள் தரும் சில தளங்களும் , மற்றும் சில நண்பர்களும் அறிமுகம் ஆனார்கள்..விஜய் kcl என்ற நண்பரும் எனக்கு படங்களை அறிமுகம் செய்து வைத்தார்..


முகநூலில் ஜாக்கி அண்ணாவை தேடி எப்படியோ அவர் நட்பு வட்டத்தில் இணைந்து விட்டேன் அந்த சமயத்தில் அவருக்கு 4999 நண்பர்கள் இருந்தார்கள் நல்ல வேலை முடிவில் நான் இணைந்து விட்டேன். .. அவரின் கட்டுரைகளை படித்து, படித்து எனக்கும் திரைப்படத்தை பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. நானும் ஒரு blog துவங்கி எழுத ஆரம்பித்தேன்... ஒருவரை பார்த்து நாம் ஒருவிசியத்தை கற்றுக்கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம், என்னை விட வயதில் குறைவாக இருந்தாலும் அவங்களிடம் இருந்தும் இன்றும் நிறைய கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன் ..


செப்ட்டம்பர் மாதம் சென்னை சென்ற போது அவருடைய வீட்டிற்கு சென்றிருந்தேன்,அவரின் இந்த சேனலுக்காக செய்து வைத்திருக்கும் செட்டப்களை பார்த்த பொழுது வியப்பாக இருந்தது.. நீங்க நினைக்கும் அளவு தனியென ஒரு ரூம், பெரிய அகன்ற பச்சை திரை , கலக்கலான லைட்டிங் செட்டப் எண்டு இல்லாமல்.. சாதாரணமா நம்ப உறங்கும் அறை ,அங்கு ஒரு சிறு இடம் தான் இதற்க்கென வைத்திருக்கிறார். அதனை ஒரு போட்டோ எடுக்க மறந்து விட்டேன் சாரி. எனக்கு தெரிந்து பல நண்பர்கள்களின் தளங்கள், சேனல்கள் தற்போது நிறையவே இருந்தாலும் இவரின் தளம் எனக்கு ஸ்பெஷல் தான் .. இதுபோன்ற சினிமாக்கென்றே தளங்கள் இருந்தாலும் அவ்வப்போதே சில வீடியோக்கள் வரும் இவர் youtube சேனல் வந்து பாருங்க வாரம் வாரம் வீடியோ பறக்கும்,


இவ்வளவு முயற்சி செய்கிறார் ஆனால் இந்த சேனலை பின் தொடரும் நண்பர்கள் குறைவே, என்ற சிறு வருத்தம் வரும்.. அதனை சினிமா விரும்பிகளிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை உங்களிடம் விட்டு விடுகிறேன்..


உள்ள இருக்கும் வீடியோ க்களை பாருங்கள் நண்பர்களே, இதுவரை ஆயிரத்துக்கு மேல வீடியோ இருக்கும்.. உங்களுக்கு பல தரமான படங்களின் அறிமுகம் கிடைக்கும் கலைப்படம், காமெடிப்படம், டைப்பாஸ் படம், பார்த்த தீர வேண்டிய படம் , ஒரு முறை பார்க்க கூடிய படம், என பல லிஸ்ட் உண்டு.. அதில் உங்களுக்கு ஏற்றவாறு படத்தை தேர்வு செய்து பாருங்கள் மீண்டும் வாழ்த்துக்கள்.. அவருக்கும் அவருடைய சேனலுக்கும்..


அண்ணனின் இந்த சேனாலுக்காக பங்களிப்பு ,பெரும் பங்களிப்பு , சமீபத்தில் அமெரிக்க நண்பர் ஒருவரிடம் இருந்து வாழ்த்துக்களோடு ஒரு கேமரா பரிசும் வந்தது.. அவருக்கும் என்னுடைய நன்றிகள் .. ஜாக்கி அண்ணா இந்த தம்பியும் உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கணும் ன்னு வெகுநாள் காத்திருக்கான் நேரம் வரும் பொழுது நிச்சயம் அவனால் முடிந்ததை பெரும் மகிழ்ச்சியோடு தருவான்..


நன்றி குருவே..


Blog link - http://www.jackiesekar.com

Youtube link - https://www.youtube.com/user/JackieCinemas

https://m.youtube.com/watch?feature=youtu.be&v=Nj8_jM2wZNI
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner