#பத்மாவதி திரைவிமர்சனம்.


#பத்மாவதி திரைவிமர்சனம்.
ஏன்டா இந்த படத்துக்கு இப்படி ஒரு விமர்சனத்தை வச்சிங்க… ?? தீபிகபடுகோன் நாக்கை வெட்டிக்கிட்டுவா தலைய வெட்டிக்கிட்டு வான்னு  கசாப்புகடைக்காரன் ரேஞ்சிக்கு அறிக்கை விட்டுக்குடுட்டு இருந்தானுங்க…

  படத்தை பார்த்த அப்படி ஒரு கருமமும் இல்லை..
 13 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த மேவர் நாட்டு ராஜபுத்திர அரசிதான் பத்மாவதி… அலவுதின் கில்ஜி கொடுத்த கொடைச்சலையும் மீறி எப்படி தன் கணவனை  காப்பாற்றினாங்க என்பதுதான் திரைப்படத்தின் சுவாரஸ்ய கதை.



 தீபிகா படுகோன்.. சிங்களத்து இளவரிசியா அசத்தி இருக்காங்க.. சான்சே இல்லை… தீர்க்கமான   பார்வையும் நளினமும் நடனமும் இடுப்பு குழைவும் அசத்துகின்றார் தீபிகா.. எப்படிடா தலையை வெட்டுங்க நாக்கை வெட்டுங்கன்னு சொன்னிங்க.??  ரசனை கெட்ட முண்டங்களா?

ராஜபுத்திர அரசனாக ஷாகித் கப்பூர். நடுப்பில்  குறை வைக்கவில்லை  என்றாலும்  அலவுதின் கில்ஜியா  ரன்பீர் கப்பூர்  அலட்டல் நடிப்கை கம்பேர் செய்தால்… கொஞ்சம் வேகம்  கம்மிதான்..
 ரன்பீர்கப்பூர் பின்னி இருக்கான் மனுஷன்..

 சதி உடன்கட்டை ஏறும் காட்சியை  வைத்து இருக்கின்றார்கள்… இந்த லூசு பசங்க திரும்பவும் சதியை வழக்கமாக  வைக்க வேண்டும் இந்து  தர்மத்தை காப்பத்தனும் லூசு பசங்க  கிளம்பினாலும்  கிளம்புவானுங்க …. அதான்  டரியலா இருக்கு…

ஏதாவது ஒரு விதவையை உசுப்பி விட்டு நெருப்புல தள்ளி   இந்து தர்மத்தை நிலை நிறுத்துவேன்னு சொன்னாலும் சொல்லுவானுங்க…

 படத்துல ஒரு டயலாக்…

 யுத்தத்திலும் காதலிலும்  எந்த கொள்கையும் வைத்துக்கொள்ளக்கூடாது  என்ற டயலாக் செமை….

 கண்டிப்பா பத்மவாதியை ஒரு முறை பார்க்கலாம்… சஞ்சய் லீலா  பன்சாலியாச்சே… ஏப்பை  சோப்பையா படத்தை எடுத்து இருப்பாரா?- என்ன??

 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.





நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner