தி ரியல் பேட் மேன் அருணாச்சலம் முருகானந்தம்.




நேசவு வேலை செய்யும் குடும்பம்.. சின்ன வயதில் இருந்து  நூல் பஞ்சு என்று போனது   #அருணாச்சலம் #முருகானந்தம் மின் வாழ்க்கை

 அப்பாவின் மரணம் குடும்ப   பொறுப்பை ஏற்றுக்கொள்ள வைத்தது....
 எட்டாம் வகுப்பை முடிக்கவில்லை..  முருகானந்தம்...



 செய்யாத வேலை இல்லை... படாத சிரமங்கள் இல்லை... ஒரு வழியாக  கிரில் செய்யும் கடையில் வெல்டர் ஆகி..

 திருமணத்துக்கு பிறகு  மனைவி பைக் துடைக்கு அழுக்கு துணியை அந்த மூன்று நாட்களுக்கு பயண்படுத்தியதை பார்த்த போது பிடித்துக்கொண்டது முருகானந்ததிற்கு சனி...

 மனைவி சாந்தி படும் துயரத்திற்காக குறைந்த விலையில்  சானிட்டரி  நாப்கின் கண்டுபிடிக்கும் முயற்ச்சியில்  பைத்தியம் என்று சொந்த அம்மா  மற்றும் மனைவியால் அவமானப்படுத்தபட்டவர்..

 சொந்த கிராமம் பைத்தியக்கார பட்ட கொடுத்து  மரத்தில் கட்டி வைத்து   பின்னியெடுக்க நேரம் பார்த்தது...

பக்கத்து அக்கத்து வீடுகளில்  எல்லாம்   யூஸ் பண்ணி    தூக்கி  எறியும்... பேட்களை எடுத்து கட் பண்ணி ஆராய்ச்சி  செய்து....

 கடைசியில்எல்லா சோதனைகளும் வேதனைகளை கொடுக்க.. கடைசியாக  தனது   ஜட்டியில் தான் கண்டு பிடித்த பேடை வைத்துக்கொண்டு  பிளாடரில் ஆட்டு ரத்தம் நிரப்பி  பிளாடரை அவ்வப்போது அழுத்தி குருதியை வர வைத்து  ஒரு வார காலம் இந்த  அட்ராசிட்டிகளை செயல்படுத்தி அவமானப்படுத்தப்பட்டு...

 அது எல்லாம்  ஒரு காலம்...

போன மனைவி  திரும்பி வந்தார்....   அம்மா கொண்டாடினார்...

 பில்கேட்ஸ் பீளிஸ் மீட் மீ என்று கடிதம் அனுப்பினார்...உலகின் பெரும் பணக்காரர் எட்டாம் வகுப்பு டிராப் அவுட்டோடு ஒரு மணி நேரம் செலவிட்டார்...

டைம் பத்திரிக்கை உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்கள் தேர்வில் இந்தியாவில் நான்கு பேரை தேர்வு  செய்தது...

 #மோடி
#அருந்ததி ராய்
#அரவிந்கேஜ்ரிவால்
#முருகானந்தம்...


என்னிடம் இரண்டு   வழிகள் இருந்தன...

 ஒன்று  கொசு போல மற்றவர் ரத்தத்தை உறிஞ்சி வாழும் வாழ்க்கை..

 மற்றது
 பட்டாம் பூச்சி போல மலருக்கு மலர் தாவி தேன் சேகரிக்கும் வாழ்க்கை... பட்டாம்பூச்சி தேன் எடுப்பதால்  மலர்கள் இறந்து விடுவதில்லை..
 நான் பட்டாம்பூச்சி வாழ்க்கையை தேர்ந்து எடுத்தேன் என்கின்றார்

 தி ரியல் #பேட்மேன்.... முருகானந்தம்...

 விரிவாய் இன்னும் விடியோவில்....

 வீடியோ பிடித்து இருந்தால்... ஷேர் செய்யுங்கள்..






நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner