சார் ரம்பா சார்.


வாழ்க்கையை 100 சதவிகிதம் சிஸ்ட்ட மேட்டிக்காக நான் அமைத்துக்கொண்டதே இல்லை… அப்படி அமைத்துக்கொண்டு வாழ்ந்தவர்களுக்கு இந்த இயற்கையும் சரி.. சமுகமும் சரி.. பெரியதாய் கிழித்து விடவில்லை.. அவ்வப்போது அபத்தங்களை வாழ்வில் சரிபாதியாக சேர்த்துக்கொள்வதும் உண்டு..

அபத்தம் என்பதற்கு பைத்தியக்காரதனம் என்று சொல்லலாமா?????

உதாரணத்துக்கு வீட்டுக்கு செல்ல சுத்து வழி என்று தெரிந்தும் … பிடித்த தெருவில் பயணிக்க அரை கிலோ மீட்டர் செவழிக்கிறேன்...

அந்த தெருவில் என்ன இருக்கும்..--?

ஒரு பரந்து விரிந்த அழகான மரம் இருக்கும்…

கொஞ்சம் தள்ளி முன் பக்கம் கார்டன் பூத்து குலுங்க ஏக்கத்தோடு பார்த்து மனதை தேற்றிக்கொள்வது போல அழகான வீடு இருக்கும்..சல்லையாக போட்டு இருக்கும் டீ ஷர்ட் ஊடே உள்ளே போட்டு இருக்கும் பிரா கலர் தெரிய எப்போதாவது கண்ணில் தட்டுபடும். நாய் மேய்க்கும் பெண் என்று நிறைய அந்த சாலையில் இருக்கும்கள்

காதலிக்கும் பெண் இருக்கும் வீட்டு வழியே வேலையே இல்லாமல் சென்று, சென்று வருவது…

காதலி வேலை செய்த அலுவலகம் விடுமுறை தினத்தில் கூட அந்த வழியாக சென்று வருவது எல்லாம் பைத்தியக்காரதன லிஸ்ட்தான்.

இப்படி பைத்தியக்கார விஷயங்கள் நிறைய… சொல்லிக்கொண்டு போகலாம்..

நமக்கு நன்றாகவே தெரியும் அது பைத்தியக்கார செயல் என்று ஆனாலும் அதனை மாற்றிக்கொள்ள முடியாது… உதாரணத்துக்கு பென்ஸ் வாங்கி முன்னாடி பக்கம் எலுமிச்சையும் மிளகாயும் கட்டுவது போலத்தான்..

உங்கள் வாழ்க்கையிலும் அப்படி பைத்தியக்காரதனங்கள் நிறைய இருக்கலாம்.. சிலர் வெட்கம் காரணமாக வெளிப்படுத்திக்கொள்ள தயங்குவார்கள் எனக்கு அப்படி பட்ட விஷயமே இல்லை..

சமீபமாக ஒரு பெண்ணை ரொம்பவே பிடித்து இருக்கின்றது… அவள் ஆடாமல் அசையாமல் அங்கேதான் இருக்கின்றாள்… தினமும் பார்க்கிறேன்.. அவளின் சிரித்த முகம் அப்படி பிடித்து இருக்கின்றது…

அந்த பக்கம் மயிலை வாசிகள் தினமும் கடக்கலாம்.. ஆனால் தினமும் அவளுக்கா 45 வினாடிகள் நான் செலவு செய்கிறேன் என்பது யாருக்கும் தெரியாது... அவளுக்காக அவள் இருக்கும் இடத்தின் எதிர்புரத்தில் இருக்கு டீ கடையில் தினமும் 20 ரூபாய்க்கு காலை மாலைல டீ குடிக்க வேண்டி இருக்கின்றது.. மாதம் 600 ரூபாய் என்று மிடில் கிளாஸ் மனசாட்சி கணக்கு போடுகின்றது..

டீ குடிக்க மூட் இருந்தால் மாதவபெருமாள் கோவிலில் இருந்து டீ குடிக்க மயிலை குளக்கரைக்கு செல்கின்றேன். அவளை குணா கமல் போல பக்கி போல பார்த்து … பார்த்த விழி பார்த்த படி என்று முகம் கொள்ளா சந்தோஷம் கொள்வதில்லை..

ஆனாலும் ஒரு சினேக புன்னைகையோடு அவளை பார்க்கிறேன்.

ஆனாலும் அந்த சிரிப்பை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்கின்றது மனது…..

பைத்தியக்காரதனம் என்றாலும் சில பைத்தியக்கார மற்றும் அபத்த விஷயங்கள் என்று தெரிந்தாலும் நான் தெரிந்தே அனுமதிக்கிறேன்.. அந்த பிரமாண்டமும் சிரிப்பும் அவள் உடையும் , விரல்களும் நகங்களும் என அம்சமாய் இருக்கின்றாள்…

எதெச்சையாக டீ குடிக்க போய் இப்போது பழக்கமாகவே ஆகி விட்டது…

சென்னை மயிலை குமரன் சில்க்ஸ் வாசலில் பெரிய ஹோர்டிங்கில் சிரித்தபடி இருக்கும் புடவைகட்டிய மாடல் பெண்தான்… கண்ணு எல்லாம் சேர்ந்து சிரிக்குதுன்னு சொல்வாங்களே..??? அப்படி இல்லை..??

ஜாக்கி அந்த பொண்ணு பேரு… என்ன தெரியுமா??

வேண்டாம்…

தெரிஞ்சி என்ன பண்ண போறேன்..---????

என்னை பொருத்தவரை பார்த்தீபன் வீவேக்கிட்ட சொல்றது போல…

சார் ரம்பா சார்…

அவ்வளவுதான் மேட்டர்..

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
08/02/2018நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner