ஸ்கெட்ச் திரைவிமர்சனம்.


#ஸ்கெட்ச்… நமக்கா விக்ரமுக்கா….??
பார்த்து சலித்து போன பழிக்கு  பழிவாங்கும் ஆக்ஷன் திரில்லர் கதைதான்… அதை கொடுத்த விதத்தில்  அசத்தி இருக்கின்றார்கள்..

விக்ரம் வடசென்னையில் ஒரு  சேட்டுகிட்ட வேலை செய்யறாப்பள… அது என்னன்னா..  வண்டிக்கு லோன் போட்டு வண்டி எடுத்துட்டு அப்பாலிக்கா   பணம் கட்டலைன்னா..? வண்டியை ஸ்கெட்ச் போட்டு  தூக்கிட்டு வருவதுதான் விக்ரமின் வேலை.. ஆனால் ஒருத்தன் விக்ரமுக்கே ஸ்கெட்ச் போட்டு தூக்க அதில் இருந்து விக்ரம் எப்படி தப்பித்தார் என்பதுதான் கதை..
 விக்ரம் கேமராவுக்கு முன்னாடி கையை விரிச்சி அப்படியே   சுருக்கி கண் அடிச்சிட்டு ஸ்டைல நடந்து போறிங்க என்று டைரக்டர் சொன்னதும்.. ச்சை இப்பதான் பொண்ணு கல்யாணம் பண்ணோம்.. இந்த ஸ்டைலு நமக்கு தேவையான்னு நினைச்சி இருந்தா சோலி முடிஞ்சி இருக்கும்..

இன்னோரு புள்ளை  பெத்து வளர்த்துட்டா போச்சி.. என்ற முடிவில்  மனம் மூழுவதும் இளமை பொங்க நடித்து இருக்கின்றார்.. விக்ரம் கேரியரில்  ஸ்டைலிஷான பட வரிசையில் இந்த படமும் ஒன்று

 தமன்னா.. சான்சே இல்லை.. கடந்த இரண்டூ மூன்று படங்களில் வயதாகி விட்டதோ என்று பயம் கொள்ள வைத்தார்.. இந்த படத்தில் பாருங்கள் மல்கோவா மாம்பழம் போல கொஞ்சம் பூசியபடி இருக்கின்றார்…

தமன்னா அணிந்து வரும் அத்தனை புடவையும் கொள்ளை அழகு
சுகுமார் ஒளிப்பதிவும் தமனின் இசையும்  படத்தை ரொம்பவும் ரசிக்க வைத்து இருக்கின்றன…

1980 களில் சந்திரசேகர் தன் நண்பனுக்காக கத்தி குத்தி முதுகில் வாங்கி வாங்கி செத்து போனார்..அந்த இடத்தை தற்போது நிரப்பு வருபவர்.. ஸ்ரீமன்

 #Sketch  #ChiyanVikram

https://www.youtube.com/watch?v=kfOasOQizKoநினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner