Jack Reacher: Never Go Back 2016 Movie Review



Jack Reacher: Never Go Back  2016  Movie Review Tamil By Jackiesekar
#ஜாக்ரீச்சர்...

 முதல் பாகத்தில் நிறைய சாகசங்கள் செய்த மேஜர்... அந்த இரண்டாம் பாகத்தில் அப்பா மகள் சென்டிமென்டோடு சாகசங்கள் செய்கின்றார்...

சமுக பணியில் ஈடுபட்டு ஆள் கடத்தலை கட்டுப்படுத்தி நேராக மிலிட்டரி பள்ளியில் இருக்கும்  தனது தோழி டுயுனரை பார்க்க போகின்றார் ஜாக் ரீச்சரான டாம் க்ரூஸ் ...



 அங்கே அவனதுதோழி கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டு இருக்கின்றார்.
காரணம்  ஆப்கானில் ஒரு பிரச்சனை அதனால் கைது செய்து  இருக்கின்றோம் என்று  வழக்கமாக அதிகார வர்கள் பூசி  மொழிவி விடுகின்றார்கள்.

ஜாக் ரீச்சருக்கு அனேக உதவிகளை பணியில் இருக்கும் போது செய்தவள்... இந்த நேரத்தில் அவளை எப்படி அம்போ என்று விட்டு விட்டு போக முடியும்..???

 அவளை  மீட்க மேஜர் ஜாக் ரீச்சர் எடுக்கும் முயற்சிகள்தான் இந்த திரைப்படம்.

 இதற்கு நடுவில் அவள்  கேசில் தலையிடாதே அப்படி தலையிட்டால்..????  என்றோ அவசரத்துக்கு படுத்தியே ஒரு  பொண்ணு... அவளுக்கு ஒரு பொண்ணு இருக்கா...   ஷூயுரா  தெரியும்   அது  உன்  பொண்ணுதான்...  அதை கொல்ல போறேன்... முடிஞ்சா கப்பாத்திக்கோன்னு மிரட்டலும் துரத்தலும்  நடக்க ஜாக் ரீச்சர்  தனது  தோழியையும்  மகளான்னு கன்பார்மா தெரியாத மகளையும் எப்படி காப்பாத்தினான் என்பதே ஜாக்ரீச்சர் செகன்ட் பார்ட்

ஒரு கிரைம் திரில்லர்ல  செமையான பீல் குட் சீன் வைக்க முடியும்ன்னு இந்த திரைப்படத்தின் இயக்குனர் Edward Zwick  நிருபிச்சி இருக்கார்.

அவசியம் பார்க்க வேண்டிய கிரைம் திரில்லர்.





நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner