நிமிர் திரைவிமர்சனம்.#நிமிர் #Nimir Movie Review

மககேஷின்ட பிரதிகாரத்து பாகத்தை உதயநிதியோடு  எந்த விதத்திலும் கம்பேர் செய்ய முடியாது… ஆனால் நிமிர் படத்தில்  உதயநிதி மோசமில்லை,

 அதற்கு இன்னோரு காரணமும் இருக்கின்றது.. பிரியதர்ஷன் தவிர்த்து வேறு   எந்த இயக்குனர் இந்த  திரைப்படத்தை இயக்கி இருந்தாலும் படம்  கொத்து பரோட்டா ஆகி இருக்கும்.. அப்படி மலையாத்தில் இருந்து ரிமேக் செய்த முந்தைய தமிழ்  திரைப்படங்கள் சொல்லும்  சேதியும்  அதுதான்.கதை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்..
சூழ்நிலைகாரணமாக அவமானத்தை சந்தித்த ஒருவன் இனி  அந்த அவமானத்தை துடைக்கும் வரை  செருப்பு அணியமாட்டேன் என்று சபதம் ஏற்கிறான் அதில்  வெற்றி பெற்றானா  இல்லையா என்பதே கதை.

மகேந்திரனும் உதயநிதியும்  வாழ்ந்து இருக்கின்றார்கள்… காதலி கை கழுவி விட போன் செய்யும் காட்சியில் உதயநிதி ஸ்கோர் செய்கின்றார்.

நமீதா புரமோத் பாட்டி இறந்த உடன் பின் பக்கம் அழைத்து உதயநிதியை காதலோடு ரொம்ப கேஷுவலாக  அட்வைஸ் செய்கின்றார் பாருங்க… சான்சே இல்லை

பார்வதி நாயர்  படுக்கையில்  பழக்கம் வாழ்க்கை இரண்டையும் குழப்பிக்கொள்ளாமல் அம்மாவை கட்டிக்கொண்டு அழுவதில் ஸ்கோர் செய்கின்றார்..
சமுத்ரகனி அவது பார்ட்டை சிறப்பாக செய்து இருக்கின்றார்.. கருணாகரன் மற்றும் எம்எஸ் பாஸ்கர்  இரண்டு பேரும் சண்டை போட்டு அதன் பின் எம்எஸ்பாஸ்கர் அழும் அந்த காட்சி செமை…

 எல்லாவற்றையும் எம்எஸ்பாஸ்கரின் பெண்ணாக நடித்து இருப்பவர் செம பிகர்… பிரேமில் வரும் போது எல்லாம் பிரேமம் கொள்ள வைக்கின்றார்..   இதெல்லாம் ஒரு அழகா என்று ஏளனம் செய்யலாம்.. அவள் அழகுதான்.. கொள்ளை அழகுதான்.

ஏகாம்பரம் படத்தின் ஒவ்வோரு பிரேமையும் ரசிக்க வைக்கின்றார்.

 இசை தர்புகாசிவா... பாடல்கள் அருமை..   எல்லா  பாடல்களும் அருமை.

பொதுவா ஒரிஜினல் பிலிமோடு ரிமேக் பிலிமை ஒவ்வோரு பிரேமையும் கம்பேர் செய்துக்கொள்வோம்..  அதுவும்  நன்றாக ஓடி கல்லா கட்டிய திரைப்படம் என்றால் கேட்கவே வேண்டாம்….காரணம்..ஒரிஜினல் பிலிம் முத பொண்டாட்டின்னா… ரீமேக் பிலிம் வப்பாட்டி போல…

வப்பாட்டி முத பொண்டாட்டியை விட அசத்துவான்னு  நமக்கு  ஒரு  எதிர்பார்ப்பு இருக்கும்… சப்போஸ் நல்லா இருந்துட்டா பிரச்சனை இல்லை… நல்லா இல்லைன்னா.. சாப்பாட்டுல இருந்து  எண்ணெய் தேச்சி குளிப்பாட்டி விடுறதுல இருந்து படுக்கையில் வியர்வை துடைப்பதில் இருந்து….  ஒவ்வோரு விஷயத்தையும் கம்பேர் செஞ்சி பார்க்கும் வேற வழியில்லை….  அதனாலதான்.. ஒவ்வோரு பிரேமும் மிக நுனுக்கமா பார்ப்பாங்க…   ஏம்பா… 

இது உதாரணத்துக்கு சொன்னதுப்பா…

 நிமிர் படத்தை பொருத்தவரை அதிகம் முத பொண்டாட்டியோட கம்பேர்  செய்யாத அளவுக்கு படத்தை எடுத்து இருக்காங்க.. பட்  கிளைமாக்ஸ் பைட்டில் சுருதியே இல்லை…  சொதப்பி வச்சி இருக்காங்க.

மகேஷின்ட பிரதிகாரம் பார்க்கதாவங்க.. அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்… பார்த்தவங்க…? அது உங்க விருப்பம்… முத பொண்டாட்டியை நினைக்காம வப்பாட்டி வீட்டுல இருக்க முடியாதுப்பா….


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner