என் ஆளோட செருப்பைக்காணோம் திரைவிமர்சனம்.




#EnAalodaSeruppaKaanom Review By jackiesekar
என் ஆளோட  செருப்பைக்காணோம்

எங்கள் ஊர் கடலூரில் எடுத்து இருக்கின்றார்கள்...

 பெரியார் ஆர்ட்ஸ் காலேஜ் மற்றும் அதனை சுற்றி  உள்ள இடங்கள்... அதே போல  செயின்  டேவிட் கோட்டை போன்ற இடங்களில் ஷூட் செய்து இருக்கின்றார்கள்.

இசை பாடல்கள்  எடிட்டிங்  ஒளிப்பதிவு என ரசிக்க வைத்து இருக்கின்றார்கள்... இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் மெனக்கெட்டு இருந்தால் இந்த திரைப்படத்தை இன்னும் ரசிக்க வைத்து    இருக்ககலாம்..



கயல் ஆனந்தியால் முழு படத்தையும் பார்க்க முடிகின்றது... ஒரு பெரிய  பட்ஜெட் திரைப்படத்துக்ககான  ஒளிப்பதிவினை இந்த படத்துக்கு கொடுத்து இருக்கின்றார்கள்..

மிக முக்கியமாக கிளைமாக்ஸ் சான்சே இல்லை.. அப்படியான கவித்துவமான விஷயத்தை படம் முழுக்க  அள்ளி தெளித்துக்கொண்டே வந்து இருக்க வேண்டும்...

 காதல் என்பது அபத்தங்களின் கூட்டுக்கலவை... நீங்கள் அபத்தங்களை கடந்தவராயின்  இந்த படத்தில் உட்காரலாம்... இன்னும் நீங்கள் கடலுர் வாசியாக இருந்தால் இந்த திரைப்படத்தை  அவசியம் ரசிக்கலாம்... காரணம் கடலூரை மிக மிக அழகாக காட்டி இருக்கின்றார்கள்..



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner