சென்னை திருவான்மியூரில் சிவன் கோவில் அருகே அந்த மாமி கடை இருக்கின்றது…
எச்சரிக்கை… நானும் திருவான்மியூர்தான் எங்க இருக்கு சொன்னா நல்லா இருக்கும் என்று ஆர்வத்தோடு கேட்பவர்கள் இந்த வரியோடு அபீட் ஆகிகொள்ள வேண்டுமாய் தமிழ் சமுகத்தை கேட்டுக்கொள்கிறேன்.
அந்த மாமி கடையில் கொத்தமல்லி சட்டினியோடு சுட சுட இட்லி சாப்பிட எனக்கு ரொம்ப பிடிக்கும்…ரசம் ஆளையே அள்ளும்.
அந்தக்கடை பத்துக்கு பத்து குட்டிக்கடை… கணவன் குடிகாரன் கண்கள் சிவப்பு ஏற மெதுவடை போட்டுக்கொண்டு இருப்பான்…
பையனும் அவளும்தான் பார்த்துக்கொள்கின்றார்கள்..
பையன் ஏழாவது படிக்கலாம். இருப்பினும் அந்த குடிகாரன் சாப்பிடும் நபர்கள் எதிரில் அந்த மாமியை மிரட்டோ மிரட்டு என்று மிரட்டுவான்..
சனியனே மசால் தோசை சொன்னேன் இல்லை…?? அதையேன் சட்டுன்னு எடுத்து வரலை ?? ஏன்டி அசமந்தமா நிக்கறதே வேலையா போச்சி… என்று எரிந்து விழுவான்.
சில நேரத்தில் சேலை.. சில நேரத்தில் அழுக்கு நைட்டியோடு இருப்பாள்.. அந்தமாமி…
கண்களில் எப்போதும் மெல்லிய கமலகாமேஷ் சோகம் இழையோடும்…
அந்த கண்கள் சில சேதிகளை சொல்லாமல் சொல்லி என்னுள் கடத்தும்… பாருங்களேன் மத்தவா முன்னாடி எப்படி என்னை அசிங்கப்படுத்துறார்ன்னு என் ஜென்மமே கூனி குறுகி நிக்கறது.. என்பதாய் இருக்கும்.
ஒரு முறை என் மனைவியோடு சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது.. இந்த வடைகறி கமினேஷன்ல இந்த பொங்கல் எவ்வளவு சூப்பரா இருக்கு பாரேன் என்று என் மனைவிக்கு ஊட்டி விட்டேன்..
என்னது பொதுவெளியில் மனைவிக்கு ஊட்டி விடுவிங்களா.? இன்னாங்கடா இது பேஜாரா இருக்கு.??…. ங்கோத்தா எல்லா நாட்டுலயும் நடு ரோட்டுல முத்தம் கொடுத்து சப்பு சப்புன்னு சப்பறானுங்க… நான் சாப்பாடுத்தான்டா ஊட்டி விட்டேன்..
சரி மேல சொல்லுங்க…. திருவான்மியூர்ல அந்த மாமி கடை எங்க இருக்குன்னு வேற கேட்ககூடாதுன்னு சொல்லி இருக்கிங்க..!!! சரி ஒரே ஒரு கேள்வி.. அந்த மாமி ரொம்ப அழகா..????
அடேய் அந்த மாமி என் கண்ணுக்கு லட்சணமா இருப்பா… போதுமா?
ம் எங்க விட்டேன்..????
ம் என் பொண்டாட்டிக்கு பொங்கல் ஊட்டி விட்டேன்.. அன்னைக்கு அந்த மாமி பார்த்தா.. அப்படியே என் ஒய்ப்பு உதட்டு ஓரம் இருக்கற மிச்சம் பொங்கலை எடுத்து கீழ உதறமா வாயில போட்டுக்கிட்டு ..
யா.. இட்ஸ் டிலிஷியஸ்ன்னு மொக்க ஜோக் அடிச்சேன்..
அதை மாமி பார்த்துட்டா… அதுல இருந்து நான் சாப்பிட வந்தா.. நான் கேட்காமலேயே சட்னியில் இருந்து தண்ணி வரை எல்லாம் என் டேபிளுக்கு வரும்..
யாரும் என்னை மாமான்னு அதிகம் அழைத்தது இல்லை… இப்போது தங்கை பசங்களில் இருந்து சொந்தக்கார பசங்கள் வரை மாமா மாமா என்று அழைத்தாலும் ...
என் ஏஜ் குருப்பில் சொல்லுங்க மாமா…. தண்ணி போதுமா? தயிறுக்கு நார்த்தங்கா உறுகாய் நல்ல இருக்கும் மாமா … இன்னும் கொஞ்சம் சாதம் வைக்கட்டா…? என்று அழைத்தவர்கள் ரொம்பவே குறைவு..
தமிழ் சினிமா கிராமத்து திரைப்படங்களில் மாமா என்று அழைத்து சோறு கொண்டு வருவதை பார்க்கும் போது ...இப்படி ஒரு கண்டாங்கி சேலை கட்டி வயலில் வேலை செய்யும் போது… ஒரு முறை பெண்… மாமா இன்னும் ஒரு வாய் சாப்புடு மாமா என்று யாராவது சொன்னால் எப்படி இருக்கும் என்று கற்பைனையில் நினைத்து பார்த்து இருக்கின்றேன்…
அப்படி காதலோடு மாமா என்று அழைத்து சோறு போட யாரும் இல்லை … அந்த கற்பனை எப்போதோ காலாவதியாகிவிட்டது…
ஆனால் அந்த கற்பனை மாமா வார்த்தைக்கு ரொம்ப வருடம் கழித்து உயிர் ஊட்டியது.. அந்த மாமிதான் …
மாமா இன்னும் கொஞ்சம் ரசம் குத்தட்டா என்று கேட்க… நான் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன்… நம்மை யார் கூப்பிட போறா என்ற நினைப்பில்…
உங்களைதான்.. மாமா இன்னும் கொஞ்சம் ரசம் குத்தட்டா என்று கேட்க.. ரொம் நாள் கழித்து நான் சந்தோஷமாக இரண்டு முறை ரசம் வாங்கி சாப்பிட்டேன்..
இன்றும் மாமிக்கு கணவனிடம் இருந்து எல்லோர் எதிரிலும் திட்டுதான்..
மாமி அழுக்கு நைட்டியில் இருந்தார்… ஆனாலும் கொஞ்சம் தெளிவாக இருந்தார்… முதுகு பக்கம்
நைட்டியையும் மீறி இரண்டு நகக்கீரல் பட்டையாக தெரிந்தது…
கற்பனை விரிந்தது..
பர்ஸ் பிரித்து பணம் கொடுத்தேன்…
வண்டி ஸ்டார்ட் செய்தேன்..
எதிரில் சிவன் கோவில் கோபுரம் கம்பீரமாய் தெரிந்தது..
கீரல் சந்தோஷ கீரலாக இருக்க வேண்டும் என்று கோபுரத்தை நோக்கி மனதில் வேண்டியபடி வண்டியை ஸ்டார் செய்தேன்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
07/02/2018
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment