#லட்சுமி #லக்ஷ்மி #lakshmi
சிந்துபைரவி, மோகமுள் திரைப்படம் போல இரண்டரை மணி நேர படத்துல நீட்டி முழங்கி பார்... ங்கோத்தா பார் அவளும் என்னதான் செய்வா..? ஒரு கட்டத்துல சிலிப் ஆயிட்டான்னு மிடில்கிளாஸ் மைன்ட் ரெடி பண்ணி கொஞ்சம் கர்நாட்டிக் கலந்து, மேட்டர் பண்ணுறாங்கன்னு கொஞ்சம் சுத்தி வளைச்சி மூக்கை தொட்டு இருந்தா லக்ஷ்மி படத்தை இப்படி பேசி இருக்க மாட்டாங்க...
சிந்து பைரவி படம் ஆரம்பிச்சி ஒரு மணி நேரம் 33 நிமிஷத்துல சுஹாசினி ஐ லவ் ஜேகேபி சொன்னதும். சிவக்குமாரும் சுஹாசினியும் மேட்டர் பண்ணற காட்சியை.. பறவை பறக்கறது.. வீனையை மூடி வச்ச துணியை அவுக்கறது.. மிருதங்கத்தை மூடி வச்ச துணியை அவுக்கறது... அப்புறம் வீணையை மீட்டறதுன்னு காட்டி இருந்த எந்த பிரச்சனையும் வந்து இருக்காது...
சிந்து பைரவி படம் வந்து 32 வருஷம் ஆயிடுச்சி... இன்னமும் எவனும் மாறலை... எல்லா விஷயத்துலயும் மாறினாலும் காமமும் காதலும் இன்னமும் நம்ம ஆட்களுக்கு புரியவேயில்லை..
லக்ஷ்மி குறும்பட்த்தின் பிரச்சனையே மேட்டர் பண்ணறாங்கன்னு காமிச்சது... அதுவும் இந்திய கலாச்சாரத்தின் எல்லைகளுக்கு உட்பட்டு....
அதான் பிரச்சனையே...முட்டையை உடைக்கறது... டம்பளர்ல வெங்காயம் போட்டு அடிக்கறதுன்னு மேட்டர் பண்ணறதை காட்டி இருந்தா பிரச்சனையே வந்து இருக்காது..
அங்க லக்ஷ்மி ரியாக்ஷன் கொடுக்க கொடுக்க இவனுங்க வேலைக்கு போயிட்டு வரும் தன் பொண்டாட்டியோட கற்பனை பண்ணிக்கிறானுங்க.. அதான் இவ்வளவு பொங்கலுக்கு காரணம்...
ஒரு செக்ஸ் ஜோக் கதையில ராஜா போருக்கு போவும் போது... ராணி புண்டைக்கு இரும்பு ஜட்டி போட்டு பூட்டிட்டு போவாரு... அவருவந்துதான் தெறக்கனும்னு வேற யாரும் யூஸ் பண்ணிடக்கூடாதுன்னு பயம்..
ராஜாவுக்கு தன் மேலயும் நம்பிக்கை இல்லை... ராணி மேலயும் அவருக்கு நம்பிகை இல்லை.... தன்னோட அமைச்சருங்க மேலயும் நம்பிக்கை இல்லை.. பூட்டை மட்டும்தான் நம்பினார்...
அது ராஜா காலம் ....
ஒரு வேளை அப்படி ஒரு இரும்பு ஜட்டி மார்கெட்ல பூட்டு சாவியோடு இப்போ வித்து இருந்தா....
லக்ஷ்மி படத்துக்கு அப்புறம் செமையா சேல்ஸ் ஆகி இருக்கும்...
Funny Guys...........
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:
Post a Comment