23/11/2015 அன்று இரண்டு
மணிக்குஆரம்பித்த மழை… இரவு பதினோரு மணிவரை
கொட்டிதீர்க்க…
முப்பது நாளில் பெய்ய வேண்டிய
மழை மூன்று நாளில் பேய்ந்து விட்டது என்று அம்மா சொன்னதற்கு ஆமாம் சாமிபோட்ட போது புளியோதரையும் பொங்கலும் மழைக்குவீட்டில்உட்கார்ந்து சுட சுட சாப்பிட்டவர்கள் எல்லாம் திங்கட்கிழமை வேலைநேரம் எலிப்பொறியில் சிக்கியது போலசிக்கிக்கொண்டார்கள்…
அங்க சுத்தி இங்க சுத்தி அடி மடியிலேயே கை
வச்சானாம் என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள்… இந்த ஒன்லைன்தான் தற்போது வெளியாகி
இருக்கும் பாண்ட் திரைப்படத்தின் ஒன்லைன் கதை.
உலகம்
எங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்திய பாண்ட் சீரிஸ்சின் 24 வது
திரைப்படம் இந்த ஸ்பெக்டர்…
சின்ன சபலம்… பெரிய பிரச்சனைக்கு ஊரு விளைவிக்கும்…. தென்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மாவட்டம் அது..
நேற்று வரை ஊரே கொண்டாடிய நல்லாசிரியர் அவர்… அவரை போன்ற ஒரு நேர்மையாளரை பார்க்கவே முடியாது… கணக்கு பாடத்தை அவர் எடுக்க ஆரம்பித்தால் மர மண்டைக்கும் புரியும் அளவுக்கு எடுப்பதில் வல்லவர்… அரசு ஒதுக்கும் நிதிகளை தன் வீட்டுக்கு ஒதுக்காத மாமனிதர், வயதுக்கு வந்த இரண்டு பிள்ளைகள்… ஆனாலும் காமம் என்பது பொல்லாதது.. அதை அடக்கி ஆள்வது சிரமத்திலும் சிரமமான விஷயம்…. கொஞ்சம் யோசிக்கா விட்டாலும் முச்சந்தியில் நிறுத்திவிடும் வல்லமை அதற்கு உண்டு.
சென்னை திரையரங்குகளில் பத்து ரூபாய்பாப்கானை…. காம்போ என்ற பெயரில் மனசாட்சியே இல்லாமல்
110 ரூபாய்க்கும், அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலை எம்ஆர்பி விலையைவிட அதிகமாக 40 ரூபாய்க்கு விற்கும் திரையரங்கிற்குமாதம் இரண்டு முறைபொழுது போக்கிற்காககுடும்பத்தோடு சென்றால் மாத பட்ஜெட்டில் நடுத்தர
குடும்பத்து தலைவர்கள் தலையில் துண்டு போட்டுக்கொள்ளவேண்டும்… திருட்டி விசிடியில் படம் பார்ப்பது மனித
தன்மையற்ற செயல் என்று டுவிட்டரில் அலறும் நடிகர்கள் இந்த பகல் கொள்ளையை எதிர்த்து
ஒரு வார்த்தை பேசுவதில்லை..
நயன் என்று தமிழ் ரசிகர்களால் செல்லமாக அழைக்கும் நயன்தாராவுக்கு இன்று பிறந்தநாள்…இதே நாளில் 1984 ஆம் ஆண்டு பெண்களூருவில் மன்னிக்கவும் பெங்களூருவில் பிறந்தார் நயன்… டயானா மரியம் குரியன் என்பது நயனின் இயற்பெயராகும்.
நேத்து வரை வாக்கர் பாய்ஸ், போர இடம் வௌங்காது... துரோகி,சகோதரின்னு சரணாகதி அடைந்தவர், கூட இருந்தே குழி பறிப்பவர் ... அது இதுன்னு வைகோவை வெகு தீவிரமாக வசை பாடிய அத்தனை திமுக உடன்பிறப்புகள் அத்தனை பேருமே...
ரகுமானின் அம்மா அவர் வந்தார் ஆர்மோனியம் வாசிச்சார்ன்னு பேசறாங்க... அதை விட பார்த்திபன்... ராக்கி படம் பார்த்தார்... அவரோட விமர்சனம் எனக்கு தேவைன்னு பேட்டியில தன்னோட புள்ளைய அவர்ன்னு மரியாதைய விளிச்சி இருக்கார்....
ரகுமான் ராக்கி இரண்டு பேருமே சின்ன வயசுல வளரும் போதே அவர்ன்னுதான் அழைச்சி இருப்பாங்களோ..???
மத்தியில் பிரதமர்மோடி ரெஸ்ட்
எடுக்காமல்இந்தியாவின் வளர்ச்சிக்கா நாடு நாடாக
சுற்றிக்கொண்டு இருக்கிறார்… பெஸ்ட்டிவல் தினம் என்பதால் தீபாவளிக்கு சொந்த நாட்டுக்கு வந்துள்ளார்…
பெட் அனிமல் வச்சி இருக்கறங்க…. முக்கியமாக நாய் பூனை வளர்க்கறவங்க கண்டிப்பாக பார்க்க வேண்டிய பகிர்ந்துக்க வேண்டிய பதிவு இது..
கடலூர் நியூசினிமா தியேட்டர் எதிரில் தரைகாத்த காளியம்மன் கோவில் இருக்கு… அதுக்கு பக்கத்து கெடிலம் ஆத்து ஒரமா எனது நண்பர் குமார் என்பவர் டிங்கர் ஒர்க்ஷாப் வச்சி இருக்கார்… அவுங்க வீட்டுல ஆடு மாடுங்க கோழிங்க அதிகம்…
விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் யாருடன் உங்களுக்கு நடிக்க விருப்பம் என்று விஜய்சேதிபதியிடம் கேட்டு வைக்க… அவரும் முகம் எல்லாம் வழிச்சலோடு நயன்தாரா என்று ரொம்ப கூச்சமாக அதே சமயம் கியூட்டாக சொன்னார்…
1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் சியான்
விக்ரம் தமிழ் திரையுலகில் கால் பதித்து
25 வருடங்கள் ஆகி விட்டன. அவருடைய முதல் படம் அக்டோபர் 17 ஆம் தேதி ரிலிஸ் ஆனாது.. 25 ஆண்டுகள் கழித்து அவருடைய படமான பத்து எண்றதுக்குள்ள அதே அக்டோபர் மாதத்தில் ரிலிஸ் ஆகின்றது…
ரிசப்ஷன் தொடங்க இன்னும் பத்து நிமிடம் இருக்கும் போது மணமக்கள் சண்டை போட்டுக்கொள்கின்றார்கள்..
திருமணத்திற்கு வருபவர்களுக்கு தேங்காய் வெற்றிலை பாக்கு என தாம்புல பை போட்டுக்கொண்டு இருக்கும் உறவினர் பசங்கள் முதலில் அதிர்ச்சி அடைந்தாலு ம் தொடர்ந்து தாம்புல பை போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்...
சண்டை என்றால் அப்படியான சண்டை...
ஆயிரத்து 500 பத்திரிக்கை மேல் வைத்தாகி விட்டது... ஆயிரத்துக்கு மேல் தேங்காய் தாம்புல பை ரெடியாகி கொண்டு இருக்கின்றது.,,
மாலை மூன்று மணியில் இருந்தே இரவு விருந்துக்கு சமையல் ஆட்கள் வியற்வை கசகசப்போடு மண்டபத்தில் சமைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்..
இன்று பாகிஸ்தான் பாடகர் நுசுரத் பதே அலிகான் அவர்கள் பிறந்த தினம்…
இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமையாக இருந்து பிரிந்து மூன்று மாதம் கழித்து பாகிஸ்தான்
பஞ்சாபில் பிறந்தவர்…
இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் மட்டும் நுசுரத் பதேஅலிகானை அவரது வந்தே மாதரம் இசை ஆல்பத்தில் பாட
வைக்காமல் இருந்து இருந்தால்.. என்னை போன்ற இசையறிவு அதிகம் இல்லாத கடலூர் கார பயலுக்கு
இவரை பற்றி தெரியாமலே போய் இருக்கும்..
கவாலி இசையின் ராஜா என்றுஇவரை இசை
உலகம் போற்றுகின்றது…ஹைபிட்சில் கவாலி இசையில் பாடுவதில் வல்லவரான இவரை.. 50 வது பொன்விழா
ஆண்டில்ரகுமான் வெளியிட்ட இசை ஆல்பத்தில்
நுசுரத்தின் பங்கும் இடம்பெற்றது..
வழக்கம் போலதானும் படுக்க மாட்டான்தள்ளியும் படுக்கமாட்டன் என்பது போல நுசுரத் பதே
அலிகானை பாட வைத்தற்கு எதிர்பு கிளம்பியது…
வந்தே மாதர்ம் இசை ஆல்பத்தில் "Gurus
of Peace" பாடலை ரகுமானும் நுசுரத்தும் சேர்ந்து பாடி கலக்கினார்கள்….
வந்தே மாதரம் இசை ஆல்பமான மா துஜே சலாம் தயாரிப்பின் போது முதல் போடும் சோனி
நிறுவனம் சொன்னது.. யாராவது பிரபலமானவரை உங்களோடு இணைந்து பாடச்செய்தால்.. இன்னும்
இந்த ஆல்பம் சிறப்பாக இருக்கும்அது மட்டுமல்ல..
இந்திய இசை உலகம் எங்கும் கூடுதல் கவனம் பெறும் என்றதோடு… டைட்டானிக் படத்தில்உச்சஸ்தாயில் பாடும் செலின் டியோன் பெயரைசோனி பரிந்துரைத்தது.. ஆனால் ரகுமான் அந்த பெயரை
நிராகரித்ததோடு… எங்கள் தோழமை தேசமான பாகிஸ்தானில்உள்ள பாடகர் நுசுரத்பதே அலிகான் பாடினால் சிறப்பாக இருக்கும் என்றதோடு…தண்ணியும்
எண்ணெயும் எப்போதும் ஒன்று சேராமல் எதிரும் புதிருமானதேசத்தில் இருந்து முதல் முறையாக இரண்டு குரல்கள்ஒன்றாக இணைந்தன.. அந்த பாடல்தான்… வந்தே மாதரம்
ஆல்பத்தில் இடம் பெற்ற "Gurus of Peace"
கருத்தாம்மாவில் வரும் போறாளே பொண்ணுதாயி
பாடலை கொஞ்சம் நாகசு செய்து மாற்றி இருந்தார்…
பாடலின் துவக்கத்திலேயே நுசுரத் பதே அலிகான் கலக்கி இருந்தாலும்..2 ,27 இல் பின்னி
இருப்பார்…
முதல் முறையாகஇந்த பாடலை கேட்ட போது இவர் யார் என்று அறிந்துக்கொள்ளும்
ஆர்வம் வந்ததோடு புதிய குரல்….
பிறகு இணையத்தில் தேடி இவரை பற்றி அறிந்துக்கொண்டேன்…வந்தே மாதரம் இசை ஆல்பம் வெளியானதினம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி… சரியாகஐந்து நாட்கள் கழித்து கிட்னி செயல் இழப்பு காரணமாக
இறந்து போனார்..
இந்தி பாடல்களில் அவர் பிரபலம்… ஆனால் கடைகோடி தமிழனுக்கு Nusrat Fateh Ali
Khan அறிமுகப்படுத்தியதில் பெரும் பங்கு ரகுமானுக்கு உண்டு
உலகின் நம்பர் ஒன் தேடுதல் இயந்திரம் கூகுள்..இவரது புகைப்படத்தை தேடுதல் இயந்திரத்தின் முகப்பில்
வைத்து இவருடைய பிறந்த தினத்துக்கு மரியாதை செய்துள்ளது
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ‘ Nusrat Fateh Ali
Khan ji
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...