007 bond new movie Spectre review by jackiesekar | ஸ்பெக்ட்ர் திரைவிமர்சனம்






ஸ்பெக்ட்ர்..

 அங்க சுத்தி இங்க சுத்தி அடி மடியிலேயே கை வச்சானாம் என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள்… இந்த ஒன்லைன்தான் தற்போது வெளியாகி இருக்கும் பாண்ட் திரைப்படத்தின் ஒன்லைன் கதை.
உலகம் எங்கும் பெரும் எதிர்பார்ப்பை  ஏற்ப்படுத்திய பாண்ட் சீரிஸ்சின் 24 வது திரைப்படம் இந்த  ஸ்பெக்டர்…



 படம்  முதலில் யூகேவில் ரிலிஸ் ஆக… செம மொக்கை என்று  விமர்சகர்கள் கழுவி கழுவி ஊத்தினார்கள்…. டேய் நீங்க சொல்லிட்டா… என்ன??,  நாங்க போய் தியேட்டர்ல போய் பார்த்துட்டு வந்து வச்சிக்கறேன்டா.. கச்சேரியை என்று  சொல்லி யூகே ரசிகர்கள்  படம் பார்த்து விட்டு வெளி வந்ததும் தக்காளி இன்னாமயிறு  விமர்சனம் பண்ணறானுங்க… இந்த பிளடிஸ் என்று  காண்டாகி சோசியல் மீடியாவில் படம் அற்புதம் மொக்கை என்று தகவல் தீ போல பரவ…


கொய்யால படம் மொக்கையா… இல்லை சூப்பரா என்று கண்டுபிடிக்கவே  தியேட்டருக்கும் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு சென்று ஸ்பெக்டர் படத்தை  கண்டு  வருகின்றார்கள்… என் நண்பர்கள் என் பாலோயர் பலருக்கு இந்த ஸ்பெக்டர் திரைப்படத்தை   காமம் முடிந்தஉடன்  பெண்ணை பார்ப்பது போல  பார்த்து   உதட்டை பிதுக்குகின்றார்கள்..


என்னை பொருத்தவரை  காசினோ ராயல் திரைப்படம்தான் மொக்கை என்று சொல்லுவேன்… நல்லி எலும்பை கடித்து விட்டு பட்டா பட்டி டவுசரோடு சீட்டு விளையாடும் ராஜ்கிரனுக்கும் டேனியல் கிரிக்கிக்கும் பெரிய வித்தியாசம் இல்லாமல் சீட்டு விளையாடி டரியல்  ஆக்கினார்கள்.. ஒரே வித்தியாசம்… ஆலமரத்தடியும்…  கேசினோவும்தான்.


 நிறைய பேர் ஸ்கைபால் நன்றாக இல்லை என்று முஷ்ட்டி மடக்கினார்கள்… ஆனால்  அந்த படம் அவ்வளவு மோசம் இல்லை.. இருந்தாலும் பியர்ஸ்பிராசன் படங்கள்தான் பாண்ட் திரைப்படங்களின் பெஸ்ட் என்று சொன்னாலும்… இன்னும் கொஞ்சம் நாள் பறக்கும் கார், வாட்சில் ரம்பம் என்று  தொடர்ந்து இதையே செய்துக்கொண்டு வந்தால் போர் அடித்து விடும் என்ற காரணத்தால் பாண்ட் திறமைசாலி என்றாலும் அவன்  சூப்பர் ஹீரோ அல்ல… அவனுக்கும் வலியும் வேதனையும் உண்டு என்பதாக  ஹாலிவுட் கதாசிரியர்கள் திரைக்கதை அமைக்க ஆரம்பித்தார்கள்… அதனால்தான் பாண்ட்  உதை வாங்கினார்..


கிரிஸ்டோப்ர் நோலனின் பேட்மேன் கூட   சூப்பர் ஹீரோ போல இல்லாமல் பேட்  மேனின் வீக்னெஸ் போன்றவற்றை பதிவு செய்தார்கள்..


70 என்பதுகளில் எதை சொன்னாலும் கேள்விகேட்காமல்நம்பினார்கள்.. இன்று எல்லோர் கையிலும் நெட் வந்து விட்டது… எதை சொன்னாலும் கிராஸ் செக் செய்து தகவல் சொல்லும் நிலைக்கு அடுத்த தலைமுறை வந்து  விட்டது.. அதனால்  இப்படியே சென்று கொண்டு இருந்தால் பாடுபட்டு உருவாக்கிய கதாபாத்திரங்கள் வெகு சீக்கரத்தில் மொக்கை ஆகி விடும் என்பதால்… குடும்ப உறவுகளுக்கு சிக்க வைக்கின்றார்கள்..



உதாரணத்துக்கு பாண்ட் ஸ்பெக்டர் படத்தில் காதல் வயப்படுகின்றார்கள்.. பொதுவாக பாண்ட் எந்த பெண்ணை பார்த்தாலும் அந்த பெண்ணை படுக்கையில் சாய்த்து விட்டு அரைமயக்கத்தில் காம போதையில் பெண்கள் இருக்கும் போது மெரினாவுக்கு வாங்கிங் செல்வது போல எந்த கவலையும்  உறுத்தலும் இல்லாமல் கிளம்பி செல்வார்..


பாண்ட் கதாபாத்திரத்தை பொருத்தவரை பெண்கள் படுக்கைக்கு மட்டுமே உரியவர்கள்.. அதில் அவர்கள்  வில்லிகளாக இருந்தாலும் விதிவிலக்கில்லை… ஆனால் பாண்ட் காதல் கொள்கிறார்… அந்த காதலில்  உண்மை தெரிகிறது…
 ஸ்பெக்டர் படத்தை பற்றியும் அதன்  பழைய பஞ்சாங்கம் பற்றி துளியும்  அறியாதவர்கள்தான் படம் சரியில்லை… மேங்கிங் சரியில்லை…  இசை மொக்கை என்று சொல்லி வருகின்றார்கள் என்று  தம்பி விஷ்வா சாடியதோடு…

 ஏன் இந்த திரைப்படத்தின் கதை  இப்படி என்று நீண்ட புள்ளி விவரத்தை முன் வைக்கிறார்… அது உங்களுக்காக கீழே..


===

King Viswa

மக்களே,

ஸ்பெக்ட்ர் ஒரு தனிப்பட்ட Stand Alone படமல்ல. அது ஜேம்ஸ் பான்ட் என்ற தொடரின் ஒரு மிக முக்கியமான அங்கம்.

ஒரு கதையை எழுதும்போது, அத்தொடரின் மிக முக்கியமான அம்சங்களை, கதாபாத்திரங்களை முதலிலேயே அறிமுகப்படுத்தி விட்டால் தான் பின்னர் அதற்கான Justification சரியாக இருக்கும்.

ஆனால், அப்படி கதை நிகழ்வுகளை, தளங்களை, கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் கட்டம் மிகவும் நிதானமாகவே இருக்கும் (பெரும்பாலும்).
அடுத்த 007 படத்திற்கான கதையை இப்போதே தயார்படுத்தி, இத்தொடருக்கு ஒரு மாபெரும் மரியாதை செய்திருக்கிறார் சாம் மென்டிஸ். இதற்காகவே அவருக்கு ஒரு ராயல் சல்யூட்.

அவர் நினைத்திருந்தால், வேறொரு கதையை படமாக்கி, தப்பித்து இருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்திருந்தால், 007னின் Reboot அடுத்த கட்டத்திற்கு முன்னேறியே இருக்காது. ஜேம்ஸ் பான்ட் தொடருக்காக (கிட்டத்தட்ட) மிகப்பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறார் இயக்குநர். Such a Selfless Act, வாழ்த்துகள்.

ஒரு படத்தொடரை பார்க்கும்போது, அதன் முன், பின் கதையை அறிந்துகொண்டு விமர்சிப்பது தான் நல்லது. இதுதான் ஒரு விமர்சகருக்கு அழகு. நான் படம் பார்த்தேன், அதனால் ஆன்லைனில் அதன் கதையை டைப்பி, அதை விமர்சனம் என்று சொல்லி, என் மேதாவிலாசத்தைக் காட்டுவேன் என்று நினைப்பவர்கள், Go ahead. Nobody's going to stop you.
ஆனால், நான் ரசித்த ஒரு நல்ல விடயத்தை மக்களுக்கு புரியவைக்க நினைக்கும் "ஒரிஜினல்" விமர்சகர்களுக்காக அடுத்த பத்தி.

Octopussy (Novel / Comics) ஐ படியுங்கள். ஸ்பெக்ட்ர் வில்லனின் தந்தையைப் பற்றி தெரிந்து கொள்வீர்கள்.

Colonel Sun Comicsஐ படியுங்கள். Man with No Past ஆன ஜேம்சின் வாழ்க்கைக் குறிப்பை தெரிந்துக் கொள்வீர்கள்.

முக்கியமாக, On her Majesty's Secret Serviceஐ படியுங்கள். ஸ்பெக்ட்ர் வில்லனைப்பற்றி தெரிந்து கொள்வீர்கள்.

மிக மிக முக்கியமாக, அடுத்த ஜேம்ஸ் பான்ட் படத்தில் வரப்போகும் We Have all the Time in the World என்ற வசனத்தைப் புரிந்துக்கொள்ள முயலுங்கள்.
அதை விட்டு விட்டு, ஒரு தொடரின் 24 ஆவது பாகத்தை (மட்டும்) பார்த்து விட்டு, படம் மொக்கை என்பது போன்ற கருத்தை நீங்கள் முன்வைத்தீர்கள் என்றால், இனிமேல் உங்கள் விமர்சனங்கள் தான் விமர்சிக்கப்படும்.


=============
தம்பி எழுதியதை வாசித்தாகி விட்டதா…??

 சரி  ஸ்பெக்டர் படத்தின் கதை என்ன,??
007  உளவு நிறுவனத்தையே  உளவு பார்க்க ஆரம்பித்து அடிமடியிலேயே வில்லன் கை வைக்க… தாய் கிழவியான எம் இறப்புக்கு காரணமானவர்களை  பாண்ட் எப்படி பழி வாங்கு கின்றார்கள் என்பதுதான்  ஸ்பெக்டர் படத்தின் கதை..
===
 படத்தின் சுவாரஸ்யம்….
சின்ன வயதில் பசங்களுக்கு மூக்கு சளி  ஒழுகும்….அதை முக்கால் நக்குவார்கள்…  மனிதம் இனம் இருக்கும் வரை  அந்த செயல்  காலச்சக்கரம்  போல  சுழண்டு  கொண்டே இருக்கும்… இந்த பாண்ட் படமும் விதிவிலக்கில்லை என்றாலும்.. கொஞ்சம்  நாகசு செய்துள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது..

முதல் ஷாட் லென்தி ஷாட் பாண்ட்  தன் காதலியோடு கார்னிவல் ஊர்வலத்தில் நடந்து போய்   ஓட்டலில் நுழைந்து  லிப்ட்டில் ஏறி படுக்கையில் காதலியை வீழ்த்தி சாகசம் செய்ய மொட்டை மாடியில் நடந்து செல்வது வரை சிங்கிள் ஷாட்..

 இது போன்று படத்தில் நிறைய காட்சிகள் .. மிக முக்கியமாக இரவு நேர கார்சேசிங் அருமை என்றே சொல்ல வேண்டும்..


உங்களுக்கு பின்னாடி இருக்கும்சீனரி டிஸ்டர்ப் செய்யுமோ.? அதனால் அந்த வின்டோவை குளோஸ் செய்யறேன் என்று சொன்னதும்.. நான் அதை பார்க்கவேயில்லை.. என்று  நாயகியை பூனைக்கண்ணோடு காதலோடு  தடிப்பு மேல் பார்ப்பது வரேவா பாண்ட்..


=====
 படத்தின் டிரைலர்.


=====
படக்குழுவினர் விபரம்

Directed by    Sam Mendes
Produced by   
Michael G. Wilson
Barbara Broccoli
Screenplay by   
John Logan
Neal Purvis
Robert Wade
Jez Butterworth[1]
Story by   
John Logan
Neal Purvis
Robert Wade
Based on    James Bond
by Ian Fleming
Starring   
Daniel Craig
Christoph Waltz
Léa Seydoux
Ben Whishaw
Naomie Harris
Dave Bautista
Monica Bellucci
Ralph Fiennes
Music by    Thomas Newman
Cinematography    Hoyte van Hoytema
Edited by    Lee Smith
Production
company
Eon Productions
Distributed by   
Metro-Goldwyn-Mayer Pictures
Columbia Pictures

====
பைனல் கிக்…
   சூப்பர்  ஹீரோ படம் போல இல்லாமல்….ஜாக்கிசான் போல ஹீரோவுக்கும் உதை விழும், அது ரொம்பவே  வலிக்கும் என்ற சித்தாந்தத்தை ஐரோப்பிய மற்றும் ஹாலிவுட் எழுத்தாளர் உணர்ந்து திரைக்கதை  பின்ன தயாராகிவிட்டார்கள்.. அதனால் இந்த படம் மொக்கை  எல்லாம் இல்லை.. மழைநாளில் ஜட்டியில் ஊறிய ஈரம் போல  டபுள் ஓ செவனின் அனைத்து படங்களும் உங்கள்  மனதில் ஊறி இருந்தால் இந்த படத்தை   படு  மொக்கை என்று சொல்லாமல் ரசிப்பீர்கள்..
======

 படத்துக்கான ரேட்டிங்
பத்துக்கு ஏழு.,

 =======
 ஸ்பெக்டர் படத்தின் வீடியோ விமர்சனம்.




======
ஜாக்கிசேகர்.
22/11/2015
follows on






நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

1 comment:

  1. //மழைநாளில் ஜட்டியில் ஊறிய ஈரம் போல டபுள் ஓ செவனின் அனைத்து படங்களும் உங்கள் மனதில் ஊறி இருந்தால் இந்த படத்தை படு மொக்கை என்று சொல்லாமல் ரசிப்பீர்கள்..//

    SEMA...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner