சென்னை திரையரங்குகளில் பத்து ரூபாய் பாப்கானை…. காம்போ என்ற பெயரில் மனசாட்சியே இல்லாமல்
110 ரூபாய்க்கும், அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலை எம்ஆர்பி விலையை விட அதிகமாக 40 ரூபாய்க்கு விற்கும் திரையரங்கிற்கு மாதம் இரண்டு முறை பொழுது போக்கிற்காக குடும்பத்தோடு சென்றால் மாத பட்ஜெட்டில் நடுத்தர
குடும்பத்து தலைவர்கள் தலையில் துண்டு போட்டுக்கொள்ள வேண்டும்… திருட்டி விசிடியில் படம் பார்ப்பது மனித
தன்மையற்ற செயல் என்று டுவிட்டரில் அலறும் நடிகர்கள் இந்த பகல் கொள்ளையை எதிர்த்து
ஒரு வார்த்தை பேசுவதில்லை..
சரி மெரினா பீச்சிலும் , பெசன்ட் நகர் பீச்சிலும் சனிஞாயிறு
மற்றும் விடுமுறை நாட்களில் ஏன் அவ்வளவு கூட்டம் கூடுகின்றது தெரியுமா? சென்னையில் செலவில் பொழுது போக்கும் இடம் அது மட்டுமே
அப்படியான சென்னையில் கடலுக்கு நடுவே ஒரு ஒன்றரை கீலோ மீட்டர் நடந்து சென்று சுற்றியும் கடல் நீரும் கடல் காற்றையும் ரசிக்க
ஒரு அற்புமான இடம் இருக்கிறது…
அதுதான் சென்னை காசிமேட்டு மீன் பிடி துறைமுகம்…
சென்னை காசிமேட்டு மீன் பிடி
துறைமுகத்துக்கு எப்படி செல்லாம்..??
சென்னை பாரிஸ் கார்னரிலிருந்து ராயபுரம் சென்று நேராக எண்ணூர் சாலையில் பயணிக்க
வேண்டும். வலது பக்கம் ஒரு பெட்ரோல் பங்க்
வரும் அதற்கு அடுத்த வழியில் நுழைந்தால் கடலுக்கு உள்ளே ஒன்றரை கீலோ மீட்டருக்கு ஒரு
சிமெண்ட் சாலை செல்லும்… அதுதான் காசிமேடு
மீன் பிடி துறைமுகம்.
காசிமேட்டு மீன் பிடி துறைமுகத்தில் மாலை வேளையில் பொதுமக்கள் அனுமதிக்க படுகிறார்கள்…
மாலைவேளையில் கடலுக்கு நடுவே உட்கார்ந்துக்கொண்டு கடல் அலையை
ரசித்த படி செலவில்லாமல் ஜாலியாக குடும்பத்தினரோடு பொழுதை கழிக்கலாம்.
அது மட்டுமல்ல…
அது மீன்பிடி துறைமுகம் சுற்றுலா தளம் அல்ல… அதனால் சுற்றியும் கடல் அழமான
நீர்நிலையும் இருக்கும் காரணத்தால் ஜாக்கிரதையாக உங்கள் குழந்தைகளை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள
வேண்டும்…
அப்படியே அசம்பாவிதம் நடந்து
யாராவது தவறுதலாக கடலில் விழுந்தாலும், ரோட்டில்
அடிபட்டு கிடப்பவனை பார்த்து விட்டு செல்வது போலமீனவ மக்கள் செல்ல மாட்டார்கள்…எதையும்
பொருட்படுத்தாமல் அப்படியே கடலில் குதித்து
காப்பாற்றி விடுவார்கள்… காரணம்.. சுற்றிலும்
நீரோட்டத்தில் வாழ்நாள் முழுக்க பயணிப்பவனுக்குதான்
உயிரின் அருமை தெரியும்…
ஒரு முறை நீங்கள் குடும்பத்தினரோடு அங்கு சென்று வாருங்கள்..
நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தை உணரலாம்….
எவ்வளவோ கோடி கோடியாக பணம் செலவு செய்கின்றார்கள்..
கடற்கரையோர முக்கிய நகரங்களில் இது போன்று
கடலினுள்ளே சாலை அமைத்து செலவில்லாத
பொழுது போக்கு இடமாக பொதுமக்களுக்கு மாற்றி
சுற்றுலாதுறையை வளம் கொழிக்கும் துறையாக மாற்றலாம்..
காசிமேட்டுமீன் பிடி துறைமுகத்துக்கு
சென்று வந்த அனுபவத்தை மெயிலில் குறிப்பிட
மறவாதீர்கள்..இந்ததளம் பிடித்த இருந்தால் சப்ஸ்கிரைப்
செய்யுங்கள் நண்பர்களிடம் ஷேர் செய்ய மறவாதீர்கள்…
வீடியோ வடிவில்...
ஜாக்கிசேகர்
21/11/2015
follows on
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

Ya ... its Amazing Experience...
ReplyDeleteCan we go by bus or train?
ReplyDelete