நேத்து வரை வாக்கர் பாய்ஸ், போர இடம் வௌங்காது... துரோகி,சகோதரின்னு சரணாகதி அடைந்தவர், கூட இருந்தே குழி பறிப்பவர் ... அது இதுன்னு வைகோவை வெகு தீவிரமாக வசை பாடிய அத்தனை திமுக உடன்பிறப்புகள் அத்தனை பேருமே...
வைகோ தாயார் மாரியம்மாள் மறைவையொட்டி தன் தாய் மறைந்து விட்டாதாக எண்ணி வருத்தம் தெரிவித்து போஸ்ட் போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்....
உதாரணத்துக்கு அபி அப்பா,லக்கி, அப்துல்லா . கொக்கரக்கோ சௌமியன் போன்றவர்களின் பதிவுகள் உதாரணம்...
இதற்கு பெயர்தான் உட்கட்சி ஜனநாயகம்...
என்னதான் திட்டினாலும் எங்க ஆத்தா , எங்க அண்ணன் நின்னானுங்க பாரு... அங்க நிக்கறானுங்க திமுக காரனுங்க..
அதனாலதான்...சின்ன சின்ன தவறுகள் இருந்தாலும் திமுககாரனுங்களை கொண்டாட தோனுது...
ஆனால் தொண்டை தண்ணி வற்றி கலைஞரை வசைபாடி சகோதரியை ஆட்சி அதிகாரத்தில் உட்காரவைத்தவரின் அம்மாவின் மறைவுக்கு....
ஒரு பயல் அஞ்சலி செலுத்தவில்லை...அட அம்மாவின் ஆணைக்கு இணங்க என்றாவது சொல்லி இருக்கலாம்...
பசும்பொன் படத்துல ஒரு டயலாக் வரும்///
என் தம்பிகளை நான் திட்டுவேன் அடிப்பேன் யாரும் கேட்க கூடாது... ஆனா என் தம்பிகளை எவனாவது அடிச்சா நான் கேட்பேன்டா.. என்று பிரபு சொல்வார் அப்படித்தான் இந்த செயல் உள்ளது...
குறள் 110: அதிகாரம் : செய் நன்றி அறிதல்
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு"
எத்தனை பெரிய அறங்களை அழித்தாலும், அதில் இருந்து தப்பிக்க ஏதேனும் ஒரு வழி இருக்கும். அனால் ஒருவன் நமக்கு செய்த உதவியை மறந்தோம் என்றால் அந்த பாவத்தில் இருந்து தப்புவதற்கு எந்த வழியும் இல்லை.
இதன் மூலம் வள்ளுவர் பாவங்களில் எல்லாம் கொடிய பவம், செய் நன்றி மறப்பது என உரைக்கிறார்
எத்தனை வாட்டி சொன்னாலும் புரியாது.... ஆனா வாழ்க்கை கத்துக்கொடுக்கும்....
வைகோ அவர்களின் தாயார்...மாரியம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.
ஜாக்கிசேகர்.
06/11/2015
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment