மயிலை
30/10/2015
இரவு பதினோரு மணி..
========
தம்பியும்… தம்பி மனைவியும் வீட்டுக்கு வருகின்றார்கள்
என்பதால் வீட்டிற்கு வெளியே நானும் யாழினியும் காத்திருந்தோம்..
அந்த பையன்
காரணீஸ்வரர் கோவில் பக்கத்தில் இருந்து வந்துக்கொண்டு இருந்தான்… கருப்பு சட்டையும்
வெள்ளை பேண்டுமாய்…
இன் செய்து இருந்தான்…. நவநாகரிகமாய் இருந்தான்…
உதாரணத்துக்கு
சொல்ல வேண்டும் என்றால்..?
ஆனால் அவன்
நடை வழக்கமானதாய் இல்லை… அந்த நடையில் சாரா பாம்பு பின்னலில் துள்ளல் இருந்தது… எங்களை கடந்த போது நமுட்டு சிரிப்பு சிரித்தான்…. எங்களை
பார்த்து நடந்து கொண்டே.. ஐந்து அடிகளை கடந்தவன்
திரும்பவும் வந்தான்….
சாப்பிட்டிங்களா?
உம் ஆச்சி..
சாப்பிடறிங்களா?
இல்லை வேண்டாம்..
நான் வேணா ஊட்டி விடுறனே…?
இல்லைப்பா வேணாம்…
சரி என் நம்பர் எடுத்துக்கோங்க…
எனக்கு தேவைபடாது….
ஒரு ஆத்திர அவசரத்துக்கு எடுத்துக்கோங்களேன் பிளிஸ்..
இல்லைப்பா…
ஆணாழகன் படத்தில் பிரசாந்த ஒரு சிரிப்பு சிரிப்பாரே அது போல சிரித்து விட்டு.. நீங்க ஸ்மார்ட்டா இருக்கிங்க…
என் நம்பர் எடுத்துக்கோங்க…
முஞ்சிக்கழுவிட்டு வந்தேன்.. அதான் இப்படி இருக்கேன்… இல்லேன்னா என்னை பார்க்க
சகிக்காது என்றேன்..
போங்க சார் ஜோக் அடிக்காதிங்க
இல்லை உங்க நம்பர் கொடுங்க என்றான்..
எனக்கு விரும்பமில்லைப்பா
என்றேன்.
சரி சார் உங்க இஷ்டம் என்றவாறு…அதே துள்ளல் நடையில் ராயர் கபே பக்கம் விறு விறு என்று நடக்க ஆரம்பித்தான்..
யாழினி கேட்டாள்…ஏன்ம்பா… அந்த அங்கிள் உங்க கிட்ட நம்பர் கேட்டாங்???
ஏதாவது ஹெல்ப்புன்னா கேட்கத்தான்
அவர் கேட்டார் என்றேன்..
எதுக்கு உங்க கிட்ட கேட்டார்
என்று திரும்பவும் கேட்டாள்…??
தொன தொனக்கதே.. shut your mouth என்று நடந்து
போகும் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தேன்..
இந்த மீள் இரவில் இன்னும்
எத்தனை பேரிடத்தில் வலிய சிரித்து பேசி நம்பர் கேட்டுக்கொண்டு இருப்பான்…??? நான் பேசியது
போல எல்லோரும் அவனிடத்தில் பேசுவார்களா?
பகலில் என்ன வேலை செய்வான்…?
பணியிடத்தில் எல்லோருக்கும்
நம்பர் கொடுத்து இருப்பானோ..?
அரிப்புக்கு இலவசமாக யூஸ்
செய்துக்கொள்வார்களோ…???
விடை தெரியாத நிறைய கேள்விகள்
என்னுள்..
சரி இதுவே
ஒரு இளம் வயதுப்பெண்.. நடு இரவில் நம்பர் தருகின்றேன் என்று சொன்னால் எனது ரியாக்ஷன்
என்னவாக இருந்து இருக்கும் என்று இரவு முழுமைக்கும் யோசித்துக்கொண்டு இருந்தேன்… கற்பனைகளை
எளிதில் அறுத்து தொம்சம் செய்ய முடியவில்லை…
ஜாக்கிசேகர்
01/11/2015
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
அந்தத் தம்பி உண்மையை சொல்லியிருக்கு!
ReplyDelete// .. நீங்க ஸ்மார்ட்டா இருக்கிங்க… //