Beware - Dog Lovers | Pet Animal Lovers must Watch Video | True Story | ஒரு நெகிழ்ச்சிக் கதை

பெட் அனிமல் வச்சி இருக்கறங்க….   முக்கியமாக   நாய் பூனை வளர்க்கறவங்க கண்டிப்பாக பார்க்க வேண்டிய பகிர்ந்துக்க வேண்டிய  பதிவு இது..


கடலூர் நியூசினிமா தியேட்டர் எதிரில் தரைகாத்த காளியம்மன்  கோவில் இருக்கு… அதுக்கு பக்கத்து   கெடிலம் ஆத்து ஒரமா எனது  நண்பர் குமார் என்பவர் டிங்கர் ஒர்க்ஷாப்  வச்சி இருக்கார்… அவுங்க வீட்டுல ஆடு மாடுங்க கோழிங்க அதிகம்…


 அதே போல செல்ல  நாய்களும்   தெரு நாய்களும் வாசம் செய்யும் இடம்  அவருடைய ஒர்க்ஷாப் தான்.. ஒரு  நாள்  காருக்கு கீழ இருந்த நாயை விரட்டி இருக்கார்… அது பொதுவா கொலச்சிட்டு ஓடுமாம்… அன்னைக்குன்னு பார்த்து அது கொலைக்காம போகவும் டவுட் பட்டு அதுக்கிட்டு போனா? அதால கத்த கூட முடியலையாம்…


சரி என்னதான் பிரச்சனைன்னு அது கழுத்துக்கிட்ட ஒரு மாதிரி கன்னி போய் இருக்கவும் புடிச்சி பார்த்தா யாரோ கயிறு போட்டு இழுத்து காயம் ஆக்கினது  போல இருக்க.. இன்னும் கழுத்து முடியை விளக்கி பார்த்த போது பெரிய அளவில் கழுத்தை சுற்றி அழுகி போய் ரணமாக இருந்து இருக்கின்றது..


கால்நடை  மருத்துவமனைக்கு அழைத்து  சென்றால்…அங்கே   உள்ளேயே அனுமதிக்க வில்லையாம்….
அதன்பிறகு தனது சொற்ப வருமானத்தில் டாக்டரை தங்கள் இடத்துக்கே வரவழைத்து  நாயின் கழுத்தை ஆராய்ந்த போது எவனோ குடி  போதையில் சைக்கிள் டீயூபையோ… அல்லது ரப்பர்  பேண்டையோ.. நாய் கழுத்தில் விளையாட்டாக  மாட்டிவிட  அந்த வாயில்லா ஜீவன் ரணவேதனையை சந்தித்து இருக்கின்றது…


கழுத்தை சுற்றி ரப்பர் பேன்ட் இருந்த இடம் முழுக்க அழுகி வலியில் துடித்தாலும் கொலைத்து கூட தன் வலியை தெரிவிக்க முடியாத சூழல் அதுக்கு….
அழுகிப்போன கழுத்து காயத்தின் ஊடே ஆராய்ந்து அந்த ரப்பர்  பேண்டை எடுத்து இருக்கின்றார்கள்…


அதனால் பெட் அனிமல் வைத்து இருப்பவர்கள் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் தயவு செய்து நாய் அல்லது பூனையிடம் வழக்கத்துக்கு  மாறாக அதனிடம் ஏதேனும் மாற்றம் இருந்தால் இது போன்ற சொல்ல முடியாத  பிரச்சனை கூட அதனிடத்தில் இருக்கலாம்…


தனது சொற்ப வருமானத்தில் தெருநாய்தானே என்று அடித்து விரட்டாமல்  அதற்கு வைத்திய செலவு செய்து பிழைக்க வைத்ததோடு தினமும் ஸ்பிரே மற்றும் மருந்துகள் தடவி அந்த காயங்களை ஆற்றி வருகிறார்… இப்போது நீங்கள் வீடியோவில் அந்த நாய் கழுத்தில்  பார்க்கும் காயம் 75 சதவிகிதம் ஆறிய காயம்தான் …
முதன் முதலில் அது   இன்னும்  பார்க்கவே  கொடுமையாக இருந்ததாக தெரிவித்தார் டிங்கர்  குமார்…பாரட்டுகள் மட்டுமே இன்னும் நிறைய நல்ல விஷயங்களை செய்ய தோன்றும்  அதனால் நீங்கள் செய்ய வேண்டியது இந்த வீடியோ பார்த்தஉடன் டிங்கர் குமாருக்கு  ஒரு பாராட்டை அவரது தொலைபேசி எண்ணில் தெரிவிக்கவும்.. அவரது எண்…. 989 472 133 2
எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டாம் அவருக்கு ஆங்கிலம் தெரியாது… போன் செய்து பேசவும்..அதே  போல டிங்கர் வேலையில் அவர் கில்லி…. ஆனால் அவரிடம் இருக்கும் பெரிய மைனஸ்  இழைத்து இழைத்து வேலை செய்வதால்…  சொன்ன நாளில்  காரை கொடுக்கமாட்டார்.. பட் அவர் வேலையையும் பினிஷிங்கும் பெரிய பெரிய கார் கம்பெனியில் மட்டுமே கிடைக்கும்..பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
23/10/2015


வீடியோ பிடித்து இருந்தால் பகிரவும்.

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

4 comments:

 1. மனிதன் மிருகமாக மாறிவருகிறான் என்பதே உண்மை! குமார் அவர்களுக்கு மனம்நிறைந்த பாராட்டுக்கள்! வாயில்லா ஜிவனுக்கு கடவுள் போல உதவியிருக்கார்! நன்றி நன்றி

  எங்கள் கிராமப் புறங்களில் வீட்டுக்கு குறைந்தது 3,4நாய்கள் வளர்ப்பார்கள் அதற்காகவே கூடுதலாக சமைப்பவர்களும் இன்றும் இருக்கிறார்கள்! எல்லாமே வேட்டையில் சிறந்த ஆளை அடிக்ககூடிய நாட்டு நாய்கள்! இப்படியொல்லாம் சாதாரணமாக அதன் கழுத்தில் ரப்பர் பாண்டையோ?
  டீயுபோ? மாட்டமுடியாது? உண்மையில் அதன் கிட்டவே நெருங்க முடியாது? மீறி நெருங்கினால் ஒரு கிலோ சதை காணாமல் போய்விடும்! இதற்காக வெட்டு குத்து சண்டை நடந்த கதைகள் கூட உண்டு!! அதற்கு ஏதாவது நோய் ஏற்பட்டால் வளர்ப்பவர்கள் அதை துக்கிலிட்டு புதைத்து நல்ல முறையில் அடக்கம் செய்வார்கள் இதனால் பிரச்சனை என்னவென்றால் இரவில் ஒட்டுமொத்தமாய் ஊளையிடும் பாருங்கள்! கேட்க சகிக்காது அவ்வளவு பயங்கரமாக இருக்கும்!!! இன்னும் சொல்லிக்கொண்டே இருக்கலாம் நண்பரே! கிராமத்தான் வாழ்வில் வாயில்லா ஜீவன்கள் பிரிக்கமுடியாத ஒன்று!!! நன்றி

  ReplyDelete
 2. SUPER SUPER மனிதநேயம் பகிர்ந்துள்ளது வாழ்க

  ReplyDelete
 3. Very very touching incident. I pray god for the dog s speedy recovery and tons of thanks to Mr.Kumar.

  ReplyDelete
 4. நெகிழ்ச்சியான கதைதான்...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner