THIS NOVEMBER HEAVY RAIN AT CHENNAI மறக்க முடியாத மாமழை…23/11/2015





23/11/2015 அன்று இரண்டு மணிக்கு  ஆரம்பித்த மழை… இரவு பதினோரு மணிவரை கொட்டிதீர்க்க… 
முப்பது நாளில் பெய்ய வேண்டிய மழை மூன்று நாளில் பேய்ந்து விட்டது என்று அம்மா சொன்னதற்கு ஆமாம் சாமி  போட்ட போது புளியோதரையும் பொங்கலும் மழைக்கு  வீட்டில்  உட்கார்ந்து சுட சுட சாப்பிட்டவர்கள் எல்லாம் திங்கட்கிழமை வேலை  நேரம் எலிப்பொறியில் சிக்கியது போல   சிக்கிக்கொண்டார்கள்…


சாலிகிரமத்தில் இருந்து குமரன் காலனி வர…  முட்டிக்கால் அளவு  வெள்ளம்  தண்ணி கரை புரண்டு  சென்று கொண்டு இருந்தது..
கிண்டி ஒலிம்பிய டவர் அருகே… வெள்ளைம் கரை புரண்டு கிண்டி தொழிற்பேட்டையை நோக்கி ஓடிக்கொண்டு இருந்தது..

நான் காரில் மனைவியை அழைக்க சென்றுக்கொண்டு இருந்தேன்.ஆனால்  கோடம்பாக்கம் வழியாக சென்று யாழினியை டேகேரில் இருந்து அழைக்கலாம் என்றால் நிச்சயம் தண்ணீரில் சிக்கிக்கொள்வோம் என்று கிண்டி பக்கம் போக ஒரு சின்ன கன்பூயசனில் கிண்டி ஆலந்தூர் மேட்ரோ ஸ்டேஷன் போய்விட்டேன்..  நடுவில் யூடேர்ன்  இல்லை என்பதால்  மவுண்ட் போஸ்ட் ஆபிஸ் அருகே சென்றுதான் யூடேர்ன் எடுத்து வர வேண்டும்…


மழை விடாமல் கொட்டி தீர்க்க சென்னை வாசிகள் பதட்டமானார்கள்… முதலில் இரண்டு சக்கர வாகனத்தில்  நனையக்கூடாது என்று நினைத்தவர்கள் எல்லாம் ஒரு  கேரி பேகில் மொபைல்  போன் பர்ஸ் போட்டு  பத்திரபடுத்திக்கொண்டு மழையில் நனைய ஆரம்பித்தார்கள்…


 நான் மெதுவாக காரில் சென்றுக்கொண்டு இருந்தேன்.. கண் எதிரில் ஆலந்துர் மெட்ரோ ஸ்டஷனில் இருந்து ஆசிப்பிரியாணி கடைக்கு முன்னே வரும் வளைவில் மழையில்  தேங்கிய தண்ணீரில் பெரிய பள்ளம்…மழை  பெய்த பதட்டத்தில் ரெயின்  கோட் ஹெல்மேட் போட்ட பெண் ஒருவர் அந்த   மழைநீரில் வேகமாக செல்ல…அந்த பெரிய  பள்ளத்தில்  இறங்க.. பெரிய பள்ளம் என்பதாலும் எதிர்பார்ராத பள்ளம் என்பதாலும் விழுந்து விட்டார்..
 செருப்பு பிய்த்துக்கொள்ள அவமானம்  திங்க…  வண்டியை எடுத்தக்கொண்டு அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டார்..


இருந்தாலும் எனக்கு மனது கேட்கவில்லை… எப்படியும்..  இதை மழை  மற்றும் டிராபிக் பதட்டத்தோடு  எல்லோரும் வேகமாக வரும் போது நிச்சயம் இந்த பள்ளத்தில் விழுந்து எழுந்திருப்பார்கள் என்று  நினைத்து  காரைநிறுத்தினேன்…



சுற்றி அந்த பள்ளம் பக்கம் வர வேண்டாம் என்று  மழை முடியும் வரை  சொல்ல முடியாது.. ஏதாவது மரக்கிளை இருந்தால் நட்டுவைக்கலாம்… முக்கியமாக  ஒன்று சொல்ல வேண்டும்… இந்த மழைக்கு பெரிய பெரிய  பள்ளங்களில்  மரக்கிளைகள், டயர் எல்லாம் போட்டு வைப்பார்கள்.. அனால் இந்த மழைக்கு ஒரு சிலஇடங்களை தவிற  வேறு எங்கேயும்  எச்சரிக்கை செய்யவில்லை என்பது  சென்னைவாசிகளுக்கே தெரியும்…



எனது இடது  பக்கம் எந்த மரமும் இல்லை..வலது பக்கம் மில்ட்டிரி கோல்ப்  கிரவுண்ட் ஓரம்.. வைக்கப்பட்ட மரங்கள் இருந்தன…  மழை பெய்து கொண்டு இருந்தது… பேன்ட்டை மடித்துக்கொண்டு   மீடியனில் ஏறி அந்த பக்கம் குதித்து.. இரண்டுபெரிய புங்கமரத்து கிளையை உடைக்க அது அதன் புத்தியை காண்பித்தது… வெற்றிகரமாகஇரண்டு கிளைகள் உடைத்து வந்தேன்.. அதோடு  பக்கத்தி இருந்து பெரிய  காய்ந்த கிளை ஒன்று கடக்க அதையும் எடுத்துக்கொண்டு சோ என்று பெய்யும் மழையில்  நனைந்துக்கொண்டே   மீடியன் பக்கம் தாடினேன்.. ஒரு சைக்கிள்காரர் மழைக்கு ஒதுங்கி இருந்தவர்  எனக்கு உதவி  செய்ய வந்தார்..


அந்த மரக்கிளையை அந்த பள்ளத்தில் போடுவதற்குள் இரண்டு  டூவிலர்கள் நிலைத்தடுமாறி  விழுந்து விட எத்தனிக்க அந்த இடத்தில் அந்த பெரிய கிளையையும் புங்க மரத்தில் பச்சை பசேல் கிளைகளையும் எச்சரிக்கைக்காக வைத்தேன்.


அதன் பின் காரில் யூடேர்ன் அடித்து ஆலந்துர் ஸ்டேஷன் பேருந்து நிறுத்தம் அருகே வந்து  நின்ற கார்…ஏழரைக்கு நின்ற கார்…. கிண்டி
 என் மனைவியை ரயிலில்  மயிலைவர  சொல்லிவிட்டு நான் மயிலை ஸ்டேஷன் நோக்கி செல்ல ஆரம்பித்தேன்.

கத்திப்பாராவை கடக்கவே இரண்டுமணிநேரம் ஆனது…
பொதுவாக   மழை நாளில் பைக்கில் சென்றாலும் காரில்  சென்றாலும் யாரையாவது அழைத்து சென்றுவிடுவது என் வாடிக்கை..
பைக்கில் அழைத்து செல்ல நானாக வலிய சென்று கேட்கும் போதுஹோமோ போல என்னை பார்த்து விட்டு விலகியவர்களும் உண்டு.

 பத்து மணிக்கு கிண்டி தொழிற்பேட்டையை கிராஸ் செய்யும் போது பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோ இல்லாமல் மக்கள் தவித்துக்கொண்டு நிற்க்…
இரண்டு இளம் ஜோடிகளை  காரில் ஏற்றிக்கொண்டேன்..  இரண்டு பேருக்கும் நிச்சயதார்தம் ஆகிவிட்டதாம்.. நாளை  காலை அப்ராடு போகிறானாம்…. 


தேவர் சிலை அருகே இருவரையும் இறக்கி விட்டு விட்டு நான் ஆழ்வார்  பேட்டை வழியாக செல்ல.. அங்கேயும் டிராபிக்…  எல்லா கிளை சாலைகளிலும் வெள்ளம்  நிற்க… மெயின் சாலைகளில் மரவட்டை போல டிராபிக்  ஊர்ந்து சென்றது…..


கொட்டும் மழையில் ஆழ்வார் பேட்டை வாசிகள் வீட்டை விட்டு வெளியே வந்து டிராபிக்கை சரி செய்ய ஆரம்பித்தது  நெகிழ்வாய் இருந்தது…
வாழ்க்கையில் சென்னையில் மறக்க  முடியாது மழை இந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மழையை சொல்லாம்..


கிளையை பள்ளத்தில் போடும் போது…சைக்கிள்காரர் என்னிடம் கேட்டார்… எல்லாரும் போயிடுவாங்க.. நீங்கள் நின்னு மீடியன் தாண்டி போய் கிளை உடைத்து வந்து மத்தவன் வழுந்துவிடக்கூடாதுன்னு காரில் வந்தாலும் இதை செய்கின்றீர்களே என்று  சைக்கிள்காரர் கேட்டார்..


நானும்  உங்களை போல ஒரு காலத்தில் சைக்கிளில் சென்றவன்தான் என்று அவரை பார்த்து சொல்ல.. அவருக்கு முகம் கொள்ளா சிரிப்பு… எனக்கும்தான்.







ஜாக்கிசேகர்.
24/11/2015



follows on



நினைப்பது அல்ல நீ

நிரூபிப்பதே நீ.....

EVER YOURS...
 

10 comments:

  1. Really feeling proud of people like you............ This is one of the simple example where everyone can do simple things and save others...........

    Reminded me of Kamal Anbe sivam movie dialogue.......... neenthan kadavul............. !!!

    ReplyDelete
  2. சென்னை மழையையும், சிக்கிக்கொண்டவர்கள் பட்ட பாட்டையும் அப்படியே கண் முன் கொண்டு வந்தூள்ளீர்கள். உங்களால் அந்த நேரத்தில் ஆற்ற முடிந்த சேவைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. உங்கள் மனிதநேயப்பணிகள் தொடர வாழ்த்துகிறேன்...

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நானும் உங்களை போல ஒரு காலத்தில் சைக்கிளில் சென்றவன்தான் என்று அவரை பார்த்து சொல்ல.. அவருக்கு முகம் கொள்ளா சிரிப்பு… எனக்கும்தான்.
    அருமை, உங்கள் மனிதநேயத்திற்கு நன்றி
    Joshva

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner