சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்…28/10/2015
ஆல்பம்.
மத்தியில் பிரதமர் மோடி ரெஸ்ட்
எடுக்காமல்இந்தியாவின் வளர்ச்சிக்கா நாடு நாடாக
சுற்றிக்கொண்டு இருக்கிறார்… பெஸ்ட்டிவல் தினம் என்பதால் தீபாவளிக்கு சொந்த நாட்டுக்கு வந்துள்ளார்…
அதே போல தமிழகத்தில்
உழைத்து களைத்து கொடநாட்டில் ஓய்வெடுக்க முதல்வர்
சென்று விட்டார்…. புதிய தலைமைசெயலகத்துக்கு ஏன் செல்லவில்லை என்பதற்கு அவர் ஆட்சிக்கு
வந்ததும் பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு பழைய தலைமைசெயலகத்தில் இருந்து முழமையாய் மாற்ற
வில்லை… கோட்டைக்கும் புதிய தலைமைசெயலகத்துக்கும்
ரொம்ப தூரம்… அலுவலக பணியை செய்ய முடியாது
என்று வருந்தினார்… அப்படி ஒரு காரணத்தை சொன்னார்… இப்போது கோட்டை பணிகள் சிறுதாவுரில் இருந்தும் கொட நாட்டில்
இருந்தும் அலுவலக பணிகளை பார்க்கின்றார் என்று அரசு செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.…
சிறுதாவுரும் கொட நாடும் கோட்டைக்கு மிக அருகில்
இருக்கின்றன… என்று எந்த ரியல் எஸ்டேட் காரனோ
சொல்லி இருக்க வேண்டும்… அதை முதல்வரும்
அப்படியே நம்பி இருக்க வேண்டும்… அவர் சொன்னதை நாம் நம்பவில்லை… அது போலத்தான்..
======
மாட்டுக்கறி சாப்பிடுவது
பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது…. அமைதியான
நாட்டில் வளர்ச்சி பணிகள் ஏதும் இன்றி… விலைவாசி உயர்வுகள் விண்ணை
முட்டிக்கொண்டு இருக்கும் போது, உதாரணமாக துவரம் பருப்பு கிலோ 200 ரூபாய்… எனும்
போது… அதை கட்டுக்குள் வைக்க முடியாத ஆட்சியாளர்கள்..
மக்களின் அடிப்படையான உணவு விஷயத்தில் கை வைத்தால் முக்கிய விஷயங்களை மறந்து
விட்டு மாட்டுக்கறி விஷயத்தை பேசிக்கொண்டு இருப்பார்கள் என்பதால் மோடி அரசால் கையிலெடுக்கப்பட்ட
விஷயம் இது என்றே கருத தோன்றுகிறது..
======
டெல்லியில் உள்ள கேரளபவனில் பீப் சாப்பிடக்கூடாது என்று மிரட்டல் வர.. கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடும்
கண்டனத்தை தெரிவித்துள்ளார்…. வட மாநிலத்தில்
மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று இந்து சேனா அமைப்பினர் போராடி வருகின்றார்கள்.. கேரளாவில் இறைச்சி என்றால் அது மாட்டிறைச்சிதான் அதிகம் அவர்கள் அடிமடியில் கை
வைக்க இந்த பிரச்சனை விஸ்ரூபமாக வாய்ப்புள்ளது.. அதை விட டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலும் கடுமையான தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்கள்..
=========
துவரம் பருப்பு 200 ரூபாய்க்கு
விற்கிறது.. சாம்பார் சாதம் சாப்பிட்டே பல
நாட்கள் ஆகின்றது… இட்லிக்கு தொட்டுக்கொள்ள சாம்பார் கேட்டால் ரசத்தையே கொடுகின்றார்கள்..
=====
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆட்டம் ஓட்டம் காட்டிக்கொண்டு
இருக்கின்றது… அக்டோபரில் எல்லாம் மழை பிச்சி உதற வேண்டும் ஆனால் இந்திய கிரிக்கெட் அணி போல சொங்கி போல காணப்படுகிறது..
நிறைய இடங்களில் நிலத்தடி நீர் குறைந்து போய்… சொம்பில் நீர் எடுத்து பயபக்தியுடன் உபயோகப்படுத்தி
வருகின்றனர். நல்ல மழை பெய்து நிலத்தடி நீர் உயர எல்லாம் வல்ல பரம் பொருளை வேண்டிக்கொள்கிறேன்.
====
ஸ்பெஷல் ஷோ போடுற புண்ணியவான்கள்
கொஞ்சம் முன்னாடியே தியேட்டருக்கு உள்ள மக்களை
விட்டாத்தான் என்ன?? தேவி தியேட்டர் உரிமையாளர்கள்
கவனத்தில் கொள்ள வேண்டியதுஇதுதான்… 9,45 மணி ஷோவுக்கு கொஞ்சம் முன்னாடியே விட்டாத்தான்
என்ன?, லேட்டா மக்களை தியேட்டருக்கு
உள்ளே விட்டுபுட்டு, வரிசையில் நின்னு டிக்கெட் செக் பண்ணி உள்ளே உடறதுக்குள்ள.. சரியான
நேரத்துக்கு படத்தை போடற உங்கள் டைமிங்
சென்ஸ் இருக்கே.. யப்பா… நல்லா வருவிங்கய்யா..?
====
டிஸ்கவரியில் ஏ ஆர் ரகுமான்
பற்றிய டாக்குமெண்ட்ரி கடந்த திங்கள் இரவு ஒளிபரப்பினார்கள்.. நான் பார்க்கதவறிவிட்டேன்.. பார்த்தவர்கள்அல்லது யூ டீயுபில்
லிங் வைத்து இருப்பவர்கள்… கொடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
======
குமரியில் தண்ணீர் கொண்டு
செல்ல பயண்படும் தொட்டி பாலம் போல நம்ம ஊரிலும்
வெள்ளைக்காரர்கள் கட்டிய இரண்டு பிரமாண்ட பாலங்கள் உள்ளன..
119 வருடங்கள் ஆகியும் இன்னும் பயண்பாட்டில் அவைகள் உள்ளன என்பதுதான் அதன் சிறப்பு…
ஆனால் அதை பற்றி நானே இப்போதுதான் கேள்விபடுகின்றேன்…
அதற்கான வீடியோ…
===
ஒரு நெகிழ்ச்சியான வீடியோ…
=======
கோ 2 பாடல்கள் தாளம் போட
வைக்கின்றன.. அவற்றில் எனக்கும் மிகவும் பிடித்தமானது… கண்ணம்மா பாடலும் அதன் இசையும் சான்சே இல்லை.. புது இசையமைப்பாளர்
லியோன் ஜேம்ஸ் அசத்தி இருக்கின்றார்..
=========
அதே போல நானும் ரவுடிதான் திரைப்படத்தில் தங்கமே சாங் அருமையாக கேட்க கேட்க அசத்துகிறது.
=====
நான்வெஜ் 18+
Masturbation is like
procrastination, it's all good and fun until you realize you are only fucking
yourself
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
video blog supprb...
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=Q4dgBqTCl6M
ReplyDeletesuperb ji
ReplyDeletea.r.rahuman prgm discovery repet sunday 9.oo p.m super anna ' ka-n-ti-baga' paru anna; this prgm produced by www.indiandiplomcy.in ; discovery channal not uploded you tube; u not awear jacki ;
ReplyDelete