கைமணம் நிகழ்ச்சியில் இன்று நாம் காண இருக்கும் கடை… மயிலையில் இருக்கும் கற்பகாம்பாள் இனிப்பக
கடையைத்தான் இந்த பக்கத்தில் பார்க்க இருக்கிறோம்.
கற்பகாம்பாள் இனிப்புக்கடை கச்சேரி சாலையில் கிழக்கு நோக்கி சென்றால் வலப்பக்கம் ஜெயின் கோவில் ஒன்று
வரும் அதற்கு பக்கத்தில் செல்லும்
சாலைக்கு பெயர்தான்… மத்தளநாரயணன் சாலை.. அந்த தெருவில் மூன்று வீடுகள் தள்ளி
வலது பக்கம் இருப்பதுதான் கற்பகாம்பாள் இனிப்பகம்.
அது பத்துக்கு பத்து சின்ன கடைதான்.
ஆனாலும் கூட்டம் அலைமோதும்… காரணம்… கற்பகாம்பாள் கபாலி இனிப்பகத்தில் கிடைக்கும் இனிப்பு காரவகைகளுக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அதன் ருசிக்கு அடிமை…
மயிலை வாசிகளுக்கு மாலை நான்கு
மணிக்கே வாய் நமநமக்கும்…
அதற்கு தீனி …கற்பகாம்பாள் கடையில் உருவாகும்… மினி சமோசா, காலிபிளவர் பகோடாவும்தான்.…
அதையெல்லாம் விட , மாலை ஐந்தாரை மணிக்கு மேல் சுட சுட கிடைக்கும் கார பக்கோடாதான்… கால் கிலோ பக்கோடா வாங்கி வாயில் போட்டு மென்றால் பசி என்ற பேச்சுக்கே இடமில்லை…
மாலை வேளையில் மயிலை வந்தால் கபாலியை தரிசித்து விட்டு கற்பாகாம்பள் இனிப்பகத்தில் சூடான
பக்கோடாவை சுவைத்து விட்டு ஜாக்கிசினிமாசுக்கு ஒருமெயில் தட்டிவிடுங்கள்..
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
இத்தனை நாளாக எனக்குத் தெரியாதே!(தெரிந்தால் மட்டும் என்ன செய்யப் போகிறேன்?!)
ReplyDeleteஅடடே மயிலாப்பூர் வந்து மிஸ் பண்ணிட்டேனே! நெக்ஸ்ட் டைம் புகுந்திட வேண்டியதுதான்!
ReplyDeleteWhen I will go there. Nakkil echil ooruthu ...Siva. U are always lucky
ReplyDelete