happy anniversary


 
அது நடந்து ஏழு வருடங்கள் ஆகி விட்டன...
ரிசப்ஷன் தொடங்க இன்னும் பத்து நிமிடம் இருக்கும் போது மணமக்கள் சண்டை போட்டுக்கொள்கின்றார்கள்..
திருமணத்திற்கு வருபவர்களுக்கு தேங்காய் வெற்றிலை பாக்கு என தாம்புல பை போட்டுக்கொண்டு இருக்கும் உறவினர் பசங்கள் முதலில் அதிர்ச்சி அடைந்தாலு ம் தொடர்ந்து தாம்புல பை போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்...
சண்டை என்றால் அப்படியான சண்டை...
ஆயிரத்து 500 பத்திரிக்கை மேல் வைத்தாகி விட்டது... ஆயிரத்துக்கு மேல் தேங்காய் தாம்புல பை ரெடியாகி கொண்டு இருக்கின்றது.,,
மாலை மூன்று மணியில் இருந்தே இரவு விருந்துக்கு சமையல் ஆட்கள் வியற்வை கசகசப்போடு மண்டபத்தில் சமைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்..
ஆனாலும் மணமக்கள் சண்டைபோட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்..
கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று ஒற்றை காலில் இரண்டுபேருமே நின்றார்கள்...
வாக்குவாதம் முற்றிவிட்டது.... அந்த சண்டையை நிறுத்த யாரும் முன்வரவில்லை..
கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்கிறாள் மணப்பெண்... நீ என்னடி மயிறு கல்யாணத்தை நிறுத்த சொல்றது ...ங்கோத்தா நானே நிறுத்தறேன்னு மணமகன் வேட்டியை மடித்துக்கொண்டு போனை எடுக்கிறான்...
அப்படியான சண்டையை அந்த மண்டபம் பார்த்து இருக்காது... காரணம்... மணமகன் வீட்டார் வரதட்சனை குறைவு... சோத்துல உப்பு இல்லை என்று சண்டை போட்டு பார்த்து இருக்க... இங்கே அப்படியே தலைகீழ்.. மணமக்கள் இரண்டு பேருமே கவுச்சிக்கடை மார்க்கெட் போல சண்டை போட்டுக்கொண்டு இருப்பது விந்தை தானே....???
இத்தனைக்கு பத்து வருடம் உயிருக்கு உயிராய் காதலித்து திருமணபந்தத்தில் அடி எடுத்து வைக்க முடிவு செய்து.... பத்திரிக்கை ஊரெல்லாம் வைத்து விட்டு,.,.
திருமணம் ரிசப்ஷன் தொடங்க இன்னும் அரைமணி நேரம் இருக்கும் நிலையில் சண்டை... சண்டை என்றால் சண்டை உங்கள் வீட்டு சண்டை எங்க வீட்டு சண்டை இல்லை.. அப்படியான சண்டை அது..
ச்சே உன்னை போய் லவ் பண்ணி தொலைச்சேன் பாரு..
ஆமா பெரிய ரதி இவ.....போடி... போ லாட்ஜில இருக்கற டிரஸ் எல்லாத்தையும் எடுத்து வச்சிக்க... இன்னும் பத்து நிமிஷத்துல இந்த கல்யாணம் நிக்க போவுது எல்லாருக்கும் போன் பண்ணி சொல்ல போறேன்..
போய் சொல்லிக்கோ... யாரு வேணாம்ங்கறா..???
தாம்பல பை போட்டுக்கொண்டு இருக்கும் மணமகளின் தம்பியும் அவளது அந்தை பசங்களும் சண்டையை நிறுத்தாமல் தொடர்ந்து தாம்புல பை போட்டுக்கொண்டு இருப்பதில் கர்ம சிரத்தையாக வேலை செய்துக்கொண்டு இருக்கின்றார்கள்...
அவர்களுக்கு தெரியும் அந்த சண்டை எப்படி பட்டது என்று...
அரை மணி நேரத்தில் கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று சண்டை போட்ட மணமக்கள் வெட்கம் இல்லாமல் ரிசப்ஷன் மேடையில் நின்றுக்கொண்டு திருமணத்துக்கு வந்தவர்களை வய் கொள்ள சிரிப்போடு வரவேற்றுக்கொண்டு இருந்தார்கள்..
அந்த மணமக்கள் வேறு யாரும் இல்லை... நானும் என் மனைவியும்தான்...
ஒரு அரை மணிநேரத்துக்கு முன் மண்டபத்தில் நாங்கள் போட்ட சண்டையை யாராது புதிய ஆள் பார்த்து விட்டு, மேடைக்கு வந்து இருந்தால் ஆக்ரோஷமாக சண்டை போட்ட என் முகத்தின் மீது.. வடிவேல் மேல் கரடி துப்பியது போல காரி துப்பி விட்டு சென்று இருப்பான்...
18/10/2008 மாலை வரவேற்புக்கு சில நிமிடங்களுக்கு முன் நடந்த சண்டை அது ...19/10/2008 அவள் கழுத்தில் தாலி கட்டினேன்...

அது நடந்து ஏழு வருடம் ஆகி விட்டது...
எங்கள் மணநாளும் அதுவுமாய் ஏன் சொல்கின்றேன் என்றால்..??
அவ்வளவு மனமொத்த தம்பதிகள் நாங்கள்....
ஜாக்கி அனிவர்சரிக்கு திங்கட்கிழமை லீவ் போட்டு இருக்கேன்... என்றாள்..
எம்மேல அவ்வளவு அன்பு இல்லை..??. என்றேன்.
இந்த மாதிரி ஒரு நல்லவனோடு எப்படி பதினேழு வருஷம் குப்பையை கொட்டனேன்னு யோசிக்க ஒரு நாள் போதுமா? அதான் லீவ் போட்டு இருக்கேன் என்றாள்.....
1997 இல் பதினோராவது படிக்கும் மாணவியாக எனக்கு பழக்கம்... பதினேழு வருடங்கள்... ஆகி விட்டன....நிறைய பேச்சகள்... சண்டைகள் ஆனாலும் என் வாழ்வின் முன்னேற்றம் அவள்தான் என்றால் மிகையில்லை..
கடலூரில் அவளை சந்திக்காமல் இருந்து இருந்தால்... நான் ஆட்டோ ஓட்டுனராக இருந்து போட்டோகிராபர் ஆக மாறி.. அதிகபட்சம்...ஒரு வீடியோ மிக்சிங் யூனிட் வைத்து இருப்பேன்.....ஆனால் இன்று என் வளர்ச்சி நானே எதிர்பார்க்காத வளர்ச்சி அவளால்தான் அது சாத்தியம்.. அவன் கொடுத்த நம்பிக்கையும் ஊக்கமும் என்றால் அது மிகையில்லை...
2002 ஆம் ஆண்டு ....3500 ரூபாய் சம்பளத்தில் பிரண்ட ஆபிசில் வேலை.... அதன் பின் படிபடியாய் உழைத்து இன்று ஐபிஎம்மில்.... மேனேஜர் பணியில் இருக்கிறாள்.. அவள் அசாத்திய உழைப்போடு என்னையும் பார்த்துக்கொள்வது சாதாரண விஷயம் இல்லை....
அதுவும் என்னை போன்ற ஒரு ஆளோடு குப்பை கொட்டுவது என்பது.. பெரிய விஷயம்...
இரண்டு நாட்களுக்கு முன்பே பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்த நண்பர்கள் மற்றும் தம்பிகள் தங்கைகள் மாணவ மாணவிகள் அத்தனை பேருக்கும் எங்கள் அன்பும் நன்றியும்.... முக்கியமாக @suresh kumar rajendaranக்கு ஸ்பெஷல் நன்றிகள்.
காலையில் இருந்தே வாழ்த்து மழையில் போன் செய்து வாழ்த்து தெரிவித்து வரும் அத்தனை நண்பர்களுக்கு நன்றி.

ஜாக்கிசேகர்
19/10/2015
பெண்களூரில் இருந்து....









நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

14 comments:

  1. வாழ்த்துக்கள் தங்களுக்கும் அண்ணிக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள் தொடர்ந்து இல்லற பந்தத்தில் சுகமாய் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  2. wishing you many more happy returns.may god give you all that you wish.

    ReplyDelete
  3. திருமண நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. May god bless u all. With prosperity and long life along with lakhs and lacks of nice blogs Pond sivan

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் அண்ணா...
    வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. மேலும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  7. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. Best Wishes , Good write up about your marriage, felt very interesting ... your narration
    Keep it up Sir

    ReplyDelete
  9. இதை படத்துல வச்சா சூப்பரா இருக்கும்

    ReplyDelete
  10. வாழ்த்திய அத்தனை நட்புகளுக்கும் என் அன்பும் நன்றியும்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner