கோப்பாடி பாலம்..
சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார் கோவில் செல்லும் வழியில் இருக்கும் சிறிய ஊராட்சியின் பெயர் குமராட்சி...
இந்த வழியாக செல்லும் போது கோப்பாடி பாலத்தை பற்றியும் அதன் பின்னனி பற்றியும் சொல்ல சொல்ல .. எனக்கு வியப்பும் ஆச்சர்யமும் அதிகரித்தது.. ஆம் வீராணம் ஏரியின் உபரி நீரை சிதம்பரம் சுற்று வட்டார கிராமங்களுக்கு கொண்டு செல்ல பழைய கொள்ளிடம் ஆற்றின் மீது நீர் கொண்டு செல்ல வெள்ளைக்காரர்களால் 1899 ஆம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது....
போக்குவரத்து பாலம் கட்டுவார்கள்.. ஆனால் தண்ணீர் கொண்டு செல்ல பாலாமா? என்று வியக்காதவர்கள் இல்லை...
தமிழ் நாட்டில் தண்ணிர் கொண்டு செல்ல குமரியில் உள்ள மாத்தூர் தொட்டி பாலம்... ஆசியாவிலேயே மிக உயரமான இரண்டாவது பாலம்.... இது போக்குவரத்துக்கு கட்டிய பாலம் இல்லை.. தண்ணீர் கொண்டு செல்ல மட்டும் கட்டிய பாலம் ... ஆச்சர்யமாக இருக்கின்றதா?? ஆம்... 1962 ஆம்
ஆண்டு காமராஜர் முதல் அமைச்சராக இருந்த காலத்தில், இந்த பாலம் கட்டப்பட்டது.
பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பரளியாற்று தண்ணீரை விவசாயத்துக்கு எடு்த்துச் செல்ல எந்த வழியும் இல்லை என்று கையை பிசைந்துக்கொண்டு அது சாத்தியம் இல்லை... என்று கைவிரித்து விட்ட நிலையில் அன்றைய முதல்வர் , காமராஜர் அந்த இடத்தை நேரடியாக பார்வையிட்டு, இரு மலைகளுக்கு இடையே பாலம் கட்ட உத்தரவிட்டார்.
அக்காலத்தில் இந்த பாலம் கட்ட 13 லட்ச:ரூபாய் செலவானதாம்..
என்னை பொருத்தவரை காமராஜர் அவர்களுக்கு இப்படியான ஐடியா தோன்ற கோப்பாடி பாலம் ஒரு காரணமாக இருந்து இருக்கலாம்...
காரணம்.. கோப்பாடி பாலம்... 1899 ஆம் ஆண்டு வெள்ளையர்களால் கட்டப்பட்டது.. என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..
50ஆடி ஆழத்தில் பழைய கொள்ளிடம் ஆற்றில் தண்ணிர் கரை புரண்டு ஓட... வீராணம் ஏரியில் இருந்து வாய்கால் வழியாக பயணிக்கு நீர்.. ஒரு கட்டத்தில் குமராட்சி அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் கலக்காமல் வாய்கால் நீர் சிந்தாதமல் சிதாறாமல் ஆற்றை கடக்க வேண்டும்..
வாய்கால் நீர் ஆற்றை கடக்க 30 ஆடி அகலத்தில் ஒரு பாலத்தை செங்கல் மற்றும் சுண்ணாம்போடு வெள்ளைக்காரர்கள்.. கட்டினார்கள்...
அந்த பாலத்தில் 15 அடிக்கு நீர் செல்லவும்.. அடுத்த பதினைந்துஅடியில் சின்ன குகைபோன்று அமைத்து அதன் மேல் போக்குவரத்து செல்லவும் திட்டமிட்டு கட்டி முடிக்கப்பட்ட பாலம்தான்..
கோப்பாடி பாலம்... அல்லது கோப்பாடி செட்..
நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள்.. காவிரியில் தண்ணீர் வந்து கல்லனை வழியாக , கொள்ளிடத்தில் நுழைந்து, அது அனைக்கரையில் தேக்கப்பட்டு..அந்த தண்ணீர் வீராணம் சென்று திரும்பவும் குமாராட்‘சி கோப்பாடி பாலம் வழியாக சிதம்பரத்தை சுற்றியுள்ள்ள விவசாய பசன பரப்புகளை பச்சை பசேல் என்று மாற்ற இந்த பாலம் இன்று வரை பெரும் துனைபுரிகிறது..
அதை விட மிகச்சரியாக 119 வருடங்கள் இந்த பாலம் நின்று இன்றுவரை மக்களின் பயண்பாட்டில் இருக்கின்றது.. வாகன போக்குவரத்து அதிகரித்து விட்டகாரணத்தால்.. வெள்ளைக்காரர்கள் கட்டிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு தற்போது புதிய பாலத்தின் வழியாக போக்குவரத்து நடைபெறுகிறது.. அது மட்டுமல்ல.. இரண்டு பாலங்கள் அருகருகே உள்ளன..
சிதம்பரம் டூ காட்டுமன்னார் கோவில் போகும் சாலையில் குமராட்சி ஊராட்சி அருகே இருக்கும் இந்த பாலத்தை அந்த பக்கம் கடக்கையில் ஒரு எட்டு சென்ற பார்த்து விட்டு செல்லுங்கள்....
=====
சரி.. இந்த கோப்பாடி எதற்கு இந்த பெயர் வந்தது என்று தெரியவில்லை.. தெரிந்தவர்கள் பின்னுட்டத்தில் சொல்லுங்கள்.. விவரங்கள் தெரிந்துக்கொள்ள ஆசையாக இருக்கின்றேன்.. அது மட்டுமல்ல... கோப்பாடி பற்றி தெரிந்ததகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
கோப்பாடி செட் பாலம் வீடியோ... பகிர்வு... வீடியோ கொஞ்சம் பெரிதாய் இருந்தாலும் பார்த்து விட்டு கருத்து சொல்லவும்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
super anna; take care jacki anna; water,soil god bless you anna
ReplyDeletePlease be on Whatsapp and share your cinema reviews and other posts. It will be download in the mobile and when we are in offline also can read your post.
ReplyDeleteI hope you know already how to integrate the Whatsapp with your laptop to copy and paste the content.
அறியாத தகவல்! நன்றி!
ReplyDeleteநானு கோப்பாடி தா
ReplyDeleteநானு கோப்பாடி தா
ReplyDelete