சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்|19-04-2015
ஆல்பம்.
பிரதமர் வெளிநாடு வெளிநாடாக பறந்துக்கொண்டு இருக்கின்றார் என்பதுதான் டாக் ஆப் த டவுன்..... சமுகவலைதளங்களில் வறுத்து எடுக்கப்படுகின்றார்... ஒரு மாற்றம் வந்தால் நல்லது என்று நினைத்தவர்கள் எல்லோருக்கும் மரண அடி... புதிய பூதத்திற்கு பழைய பூதமே தேவலாம் என்ற நிலை... மக்களுக்காக சேவை என்ற மனப்பான்மையே அறிதாகிவிட்டது... ஆம் ஆத்மியாவது நம்பிக்கை கொடுக்கும் என்று பார்த்தால் அதுவும் ஊத்திக்கொண்டதோடு உட்கட்சி பூசலில் திலைத்து வருகின்றது... அப்போ யார்தான் இந்தியாவை காப்பாற்றுவது...???
Labels:
அனுபவம்,
கலக்கல் சாண்ட்விச்,
தமிழகம்
Nanbenda-2015 | நண்பேன்டா…. திரை விமர்சனம்.
உதயநிதி நடிக்க வந்த போது….. அவரது
சிறு வயது போட்டோவை போட்டு… காசு வந்தா காக்கா
கூட ஹீரோதான் என்று சமுக வலைதளங்களில் நக்கல் விடப்பட்டார். ஆனால் நக்கல் விடப்பட்டவர்களின் சிறு வயது போட்டோக்களை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அவர்களும் அப்படித்தான் சகிக்க முடியாத அளவுக்கு இருப்பார்கள் என்பது வேறு விஷயம்….
ஆனால் அப்படி நக்கல் விடுவது
போன்றுதான் அவர் நடிப்பும் நாடகத்தனமாக இருந்தது என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும்.…
ஒரு அழகான பழமொழி ஒன்று உண்டு. ஏழையாக
பிறப்பது நம் தவறு இல்லை… ஆனால் ஏழையாக இறப்பதுதான்
தவறு என்று…. அது போல நடிக்க தெரியாமல் முதல் இரண்டு படங்களில் தடுமாறுவது சகஜம்..
ஆனால் இதுதான் வாழ்க்கை என்று ஆன பிறகு…. அதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வெற்றி அடைய வேண்டும்..
இந்த விஷயத்தில் உதயநிதியை நான் கண்டிப்பாக
பாராட்டுவேன்.. காரணம்… முதல் இரண்டு படங்களில்
தடுமாறினாலும்… இந்த படத்தில் நிமிர்ந்து
நின்று இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்..
இந்திய சினிமாவில் சிவாஜி எம்ஆர்ராதா போல நடித்தாலும் நடனம் அடத்தெரியவில்லை என்றால் தான் அம்பேல் என உதயநிதி உணர்ந்து இருக்கின்றார்… நீ சன்னோ …நீ மூனோ பாடலில்
ஆடும் அந்த நடனம் ஒன்று போதும்….
அவருடைய டெடிகேஷனுக்கு….
http://www.jackiecinemas.com/indian-movies/nanbenda-tamil-movie-review-2015
வீடியோ விமர்சனம்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ
.....
EVER YOURS...

Labels:
தமிழ்சினிமா,
திரைவிமர்சனம்,
பார்க்க வேண்டியபடங்கள்
Komban-2015 கொம்பன் திரைவிமர்சனம்.
சென்சார் செய்யப்பட்ட திரைப்படத்தை வெளியிடும் முன்பே நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கின்றது… தயாரிப்பாளர் அழுகையோடு வெளியாவதில் பல சிக்கல்களை சந்தித்து, நேற்று மாலை அதாவது ஏப்ரல் ஒன்றாம் தேதி மாலை வெளியாகி இருக்கும் திரைப்படம்தான்… கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் கொம்பன்.
Labels:
தமிழ்சினிமா,
திரைவிமர்சனம்,
பார்க்க வேண்டியபடங்கள்
valiyavan-2015- வலியவன் திரைவிமர்சனம்.
முதல் திரைப்படமான எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் தலை நிமிர்ந்து… சற்றே இவன் வேறமாதிரி திரைப்படத்தில் சின்னதாக சருக்கி… மூன்றாவது திரைப்படமான வலியவன் மூலம் என்ன சொல்ல வருகின்றார் என்பதை இப்போது பார்த்து விடலாம்…
பொதுவா இயக்குனர் சரவணன் இயக்கும் திரைப்படத்தின் நாயகிகள் கொஞ்சம் துடுக்குதனமானவர்கள்… இவன் வேற மாதிரி திரைப்படத்தில் அது மிஸ்சிங்… வட்டியும் முதலுமாக இந்த படத்தில் ஆண்ட்ரியாவை துணைக்கு அழைத்து வந்துள்ளார்…
Labels:
டைம்பாஸ் படங்கள்,
தமிழ்சினிமா,
திரைவிமர்சனம்
Geethanjali Telugu movie review – 2014- கீதாஞ்சலி தெலுங்கு திரைப்படவிமர்சனம்.
நிறைய பார்த்த பேய் படங்களின் கலவைதான் இந்த கீதாஞ்சலி தெலுங்கு திரைப்படம் என்றாலும் கதை சொன்ன விதத்தில் சுவாரஸ்யம் கேடாமல் வின்னர் கோட்டை தொட்டு இருக்கின்றார்கள்.
சினுவாச ரெட்டி கடந்த 15 வருடங்களாக தெலுங்கு சினிமாவில் கோலோச்சிக்கொண்டு இருப்பவர்... நாயகனின் நண்பன், தம்பி,அண்ணன், கிளைமாக்சில் குண்டு வாங்கி உயிர் விடும் உற்ற நண்பன் என்று நிறைய படங்கள் செய்து இருந்தாலும் சீனுவாச ரெட்டியை ஹீரோவாக போட்டு படம் எடுக்க தில் வேண்டும்...
உப்புக்காத்து 32 (கனகா எனும் இளம்விதவை)
மரக் என்று வெங்காயத்தை கடித்து குண்டானில் துழவி கைக்கு தட்டு பட்ட நாலைந்து சோற்று பருக்கைகளை வாயில் போட்டு விட்டு ,கடைசியாக குண்டான் நீராகராத்தில் இருக்கும் முக்கால் வாசி தண்ணீரை குடித்து விட்டு வாயை துடைத்து, வேலைக்கு கிளம்ப எத்தனித்தாள்....கனகா...
கனகாவுக்கு 34 வயது... பார்க்கும் போது 22 வயதைதான் சொல்லுவார்கள்.... சரியான உடம்புக்கு எடுத்துக்காட்டாக கனகா உடம்பை தைரியமாக சொல்லலாம்...
Labels:
அனுபவம்,
உப்புக்காத்து,
சமுகம்,
சென்னை,
தமிழகம்
Ennakkul oruvan -2015 எனக்குள் ஒருவன் திரைவிமர்சனம்.
லுசியா... ((எனக்குள் ஒருவன்))
கன்னட சினிமாவுக்கு சமீபத்தில் மரியாதை என்ற அரிதாரம் பூசிய திரைப்படம் என்றால் அது மிகையில்லை.. கன்னட சினிமாவை யாரும் கவனிக்கமால் இருந்த வேளையில் , தியேட்டர் இருட்டில் டார்ச் அடித்து வழிகாட்டுப்வனை போல லுசியா திரைப்படம் கவனிப்பினால் கன்னட சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியது போல இருந்தது....
Labels:
தமிழ்சினிமா,
திரில்லர்,
பார்த்தே தீர வேண்டிய படங்கள்
சென்னை மயிலையில் அதிகரிக்கும் நடமாடும் டீக்கடைகள்.
சென்னை மயிலை வாசிகள்... கண்டிப்பாக இந்த மாற்றத்தை கடந்த மூன்று மாதங்களாக பார்த்து இருக்க வாய்ப்புண்டு... இளம் வயது சல்மான்கான் ஷாருக்கான் போன்று இருக்கும் சின்ன வயது பசங்கள் டீ விற்று அலைவதை பார்த்து இருப்பீர்கள்....
Labels:
அனுபவம்,
சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ,
மயிலாபூர்
சினிமாவுக்கென புதிய தளம்.... ஜாக்கி சினிமாஸ்...
அன்பின் நண்பர்களே...
சினிமாவுக்கென புதிய தளம் ஆரம்பித்துள்ளேன்..முழுக்க முழுக்க சினிமா சார்ந்த செய்திகளை கட்டுரைகளை விமர்சனங்களை ஜாக்கி சினிமாஸ் என்ற பிரத்யோக வலைதளத்தில் எழுத இருக்கின்றேன்....
Labels:
அறிவிப்புகள்,
அனுபவம்,
பதிவர் வட்டம்
காதலர் தின ஸ்பெஷல்.
காதலர் தின ஸ்பெஷல்.....
ஒரு மெச்சூர்டான லவ் எப்படி இருக்க வேண்டும்... அது எப்படி வெளிப்படுத்த வேண்டும்...? இரண்டுபேர் மனம் முழுக்க காதல் பூத்து இருந்தால் அடுத்த கட்டமான காமத்தை நோக்கி அது எப்படி செல்லும்... ????என்பதற்கு நம்மவர் திரைப்படத்தின் இந்த காதல் காட் சி ஒரு உதாரணம் என்பேன்...
மனம் முழுக்க காதல் உடனே பூக்க வேண்டும் என்றால் இந்த காட்சியை திரும்ப பார்ப்பது என் வழக்கம்.. மிக அற்புதமான காட்சி இது.
வீட்டுக்கு வெளியே கவுதமி., கமல், ஸ்ரீவித்யா பின்னி இருப்பார்கள்...
கமல் சொல்லுவார்...சாரிங்க... எங்க அக்கா... கொஞ்சம் லூசு.. அதற்கு கவுதமி உங்க குடும்பத்துல எல்லோருமே அப்படித்தான் போல என்று சொல்லுவார். என்னங்க எங்க குடும்பத்தை பத்தி என்று கமல் கேட்கும் போது... நானும் உங்க குடும்பத்துல ஒருத்தின்னு நினைச்சேன் என்பார் கவுதமி.
மழை சீன் ஆரம்பித்ததும்....4,59 இல் இருந்து 7,48 வரை
ஒரே ஷாட்... கட் ஷாட் ,இல்லை...
காமத்துக்கு முன் ஒரு அர்த்தமற்ற உளறல் இருக்குமே இது போலான உளறல் மற்றும் உரையாடல் அது...........
அதன்பின் உள்ள காட்சிகளை எழுதினால் ரொமான்டிக் மூட் வந்து நிறைய பணிகள் பாதிக்கப்படும் என்பதால் நான் இத்துடன் அபீட் ஆகிக்கொள்கின்றேன்.
14 நிமிட வீடியோவை பாருங்க.. ரோமான்டிக் பில் வரவில்லை என்றால் நல்ல மருத்துவரை அனுகுவது உசிதம்.
கண்டநாள் முதல் .. காதலர் தின ஸ்பெஷல்.
ஸ்கிரிப்ட்டில் இருப்பதை தன் உணர்வுகளையும் சேர்த்து செல்லுலாய்டுக்கு கடத்துபவனே நல்ல இயக்குனர் என்பேன்... அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த படம் கண்டநாள் முதல்..
எப்போது அந்த படத்தை பார்த்தாலும் பிரசன்னா லைலா கெமிஸ்ட்ரி அவ்வளவு அழகாக ரம்யமாக இருக்கும்... பார்த்தாலும் சாகடிக்கறா... பார்க்காம இருந்தாலும் சாகடிக்கறா என்று கதறும் வசனங்கள் சிறப்பானவை. நம் கண்ணிலும் நீர் கசியும் காட்சி அந்த கிளைமாக்ஸ்...
ஏதோ இரண்டாம் படத்தில் சருக்கினாலும் பிரியா போன்ற இயக்குனர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும்...
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

ஒரு மெச்சூர்டான லவ் எப்படி இருக்க வேண்டும்... அது எப்படி வெளிப்படுத்த வேண்டும்...? இரண்டுபேர் மனம் முழுக்க காதல் பூத்து இருந்தால் அடுத்த கட்டமான காமத்தை நோக்கி அது எப்படி செல்லும்... ????என்பதற்கு நம்மவர் திரைப்படத்தின் இந்த காதல் காட் சி ஒரு உதாரணம் என்பேன்...
மனம் முழுக்க காதல் உடனே பூக்க வேண்டும் என்றால் இந்த காட்சியை திரும்ப பார்ப்பது என் வழக்கம்.. மிக அற்புதமான காட்சி இது.
வீட்டுக்கு வெளியே கவுதமி., கமல், ஸ்ரீவித்யா பின்னி இருப்பார்கள்...
கமல் சொல்லுவார்...சாரிங்க... எங்க அக்கா... கொஞ்சம் லூசு.. அதற்கு கவுதமி உங்க குடும்பத்துல எல்லோருமே அப்படித்தான் போல என்று சொல்லுவார். என்னங்க எங்க குடும்பத்தை பத்தி என்று கமல் கேட்கும் போது... நானும் உங்க குடும்பத்துல ஒருத்தின்னு நினைச்சேன் என்பார் கவுதமி.
மழை சீன் ஆரம்பித்ததும்....4,59 இல் இருந்து 7,48 வரை
ஒரே ஷாட்... கட் ஷாட் ,இல்லை...
காமத்துக்கு முன் ஒரு அர்த்தமற்ற உளறல் இருக்குமே இது போலான உளறல் மற்றும் உரையாடல் அது...........
அதன்பின் உள்ள காட்சிகளை எழுதினால் ரொமான்டிக் மூட் வந்து நிறைய பணிகள் பாதிக்கப்படும் என்பதால் நான் இத்துடன் அபீட் ஆகிக்கொள்கின்றேன்.
14 நிமிட வீடியோவை பாருங்க.. ரோமான்டிக் பில் வரவில்லை என்றால் நல்ல மருத்துவரை அனுகுவது உசிதம்.
கண்டநாள் முதல் .. காதலர் தின ஸ்பெஷல்.
ஸ்கிரிப்ட்டில் இருப்பதை தன் உணர்வுகளையும் சேர்த்து செல்லுலாய்டுக்கு கடத்துபவனே நல்ல இயக்குனர் என்பேன்... அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த படம் கண்டநாள் முதல்..
எப்போது அந்த படத்தை பார்த்தாலும் பிரசன்னா லைலா கெமிஸ்ட்ரி அவ்வளவு அழகாக ரம்யமாக இருக்கும்... பார்த்தாலும் சாகடிக்கறா... பார்க்காம இருந்தாலும் சாகடிக்கறா என்று கதறும் வசனங்கள் சிறப்பானவை. நம் கண்ணிலும் நீர் கசியும் காட்சி அந்த கிளைமாக்ஸ்...
ஏதோ இரண்டாம் படத்தில் சருக்கினாலும் பிரியா போன்ற இயக்குனர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும்...
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

Labels:
அனுபவம்,
தமிழ்சினிமா,
திரைப்படபாடல்
Anegan-2015- அனேகன் திரைவிமர்சனம்
எழுத்தாளர்கள் சுபாவோடு சூப்பர் நாவல் காலத்தில் இருந்து கேவி ஆனந்துக்கு உள்ள நட்பு அனேகன் வரை தொடர்ந்து வந்துக்கொண்டு இருக்கின்றது... இன்று படம் பார்ப்பவர்கள் இளைஞர்கள் என்பதால் அவர்களுக்கு மிகவும் பிடித்த கிரைம் திரில்லர் கதைகளை கையில் எடுத்துக்கொண்டு சேப்ட்டியாக பயணிக்கின்றார்கள்... அதில் பெரியசருக்கலை மாற்றன் திரைப்படத்தில் சந்தித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.... அயன் திரைப்படத்துக்கு பிறகு... வெற்றி பெற்றாக வேண்டிய சூழல், சொல்லி அடிக்க வேண்டிய கட்டாயம்... தனுஷ்வுடன் முதல் முறையாக கை கோர்த்து இருக்கின்றார்கள்... ஒரளவுக்கு அதில் வெற்றியும் பெற்றுள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்...
காத்திருந்து கிடைக்கும் வெற்றி... கண்ணீரை வரவைக்கும்.
உங்களுக்கு பிடித்த காதல் பாடல் எது? என்று கேட்டால் நிறைய பேர் நிறைய பாடல்கள் சொல்லுவார்கள்... ஆனால் எனக்கு 1996 ஆம் ஆண்டு அருண் மந்தரா நடித்த திரைப்படம் பிரியம் திரைப்படத்தில் வரும்..
உடையாத வெண்ணிலா
உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெளி
நனையாத பூவனம்
உதிர்கின்ற ஓருமுடி
களைகின்ற சிறுநகம்
சிருங்கார சீண்டல்கள்
சில்லென்ற ஊடல்கள்
ப்ரியம் ப்ரியம்
என்ற பாடல் பலருக்கு நினைவுக்கு இருக்கின்றதா ? என்று தெரியவில்லை... வித்யாசாகர் இசையில் வெளியான இப் பாடல் என் ஆல்டைம் பேவரைட்...
அருண்மேல் பெரிய ஈர்ப்புஇல்லை என்றாலும் அந்த பாடலின் வரிக்காக அந்த பாடல் ரொம்பவே பிடிக்கும்... அதன் பின் தில்ரூபா தில்ரூபா பாடல் கூட அருண் விஜய்யை விட மந்தராவின் பெரிய கண்ணுக்கும் அதன் பின் அதே போன்று அவரின்பிரமாண்ட மனசுக்கும் ரொம்பவே அன்றைய காலத்தில் பிடித்தது..
Labels:
அனுபவம்,
சினிமா சுவாரஸ்யங்கள்,
தமிழ்சினிமா
Yennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.
ஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா-? இல்லையா ? என்பது படம் வெளியான
போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு
காரணிகளாக இருக்கும்... ஆனால் ஒரு இயக்குனர்
ஒரு படத்தை நன்றாக இயக்கி அந்த படம் தோல்வி
படமாக மக்கள் நிராகரித்தாலும், நான் என்னுடைய
பெஸ்ட்டை கொடுத்தேன் மக்கள் அங்கீகரீக்கவில்லை என்று சொன்னால்அதில் ஒரு நியாயம் இருக்கின்றது...
எந்த பெஸ்ட்டையும் கொடுக்காமல் ஆற்றில் ஒருக்கால் சேற்றில் ஒருக்கால் வைத்தால் என்ன
செய்வது...?? அதுதான் தமிழ் திரையுலகில்
தற்போது நடந்துவருகின்றது.
Labels:
கிரைம்,
தமிழ்சினிமா,
திரில்லர்,
பார்க்க வேண்டியபடங்கள்
GONE GIRL -2014- காணமல் போன எழுத்தாளர் மனைவி.
நிக் காலையில
எழுந்துருக்கரான்… எழுந்தா கடுப்பா இருக்கு… வெளியே வந்து பார்க்கறான்..
ரோடு அமைதியா இருக்கு…
மணி பார்க்கறான்..
ஏழரை ஆவுது…
கடுப்பா
இருக்கு…
காரை எடுத்துக்கிட்டு
போறான்….
எங்கே போறான்
தெரியுமா?
பேமானி எங்க
வேடிக்கை பார்க்கறே…
கதை சொன்ன அட்லீஸ்ட்
ஊம் கொட்டனும்னு ஒரு அடிப்படை கர்ட்டசி மயிறு கூடவா உனக்கு தெரியாது…
சரிய்யா….உம்…
நேரா
அவன் காரை எடுத்துக்கிட்டு போறான்..
ம்….
எங்க போறான் தெரியுமா?
Labels:
கிரைம்,
திகில்,
திரில்லர்,
பார்த்தே தீர வேண்டிய படங்கள்,
ஹாலிவுட்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரகுமான் ஜி.
2009 ஆம்
ஆண்டு ஒட்டு மொத்த உலகமும் இந்தியாவை திரும்பி
பார்க்க வைத்த ஆண்டு..
கோல்டன் குளோப்பில் பப்டா என்பதோடு விட்டு விடாமல்
ஒரேநாளில் ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கார்
பெற்ற இசையமைப்பாளனை மேற்கத்திய உலகமும் கிழக்கிந்திய உலகமும் ஆச்சர்யத்துடன் திரும்பி பார்த்தன.... அவ்வளவு
ஏன்... ஸ்பீல் பெர்க் படங்களுக்கு இன்றுவரை
இசைக்கோர்ப்பு செய்யும் ஜான்வில்லியம்ஸ் போன்ற இசைமேதைகளே கொஞ்சம் ஆடித்தான் போனார்கள்...
ஆம் இந்தியா
சார்பாக ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கார்களை ஏ ஆர் ரகுமான் பெற்றார்...
Labels:
அனுபவம்,
ஆர். ரகுமான்.,
இந்திய சினிமா,
இன்று பிறந்தவர்கள்,
ஏ,
தமிழ்சினிமா
ஈ அடிச்சான் காப்பி அடிக்கும் புரட்சி எப்எம்.
உலகில் மிகப்பெரிய கொடுமை எதுவென்றால்... நீங்கள்
எழுதிய பதிவை நீங்களே இது நான் எழுதிய
பதிவுதான் என்று நிரூபிக்க வேண்டிய இடம்
இருக்கின்றது பாருங்கள் அதுதான் கொடுமை...
காப்பி என்றால் என்ன இன்ஸ்பிரேஷ்ன் என்றால் என்ன?
என்று பக்கம் பக்கமாக எழுதியவன் நான்...இப்போது
ஈ ஆடிச்சான் காப்பி என்றால்
என்னவென்றுவேறு எழுதி தொலைக்க வேண்டி வரும் போல...
Labels:
அனுபவம்,
சமுகம்,
சவுஜன்யா,
பதிவர் வட்டம்
எல்லை மீறுகின்றதா? புத்தாண்டு கொண்டாட்டம்...
புத்தாண்டு கொண்டாட்டம் எல்லை மீறி போகின்றதா ??? என்று சன்டிவி நியூஸ் சேனலில் இளைஞர்கள் சிலர் எல்லை மீறிய காட்சிகளை காட்டினார்கள்…
குட் பை 2014
1994 ஆம் ஆண்டு கடலூரில் இருந்து சென்னைக்கு பேருந்தில் செக்யூரிட்டி வேலைக்கு சரியாக 31 ஆம் தேதி பெரியார் பேருந்தில் சென்னை நோக்கி வரும் போது பிரபு ரசிகர் மன்றத்தினர் மெட்டாடர் வேன்களில் நடிகர் பிரபு பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல சென்னை நோக்கி விரைந்தனர்… அவர்களோடு எதிர்கால கனவுகளோடு நானும் சென்னை நோக்கி……
Labels:
அனுபவம்,
சினிமா சுவாரஸ்யங்கள்,
தமிழ்சினிமா
Kayal /2014/ கயல் சினிமா விமர்சனம்.
பரிட்சார்த்த முயற்சிகள் தன் திரைப்படங்களில் அதிகம் செய்து பார்த்த பிரபுசாலாமன் கடைசியில் காதலை
கையில் எடுக்க
தொடர்ந்து இரண்டு படங்கள் வெற்றியோ வெற்றி.. அது மட்டுமல்ல... மைனா திரைப்படம் அதன் திரைக்கதை கட்டமைப்பு...
கேரக்டர் சேஷன் எல்லாம் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படவேண்டிய திரைப்படம் இது என்றால் மிகையில்லை...
Meaghamann-2014- மீகாமன் திரைவிமர்சனம்.
தடையறதாக்க மகிழ்திருமேனியின் இரண்டாவது திரைப்படம் முதல் படம் முன் தினம் பார்த்தேனே.. செவன்த் சேனலுக்காக செய்த படம்… பத்தோடு பதினொன்றாக போய் விட்டது..
மகிழ் செல்வராகவன், மற்றும் கவுதமிடம் அசிஸ்டென்டாக
இருந்தவர்… அதனால் தனது இரண்டாவது திரைப்படமான தடையற தாக்க திரைப்படத்தை ஆக்ஷன் மூலம் பூசி கொடுத்தார்… இதில் பெரிய விஷயம் என்னவென்றால் அருன்
விஜய் போன்ற பிரேக் இல்லாத நடிகரை வைத்து தன்னம்பிக்கையோடு ஒரு ஆக்ஷன் திரைப்படத்தை கொடுக்க செம தில் வேண்டும்… தடையறதாக்க மகிழ்
பெயரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த திரைப்படம் என்றே சொல்ல வேண்டும்…
Labels:
கிரைம்,
சினிமா விமர்சனம்,
தமிழ்சினிமா,
திரில்லர்,
பார்க்க வேண்டியபடங்கள்
PISAASU -2014- பிசாசு திரை விமர்சனம்.
பொதுவா தமிழ் திரைப்படங்களில் பேய் படம் பார்த்து பயப்படுவதற்கு பதில் சில நேரங்களில் சிரிப்பை வரவைத்து விடுவார்கள்...
அந்த அளவுக்கு பேயை
சிரிப்பு பொருளாக மாற்றும் வித்தை
தெரிந்தவர்கள்… மற்றும் புரிதல் அதிகம் உள்ளவர்கள் என்றும் சொல்லலாம்.
இன்னைக்கு வரைக்கும் பிளாக் அண்டு ஒயிட் திரைப்படங்களில் நான் பார்த்து பயந்த திரைப்படம்
நெஞ்சில் ஓர் ஆலயம்.
Labels:
கிரைம்,
தமிழ்சினிமா,
திகில்,
திரில்லர்,
பார்க்க வேண்டியபடங்கள்
ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் (இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்)
உலகில் மிக கொடுமையான விஷயம் என்னவென்றால் இரண்டு அப்பா இரண்டு அம்மாவோடு வாழ்வதும் வளர்வதும்தான்.. அவன்
பிள்ளையை நன்றாக பார்த்துக்கொள்வான் என்று இவளும்… இவள் நம் பிள்ளையை நன்றாக பார்த்துக்கொள்ளுவாள் என்று
அவனும் நினைத்து இருக்க… இரண்டு பேரும் இணைந்து பெற்ற பிள்ளையை பார்த்துக்கொள்ளாமல் நட்டாற்றில் விடப்படுபவர்கள்
கண்டிப்பாக விவாகரத்து செய்யப்பட்ட பெற்றோர்களின்
பிள்ளைகளே….
Good People-2014 /மாட்டிக்கொண்ட நல்லமனிதர்கள்
பணம் பிரதானம்தான் ,இருந்தாலும் சில நேரங்களில் அதீத பணத்தேவையின் போது தெரிந்தோ தெரியாமலோ சில தவறுகளை மனிதர்கள் செய்து தொலைத்து விடுகின்றார்கள்… சில நேரங்களில் நேரம் நன்றாக இருந்தால் செய்த தவற்றில் மாட்டிக்கொள்வதில்லை… நேரம் நன்றாக இல்லாமல் ஏழரை சனி புல் போக்கசில் தவறு செய்தவர்களை பார்த்துக்கொண்டு இருப்பாரேயானால் ஆப்பு தவறு செய்தவர்களுக்கு உருவாகி விட்டது என்று அர்த்தம்.
Labels:
கிரைம்,
சினிமா விமர்சனம்,
டைம்பாஸ் படங்கள்,
திரில்லர்,
ஹாலிவுட்
ரகுவரன் தமிழ் சினிமா மறக்க முடியாத பெயர்.
ரகுவரன்
1990 ஆம் ஆண்டு கடலூர் ரமேஷ் தியேட்டரில்
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான புரியாத
புதிர் திரைப்படம் ரகுவரன் என்ற நடிகரை எனக்கு
அறிமுகப்படுத்தியது… ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ…. ஒரு சைக்கோ
கேரக்டர் எப்படி இருக்கும் என்பதை கண்முன்
நிறுத்தினார் ரகுவரன்.. அதற்கு முன் தமிழ் சினிமாவில் வில்லன் என்றால் அவன் மேல் சிவப்பு கலர்
லைட் லோ ஆங்கிளில் இருந்து அடிக்க அவன்
கண்களை உருட்டி பார்ப்பான்..
Labels:
இன்று பிறந்தவர்கள்,
சினிமா சுவாரஸ்யங்கள்,
தமிழ்சினிமா,
ரகுவரன்
Subscribe to:
Posts (Atom)




















.jpg)




.jpg)
















