மனதில் இனம் புரியா பாரம்...உப்புக்காத்து/27


நான்கு நாட்களாக  அதை பற்றி நினைவாகவே இருந்தது... 



 கடந்த 30 ஆம் தேதி எனக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது...யாராக இருக்கும் என்று  மனம் யோசித்துக்கொண்டே இருந்தது... அந்த நம்பரை பேரோடு சேமித்து வைத்துக்கொள்ளவில்லையே என்று என்னை நானே நொந்துக்கொண்டேன்... 

அன்றும் மறுநாளும் செல் எடுக்கும் போது எல்லாம்  யாராக இருக்கும்???சென்னையா?  அல்லது தமிழ்நாடா? நன்கு அறிமுகமான பழக்கமா?? அல்லது எப்போதாவது ஒரே  ஒரு முறை  மட்டும் சந்தித்தோமா? என்று மனதில்  கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கின்றேன்... அனாலும் பதில் கிடைத்த பாடில்லை..

  வாயில் பிரஷ்ஷூடன், உடம்பை டவலால் துவட்டும் போது, சிக்னலில்  பைக் நிற்கும் போது, பதிவர் சந்திப்பில் நண்பர்களை சந்தித்த போது, தினசரிகளில் விபத்து செய்திகளை படிக்கும் போது, அந்த எஸ் எம் எஸ் பற்றி யோசித்துக்கொண்டே இருந்தேன்....

 30 ஆம் தேதி  வந்த எஸ்எம்எஸி,ல ஆங்கிலத்தில் வந்த செய்தி இதுதான்.....

என் அம்மாவும் என் தங்கையும்  இறந்து விட்டார்கள்... நேற்று நடந்த விபத்தில்.... என்று 30 ஆம் தேதி எஸ்எம்எஸ் வந்தவுடன்.. அதை உடனே பார்க்கவில்லை.... சில மணி நேரம் கழித்துதான் அதனை பார்த்தேன்...  செமையான மூட் ஆப்....உடனே போன் அடித்தேன்... ஆனால் எடுக்க வில்லை...  அனுப்புனர் பெயர் இல்லை...  என்னிடம் நம்பர் மட்டுமே.. நான் உடனே  இது யார் என்று செய்தி அனுப்பினேன்.. பதில் இல்லை... அதன் பின்  நான்  யார் என்று தெரிந்துகொள்ளலாமா? என்று செய்தி அனுப்பினேன்... பதில் இல்லை...  அனுப்பியவர் மனநிலை எப்படி இருக்கும்? அதனால்  அப்படியே விட்டு விட்டேன்...   நான்கு நாட்களாக எல்லா வேலையிலும் இதே  சிந்தனை நேற்று அதே நம்பருக்கு போன் செய்தேன்... அடக்கொடுமையே.....

ஈரோடு பதிவர் சந்திப்பில் முதல் முறையாக கலந்து கொண்ட போது அவனே வந்து பேசினான்...  என் பேரு சையத் முஸ்த்தாபா என்று அறிமுகபடுத்திக்கொண்டு பேசினான்.... ஸ்பீட் மாஸ்டர் என்ற தளத்தில் எழுதிகின்றேன் என்றான்...அங்கேதான் அவனை முதலில்  சந்தித்தேன்...அதன் பின் போனில் பதிவு குறித்து பேசுவான்...

ஜாக்கி அண்ணே....
நான் வெளிநாடு போலம்ன்னு இருக்கேன்... சென்னையில் உங்களுக்கு  தெரிந்த  நண்பர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்க...

டேய் எனக்கு அதில் எந்த அனுபவமும் இல்லை என்றேன்..

அதன் பின் ஒரு நாள் போன் செய்தான்... சென்னையில் இருக்கும் ஒரு நபரை பற்றி  விசாரித்தான்... வெளிநாடு போறேன்..அண்ணே அவரை நம்பி பணம் கொடுக்கலாம்ன்னு இருக்கேன்...  நான் உடனே எனக்கு   தெரிஞ்சி அந்த பையன்  நல்ல பையன் என்றேன்...

ஊருக்கு போறேன் என்பதை தெரிவித்தான்... அதன் பின்... வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்புகளை  தொடர்ந்து மெயில்  அனுப்புவான்...

அதன் பின் நேற்றுதான் பேசினான்... அண்ணே நான் ஸ்பீட் மாஸ்டர் சையத் முஸ்தாபா .... அம்மா  தங்கச்சி இரண்டு பேருமே என்னை  விட்டு  விட்டு  போயிட்டாங்கண்ணே என்று கதறினான்.

பழனியில் இருந்து கரூர் போற பஸ் அது... அப்பதான்  அம்மா, தங்கை, சித்தியை பஸ் ஏத்தி விட்டேன்...   டாக்டரை பார்க்க போனங்க....பத்து நிமிஷத்துல எல்லாம் முடிஞ்சிடுச்சி...



பழனியில் இருந்து கிளம்பும் போதே தனியார் பேருந்து டிரைவர் டைம் கீப்பரிடம் சண்டை போட்டுக்கொண்டே பேருந்தை எடுத்து   பேய் வேகம்  விரட்டி இருக்கின்றான்... 

தூத்துக்குடியில் இருந்து காற்றலை  இறக்கை ஏற்றிக்கொண்டு மகாராஷ்ட்ராவை நோக்கி  செல்லும் லாரி... அரவாக்குறிச்சி அருகே  லாரியை ஓரமாக நிறுத்த வளைந்து  இருக்கின்றான்.... பின்னாடி  சிவப்பு கொடி  ஒருவர்  காட்டிக்கொண்டு இருக்க வளைந்து இருக்கின்றான் என்பது முக்கியம்ன செய்தி...... லாரியை விட்டு பத்தடி  காற்றலை ரக்கை  நீட்டிக்கொண்டு இருக்கும்...  பேருந்து பிரேக் அடித்து    அந்த இடத்தில் நின்று  போய் இருந்தால் பிரச்சனை இல்லை. வேகம்  புயல்  வேகம்....கேப்புல அப்படியே சைடுல   போயிடலாம் என்று தனியார் பேருந்து  டிரைவர்  அசால்ட்டாக எடுத்த முடிவு பலரை காவு வாங்கி இருக்கின்றது. காற்றலை ரெக்கை பேருந்து உள்ளே புகுந்து பலரை கிழித்து துடி துடித்தது  இறக்க வைத்து இருக்கின்றது.

அந்த செய்தியை நானும் படித்தேன்....ஆனால் அதில் பாதிக்கப்பட்டவன்தான் எனக்கு  எஸ்எம்எஸ் அனுப்பினான் என்று  நான்  கனவிலும் நினைக்கவில்லை.

டிரைவர் செல்போன் பேசியபடி வேகமாக ஓட்டிவந்தான்.. கட்டுக்கடங்காத வேகம்.... பேருந்தில் இருப்பவர்களே பொறுமையாக ஓட்ட சொல்லி  இருக்கின்றார்கள்.. டைம் கீப்பருடன் சண்டை,  அந்த டென்ஷனில்  பேருந்தை காட்டுதனமாக ஓட்டி இருக்கின்றான்... பேருந்து மோதும் போது வழக்கம் போல டிரைவர் குதித்து தப்பி விட்டான்....

அண்ணே கஷ்ட ஜீவனம் நடத்தினப்ப்பெல்லாம் எங்க அம்மா என் கூட இருந்தச்சி,  நாலு காசு சம்பாதிக்கும் போது போய் சேர்ந்துடுச்சி...வறுமையிலும் சிக்கனமா குடும்பம் நடத்துனவங்க அவுங்க.. அல்லா மேல அவ்வளவு பற்று..  இந்த ரம்ஜான் மட்டும் அல்ல... நோம்பை கடுமையா கடை பிடிக்கறவங்க... எல்லாரும் நல்லா இருக்கனும்ன்னு நினைச்சவங்க... அவுங்களுக்கு ஏன் இந்த நிலைமைன்னே..??

 என் தங்கச்சிக்கு 19 வயசு இப்பதான் அவளுக்கு அலையான்ஸ் பார்க்க ஆரம்பிச்சோம்.. இரண்டு மூணு சம்பந்தம் கூட வந்துச்சி,ஆனா அவளும்   அம்மாவோட என்னை விட்டு போய்  சேர்ந்துட்டா....

விபத்து நடத்து அரைமணிநேரத்துக்கு உதவிக்கு யாருமே வரலைன்னே...பொதுமக்களே  உதவி செய்ய  உள்ள வர  யோசிச்சாங்க... நான் விஷயம்  கேள்வி பட்டு  ஓடினேன்... எங்க அம்மாவை  தேடினேன்... எங்க அம்மா மேல நிறைய பேரு விழுந்து கிடந்தாங்க...  பஸ்  ரேடியேட்டர் பக்கத்துல அம்மா உட்கார்ந்து இருந்து இருக்காங்க.... அவுங்க முதுகெலும்பு உடைஞ்சி கிடந்தாங்க.... ஆம்புலன்ஸ்ல ஏத்திக்கிட்டு போனேன்.. அப்ப கொஞ்சம் உசிறு இருந்திச்சி... என் கையிலேயே என் அம்மா கண்ணுமுன்னாடி விட்டுட்டு போயிட்டாங்க ஜாக்கி அண்ணே என்று கதறினான்..

எனக்கு  போனில் பேச வார்த்தை கிடைக்காமல் தடுமாறினேன்... கண்களில் கண்ணீர்.. அவன் தங்கையை பற்றி  அதுக்கு மேல் கேட்க எனக்கு துணிவு இல்லை...

 பாரின் போயிட்டு  வந்தேன்.. கடன் எல்லாம் அடைச்சிட்டேன்...அம்மாவுக்கு ஆசையா  சீலை எடுத்து வந்தேன்...  கட்டும்மா கட்டும்மா என்றேன்.. கட்டுறேன் கட்டுறேன்னு சொல்லிட்டு..... கடைசி வரை  அந்த சீலையை கட்டாம போயிட்டா.... கடைசியில அவ மேல அந்த  சேலையை போர்த்தி  ஊர்வலமா எடுத்துக்கிட்டு போனோம்....



அண்ணே  என் வீடு பெரிய வீடு இல்லை... சின்ன ஹால்தான் ... எல்லா இடத்திலேயும் என் அம்மாவும் தங்கச்சியும் உட்கார்ந்து இருக்கறது போல இருக்கு...இன்னும் இரண்டு மாசத்து நான் பாரின் போயிடுவேன்... மனசை தேத்திக்குவேன்... ஆனா எங்க அப்பா நிலைமையை நினைச்சாதான் எனக்கு வருத்தமா இருக்கு என்று அழுதான்....

ரொம்ப நல்லவங்க.. கடவுள் பக்தி உள்ளவங்க.. கடுமையா நோம்பு இருக்கறவங்க... அவுங்க கண் எதிர்க்க  சிதைஞ்சி கடக்கறதை  பார்த்தேன்  பாருங்க..  அப்படியே கண்ணுலயே இருக்கு...

அண்ணே இந்த நேரத்துலயும் போன் பண்ணி விசாரிக்கறியே...  ரொம்ப நன்றிண்ணே என்றான்... எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை..மனம் முழுக்க பாரம் ஏறி இருந்தது...

அவன் சகோதரி மற்றும் அம்மாவின் ஆன்மா  சாந்தி அடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்...தம்பி சையத்  விரைவில் மீண்டு வர எல்லாம் வல்ல அல்லா  அவனுக்கும் அவன் தந்தைக்கும்  துணையிருக்கட்டும்.



தனியார் டிரைவர்கள்... வேகமா போனால் பேருந்தில் இருக்கும் பயணிகள் எச்சரியுங்கள்... மீறி  காட்டுத்தனமாக ஓட்டினால் அல்லது செல்போன் பேசிக்கொண்டு அசால்ட்டாக ஓட்டினால் ???ஓத்தா வண்டியை நிறுத்து  என்று சொல்லி வண்டியை நிறுத்தி விட்டு அவன் பயிறுகளை எறைய விடுங்கள். இது பேருந்து மட்டும் அல்ல.. கார் வாடகைக்கு எடுத்து சென்றாலும்  சொல்ல உங்களுக்கு  உரிமை இருக்கின்றது...

 =========
நேற்று கோவை அருகே  நடந்த ஒரு  சம்பவத்தை முகநூலில் நண்பர் பாண்டியன் அவர்கள் புகைபடத்துடன் பகிர்ந்த செய்தி..... உங்கள் பார்வைக்கு...


கோவை - பொள்ளாச்சி ரோட்டில், "சிட்கோ' பகுதியில் உள்ள "ரயில்வே கேட்டில் நேற்று நடந்த சம்பவம்....


நேற்று மாலை 5.30 மணியளவில், பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்த அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு இடையே "யார் முந்துவது' என்ற போட்டியில், அரசு பஸ்ஸை நிதிஷ் என்ற தனியார் பஸ் (வண்டி எண்: டிஎன் 37 பிஒய் 7943) முந்திச் சென்றது. ரயில் வருவதற்கு மிகக்குறைவான நேரமிருக்கும் நிலையில், "ரயில்வே கேட்'டை மூடுவதற்கு அங்குள்ள பணியாளர் முயன்றபோது, தனியார் பஸ் வேகமாக தண்டவாளத்தைக் கடக்க முயன்றது. 

முழுமையாக "ரயில்வே கேட்'டை இறக்குவதற்குள் பஸ் வந்து விட்டதால், "கேட்'டை மூட முடியவில்லை. அதேநேரத்தில், பாலக்காட்டிலிருந்து பாசஞ்சர் ரயில், தண்டவாளத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தது. 

பஸ் கடப்பதைப் பார்த்த ரயில் இன்ஜின் டிரைவர், சற்று வேகத்தைக் குறைத்துள்ளார். அதற்குள், பஸ் தண்டவாளத்தைக் கடந்து விட்டது. வந்த வேகத்திலேயே ரயில் தொடர்ந்து வந்திருந்தால், பஸ்சின் மீது மோதி இருக்கும். ரயில் இன்ஜின் டிரைவரின் சாமர்த்தியத்தால், பஸ்சில் இருந்த 100 பயணிகள் உயிர் தப்பினர்.



 செய்திக்கும் புகைபடத்துக்கும்.....
நன்றி பாண்டியன்.
===================

 யோசித்து பாருங்க மக்களே...  அந்த 100 பேருல 50 பேர் செத்து , கைகால் போய் கிடந்தா..??? ங்கோத்தா எவன் பொறுப்பு... ??ரயில் மோதப்போவுது அல்லது காற்றாடி ரக்கை அடிக்க போவுதுன்னி தெரிஞ்சதும், டிரைவர்  சீட்டுல   இருந்து எகிறி குதிச்சி, தப்பிச்சிட்டு..... ஆட்டிக்கிட்டு ஆர்டிஓ போய் பைன்  கட்டி  விட்டு, கூலா வெளிய வந்துட போறானுங்க... 

குடும்பத்துல இரண்டு பேர்  இழந்துட்டு, அதுவும் வயசு பொண்ணை பறிகொடுத்துட்டு  விக்கித்து உட்கார்ந்து இருக்கறது.....இந்த  பண்ணாடைங்களுக்கு எப்படி தெரிய போவுது...?


எத்தனையோ டிரைவர்ங்க  ராக்கண்ணு பகல்கண்ணு முழிச்சி உயிரை பணயம் வச்சி பொதுமக்கள் உயிரை காப்பாத்தி  தினம் தினம் விரைவு பேருந்து டிரைவர்கள் தன் பணியை செவ்வனே செஞ்சிக்கிட்டுதான் இருக்காங்க...

 ஈரோடு , கோவை பகுதிகளில் பெண்கள் பேருத்தின்  முன்னேதான் ஏற வேண்டும்...  டிரைவர் சீட்டை சுற்றி ஒரே பொம்பளைங்கதான்... ஒரு புள்ளையை பைக்  பின்னால உட்கார வச்சிக்கிட்டு ஓட்டினாலே அவ்வளவு   ஷோ காட்டுவோம்.. சுத்தி பொம்பளைங்க இருந்தா என்ன பண்ணுவான்... ???பிளைட் ஓட்டறதா பீல் பண்ணிக்கிட்டு அதிகமாத்தான் ஷோ காட்டுவானுங்க....

இது போல காட்டுதனமா வண்டி ஓட்டும் தனியார் பேருந்து டிரைவர்கள்... எங்க ஊரிலும் இருக்கின்றார்கள்.. கடலூர் டூ பாண்டி பேருந்து ஓட்டுனர்கள் அப்படித்தான் ஓட்டுவார்கள்...

வேகமா போறது எனக்கும் பிடிக்கும்... ஆனா  எல்லா இடத்திலேயும் காட்டுதனமான வேகம்  ஓட்டுறதில்லை.

 தனியார் பேருந்துல டிரைவருங்க சத்தமா சினிமா பாட்டை வச்சிக்கிட்டு, சட்டையில்  எல்லா பட்டனும் கழட்டி விட்டு , மூலம் வந்தது  போல சூத்தை ஓரு மாதிரி சீட்டோட சைடுல வச்சிக்கிட்டு ஓட்டற தனியார் பேருந்து டிரைவர்ங்களை பார்த்து  இருப்பிங்க... அப்படி யாராவது வேகமா  போனா கண்டிங்க... வேகமா போறது வேற... காட்டுத்தனமா டைம் எடுக்கறேன்.. பறக்கறது வேற... இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு....


தட்டிக்கேட்க நமக்கும் பொறுப்பு இருக்கின்றது...  காட்டுத்தனமாக பேருந்து ஓட்டுவதை தனியார் பேருந்து ஓட்டுனர்களே இனிமேலாவது தவிர்ப்பீர்காளா,?


பேருந்து ஏற்றி  விட்டபத்து நிமிடத்தில் ரத்தமும் சதையுமாக அம்மாவையும் தங்கையையும் பார்த்து துடிக்கும்  வாய்ப்பை  நீங்கள் நேரில் பார்த்து இருக்க மாட்டீர்கள் பேருந்து ஓட்டுனர்களே...?? அப்படி பார்த்து இருந்தால் நிதானம் கண்டிப்பாக வந்து இருக்கும்...

நிறைய பேர்  அந்த விபத்தில் இருந்து போய் இருக்கின்றார்கள்... இறந்து போன அத்தனை பேருக்கு பின்னாடியும்  வலிகள் வேதனைகள் கண்டிப்பாக இருக்கும்... நமக்கு தெரிந்து இந்த  இரண்டு வலிகள் மட்டுமே...


நிதானம்  காப்போம்.


நினைப்பது அல்ல நீ 

நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

22 comments:

  1. முதலில் இறந்தவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் (இன்ன லில்லா ஹி வ இன்னா இலைஹி ராஜிவுன் ).
    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி .
    இதைப்போல ஒரு சம்பவம் நியாபகம் வந்தது , என் நண்பர் சவுதியில் வேலை செய்து கொண்டிருந்தார் ,அவர் பொறுமையாக வண்டி ஓட்டுவார் , ஒரு நாள் அவர் மனைவி மற்றும் அவர் தம்பி மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் இரவில் காரில் போய்கொண்டிருந்த பொது அந்த ஊர்காரர் வேகமாக வந்து இவர் காரில் இடித்து நண்பர் ,அவர் சகோதரர் மனைவி மற்றும் சகோதரர் மகன் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்து போனார்கள் .

    ReplyDelete
  2. இரண்டு செய்திகளையும் படித்தேன்! பொறுப்பு இல்லாத ஓட்டுனரால் இப்படி எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டனவோ? தம்பி சையத்தின் நிலைமை கண்ணீர் வரவழைத்து விட்டது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்! பதிவர் சந்திப்பில் தங்களை சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி அளித்தது. நன்றி!

    ReplyDelete
  3. அண்ணே இந்த நேரத்துலயும் போன் பண்ணி விசாரிக்கறியே... ரொம்ப நன்றிண்ணே என்றான்... எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை..மனம் முழுக்க பாரம் ஏறி இருந்தது...

    அவன் சகோதரி மற்றும் அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்...தம்பி சையத் விரைவில் மீண்டு வர எல்லாம் வல்ல அல்லா அவனுக்கும் அவன் தந்தைக்கும் துணையிருக்கட்டு

    துன்பத்துத்தில் இருப்பாவனுக்கு தான் ஆறுதல் தேவை அதை செய்வனே செய்யும் ஜாக்கி உணர்வுபுர்வமான மனிதன்யா நீ

    ReplyDelete
  4. அந்த தம்பிக்கு ஆழ்ந்த இரங்கள், அல்லா இந்த துண்பத்தை தாங்கும் வல்லமையை அவருக்கும், அவர் அப்பாவிற்கும் அருள்வாராக.

    ReplyDelete
  5. அந்த தம்பிக்கு ஆழ்ந்த இரங்கள், அல்லா இந்த துண்பத்தை தாங்கும் வல்லமையை அவருக்கும், அவர் அப்பாவிற்கும் அருள்வாராக.

    ReplyDelete
  6. அந்த தம்பிக்கு ஆழ்ந்த இரங்கள், அல்லா இந்த துண்பத்தை தாங்கும் வல்லமையை அவருக்கும், அவர் அப்பாவிற்கும் அருள்வாராக.

    ReplyDelete
  7. My deep heartd condolence to our
    Beloved bro syed mustafa.

    Raja Hassan.

    ReplyDelete
  8. Intha maathiri drivers ellam kalla erinjuu saagadikanum...

    ReplyDelete
  9. this is an important post - a message to all - thanks for sharing

    ReplyDelete
  10. ஓட்டுநர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய பதிவு.

    ReplyDelete
  11. தங்களது பதிவுக்கு என்ன இடுகை தருவது எனத் தெரியவில்லை.
    ஆனால் ஒரு விசயம் இந்த நேரத்திலும் விசாரித்து போனில் பேசுகிறீர்களே என்ற போது ஆயிரம் சம்மட்டி வலி.
    தங்களால் அவருக்கு தந்திருக்கும் மிகப்பெரும் ஆறுதல் போனில் பேசியதுதான்.
    வழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  12. கண்ணீர்விட்டேன். நன்றி, ஜாக்கி, ஆதரவற்ற நேரத்தில் ஒரு நண்பருக்கு ஆறுதலாக இருந்தீர்கள்!

    ReplyDelete
  13. துக்கம் தொண்டை அடைக்கிறது.. நிறைய கடந்த கால நினைவுகளோடு... என் அம்மாவும் இதே போல ஒரு விபத்தில் தான் காலமானார்கள்...

    சையத் முஸ்தாபா நண்பரின் மனநிலையை உண்ரமுடிகிறது... ஆறுதல் கூற வார்த்தையில்லை...

    ReplyDelete
  14. ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்.

    ReplyDelete
  15. ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்.

    ReplyDelete
  16. கண்ணீர்விட்டேன் ஜாக்கி, ஆதரவற்ற நேரத்தில் ஒரு நண்பருக்கு ஆறுதலாக இருந்தீர்கள்

    ReplyDelete
  17. jackie...

    nama area thanjavur to kumbakonam route leyum ipdi thaan vegama ottuvanunga... masam oruthadavai driver ah vandiya vittu erakki nallu sathu sathi thaan anupurom..

    athe nerathula oru driver sonnathum pathivu seyya vendi irukku... bus company owner kita interview ku poi irukaru oru driver.. enna speed la povenu kettathu 60 la povennu solli irukaru... min 90 la pona than vandi thara mudiyum nu solli irukaru... ellam laba veri... suya arippum kooda... antha arippu ullankaileyum irukalam.. vera edangalilum irukalam...

    ReplyDelete
  18. என்ன சொல்வது?
    கண்ணீர் சிந்துவதை தவிர....

    ஜாக்கிக்கு நன்றி!

    ReplyDelete
  19. வருத்தங்களுடன்,,பேப்பரில் படித்தபோதே கண் கலங்கியது,,,,,,

    ReplyDelete
  20. ஆழ்ந்த அனுதாபங்கள். பகிர்ந்ததற்கு நன்றி!
    http://muthaleedu.blogspot.com

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner