இயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா?



ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று  நினைக்கின்றேன்...
ஜெயா டிவியில் அந்த  நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது...இயக்குனர் தங்கர்பச்சானிடம் சுகாசினி மணிரத்னம் கேள்வி கேட்கின்றார்... அது எப்படி -? படத்தில்  உள்ள அர்ச்சனா கேரக்டர் எப்ப பார்த்தாலும் எதுக்கெடுத்தாலும் மார்ல அடிச்சிக்கிட்டு அழுதுக்கிட்டே இருக்கு? எந்த ஊர்ல இது  போல  எப்ப   பார்த்தாலும் ஆழுதுக்கிட்டே இருக்காங்க.??. என்று  கேள்வி கேட்டபோது இயக்குனர் தங்கர் சொன்னார்... எங்கள் ஊர் பெண்கள் அழுவார்கள் என்று...

ஒரு சின்ன தகராறு,ரத்தம் வரும் அளவுக்கு சண்டை, ஒரு விபத்து என்றால் அடுத்த என்ன? என்று யோசிக்கும் முன் நெஞ்சிலும் வயிற்றுலும் அடித்துக்கொண்டு காளியாத்தா மாரியாத்தா சண்டாள சிரிக்கிங்களா? உங்களுக்கு என்னடி குறை வச்சேன்... ஏன் குடும்பத்துக்கு  மட்டும் ஏன் இப்படி நடக்க வைக்கிறேயேடி தேவிடியா முன்டை என்று  கோவத்தில், ஆத்திரத்தில், என்ன சொல்லுகின்றோம் என்று அறியாமல் சத்தம் போட்டு அழுது தீர்க்கும் ஊர் பெண்களை நான் பார்த்து இருக்கின்றேன்.

ஆனால்  அப்படி அழுவதை சுகாசினி மணிரத்னம் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை... அவர் வளர்ந்த விதம் வளர்ந்த சூழல் அப்படி இருக்கலாம்.. அதே  போல   பல  சினிமா  பேட்டிகளில் கேரக்டர்கள் எல்லாம் அழகாக இருக்க வேண்டும்.. உதாரணத்துக்கு  அப்புக்குட்டி கேரக்டர்களை எல்லாம் இயல்பான கேரக்டராகவே  எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.. எவ்வளவு ஏழையாக இருந்தாலும் பிரேமில் வரும் போது எண்ணைய் தடவி படிய வரியாபடி நீட்டாக வரவேண்டும் என்று விரும்புவார் சுகாசினி. ஆனால் கிராமங்களில் இயல்பு வேறானது..  தலைக்கு எண்ணெய் காட்டாத, அயன் செய்யாத உடைகள் அணிந்து கடைக்கும் விசேஷத்துக்கும், வேலைக்கு செல்வது என்பது வெகு சாதாரணம்...  அந்த பேட்டியில்  என்னதான் தங்கர்  சுகாசினிக்கு விளக்கினாலும் அவர் சொல்வதை  சகாசினியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை... 

கிராமத்து வாசிகள் வெள்ளந்திகள்...  எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்...  சில நேரங்களில் என்ன செய்கின்றோம் என்று அவர்களுக்கே தெரியாது... நெகிழ்ச்சியான  சம்பவங்கள்  நடக்கும் போது அவர்கள் இன்னும் உணர்ச்சிவசப்படுவார்கள்... 

இன்னும் சொல்லப்போனால்  கிராமத்தில் இருந்து யாருமில்லாத சென்னையில் கஷ்டப்பட்டு ஒரு  நல்ல பொசிஷனுக்கு வரும் போது ,சின்ன இடர் வந்தாலும் அதுக்கு துணை நிற்கும் அத்தனை பேருக்கும் கை கொடுத்து நெகிழ்வது கிராமத்து மனிதனின் இயல்பு....  அர்ச்சனா கேரக்டர் எல்லாத்துக்குமா அழுவும்? என்று  கேட்பவரிடம் என்ன சொல்ல முடியும்? அவர் பார்வை மற்றும் புரிதல் அவ்விதமே....

சென்னையில் ஒருவன் இறந்து போனால் அவனை உடனே அப்புறப்படுத்தி விட்டுதான் அடுத்தவேளை பார்க்கின்றார்கள்.. முக்கியமாக உயர்  சாதிகளில்... திட்டு என்று உடனுக்கு உடன்   இறந்து போனவரை பைசல் பண்ணுகின்றார்கள்.. 

ஆனால் கிராமத்தில் அப்படி அல்ல...முதல்  நாள் காலை இறந்தால் கூட மறுநாள் மாலைதான் எடுப்பார்கள்... காரணம்... அந்த மனிதனின் கடைசிபயணம்.. தூரதேசத்தில் அவனோடு பழகிய அத்தனை பேரும்  அவன்  இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று  உடலை வைத்து இருப்பார்கள்... 

நெருங்கிய உறவு ஒருவேளை வராமல் உடல்  எடுக்கப்பட்டால்... வெட்டு குத்தே நடக்கும்... இறந்து போனது  உள்ளுர் ஆள்  என்றால் ஊரில்  உள்ள இளவட்டங்கள் வேலைக்கு போகாமல்  லீவே போட்டுவிடுவார்கள். ஆனால் சென்னையில் யார் வந்தாலும் வராவிட்டாலும் உடனே டிஸ்போஸ் செய்யும் சுயநலக்கலாச்சாரம்  எல்லா ஜாதி பழக்க வழக்கங்களிலும் வந்து விட்டது.. அதுக்கு வேறு ஒரு  முக்கிய காரணம்.. வாடகை வீடு என்பதுதான்.....

சேரன் பத்திரிக்கையாளர் காலில் விழ காரணம் ... தன்னோடு தோள்  நின்றார்கள் என்பதால் மட்டுமே... அந்த நன்றி பெருக்கின்  விளைவாய் நெடுஞ்சான் கிடையாக காலில் விழந்தார்... பிரபலத்தின் பெண் என்பதால் தப்பாக எழுதவில்லை.. சீண்டவில்லை, என்று காரணங்களுக்காக கூட இருக்கும்... எது எப்படி இருந்தாலும் திருத்தி பேசி என்னை காயபடுத்தால் என் நிலைமை  புரிந்து என்னோடு தோள்கொடுத்து நின்றீர்களே அதுக்கு  ஒரு தகப்பனாக உங்கள் பொற்பாதம் தொட்டு நன்றி  கூறுகின்றேன்..  என்று  ஒட்டுமொத்தமாக காலில்  விழுந்து இருக்கின்றார்...  

 பார்ன் இன் சில்வர் ஸ்பூன் ஆக  சேரன் பிறந்து இருந்தால் தீர்ப்பு சாதகமாக வந்து உடன்   பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் கோர்ட்டி பின்பக்க வழியாக போய் இருப்பார்...  அவர் இன்னமும் கிராமத்தான்தான்.

ஆனால்  காலில் விழுந்த விஷயத்தை பொதுவெளியில் இதனை  விவாதபொருளாக ஆக்கியதோடு மட்டும் அல்லாமல்,  ஒரு பத்திரிக்கையாளர்........  சேரன் பத்திரிக்கையாளர் காலில் விழுந்தது ஒருவகையான வன்முறை என்றார்... இன்னோரு பத்திரிக்கையாளர் அதனை சிறப்பான நடிப்பு என்றார்... அவரவர் பங்கிற்க்கு ஏதாவது கருத்து சொல்ல வேண்டுமே? அதனால் சொல்லிவிட்டார்கள்...

உதாரணத்துக்கு  ஒன்று சொல்லி இந்த கட்டுரையை முடிக்கின்றேன்..

பயணிகள் கவனிக்கவும் நாவலில் பாலகுமாரன் எழுதி  இருப்பார்...


ஒரு கிராமத்து இளைஞன்  சென்னை விமான நிலையத்தில் புல் வெட்ட போய் ,எதிரே மிகப்பெரிய விமானம்   ரன்வேயில் தரையிறங்கும் போது புல்வெட்டும் கத்தியோடு உணர்ச்சி வசப்பட்டு வெற்றிவேல் வீரவேல் என்று ரன்வேயில் போய் நிற்க. விமானிக்கு துப்பாக்கி என்று நினைத்துக்கொண்டு  பிளைட் மிஸ் அப்ரோச் ஆகிவிடும்...

செக்யூரிட்டி அவனை ஜிப்பில் அள்ளி போட்டு வந்து பெண்டு நிமித்தும் போது ,அவன்  வாயில் வழியும் ரத்தத்தோடு  என்டா  ரன்வேலே கத்தி காட்டினேன்னு கேட்க்கும் போது அவன் சொல்லுவான்...

  அவன் கூட புல்லுவெட்ட  வந்தவங்க..  ரன்வேயில இறங்கற ஏரோப்பிளேன்...  மிலிட்ரி ஏரோப்பிளேன்னு சொன்னாங்க... நான் சந்தோஷமாகி   ரன்வேயில் இறங்கும் விமானத்தை வெற்றிவேல் வீரவேல்ன்னு வரவேற்க்க போய் நின்னேன்னு சொல்லுவான்....



பத்தாம் வகுப்பு படிக்கும் கிராமத்து பையனுக்கு விமானம் என்றால் என்ன என்று தெரியும் அல்லவா?அதன் வேகம் ... ஆனாலும் கிராமத்து புத்தி,உணர்ச்சி வசப்பட்டு என்ன செய்கின்றோம் என்று தெரியாமல் செய்த தவறு...ரயில் வோகமாக வரும் என்று தெரிந்தும் உணர்ச்சி வசப்பட்டு என்ன செய்கின்றோம் என்று தெரியாமல்  நடு தண்டவாளத்தில் ரயிலை நிறுத்துகின்றேன் என்று நினைக்க 40 பேர் கண் முன் பலியாகி போனார்கள்... 

சென்னையில் இருக்கறவனுக்கு விமானம் பெரிய விஷயம் அல்ல... ஆனால் கிராமத்தானுக்கு பெரிய விஷயம்...

அந்த  நாவலில்  வரும் பத்தியை எழுதுகின்றேன்...

தம்பி ஏண்டா ஏரோப்பிளேனை பார்த்துட்டு கத்தி எடுத்துக்கிட்டு நீட்டிக்கிட்டு ஓடினே? அவனை பார்த்து குணசேகரன் பரிவாக கேட்டார்...??

அந்தினி கிட்டக்க  ஏரோப்பிளேனை நான் பார்த்தது இல்லைங்க..? கத்தி தொட்டு அதனை தொட்டு கும்பிடனும்ன்னு தோணிச்சு,

ஏன்?

எங்க ஊர்ல ஏரோப்பிளேன் பார்த்தா மண்ணை வாரிப்போடுவோம்...

ஏன்...??

ஒரு மரியாதைங்க என்று சொல்லுவான்...

அது எப்படி  விமானத்தை நோக்கி மண்ணை தூக்கி தூற்றுவது  மரியாதையாகும் என்று சுகாசினி கேட்கலாம்?

 விமானத்தை நோக்கி மண்ணை தூற்றுவது  பெரிய வன்முறை என்று பத்திரிக்கையாளர் தன் கருத்தை  பதியாலாம்.. 

விமானத்தை நோக்கி மண் தூற்றிய செயல் காட்டுதனமான நாடகம் என்று வேறு ஒருவர் சொல்லலாம்..

ஆனால்  இந்த செயலை ஒரு  கிராமத்து மனிதனின்  நெகிழ்ச்சி மற்றும் உணர்ச்சி பெருக்கு சூழலில் அதை படித்தவர்கள்  என்று சொல்லிக்கொள்ளும் யாரும் அனுகுவதேயில்லை....

முதல் முறை  சென்னை மாலில் எக்ஸ்கலேட்டரில் ஏறி தடுமாறும் போது  கிராமத்து நண்பர்களை நாம் நக்கல் விடுவோம்...   முதல் முறை அதில் ஏற தடுமாறி பயந்து வெளிறி ஏறியது  நாம் ஏறியது மறந்து நண்பனை நக்கல் விட்டு சிரிப்போமே அது போலத்தான்... நாம் அனைவருமே கிராமத்தான் என்பதை  எளதாக மறந்து விடுகின்றார்கள்...

எல்லோருமே கிராமத்தில் இருந்து வந்து படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்தவர்கள்தான்...  நானும் இது  போல காட்டான் என்று நக்கல் விட்டது  உண்டு.. நக்கல் விட்ட உடனே பாரேன் நாம மட்டும் என்ன?  சிட்டியா?  என்று  மனதில்  கேட்டுக்கொள்வேன்.

 சேரன் காலில் விழுந்தார் நெகிழ்ச்சிக்காக....ஆனால் டெம்போடிராவலர் டயரை கூட பதவிக்காக தொட்டு கும்பிடுபவர்களை என்ன என்று சொல்லுவது.??

எங்க  ஆத்தா  செத்த போது முதல் நாள்  காலை இறந்தார் மறு நாள்  மாலைதான் என் ஆத்தா உடலை  கொண்டு போய்  புதைத்தோம்... அதுவரை என்னிடத்தில் எந்த அழுகையும் இல்லை... என் உறவு பெண்கள்.... இரண்டு நாளும்  நான் அழவில்லை என்பதால் என்னை   கல்லுளி மங்கன் என்றார்கள்...ஜெயா  பாசத்தை கொட்டி ராக்கண்ணு, பகல் கண்ணு முழிச்சி வளர்த்தா...? கொஞ்சம் கூட இந்த ஜாக்கி பய அழவேயில்லையே என்று அங்கலாய்த்தார்கள்,தூற்றினார்கள்... 

ஆனால் என் ஆத்தா பட்ட அவஸ்த்தை  எனக்குதான் தெரியும்...குழியில் வைக்கும் போதுதான் உணர்ச்சி மேலிட அழுது புரண்டேன்....

வெளியில் இருந்து பார்ப்பவர்கள் எதை வேண்டுமானலம் கருத்து சொல்கின்றேன் என்று காயபடுத்தலாம்.. ஆனால் பெற்றவனுக்கே தெரியும் வலியும் வேதனையும்....

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

குறிப்பு...

 சினிமா உலகில் நல்ல மனிதர் சேரன் என்பதால் இந்த  கட்டுரை... தங்கர் மீதும்  சேரன் மீதும் படைப்புகள் மீது தன்னிப்பட்ட விமர்சனங்கள் எனக்கு இருக்கின்றன...யாருமற்ற   சென்னையில் தன் மகளை மீட்டு எடுத்த  உதவியவர்களுக்கு ஒரு  தகப்பனாக  காலில்  விழுந்து நமஸ்கரித்தது சரியே..

கோவிலில்  உயிரற்ற கோவில் கொடி  மரத்தின் முன் நெடுஞ்சான் கிடையாக நம்பிக்கைகொண்டு விழுந்து நமஸ்கரிக்கும் போது..,  ஒரு கிராமத்தானாக என் பார்வையில் அவர்  உணர்ச்சி மேலிட பத்திரிக்கையாளர் காலில் விழந்து நமஸ்கரித்தது  தவறு இல்லை என்பேன்....




நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

45 comments:

  1. சரியாசொன்னீங்க

    ReplyDelete
  2. அருமையான விளக்கம்.. நானும் சிட்டியில் வளந்த கிராமத்தான்..

    ReplyDelete
  3. சுகாசினி எல்லாம் ஒரு ஆளு,அவரிடம் மைக் கிடைத்தால் கண்டதும் பேசுவார்,ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் அர்ச்சனாவும் சத்யராஜும் ஒருவரை ஒருவர் மிஞ்சியிருப்பார்கள்,அதில் அர்ச்சனாவே ஜெயித்திருப்பார்.நாசரை கைதூக்கி விட கணவன் மனைவி இருவரும் காட்டும் கரிசனம் எல்லாம் அருமையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்,இயக்குனராக தங்கர் வென்ற படம்.மேம்போக்காக படம் எடுக்கும் மணிரத்னம் வகையரா ஆட்கள் அதன் செய்நேர்த்தியை புரிந்து கொள்ள முடியாது.சேரன் செய்தது சரியே நன்றி நவிளலில் அப்படி நெகிழ்ச்சியாகி அதை செய்திருப்பார்,அவனவனுக்கு மூலவியாதி வந்தால் தான்,அதன் வலி என்னவென தெரியும்.

    ReplyDelete
  4. unmai unmai... inge ezhuthaalar enraal methaavithanamaa pesanunumnu oru nenappu

    ReplyDelete
  5. கிராமத்து வாசிகள் வெள்ளந்திகள்... எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்...

    உணர்வுபுர்வமான விளக்கம் ஜாக்கி. அருமை

    ReplyDelete
  6. ஜாக்கி அருமை!
    மிகத் தெளிவான விளக்கம். சேரன் கூட இவ்வளவு உதாரணங்களுடன் தன்நிலை விளக்கம் அளித்திருப்பாரோ சந்தேகமே!,
    எழுத்தில் எங்கோ போயிட்டீர்கள், எழுத்துப்பிழைகள் கூட அரிதே!.
    பாரிஸ் மாநகரில் வாழ்ந்தாலும் உள்மனதில் பசுமையான கிராமிய உணர்வுகளுடன் இன்றும் வாழ்வதால்; அக் கிராமவாழ்வில் இருந்து இன்றுவரை உணர்வால் வெளிவர இயலாமல் உள்ளதால், உங்கள் ஒவ்வொரு வரியையும்-அலசலையும் ரசித்தேன்.

    ReplyDelete
  7. சுகாசினியின் கிராமம் எப்படி இருக்கும்? கிராமத்து வீடுகள் எப்படி இருக்கும்? கிராமத்து சிறுவர் சிறுமியர் விளையாட்டுகள் எப்படி இருக்கும்? என்பது போன்ற கேள்விகளுக்கு நீங்கள் அலட்டிக் கொள்ள வேண்டியதே இல்லை. இந்திரா என்ற ஒரு படம் பார்த்தால் போது,

    ReplyDelete
  8. Good post. Very good explanation. After all he has prostrated before the journalists only to show is gratitude to them. What is wrong in that? It seems journalists have forgotten to know the real meaning behind namaskarams because they are habituated to see such activities only to get their work done or to SAVE THEIR POWER. We cannot blame them.

    ReplyDelete
  9. ஒன்பது ரூபாய் விமர்சனத்தில் ''எதற்க்கு எடுத்தாலும் கூட்டம் கூட்டமாக அழுகிறார்கள் என்று ஒரு பட்டணத்து நாதாறி விகடனில் விமர்சனம் எழுதியிருந்தான். கிராமத்தில் எதிரி செத்தாலும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வார்கள் என்று தெரியதனல்லலாம் அந்த படத்தை பற்றி விமர்சனம் எழுதினால் அப்படித்தான் இருக்கும். சுகஷினியின் கிராமம் எப்படி இருக்கும் என்பதை ''இந்திரா '' பார்த்தால் கிராமத்தான் காறி துப்புவான்.

    ReplyDelete
  10. ஒன்பது ரூபாய் விமர்சனத்தில் ''எதற்க்கு எடுத்தாலும் கூட்டம் கூட்டமாக அழுகிறார்கள் என்று ஒரு பட்டணத்து நாதாறி விகடனில் விமர்சனம் எழுதியிருந்தான். கிராமத்தில் எதிரி செத்தாலும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வார்கள் என்று தெரியதனல்லலாம் அந்த படத்தை பற்றி விமர்சனம் எழுதினால் அப்படித்தான் இருக்கும். சுகஷினியின் கிராமம் எப்படி இருக்கும் என்பதை ''இந்திரா '' பார்த்தால் கிராமத்தான் காறி துப்புவான்.

    ReplyDelete
  11. As a gramathan i accepted and felt what you are saying.

    ReplyDelete
  12. As a gramathan i know and felt what you are saying.....வெளியில் இருந்து பார்ப்பவர்கள் எதை வேண்டுமானலம் கருத்து சொல்கின்றேன் என்று காயபடுத்தலாம்.. ஆனால் பெற்றவனுக்கே தெரியும் வலியும் வேதனையும்....great sir!

    ReplyDelete
  13. ஒன்பது ரூபாய் நூட்டு படத்துல ஒரு பத்திரம் கோவணத்தில் வருகிறது மிக்க ஆபாசமாக வுள்ளது என்று கேட்ட கேடுகெட்ட லூசுதான் அது .. நான் அந்த பெண்மணியை பலநாள் திட்டணும்னு நெனச்சேன் .. நீங்களாவது ரெண்டு வரி கேட்டீங்க ... ''இந்திரா '' பார்த்தால் கிராமத்தான் காறி துப்புவான். well said brother..

    ReplyDelete
  14. கிராமதன்னுக்கு மனிதாபிமானம், நன்றி மறவாமை இந்த இரண்டும் எப்போதும் , எந்த சூழல்லிம் அவன் உடன் இருக்கும்.

    ReplyDelete
  15. Suhasini talks always absurd. She used to talk that only Manirathnam & K.Balachander are Directors and all other are waste. She used to say Only Kamal is an Actor rest are waste

    ReplyDelete
  16. மிக நல்ல பதிவு...

    ReplyDelete
  17. கோவிலில் உயிரற்ற கோவில் கொடி மரத்தின் முன் நெடுஞ்சான் கிடையாக நம்பிக்கைகொண்டு விழுந்து நமஸ்கரிக்கும் போது.., ஒரு கிராமத்தானாக என் பார்வையில் அவர் உணர்ச்சி மேலிட பத்திரிக்கையாளர் காலில் விழந்து நமஸ்கரித்தது தவறு இல்லை என்பேன்....
    well said

    ReplyDelete
  18. உணர்வுபுர்வமான விளக்கம் ஜாக்கி. அருமை!

    ReplyDelete
  19. Yes.. jackie. As a father what he did is correct. This is another way of conveying his Thanks. Some people may not understand.. let them be

    ReplyDelete
  20. மிகவும் நுட்பமான பிரச்சையை அணுகி சரியான புரிதலை ஏற்படுத்தி உள்ளீர்கள்.

    ReplyDelete
  21. //கோவிலில் உயிரற்ற கோவில் கொடி மரத்தின் முன் நெடுஞ்சான் கிடையாக நம்பிக்கைகொண்டு விழுந்து நமஸ்கரிக்கும் போது.., ஒரு கிராமத்தானாக என் பார்வையில் அவர் உணர்ச்சி மேலிட பத்திரிக்கையாளர் காலில் விழந்து நமஸ்கரித்தது தவறு இல்லை என்பேன்....
    //

    கோவிலில் கொடிமரத்தில் முன் நெடுஞ்சாண் கிடையா விழுவது ஒரு உணர்ச்சிப்பூர்வமான செயலன்றுதானே நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். தவறு. அது சாஸ்திரம். கொடிமரத்தின் முந்தான் அப்படிப்பட்ட சாஸ்டாங்க நமஸ்காரம் பண்ணுவார்கள்.

    சேரனின் செயல் ஒரு உணர்ச்சிப்பூர்வமான செயல். மனிதர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டது. கோயிலில் செய்தல் இறைவனுக்கும் மனிதருக்குமிடையிலானது.

    இரண்டையும் இணத்தல் தவறு.

    உங்கள் பதிவு உங்கள் பார்வை. அதில் நான் குறுக்கிடவில்லை. கிராமத்தார்கள் வெள்ளந்திகள் என்பது தவறு என்பார்வையில். ஒன்றை நீங்கள் புரிந்து கொள்வது நல்லது. அதாவது இடம் மனிதனின் பழக்கத்தை நிர்ணயிக்கிறது. ஒரு ரவுடி பேட்டையிலே ரவுடித்தனம் பண்ணுவான். அவனே ஒரு பெரிய கம்பெனியின் முதலாளியாக இருக்கிறான். அதாவது ரவுடி+முதலாளி என. சில ஜாதித்தலைவர்கள் அப்படியிருக்கிறார்கள்.

    அவனின் கம்பெனி போர்டு மீட்டிங்கில் அவன் பாவனை பேச்சு எல்லாமே வேறு. ரவுடியாக வேறு.

    அதைப்போலவே கிராமத்தானும் நகரத்தானும்.

    இருவரும் ஒருவரே. இடத்துக்கு தக்கமாதிரி பாவிக்கிறார்கள். இவர்களைவிட அவர்கள் உயர்வு அல்லது தாழ்வு என்பது சரியாகாது.

    சேரனின் செயல் ஏன் வியப்பைத் தந்ததென்றால், அவர் பேச்சுக்கள் பேட்டிகள் (முன்பு) எல்லாமே அவர் ஒரு மனப்பக்குவம் வாயந்தவர் என்று மக்களை நம்பவைத்தன. அவள் மகள் பிரச்சினையை அவர் ஒரு சராசரித்தந்தையாக மட்டுமே அணுக முடிந்ததால் ஏமாற்றம். அவ்வளவுதான்.

    ஒரே மனிதன். இரு முகங்கள். இல்லையா ஜாக்கி சேகர்?

    ReplyDelete
    Replies
    1. When a human pushed to edge, he will do anything to keep his survival. People living in villages are not pushed to edge, so not thinking to spoil/cheat others. Still there are villages with no main door locked at home. Current life style of city people demanding more protection for survival and humans are adapting to the situation.

      Delete
  22. கோவிலில் உயிரற்ற கோவில் கொடி மரத்தின் முன் நெடுஞ்சான் கிடையாக நம்பிக்கைகொண்டு விழுந்து நமஸ்கரிக்கும் போது.., ஒரு கிராமத்தானாக என் பார்வையில் அவர் உணர்ச்சி மேலிட பத்திரிக்கையாளர் காலில் விழந்து நமஸ்கரித்தது தவறு இல்லை என்பேன்.... Well said

    ReplyDelete
  23. கோவிலில் உயிரற்ற கோவில் கொடி மரத்தின் முன் நெடுஞ்சான் கிடையாக நம்பிக்கைகொண்டு விழுந்து நமஸ்கரிக்கும் போது.., ஒரு கிராமத்தானாக என் பார்வையில் அவர் உணர்ச்சி மேலிட பத்திரிக்கையாளர் காலில் விழந்து நமஸ்கரித்தது தவறு இல்லை என்பேன்.... Well said.

    ReplyDelete
  24. அருமையான பதிவு கீராம மக்கள் பற்றிய நல்ல விளக்கம் , நன்றி உணர்வு உள்ளவர்கள் அதனை வெளிப்படுத்துகிறார்கள் மற்றவர்கள் துற்றுகிறார்கள் , பின்னூட்டத்தில் ஒருவர் மணிரத்னம் மேம்போக்காக படம் எடுப்பவர் என்றார் உண்மை ....

    ReplyDelete
  25. Nandri arumayana pathivu mattum alla purithalin pagutharivin pathivu. Pasam, veasam, panbu ivatrai thelivaga unarthiyatharku nandri.

    ReplyDelete
  26. அன்பின் குலசேகரன் சார்..

    பொதுவா விவாதம் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை... இருப்பினும் உங்கள் கேள்விக்கு பதில் சொல்கின்றேன்...


    //சேரனின் செயல் ஏன் வியப்பைத் தந்ததென்றால், அவர் பேச்சுக்கள் பேட்டிகள் (முன்பு) எல்லாமே அவர் ஒரு மனப்பக்குவம் வாயந்தவர் என்று மக்களை நம்பவைத்தன. அவள் மகள் பிரச்சினையை அவர் ஒரு சராசரித்தந்தையாக மட்டுமே அணுக முடிந்ததால் ஏமாற்றம். அவ்வளவுதான்.

    ஒரே மனிதன். இரு முகங்கள். இல்லையா ஜாக்கி சேகர்?//

    கொடிமரம் உதாரணத்துக்கு சொன்னது.... அதுக்கு விளக்கம் கொடுத்திட்டிங்க... எவ்வளவு இன்டெலுக்ச்சுவலா இருந்தாலும் தைரிய சாலியா இருந்தாலும் வாழ்க்கையில பிரேக்கிங் பாயிண்ட் என்று ஒரு இடம் இருக்கின்றது...

    அதை எல்லோரும் கடந்தே ஆகவேண்டும்... சேரனின் பிரேக்கிங் பாயிண்ட் இதுதான்.. விஜய்க்கு இப்ப பிரேக்கிங் பாயிண்ட்... அதை எல்லோரும் கடந்துதான் வரவேண்டும்.. அப்படி ஒரு கட்டம் வரும் போது மனுஷனாதான் நடந்துக்குவான் இன்லெக்சுவல் மேட்டர் அங்க எடுபாடாது... சேரன் தன் இன்லெக்சுவல் தனத்தை மூட்டைகட்டி வச்சிட்டு ஒரு சராசரி மனுஷனா நடந்துக்கிட்டார்... அவ்வளவுதான்... அதே போல எல்லா நேரத்திலும் ஒருவன் அறிவாளியாக இருக்க முடியாது.




    //கிராமத்தார்கள் வெள்ளந்திகள் என்பது தவறு என்பார்வையில். ஒன்றை நீங்கள் புரிந்து கொள்வது நல்லது.//

    அதாவது சூழ்நிலைதான் ஒரு மனிதனின் செயல்களை நிர்ணியிக்கின்றது என்று சொல்லி இருக்கின்றீர்கள்...

    நகரம், கிராமம் இரண்டு இடத்திலேயும் நல்லவனும் இருக்கின்றான்.. கெட்டவனும் இருக்கின்றான்...

    ஒரு சின்ன உதாரணம் மட்டும்.. கிராமத்து வண்டி ஓட்டிக்கிட்டு போங்க.... குறுக்குல நாய் வந்துடுச்சி விழுந்திட்டிங்க.... எத்தனை பேர் வந்து உங்களை தூங்கி விடுறாங்கன்னு பாருங்க... அதே நீங்க மவுண்ட்ரோட்ல விழுந்து பாருங்க... அவன அவன் போய்க்கிட்டே இருப்பான்... ஆட்டோ ரிக்ஷா, சைக்கிள் ரிக்ஷா தள்ளுவண்டி கடைகாரங்க வந்து ஹெல்ப் பண்ணுவாங்க.. அது மாதிரி உதவி செய்றங்க கூட நகரத்துல செய்ய யோசிச்சிக்கிட்டு இருக்காங்க..

    ReplyDelete
  27. மிக்க நன்றி முத்துக்குமரன்.

    =======

    ஜாக்கி, உங்களோட எல்லா பதிஉகலையும் வாசித்திருக்கிறேன் . உண்மைய சொல்லனும்னா, மூணு இணைய பக்கங்களை மட்டுமே ஒரே மூச்சில் வாசித்திருக்கிறேன்.அவை எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன், ஜாக்கி சேகர் . உங்கள் எழுத்தின் எதார்த்தம் என்னை கவர்ந்த விஷயம். கூடுதல் கவர்ச்சி சினிமா.

    தொடர்ந்து பேய் போல் வாசிக்க என்னால் முடியும். நல்ல ஈர்ப்பு இருந்தால்,

    சேரன் பற்றிய பதிவு, கிராமத்து மனிதனின் உணர்வு. மதுரையில், கண்ணகிக்கு பாண்டிய மன்னன் வழங்கியது நீதி, அவள் கேட்டதோ நியாயம். நீங்கள் எப்போதும் யதார்த்தமான நியாயத்தின் பக்கம் நிற்பதே உங்கள் வலிமை.

    பார்ப்பனீய மனு "நீதி"க்கு மண்டியிடாமல் , யதார்த்த நியாயத்தின் முன் தலை வணங்கும் உங்கள் கிராமத்து தனம் மாறாமல் இருக்க என் வாழ்த்துக்கள்.

    மதவெறி பிடித்த கூட்டத்திற்கு மத்தியில் , அப்துல்லாஹ் என் சகோதரன் என முழங்கும் உங்கள் குரல், மழுப்பாத சம்மட்டி அடி
    வெறியர் களுக்கு . வெளிப்படையான உங்கள் செயல்பாடுகள் உங்கள் தனித்துவம்.

    உங்களின் வெற்றி எங்களின் வெற்றி.

    முத்து குமரன், கல்கரை சத்திரம்

    ReplyDelete
  28. முதல்ல சேரன் செஞ்சத பார்த்துட்டு ...ஏன் இப்படி எல்லாம் செய்யனும்னு தோணிச்சு.
    உங்க போஸ்ட் பார்த்த பிறகு , அதில உள்ள நியாயம் புரியுது.

    ஆனாலும்,சேரன் தன்னோட உணர்வுகள கொஞ்சம் கட்டுபடுதுறது நல்லது.
    சிலநேரம் நம்முடைய அதிக உணர்சிவசபடுற தன்மை நம்மள சுத்தி உள்ளவர்களையும் அதிகம் பாதிச்சிடும்.
    ==
    <<நீங்க மவுண்ட்ரோட்ல விழுந்து பாருங்க... அவன அவன் போய்க்கிட்டே இருப்பான்... ஆட்டோ ரிக்ஷா, சைக்கிள் ரிக்ஷா தள்ளுவண்டி கடைகாரங்க வந்து ஹெல்ப் பண்ணுவாங்க..

    என் அனுபவத்தில இது நடந்திருக்கு.

    ==

    ReplyDelete
  29. பாரிஸ் மாநகரில் வாழ்ந்தாலும் உள்மனதில் பசுமையான கிராமிய உணர்வுகளுடன் இன்றும் வாழ்வதால்; அக் கிராமவாழ்வில் இருந்து இன்றுவரை உணர்வால் வெளிவர இயலாமல் உள்ளதால், உங்கள் ஒவ்வொரு வரியையும்-அலசலையும் ரசித்தேன்.

    ReplyDelete
  30. கிராமத்தான் என்றும் கிராமத்தாந்தான்...
    அருமையா சொல்லியிருக்கீங்க...

    ReplyDelete
  31. இதே சேரன்தான் விஜய் tv நீயா நானாவில் கலந்துகொண்டு தர்மபுரி காதல் சம்பவத்திற்க்கு வக்காலத்து வாங்கினார். தன்னுடைய மகள் விவகாரம் என்றவுடன் காலில் விழுகிறார். தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் .

    ReplyDelete
  32. you also didnt write a post about politics in 'thalaivaa' like all other bloggers and main stream media. disappointing. wondering if you guys are so much afraid why you people voiced against viswaroopam ban then?

    ReplyDelete
  33. உணர்வுபுர்வமான விளக்கம் ஜாக்கி. அருமை!

    ReplyDelete
  34. SIR UR GREAT............ NANUM GRAMATHAN THANGA

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner