ஹாலிவுட் நீலாம்பரிகள் !


அரும்பு மீசை முளைத்து....
வயசுக்கு  வந்ததில் இருநது ஹாலிவுட் படங்களை பார்த்து வருகின்றேன்... அந்த  திரைப்படங்களில் வில்லிகளை நம்ம டிவி சீரியல் வில்லிகள் போல  அல்லாமல்... மிக அழகாக, ஸ்டைலாக சித்தரித்து இருப்பார்கள்..அப்படி  நிறைய படங்களில் வில்லிகளை  பார்த்து பார்த்து  ரசித்த விஷயத்தை கொஞ்சம் நக்கல் கலந்து  ஒட்டு மொத்த தொகுப்பாக எழுதி இருக்கின்றேன்...  10/08/2013 அன்று விகடனின் டைம்பாஸ் இதழில் வந்த இந்த கட்டுரை உங்கள்  பார்வைக்கு.....

பார்த்து  விட்டு ச்சை படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

================

ஹாலிவுட் படங்கள் என்றால் லாலிபாப் போல ருசித்துப் பார்ப்பவரா நீங்கள்? இதோ, ஹாலிவுட் படங்களில், வில்லன்களின் அழகிய அல்லக்கைகளாக வரும் வில்லிகள் பற்றிய அவதானிப்பு... உங்களுக்கும் இதே ஃபீலிங் என்றால், சேம் பிஞ்ச் சொல்லுங்க மக்கா!
பெரும்பாலான வில்லிகள் நம் ஊர்ப் பெண்கள் போல கண்களுக்கு மை வைத்து இருப்பார்கள். வைத்து என்ன வைத்து, 'அப்பி’யிருப்பார்கள். 'பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்’ படத்து ஜானி டெப்புக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு இருக்கும் அந்தக் கண் மை! அதேபோல, உதட்டுக்கு சிவப்புக் கலர் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு எப்போதும் உதட்டைச் சுளித்து செக்ஸியாகப் பேசுவார்கள். 'நீதானே என் பொன்வசந்தம்' சமந்தா போல, மூக்கில் ஒரு வளையம் கண்டிப்பாக இருக்கும்.
வில்லனிடம் ஜாலியாக இருக்கும்போது 'சூது கவ்வும்' படத்தில் வரும் சஞ்சிதா ஷெட்டி போல சின்னதான, இறுக்கமான கால் டவுசரும் சட்டையும் அணிந்து இருப்பார்கள். மேல் பட்டன் கண்டிப்பாக கழன்று இருக்கும். சண்டைக் காட்சிகளின் போது இறுக்கமான லெதர் உடை அணிந்து இருப்பார் கள். அதேபோல முக்கிய மேட்டர்... முன்பெல்லாம் ஹாலிவுட் படங்களில் வில்லிகள் செக்ஸியாக சட்டை அணிந்து உள்ளாடை அணிந்து இருப்பார்கள். இப்போதைய பரிணாம வளர்ச்சியின் காரணமாக அதுவும் நஹி!

தொன்று தொட்டுவரும் அனைத்து ஹாலிவுட் படங்களின் க்ளைமாக்ஸில் 'மம்மி’ படத்தில் வருவது போல, கதாநாயகியுடன் வில்லிக்கு ஒரு சண்டை கண்டிப்பாக உண்டு. க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியின்போது சரத்குமார் போல கட் பனியன் அணிந்து சண்டை போடுவார்கள். என்ன நேர்த்திக்கடனோ, பெரும்பாலும் கருப்புகலர் கட் பனியனையே அணிந்து இருப்பார்கள். அவர்கள் வெள்ளையாக இருப்பதால், கருப்புகலர்தான் பார்க்கவும் தூக்கலாக இருக்கும் என்பது கூடுதல் கிளுகிளுப்பு.
சண்டையும்  சச்சரவும் எப்படி இலக்கியவாதிகளின் பரம்பரைச் சொத்தோ, அதுபோல  படம் நெடுக ஹீல்ஸ் அணிந்து 'டக் டக்’கென நடந்துவந்து மிரட்டுவதில் கில்லிகள் இந்த வில்லிகள். இதில் கொடுமை என்னவென்றால், வில்லனுடன் சல்லாபிக்கும்போதும்கூட அந்த ஹீல்ஸை அவிழ்க்க அவர்களுக்கு மனம் வராது. ஒரு முரட்டுத்தனத்தை அந்த சீனில் காட்டி ரசிகர்களின் முதுகை ஜிலீரிட வைப்பதும் வில்லிகளின் வாடிக்கை.
என்னதான் வில்லனுக்காக உயிரையே கொடுக்கும் அளவுக்கு விசுவாச வில்லியாக இருந்தாலும், கதாநாயகனுக்கு பைபாஸில் ரூட்டு விடுவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். அவனோடு உறவு வைத்துக்கொள்ளத் துடியாய்த் துடிப்பார்கள். அர்னால்டு நடித்த 'ட்ரூ லைஸ்’ படத்தில் வரும் வில்லி போல, ரணகளமாய்க் கட்டி வைத்து உதைக்கும்போதும் ஒரு லிப் டு லிப் கிஸ்ஸை சந்தடிசாக்கில் ஹீரோவுக்குக் கொடுப்பார்கள். நாயகனும் வேண்டா வெறுப்பாக, அந்த முத்தத்தை வாங்கிக்கொண்டு, நாயகி எங்கே தன்னைத் தப்பாக நினைத்துக்கொள்வாளோ என்ற பயத்தில் துப்புவதுபோல நடிப்பார். என்னா நடிப்புடா சாமி!
வில்லிகள் திறமையானவர்கள் என்பதை நிரூபிக்க துப்பாக்கியை எடுத்து லோடிங், அன்லோடிங் செய்வதென ஸ்டைலிஷ் எஃபெக்ட் கொடுப்பார்கள். பெண்தானே என்று  நாம் அலட்சியமாக  நினைத்துக்கொண்டு இருக்கும்போது, படத்தின் முக்கியமான கேரக்டரின் பொட்டில் பொட்டென வைத்துச் சுட்டு, தான் பயங்கரமான பெண்மணி என்று நம்மை பகீரிட வைப்பார் கள்.
நாயகியைவிட ஹாலிவுட் வில்லிகளின் பின் பக்கப் பரிணாமத்தை செல்லுலாய்டில் பதியவைக்க முன்னணி கேமராமேன்களே பின்னணி கேமராமேன்களாக மாறி தொழில் நேர்த்தியைக் காட்டியிருப்பார்கள். பெரும்பாலான படங்களில் 'திருவிளை யாடல்’ படத்தின் மீனவ சிவாஜி கேரக்டர்போல வில்லிகள் கேமராவுக்கு முன், பின்னழகைக் காட்டி நடந்துவருவார்கள். தியேட்டரில் ஸ்க்ரீனுக்கு முன் அமர்ந்து படம் பார்க்கும் ரசிகர்களின் வாயில் ஒரு டஜன் ஈக்கள் நிச்சயம் போய் வரும்.
சமீபகாலமாக கேங்ஸ்டர் திரைப் படங்களில் மூக்குப்பொடியை உறிஞ்சுவது போல 'சர்சர்’ரென உறிஞ்சுவதோடு, போதை மருந்தை வைத்து வில்லனுக்கும் கொடுத்து சமத்துவத்தை வளர்ப்பார்கள்.
'என்னதான் கூடவே சுத்தின செவ்வாளையாக’  படம் முழுக்க விசுவாசமான வில்லியாக வில்லனோடு நகமும் சதையுமாக இருந்தாலும் வில்லியின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து நாயகன் வில்லனை மிரட்டும்போது, 'உனக்கேன் சிரமப்பா?’ என்பது போல வில்லனே வில்லியைச் சுட்டுவிடுவார்.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... படத்தில் இருக்கும் பொருட்கள் எல்லாவற்றையும் வில்லிக்கு இயக்கத் தெரிந்திருக்கும். சைக்கிளில் ஆரம்பித்து ராக்கெட் லாஞ்சர், பீரங்கி, ஹெலிகாப்டர், கப்பல், ஏவுகணையை வெடிக்கவைக்க கம்ப்யூட்டரில் புலியாய் புரொகிராம் செய்வது என வில்லிக்குத் தெரியாத துறையே இருக்காது. ஆனால் 'என்ன கொடுமை சரவணன் இது’ என்பது போல மிகக் கொடூரமாக இந்த அழகிய வில்லிகள் செத்துப்போவார்கள் எப்போதும் கடைசியாய்!
- ஜாக்கிசேகர்


நன்றி
டைம்பாஸ்

============
குறிப்பு...

இன்று வெளியாகி இருக்கும் விகடனின் டைம்பாஸ் இதழில் இயக்குனர் மணிரத்தினத்தின்  திரைப்படங்களில் இருக்கும்  பொதுத்தன்மைகளை எழுதி இருக்கின்றேன்.. கட்டுரை தலைப்பு ...“பிடிக்கும் அஞ்சு விஷயம் பிடிக்கும் “ வாசித்து பார்க்கவும்...அட்டை படம் ஸ்ருதிஹாசன் (23/08/2013)


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

6 comments:

  1. அப்படியே மூவாயி ஆனந்தவிகடனுக்கும் எழுதிடிங்க...

    ReplyDelete
  2. நல்ல கட்டுரை...
    கலக்குங்க அண்ணா...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. NALLA ANALYSIS NATTUKKU ROMBA THEVAI????

    ReplyDelete
  4. வணக்கம்..நான் அருண் உத்திராபதி.. என் பெயரை நீங்க டைம் பாஸில் பார்த்திருக்கக்கூடும்.. நலமா?

    ReplyDelete

  5. hahaha!! ella machine galaiyum iyakka therinthu irukkum. Romba correct. Sila villigal, villanin ketta thanam than mel paayum bothu nallavargalaagi herovukku help pannivittu pin uyirai viduvaargal!

    Cartoon padaththu villigal kooda ipadi thaan. Uthaaranam: the Incredibles. ippo paakalainaalum innum 1 varushathula Yazhini kooda ukkanthu paarunga. Neenga sonna villi ilakkanangal ellam antha villanin thozhikkum undu!!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner