முதலில் இந்த புயலுக்கு பெயர் நீலம் என்றுதான் நான் வாசித்தேன்...
அதைதான் எல்லா தொலைகாட்சியிலும் ஒளிபரப்பினார்கள்.. முக்கியமாக புயலை தொடரும்
புதியதலைமுறை கூட நீலம் என்றுதான்
விளித்தார்கள்.
நான்
பேஸ்புக்கில் புயலை பற்றி ஒரு ஸ்டேட்ட ஸ் அப்டேட் போட அதை பார்த்து தம்பி
சிங்கை ஜோசப் பால்ராஜ்... யோவ் நிலத்தக்கு
நீலம்ன்னு எழுதி இருக்கே....ன்னு சொன்னார். நான் சேனலை செக் பண்ணிட்டு அவுங்க போட்டதை வச்சிதான்
நான் எழுதினேன்னு சொன்னேன்.
யோவ் அவங்க தப்பு பண்ணலாம்..
லட்சக்கணக்கான வாசகர்கள் வைத்து இருக்கும் நீ தப்பு பண்ணலாமா? என்று
நக்கல் கேள்வியை உதிர்த்தார்.... நான் என்ன
சொல்வது ஊர் ஓடும் போதும் நீயும் ஓடு என்று என் அம்மா சாவும் போது சத்தியம் வாங்கிக்கொண்டு செத்து போய் விட்டதால்.... இந்த புயலை.... நீலம் என்றே அழைக்கின்றேன்...
தானே புயல் தாக்கத்தினாலும்.... அமெரிக்கவை தாக்கிய சான்டி புயல்
தாக்கத்தினாலும் இந்த நீலம் புயல் மீது எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது...இன்னைக்கு
சாய்ங்காலம் ஆறு மணிக்கு, மாரியாத்தா
கோவில் மாதோப்புல, மாந்தோப்பு ஏலம் விடப்போறங்க...ஏலம் கேட்கறவங்க மாந்தோப்புவர சொல்லறாங்கோ சாமியோவ்
என்று ஊரில் தமுக்கு போட்டு செய்தி
சொல்லுபவர் டோனில் டிவியில் பேசிக்கொண்டு இருந்தார் ரமணன்... ஆனால் முன்பு போல
வரும் வராது என்று எல்லாம் சொல்லாமல் மிதமான முதல் கனமழை, லேசான சாரல் என்று சப்பை கட்டு வார்த்தைகளை அதிகம் உபயோகிக்க
கற்றுக்கொண்டு விட்டார்..
முன்பு எல்லாம் நிறைய மைக் எதிரில் இருந்த
உற்சாகத்தில், கண்டிப்பா சென்னையில் கன மழை
என்று சொல்லி இருக்கின்றார்.....அதனால்
பள்ளி விடுமுறை விட்டு இருப்பார்கள்... மறுநாள் வெயில் காயும்.... என்னதான் தொழில் நுட்பம் வளர்ந்தாலும் இயற்கையை மிக
துல்லியமாக கணிக்கவே முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை. அதனால் இப்பொதெல்லாம்
அவர் பேட்டியை பார்த்தீர்கள் என்றால்... என்னத்தை
கண்ணைய்யா போல வரும் ஆனா வராது என்று கழுவின மீனில் நழுவின மீன் போல பேச
ஆரம்பித்து இருக்கின்றார்.
இரவில் இருந்தே காற்றும் வீசி பெரு மழை பேய ஆரம்பித்தாலும்... காலையில் புயலுக்கு முன்னே
அமைதி கணக்காக சென்னை மரங்கள் மவுண விரதம் கடைபிடித்தன...
காலையிலேயே நீலம் தன்னுடைய வேலையை காட்ட
ஆரம்பித்து விட்டது…. கிண்டி மேம்பாலத்தில் வழக்கம் போலத்தான்
வண்டியை ஓட்டினேன்….டாஸ்மார்க்கில் இருந்து இறங்கியவனை போல தள்ளாட
வைத்து அழகு பார்த்தது நம்ம நீலம்…வண்டிக்கு முன்பு ஒரு ஆண்டி ஓட்டிக்கொண்டு சென்ற ஆல்ட்டோ கே
10 பின் புறத்தில் என் வண்டியால் முத்தமிட வைக்க நீலம் முயற்சிக்க…..
என் வண்டியும் பக்கித்தனமாக அந்த கே10
பின்னாடியே டிராவல் ஆக, சமாதானம் செய்து கண்ட்ரோல் செய்து அழைத்து
வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது…;-)
திடிர் என்று ஊடக பரபரப்புகளாலும்,
ரமணனாலும், நீலம் என்ற சொல் மிக பிரபலமாகிவிட்டது…
நீலம் கலந்து நம்மோடு பயணிக்கும் சொற்களை
யோசித்தேன்….
நீலவானம்,
சொட்டு நீலம் டோய் ரீகல் சொட்டு நீலம் டோய்….
நீலப்படம்
நீலம் சஞ்சிவி ரெட்டி.
நீலக்குயில்கள் ரெண்டு (படம் விடுதலை)
நீல வான ஓடையில்….. நீந்து கின்ற வெண்ணிலா….
உங்களுக்கும் தெரிஞ்சா கண்டினியூ பண்ணுங்க
மக்கா… என்று ஒரு ஸ்டேட்டஸ் பேஸ்புக்கில் போடும்
போதுதான் தம்பி ஜோசப் பால்ராஜ் தன் அறச்சிற்றத்தை வெளிப்படுத்தினார்...
12மணிக்கே பவரை உருவி விட்டு நிலம் புயலுக்கு
பொதுப்பணித்துறையும், மின்சாரதுறையும் தேவுடு காக்க தொடங்க... என்னங்க கொஞ்சம்
சீக்கிரம் வந்துடுங்க.. உங்க பொண்ணை
வச்சிகிட்டு சமாளிக்க முடியலை.... அப்பா
அப்பான்னு உங்க கம்யுட்டர் டேபிள்கிட்ட போய் போய் பார்க்கிறா.. என்று
சொல்ல...கிளம்பலாம் என்று நினைக்கையில்.....ஆபிசில் மீட்டிங் வைத்து விட்டார்கள்...யாழினிக்கு
ஜுரமும் வந்து விட்டது....
அலுவலகத்துக்கு வெளியே வந்த
பார்த்தேன்.... பேய் படத்தில் காட்டுவது போல, கருப்பு மேகங்கள்...தேமுதிக
எம்எல்ஏக்கள் அதிமுக பாசறைக்கு செல்வது போல
வேகம் காட்டிக்கொண்டு இருந்தன...
காற்று
வேகமாக அடித்துக்கொண்டு இருந்தது.... பக்கத்து அலுவலகத்து பெண்கள் குடை
பிடிக்க வலையோசை கல கல பாட்டில் அமலா குடை பறப்பது
போல அவர்கள் பிடித்து இருந்த குடைகள் பறந்து
கொண்டு இருந்தன...எல்லோரும் ஓடிப்போய் எடுத்தார்கள்... ஒரு பெண் அப்படி ஓடுவது அசிங்கம் என்று நினைத்துக்கொண்டார்... நீலத்துக்கு இதெல்லாம் எங்கே தெரிய போகின்றது... அதுபக்கத்தில் இருக்கும் காலி இடத்தில் தூக்கிக்கொண்டு சென்றுவிட்டது...
சரியாக
புயல் கடந்த கொண்டு இருக்கும் ஆறு மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன்...
எட்டு மணி எபெக்ட்டில் சென்னை நகரம்
இருந்தது... மின்சாரம் அறவே இல்லை...பெருங்குடியில் இருந்து வேளச்சேரி ரூட்
எடுக்காமல் மத்திய கைலாஷ் கிண்டி ருட் எடுத்தேன்... பெரிய ரோட் என்பதால் வேகமாக
வீட்டுக்கு போய் விடலாம் என்று கணக்கு போட்டு வண்டியை ஐடி ரோட்டில்
செலுத்தினேன்... கிழே தள்ளும் நோக்கத்தோடு காற்று பலமாக வீசிக்கொண்டு இருந்தது.
ஊரில் பல் துலக்க வேப்பங்குச்சியை உடைப்போம்.... நல்ல பதமான குச்சி
கிடைக்கும் வரை ஒரு சின்ன கிளையை காலி
செய்து உடைத்து உடைத்து போடுவோம் அல்லவா..? அது போல நீலம் சின்ன சின்ன
குச்சிகளை நீலம் பல்துலக்க எல்லா மரத்தில் இருந்தும் உடைத்து போட்டுக்கொண்டு இருந்தது.
பச்சை
இலைகள் சாலை எங்கும் நிரம்பி இருந்தன...வாகனத்தின் டயர்களை சிக்கி... சித்த
மருத்தவர் அறையில் பச்சலை அறைத்தால் வருமே ஒரு வாசம் அது போல நகரம் எங்கும் பச்சை
இலை வாசனை வீசிக்கொண்டு இருந்தது... அடையார் கேன்சர் இன்ஸ்டியூட் பிரிட்ஜில்
ஏறியதும் டிராபிக்....எங்குமே மின்சாரம் இல்லை என்பதால் வாகனத்தின் பின்புற ரெட் லைட்டு விளக்குகள் டிராபிக்கில் பார்க்க மிக அழகாக இருந்து...
(கும்மிருட்டில் அடையாறு கேச்ர் இன்சிடியூட் மேம்பாலம்...)
அண்ணா யூனிவர்சிட்டியில் இருந்து கவர்னர்
வளாகம் வரை உள்ள நிறைய மரங்களின் கிளைகளை
மதயானை உடைத்து போடுவது போல சின்னதும் பெரிதுமான கிளைகள் கீழே உடைத்து போட்டு கிடந்தன... மரியாத்தா கோவில்
திருவிழாவில் உடுக்கை அடித்து சாமி வந்து பெண்கள் டங்கு டங்கு என்று ஆடுவது
போல, மரங்களின் கிளைகள் இலக்கில்லாமல் ஆடிக்கொண்டு
பயமுறுத்திக்கொண்டு இருந்தன...
கவர்னர்
மாளிகை கேட்டுக்கு பக்கத்திலேயே
ஒரு பெரிய மரம் கவர்னர் மாளினை
வாளக சுவற்றை உடைத்து கவர்னருக்கே புதிய வழியை காட்டிக்கொண்டு இருந்தது... அந்த
மரம் விழுந்த காரணத்தால்தான் டிராபிக் என்பது புரிந்து போனது...மரத்தை வெட்டிக்கொண்டு இருந்தார்கள்.... போலிஸ்
போக்குவரத்தை சரிசெய்து கொண்டு இருந்தார்கள்...
சாலை
எங்கும் குச்சி மற்றும் இலைகளால் குப்பை மேடாக காட்சி அளித்துக்கொண்டு இருந்தது...
காற்று அடித்தாலும், வீடு வந்து
சேர்ந்தேன். யாழினி ஓடி வந்து
என்னை கட்டிக்கொண்டாள்...பவர் சுத்தமாக இல்லை... அவளை தூங்க வைக்க
போராடி இரவு பதினோரு மணிக்கு தூங்க
வைத்தோம்...கொசுக்கடியில் எழுந்து எழுந்து சினுக்க.. நானும் என் மனைவியும் விசிறியால் மாற்றி மாற்றி கை வலிக்க தூங்க
வைத்துக்கொண்டு இருந்தோம்.
விடியற்காலை மூன்று மணிக்கு கும்மிருட்டில்
வீட்டு மொட்டை மாடிக்கு சென்று பார்த்தேன்....ஏர்போர்ட், சென்ட்தாமஸ் மவுன்ட்,
டிஎல்ப்பில் மட்டும் விளக்குகள் எரிந்தன... வேறு எங்கும் பொட்டு லைட்டு வட
இல்லை.... குன்றத்தூர் பக்கம் திரும்பினேன். ஒரு விளக்கு கூட கண்
சிமிட்டவில்லை...ஆனால் நிலா பளிச் சென்று வெளிச்சதை கொடுத்துக்கொண்டு இருந்தது....
(சாம்ராஜ்ய யுத்த கல்லரைகள்...)
இந்த
புயலில் பட்டிணபாக்கத்தில் கரை தட்டிய கப்பல்
சென்னையின் ஹாட் நியூஸ் ஆனது.... கரைதட்டி உதவிக்கு அழைத்தும் யாரும் உதவ
வரவில்லையாம்... இலங்கை கடற்படை நம்ம மீனவர்களை
தாக்கினாலே நம்ம கடற்படை உதவிக்கு போனதில்லை... அதுவும் புயல்
அடித்துக்கொண்டு இருக்கும் போது எப்படி போகும்??? அந்த கப்பலில் இருந்தவர்கள்...
உதவி கிடைக்கவில்லை என்றதும்.....சின்ன படகில் தப்ப முயன்று அந்த படகு
கவிந்து ஒரு தமிழ்நாட்டுகாரர் இறந்து
விட்டார்....
எந்த உதவியும் கிடைக்காமல் கடலில் தத்தளித்த ஊழியர்களை, மீன்களை கொல்லும் பட்டிணபாக்க மீனவர்கள்தான் தங்கள் உயிரை துச்சமென மதித்து காப்பாற்றி இருக்கின்றார்கள்...
டைட்டானிக் போல நடுக்கடலில் முழுகும் போது கூட அந்த கப்பலின் எட்ஜில் முழுகும் வரை ஆட்கள் இருந்தார்கள்.. கரை தட்டிய கப்பல் ஒரு போதும் தண்ணீரில் மூழ்க வாய்ப்பில்லை... அப்படி இருந்தும் கப்பலிலேயே இருப்பதை விட்டு விட்டு கரைக்கு சின்ன படகில் தப்பியது பயத்தின் கொடுமைதான்... இதில் ஒரு உயிர் பலி... இன்னும் 5 பேரை காணவில்லை...
எந்த உதவியும் கிடைக்காமல் கடலில் தத்தளித்த ஊழியர்களை, மீன்களை கொல்லும் பட்டிணபாக்க மீனவர்கள்தான் தங்கள் உயிரை துச்சமென மதித்து காப்பாற்றி இருக்கின்றார்கள்...
டைட்டானிக் போல நடுக்கடலில் முழுகும் போது கூட அந்த கப்பலின் எட்ஜில் முழுகும் வரை ஆட்கள் இருந்தார்கள்.. கரை தட்டிய கப்பல் ஒரு போதும் தண்ணீரில் மூழ்க வாய்ப்பில்லை... அப்படி இருந்தும் கப்பலிலேயே இருப்பதை விட்டு விட்டு கரைக்கு சின்ன படகில் தப்பியது பயத்தின் கொடுமைதான்... இதில் ஒரு உயிர் பலி... இன்னும் 5 பேரை காணவில்லை...
புயல் கரையை கடக்கும் போது.. காலையில இருந்தே
எங்க ஊர் கடலூர்ல இருந்து, நிறைய பேர் போன் பண்ணி நீலம் குறித்து
விசாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க… முக்கியமா சொந்தங்களுடைய போன் கால்கள் அதிகம்.…காரணம் தானே புயல் தந்த பீதி என்பது புரிந்த
போனது.. ஆனால் ஒரு பய புள்ள போன் பண்ணிச்சி…. மச்சி எத்தனை மரம் எந்தனை செல்போன் கோபுரம்....
இதுவரை சரிஞ்சி போய் இருக்கு…?? என்றான்.. டேய் இன்னும் புயல் ஆரம்பிக்கலை….
சாயந்திரம்தான் கரையை கடக்கும் என்றேன்.. அப்ப
நைட்டு போன் பண்ணறேன் என்றான்.. டேய் எதுக்குடா? என்றேன்….இல்லை நாங்க இங்க ஒரு மாசம் தானே புயல் அடிச்சி
கரண்ட் , பால் ,தண்ணி இல்லாம கஷ்டப்பட்டடோம் கேக்க நாதியில்லை.. அட்லிஸ்ட்
ஒரு வாரமாவது நீங்க கரண்ட் இல்லாம கஷ்டப்பட்டா போதும் அதுக்குதான் போன் பண்ணறேன்னு
சொன்னேன்னு சொல்லறான்…டேய் நீயெல்லாம்….?
28 மணி நேரத்துக்கு பிறகுதான் எங்க ஏரியாவில்
கரண்ட் வந்தது...11 போஸ்ட் மரங்களை நீலம் சாய்த்த காரணத்தால் கரண்ட் வர தாமதம்....
(பெருங்குடிஎம்ஜீயார் சாலை)
கலைஞர் தொலைகாட்சியில் செய்தியாளர் தம்பி ராமைய்யா...21 செமீ மழை
கண்டிப்பாக பதிவாகும் .. பம்பாய் போல
வெள்ளத்தில் மூழ்க வாய்ப்பு இருப்பதாக சொன்னாலும் ஆட்சியாளர்களை மனதில்
வைத்து நீலம் தனது சேதத்தை சென்னையில் குறைத்துக்கொண்டது என்பதுதான் உண்மை....
அண்ணா வளைவு இடிப்பை பேப்பரை பார்த்து தெரிந்து
கொண்டேன் என்று நம் முதல்வர் சொன்னதாக நாளிதழ்கள், மற்றும் சமுக வலைதளங்கள்
தெரிவித்தன... அது போல ,என்னது...? நீலம் புயல் கரையை கடந்து விட்டதா ?என்று
கேள்வி எழுப்பினால்? நீலம் (நிலம்)
புயலால் தாங்க முடியாது அல்லவா? அதனாலே
தனது சேதத்தை குறைத்துக்கொண்டது என்று
நம்புகின்றேன்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...

இதுக்குதான் ஜாக்கி அன்னெ வேனும்கிறது.என்ன அருமையா குற்ற அறிக்கை மாதிரி தாக்கள் செய்து இருக்கிறாரு. தங்கள் நீல பட விமர்ச்சனம் மிக அருமை.
ReplyDeleteஅருமையான விவரிப்பு! நான் கூட நிலம் புயல் என்று தட்ஸ் தமிழை பார்த்து தெரிந்து கொண்டு சேனல்களில் நீலம் என்று சொல்லவும் குழம்பி போனேன்!
ReplyDelete// டிவியில் பேசிக்கொண்டு இருந்தார் ரமணன்
ReplyDeleteShould this guy always appear in the press meeting?
Why this kind of suyamogam? This is one of the problems with our country starting from government officials to the political leaders. Very stupid. Each time he can ask one of his team members to talk to the press. In fact I guess he doesn't do any work but it is the team members who work hard to get the data and analyze.
ஒரு நாவல் படிப்பது போல இருந்தது உங்கள் பதிவு.
ReplyDeleteஅருமை
நிலம் புயலால் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பது உங்கள் ஒருவரின் அலைச்சலிலிருந்து தெரிந்தது. படிக்கும்போது மழையிலும் புயலிலும் நானே மாட்டிக்கொண்ட மாதிரி இருந்தது.
ReplyDeleteநிலம் புயலால் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பது உங்கள் ஒருவரின் அலைச்சலிலிருந்து தெரிந்தது. படிக்கும்போது மழையிலும் புயலிலும் நானே மாட்டிக்கொண்ட மாதிரி இருந்தது.
ReplyDeleteநிலம் புயலுக்கு படிக்க தெரிஞ்சுருந்தால் நாணி வெக்கப்பட்டு தலை குனிஞ்சிருக்கும்...
ReplyDeleteஉங்க ஸ்டைலு // எந்த உதவியும் கிடைக்காமல் கடலில் தத்தளித்த ஊழியர்களை, மீன்களை கொல்லும் பட்டிணபாக்க மீனவர்கள்தான் தங்கள் உயிரை துச்சமென மதித்து காப்பாற்றி இருக்கின்றார்கள்...//