உப்புக்காத்து=9


யாருமற்ற வீட்டில் தனியாக இருப்பது  எவ்வளவு கடுப்படிக்கும் விஷயம்... சின்ன வயதில் அம்மா அப்பா என்னை விட்டு விட்டு திருமணத்துக்கு அல்லது உறவினர் வீட்டுக்கு செல்லும் போது பெரியதாக கடுப்பு அடிக்காது.. ஜாலியாக விளையாடவே தோன்றும். ஆனால் நினைவு தெரிய ஆரம்பித்து சமுகத்தின் ஒரு அங்கமாக மாறிய வயதில் நாம் ஆசை, அபிலாஷைகளை பகிர்ந்துகொள்ள ஒரு கம்பெனியன் நிச்சயம் தேவை அல்லவா...முக்கியமாக பெண் குழந்தைக்கு கண்டிப்பாக வேண்டும்.. 


முதலில் அவள் அப்பாவோட அதிகம் ஒட்டினாலும், டீன் ஏஜ் வயதில் அம்மாவோடு இன்னும் இனக்கமாக இருப்பாள் காரணம் உடல்உபாதை பற்றிய சந்தேகங்களுக்கு அம்மாதான் சிறந்த ஆசிரியர்.

திருமணம் முடிந்ததும்.. கணவன் பிறகு அவளுடைய மகன்.. அப்புறம் பேரக்குழந்தைகளோடு அவளுடைய வாழ்க்கை வெறுமையடையா வண்ணம் செல்லும்...

25 வயதுப்பெண்ணுக்கு அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை... என்றால் எப்படி இருக்கும்???

மாமா, சித்தப்பா, சித்தி, பெரியப்பா,அத்தை எல்லோரும் இருக்கின்றார்கள்..ஆனால் அப்பா அம்மா இல்லை...இரண்டு பேருமே இறந்து போய்விட்டார்கள்..

இருபத்தி ஐந்து வயது இளம் பெண் என்று ஒரு ஒருமுறையும் சொல்வதை  விட அவளை தேவகி என்று அழைப்போம். தேவகியின் அப்பாவுக்கு டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் வேலை... நல்ல மிடில்கிளாஸ் வாழ்க்கை... தேவகியின் அப்பாவுக்கு இளகிய மனது... அந்த இளகிய மனதை  சொந்தங்கள் அவசரத்துக்கு கண்களில் கண்ணீரோடு நசுக்கிப்பார்க்க...தன்னிடம் பணம் இல்லாவிட்டாலும் கிரேடிட் கார்டில் பணத்தை எடுத்து கொடுத்து விடும் அளவுக்கு இளகிய மணம்...


ஒருவருக்கு ஒரு லட்சம் அவசரத்துக்கு வாங்கி கொடுக்கின்றார் என்றால் அந்த பணத்தை அவர்கள் கொஞ்சம் லேட்டாக கொடுத்தாலும் அதுக்கு வட்டியை இவர் கட்டிக்கொண்டு இருந்தார்..ஒரு லட்சத்துக்கு இரண்டு லட்சம் மூன்று லட்சம் பணம் இவர் கட்டி  கடைசி ரிட்டயர்மென்ட் காலத்தில் ரொம்பவே நொடிந்து போனார் தேவகியின் அப்பா..ரிட்டயர்மென்ட காலத்தில் வந்த பணத்தில் கடனை அடைத்து விட்டு பெங்களரூவில் ஒரு வீட்டை கட்டினார்...


 தேவகியின் அம்மாவுக்கு ஆஸ்துமா... தவறான சிகிச்சையால் 2000ம் வாக்கில் இறந்து போனார்....அம்மாவின் இறப்பை தேவகியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை...


தேவகி அண்ணன் என்ஜினியரிங் படித்தான்.. நல்ல இடத்தில் வேலையும் கிடைத்தது...வீட்டில் ஒரு மகாலட்சுமி வந்தாள் சரியாகி விடும் என்பதாலும் வீட்டையும் பொறுப்பாக பார்த்துக்கொள்ளுவாள் என்பதாலும்  தேவகியின் அண்ணாவுக்கு திருமணம் செய்து வைத்தார்..


தேவகியின் அப்பாவுக்கு கேன்சர் 2005ல் வந்து அவரது நிம்மதியையும் தேவகியின் நிம்மதியையும் ஒரு சேர கெடுத்தது.. தன் ஒரே மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று துடித்தார்... 2007ல் மனதில் நிறைய கனவுகளோடு இறந்து போனார்..
தேவகி திடிர் என்று அனாதை ஆனாள்.. அதான் தேவிகியின் அண்ணன் இருக்கின்றானே..? அப்புறம் அவன் கட்டி வந்த மகாலட்சுமி இருக்கின்றாளே?அப்புறம் எப்படி அனாதை ஆவாள் என்று நீங்கள் கேட்கலாம்.. அப்பா உயிரோடு இருக்கும் போது இறக்க போகின்றோம் என்று  பயத்தில் தேவகிக்கு திருமணம் செய்து வைக்க மன்றாடி இருக்கின்றார்...அந்த சண்டையில் இருந்து தேவகியை அவன் அண்ணணுக்கு பிடிக்காமல் போய் விட்டது....

அப்பா இறந்தஉடன் தன் தங்கையை தன் வீட்டில் வைத்துக்கொள்ள சகோதர பாசம் லைட்டாக அனுமதித்தாலும் அவன் கட்டி வந்த மகாலட்சுமிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை....நன்றாக படித்தாள் கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆனாள்... பெங்களூரில் வேலை கிடைத்தது...22 வயதில் பெங்களூர் ஹாஸ்டல் வாழ்க்கைக்கு தன்னை பழக்கி கொண்டாள். சனி ஞாயிறு லிவில் எல்லோரும் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல தேவகி மட்டும் ஹாஸ்டல் ஜன்னல் கம்பி வழியே விடுமுறை  நாட்களில் தெருவை வெறித்து பார்க்க ஆரம்பித்தாள்.

சில காலம் தேவகி மாமா ஒருவர் அவளை வீட்டில் வைத்து பார்த்துக்கொண்டார்.. அதையும் நாங்க ரொம்ப நெருங்கிய சொந்தம் நாங்களே பார்த்துக்கலை... நீங்க எதுக்கு பார்த்துக்கிறிங்க,... பெங்களுர் வீட்டுக்காகத்தானே என்று நக்கல் விட ஆரம்பித்தார்கள்.. இது என்னடா வம்பா போச்சி... தேவகியின் மாமா திரும்பவும் அவளை ஹாஸ்டலில் அழைத்து போய் சேர்த்து விட்டார்.. 


சனி ஞாயிறு அவளை பெங்களூருவில் இருக்கும் வீட்டுக்கு அழைத்து வந்து தன் மகளோடு வெளி இடங்களுக்கு அழைத்து செல்லுவார்..அப்படி ஒரு ஞாயிறு பொழுதில் கருடமாலில் வைத்து தேவகியை நான் பார்த்தேன்....அவன் கதையை எனது நண்பர் சொன்ன போது  கேட்கவே கஷ்டமாக இருந்தது..


தேவகியின் மாமா எனக்கு  குடும்ப நண்பர்.. தேவகிக்கு திருமணம் என்று சொன்ன போது தேவகி அண்ணன்.. நான் ஒரு பைசா கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டான்.. என்னை அப்பா எம்பிஏ படிக்க வைத்தார்.. ஆனால் அவர் கேன்சரில் இருக்கும் போது  மருத்துவசெலவை நான் பார்த்துக்கொண்டேன் அதனால் தங்கை தேவகி கல்யாணத்துக்கு நான் பணம் கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டான்..

தேவகி 15 ஆயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தாள்.. இப்போது முப்பது ஆயிரம் மாத சம்பளம் வாங்குகின்றாள்... இரண்டு வருடம் தனியா ஹாஸ்டலில் வசித்து வருகின்றாள்... தேவகியின் அப்பா இளகிய மனதோடு சொந்தங்களால் பல்பு வாங்கி கடைசி காலத்தில் பெங்களூருவில் கட்டிய வீட்டை தேவகி கல்யணாத்துக்கு விற்று விட சொத்தங்கள் தீர்மானித்தன...


50 லட்சத்துக்கு  அந்த வீட்டை விற்றார்கள்.. இரண்டு பேருக்கும் பாதி பாதி..... முதல் நாள் வீடு விற்கும் போது, தங்கை திருமணத்துக்கு கால்வாசி பங்கு தருகின்றேன் என்று சொன்னவன்.. மறுநாள்  அவனது மகாலட்சுமியின் உத்தரவின் பேரில் பத்து பைசா கொடுக்க முடியாது என்று கை விரித்து விட்டான்.. தங்கையை ஹாஸ்டலில் தங்க வைத்தவனிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்..??? 

இறந்தும் வீடு விற்ற பணத்தின் மூலம் தன் திருமணத்துக்கு உதவி புரிந்த கேன்சர் தகப்பனை நினைத்து அன்று இரவு முழுவதும்அழுதாள்..


ஒரு மகிழ்வான செய்தி......
வரும் ஆகஸ்ட் மாதம் தேவகிக்கு திருமணம்.. பெங்களூரில்  வேலை பார்க்கும் தென்மாவட்டத்து இளைஞன்தான் மாப்பிள்ளை.....


===================


 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

19 comments:

 1. நல்லா படைப்பு ஜாக்கி

  ReplyDelete
 2. தேவகிக்கு எனது திருமண வாழ்த்துகள். 16 ம் பெற்று பெரு வாழ்வு வாழ.

  மகாலட்சுமிக்கும், மகாவிஷ்ணுவுக்கும் எனது வாழ்த்துகள்.
  எதுக்கு தெரியுமா?
  எல்லாக் கணக்கையும் கரெக்டா பாக்கியில்லாம வாங்கினவுங்களுக்கு, "பாவக் கணக்கு"ன்னு ஒரு பாக்கி இல்லாம, வட்டியோட சீக்கிரம் தீர்க்கனும்ன்னு.

  உங்களைப் போல் நல்லது நினைக்கும் நிறைய அண்ணன்கள் இருக்கும் பொழுது, நடுவில் வந்து போன தேவையில்லாத தொந்தரவுகளை நினைத்து கவலைப்பட வேண்டாம் என சொல்லுங்கள். :)

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. அவங்களுக்கு என்னோட வாழ்த்துகளை சொல்லிடுங்க

  ReplyDelete
 5. intha mathiri annan iruukirathukku illamale irukkalam ir..

  ReplyDelete
 6. தேவகியின் திருமணத்திற்க்கு அட்வான்ஸ் வாழ்த்துகள் ! !

  அந்த அண்ணன் போனால் என்ன ! ! இணையத்தில் நிறைய அண்ணன்கள் இருக்கின்றனர். அவர்களது வாழ்த்து அவரை வாழ வைக்கும்

  ReplyDelete
 7. Why they sold that home , enn varathasanai vangama kailyanam panna intha kalathu la yarum illai ya, apparam antha veetula enna davaki annaku nu share kudukanum , avan than onnum may panalai yey sister ku. Ok all is well , varapora mapilai yavathu nalla padiya pathukatum

  ReplyDelete
 8. My best wishes for her married life

  ReplyDelete
 9. தேவகிக்கு எனது திருமண வாழ்த்துகள்

  ReplyDelete
 10. தேவகியின் திருமணத்திற்க்கு அட்வான்ஸ் வாழ்த்துகள் ! !

  ReplyDelete
 11. எப்போதுமே ஒரு பெண்ணின் கெடுதலுக்கு இன்னொரு பெண்தான் காரணமாய் இருக்கிறாள்..(மிகப்பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில்)..
  தேவகிக்கு வாழ்த்துக்கள்..தென் மாவட்டத்து தம்பி நல்ல பிள்ளையாய் இருக்க என் பிரார்த்தனைகள்..
  படிப்பு, வேலை, சம்பளம், அப்பாவின் சொத்து-- இப்படி இருந்தும் இந்த தேவகி கஷ்டத்தை சந்திக்க நேரும்போது..இது எதுவுமே இல்லாத தேவகிகளின் நிலை..இறைவன்தான் காக்க வேண்டும்..

  ReplyDelete
 12. இப்படி எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை இனமஏலாவது ஒளிரட்டும்

  ReplyDelete
 13. ஒரு பெண்ணைப்பத்தி, இன்னொரு பெண்ணுக்கு
  எவ்வளவு தெரியும் சார்,
  அந்த மகாலட்சுமி, கண்டிப்பா அனுபவிப்பா................

  ReplyDelete
 14. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி...யாருக்கு யாரும் சாபம் கொடுக்க நான் எழுதுவதில்லை..மனிதர்கள் எப்படி இருக்கின்றார்கள். என்று உணர்த்தவும் சில மனிதர்களை அறிமுகப்படுத்துவதே எனது நோக்கம்..

  ReplyDelete
 15. திருமணம் அனைவரின் ஆசியுடன் இனிதே நடைப்பெற்றது.வாழ்த்திய நெஞ்சங்களுக்கு நன்றி!!!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner