(LANDSCAPE NO.2) 18++ உலகசினிமா/ ஸ்லோவோனியா/ புதைந்து போன ரகசியங்கள்...


கல்பாக்கம் டவுன் ஷிப்பில் உள்ளே போனிர்கள் என்றால் கடற்கரையோர சர்ச்சுக்கு அருகில் ஒரு பூங்காவோடு, ஒரு கல்வெட்டு இருக்கும்...அந்த சிறிய அழகிய பூங்கா என்று சொன்னாலும்.... அதன் பின் புலத்தில் இருக்கும் சோகம் என்பது ரொம்ப கொடுமையானது...

சர்ச்சில் ஞாயிறு அன்று இறைவனை வழி பட வந்தவர்களை நொடியில் சுனாமி மூலம் பர லோகத்துக்கு பலரை அழைத்து கொண்ட இடம் அது... அந்த இடத்தை கடந்து போகுபவர்களுக்கு வேண்டுமானால் அது சிறிய பூங்கா.. ஆனால் அந்த இடத்தின் வரலாறு பல குடும்ப உறுப்பினர்களின் சோகத்தின் மிச்சம்... இது இயற்க்கையாக நடந்த விஷயங்கள்..

ஆனால் இலங்கையில் 4ம் கட்ட ஈழ போரி்ல் எம் இன மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்த இடம்... முள்வேலி... பல லட்சகணக்கான தமிழ் மக்கள் அதுவும் பொது மக்கள்.... போரினை காரணம் காட்டி கொன்று குவித்தார்கள்...பல தமிழ் பெண்கள் கற்ப்பு சூறையாட பட்டது... பலரை இறக்கம் இல்லாமல் கொன்று குவித்தார்கள்.. பல தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாக்கபட்டு சுட்டு கொன்றார்கள்... அதில்யாரோ ஒரு சிங்கள சிப்பாய் எடுத்த விடியோ லீக்காகி... உலக நாடுகளின் கண்டனத்தை சம்பாதித்தது இலங்கை... அது போல பல லட்சக்கணக்கான தமிழ் மக்களை போரை பயண்படுத்தி கொன்று குவிக்க வேண்டும் என்று அரசானை பிறப்பித்து இருந்தால்?????? அது போல ஒரு அரசு ஆவனம் 50 வருடங்கள் கழித்து தமிழ் மக்கள் முள்வேலியில் தம் உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தும் போது கிடைத்தால்... அந்த விஷயம் இலங்கை அரசுக்கு தெரிய நேர்ந்தால்... அதனை எப்பாடு பட்டாலும் அழிக்க வேண்டும் என்று நினைக்கும் அல்லவா....? 2ம் உலக போரின் போது போரில் இடு பட்ட நாடுகள் தனது அதிகாரத்தை பயன்படுத்தி் பல படுகொலைகள் நிகழ்த்தின... 2ம் எலக போர் முடிந்து50 வருடம் கழித்து அப்படி ஒரு ஆவனம்.... ஒரு திருடன் கையில் கிடைக்க அவனை சுற்றி உள்ளவர்களையும் அவனையும் அது எப்படி அலைகழித்து உயிரை எடுக்கின்றது என்பதே கதை......

(LANDSCAPE NO.2) உலகசினிமா/ ஸ்லோவோனியா படத்தின் கதை இதுதான்...

செர்கெஜ் (Sergej),போல்டே (Polde) இருவரும் சிறு சிறு திருட்டுக்களை நிகழ்த்துபவர்கள்... இவர்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் வேலைகாரி....ஒரு ஓய்வு பெற்ற ஜெனரலின் வீட்டில் வீட்டு வேலைகள் செய்கின்றாள்... அந்த வீட்டில் இருக்கும் ஒரு சேப்டி லாக்கரை பற்றி இரண்டு திருடர்களும் அவளின் மூலம் தெரிந்து கொண்டு அந்த ஜெனரல் வீட்டில் கொள்ளை அடிக்கின்றார்கள்.. அப்போது ஒரு லேன்ட்ஸ் கேப் பெயிண்டிங்கை எடுக்க, அதன் பின் புறத்தில் இருக்கும் ஒரு லாக்கரில் சில ஆவனங்களும் போகிற போக்கில் அது என்ன வென்று தெரியாமல் எடுத்து வந்து விடுகின்றான்... செர்கேஜ்....

செர்கேஜ் எப்போதும் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி விட்டு தனது வருங்கால மனைவி ஜாஸ்னா(Jasna)வை எமாற்றி விட்டு கள்ளக்காதலியுடன் எந்த நேரமும் செக்ஸ் அனுபவித்து கொண்டு இருப்பவன்... இந்த நிலையில் ஜெனரலுக்கு திருடு போன விஷயம் தெரிந்து அதிர்ச்சிக்கு உள்ளாகின்றார்...
2ம் உலக போருக்கு பிறகு சுதந்திரம் பெற்ற ஸ்லோவோக்கியாவில் , 2ம் உலக போரில் தோல்விக்கு காரணமான அதிகாரிகள்,அரசு உழியர்கள் என பல நூறு பேரை விசாரனை இன்றி ஜஸ்ட் லைக்தட்டாக கொன்று குவித்த காரணமாய் இருந்த அரசானையைதான் செர்கேஜ் விஷயம் தெரியாமல் திருடி சென்று விட...

அந்த கொலையில் சம்பந்த பட்ட ஒருவனை ஜெனரல் அழைத்து எத்தனை கொலை நடந்தாலும் அந்த ஆவனம் பொதுமக்கள் கவனத்துக்கு வர கூடாது என்று சொல்ல, அந்த கண்டுபிடிக்கும் வேலையை எடுத்துக்கொண்டவன் ஒரு சைகோ.... அதன் பிறகு அந்த அவனத்தை தேடி அவன் நடத்தும் கொலைகள் எல்லாம் அதகளம்.... ஆவனம் கிடைத்ததா? செர்கெஜ் (Sergej),போல்டே (Polde) இருவரும் என்னவானார்கள்... என்பதை திரையில் பார்க்கவும்..

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

படத்தின் அரம்பித்து சில காட்சிகள் கடந்து போகும் போதே... நாம் எதாவது டிரிபில் எக்ஸ் படத்துக்கு வந்து விட்டடோமோ? என்று நினைக்க வைக்கும் காம களியாட்டங்கள்...

உதாரனத்துக்கு ஒரு டிப்பார்மென்டல் ஸ்டோரில் கருப்பு ஜெர்க்கினோடு ஓடும் கள்ள காதலி யாரும் இல்லாத இடத்தில் ஜெர்கினை கழட்ட உடம்பில் ஒட்டு துணியில்லாமல் இருக்க... அவன் அவள் அருகில் வந்து முட்டி போட்டு சென்சார்.... அந்த நேரத்தில் ஒருவள் அதை பார்த்து விட்டு என்ன செய்கின்றாய் என்று கேட்க? உனக்காகதான் என்று சொல்லும் அந்த காட்சி சான்சே இல்லை...

ஸ்லொவேனிய இயக்குனர் Vinko Moderndorfer காம காட்சிகளோடு, ஒரு வரலாற்று பதிவையும் சரிவகிதத்தில் கலந்து கொடுத்து இருக்கின்றார்... ஒரு வேலை இந்த ஸ்லோவாக்கிய படு கொலை நடந்து இருந்தாலும் இருக்கலாம்... அல்லது ஆவனம் இல்லாத காரணத்தால் இப்படி ஒரு கதை மூலம் அந்த உண்மைகளை நாட்டு மக்களுக்கு சொல்லி இருக்கலாம்...

இந்த படத்தின் ஒளிப்பதிவும் ஆங்கிள்சும் சான்சே இல்லை எனலாம்... முக்கியமாக செர்க்கேஜ் மனைவியாக போகின்றவள் கொலை செய்யபடும் விதமும்... அந்த கொலைக்கு பிறகு அந்த வீட்டில் நடந்த கொலை நிகழ்வையும் போராட்டத்தையும் காட்ட ஒரு டாப் ஆங்கிள் வைத்து இருப்பார்கள் பாருங்கள் சான்சே இல்லை.....இந்த படம் அற்புதமான சஸ்பென்ஸ் திரில்லர் வகையை சார்ந்தது...

இந்த படம் சென்னை எழாவது உலக படவிழாவில் திரையிட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த படம் இது....

எனக்கு முன்புறம் உட்கார்ந்து அரட்டை அடித்து கொண்டு இருந்த கல்லூரி மாணவிகள் அந்த டிப்பார்ட்மென்ட் ஸ்டோர் சீன் பார்த்து பிறகு மெல்ல நழுவினார்கள்...

இன்று வரை ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தை சொன்னதும் என்ன நினைவுக்கு வரும்?... ஜெனரல் டயர், துப்பாக்கிசூடு... அது போல் நடந்த ஆவனம் இல்லாத உலகலாவிய படுகொலை பற்றி இந்த படம் கேள்விகளை எழுப்புகின்றது...

இந்த படத்தை பார்க்கும் போது இந்த உலகில் நமக்கு தெரியாத, அறியாத பலவிஷயங்கள்... இந்த உலகித்தில் அனுதினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.... என்பதை இந்த படம் உணர்த்துகின்றது....

அதிகாரவர்கம் நினைத்தால் எதையும் செய்யலாம் என்பதை போகிற போக்கில் இந்த படம் காறி துப்பிவிட்டு செல்கின்றது...

இந்த படம் பல்வேறு உலக படவிழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை பெற்றது...

படத்தின் லிங்க...

http://rapidshare.com/files/289245892/andscT.part1.rar
http://rapidshare.com/files/289246343/andscT.part2.rar
http://rapidshare.com/files/289246689/andscT.part3.rar
http://rapidshare.com/files/289246970/andscT.part4.rar
subs
http://www.FastShare.org/download/wthd_landscape2_subs.rar


படத்தின் டிரைலர்... கண்டிப்பாக 18+



படக்குழுவினர் விபரம்...



vinko Moderndorfer (director) / Vinko Moderndorfer (screenplay)
CAST: Marko Mandic … Sergej
Janez Hocevar … Polde
Barbara Cerar … Magda
Maja Martina Merljak … Jasna
Jaka Lah .. Damjan
Janez Skof … General
Slobodan Custic … Instructor


நன்றி

இந்த படத்தின் லிங் தேடி வைத்து இருந்த நண்பர் பிரதீப் பாண்டியனுக்கு நன்றிகள்... அவரும் இந்த படத்தை பற்றி எழுதி இருக்கின்றார்.. வாசிக்கவும்


அன்புடன்
ஜாக்கிசேகர்

(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

6 comments:

  1. ஹ்ம்ம்ம்... பெருமூச்சு தான்.. பின்ன.. பார்க்க வேண்டிய படங்கள் லிஸ்ட் கூடிட்டே போகுதே? ;)

    ReplyDelete
  2. vanakkam thalai.. ungal vimarsanam padithuvittu 'Tell no one' thiraipadam paarthen.. it was gud.. athe pol ithayum paarkiren.

    appuram oru chinna santhegam.. neenga ippadi movie links directa kodukkireengalae.. athu problem aagatha.. **AA policy lottu losukku edho solraangale..adhukkaga thaan ketten..

    neengal thappaga ninaithukolla vendaam.. ungal mel iruntha oru akkariyil thaan ketten..

    ReplyDelete
  3. பகிர்தலுக்கு நன்றி அண்ணே...
    சில எழுத்துப் பிழைகள் உள்ளது...கவனிக்கவும்...
    கற்பு ...கற்ப்பு இல்லை..
    இயற்கை ...இயற்க்கை இல்லை...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner