நேற்று திருவண்ணனாமலையில் ஒரு நண்பியின் திருமணம்... அதனால் காலையிலேயே மனைவியுடன் திருவண்ணாமலை பேருந்து ஏறி திருமணம் முடித்து சாத்தனுர் போய் இரவு சென்னை திரும்பினேன்...
த/நா 25 என் 0085 என்று நினைக்கின்றேன்.. புது பேருந்து.. இரவு 7,30 மணிவாக்கில் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பியது... செஞ்சி வருவதற்க்குள்... எல்லா கிராமத்து நிறுத்தங்களிலும் நின்று வந்தது...
நடத்துனரும் நன்றாகவே பணியாற்றினர்.... ஆனால் செஞ்சியில் ஏறும் போது தாம்பரத்தில் மட்டும் நிற்க்கும் என்றும் வண்டலூரில் நி்ற்க்காது என்று சொல்லி டிக்கெட் போட்டார்...மொத்தம் பத்து பேர்.... அதில் 45 வயதுக்கு மேல் இருக்கும் 4 தலைகாய்ந்த பெண்கள்..., அதே போல் இரண்டு குழந்தைகளுடன் நடுத்தர வயது தம்பதிகள் இரண்டு பேர்... அவர்கள் பெருங்களத்தூர் இறங்க வேண்டும்... எல்லோருக்கும் தாம்பரம் டிக்கெட் போட பட்டது.... எல்லோரும் அப்போது ஒத்துக்கொண்டார்கள்...
அதாவது பேருந்து நிறையவில்லை என்றால் வழி சீட்டை ஏற்றிச்செல்லவேண்டும்... கலெக்ஷனையும் குறையாமல் காட்ட வேண்டும்... என்பது போக்குவரத்து நிபந்தனை...நேற்று பிசியான முகூர்த நாள் இல்லாவிட்டாலும், சில இடங்களில் திருமணம்கள்... நடந்து கொண்டுதான் இருந்தன...
அதனால் சென்னை பேருந்துகள் புல்லாயின்... இதுவே முகூர்த்த நாள் இல்லாவிட்டாலும் தாம்பரத்தில் பேருந்து ஈ அடிக்கொண்டு இருக்கும் போது எஸ்ஆர் எம் கல்லூரி மாணவர்களை எல்லாம்ஏற்றிக்கொண்டு போய் ஒரு விரைவு பேருந்தை அங்கு நிறுத்தி எல்லோரையும் இறக்கி விட்டு செல்வார்கள்..
அதாவது பொதுவாக வண்டி காலியாக போக கூடாது... பயணியை ஏற்றுச்சென்று இறக்க வேண்டும்... அதே போல் எக்ஸ்பிரஸ் கட்டனத்தை வாங்கி கொண்டு அதே பயண நேரத்தைதான் எல்லா அரசு பேருந்துகளும் எடுத்துக்கொள்கின்றன...
பேருந்து செங்கல்பட்டை தாண்டும் போது மணி இரவு 11 மணி அந்த தலைகாய்ந்த கிராமத்து கும்பல் வண்டலூர் இறங்கி, கேளம்பாக்கம் அந்த இரவில் போய் சேர வேண்டும்.... அந்த பத்து பேரும் நடத்துனரிடம் பேருந்தை வண்டலூரில் நிறுத்துமாறு கெஞ்ச... அவர் ரூல்ஸ் பேசிக்கொண்டு இருக்க... அதுக்குதான் நான் அப்பவே ஏத்தமாட்டேன் என்று சொன்னேன்.... என்று லெக்சர் கொடுத்துக்கொண்டு இருந்தார்... அந்த தர்கத்தின்போது மாடு குறுக்கே வந்தால் ஒரு பிரேக் போட்டுதானே திருவோம்.. அது போல் ஒரு பிரேக் போட்டு இருந்தால் கூட அவர்கள் இறங்கி போய் இருக்கலாம்.... ஆனால் ஒரு அரை கிலோமீட்டர் வந்தும் கேட்காமல் போனதால்...பொறுமை இழந்த... இறங்க கெஞ்சிய இளவட்டத்தில் இருவர்...
“இப்ப ங்கோத்தா வண்டி நிக்கலை? உன் மூஞ்சி வெத்தலை பாக்கு போட்டுக்கும்.. என்று சொன்ன பிறகு வண்டி நிறுத்தபட்டது...
அதே போல் இரண்டு குழந்தைகளுடன் பெருங்களத்தூர் இறங்க அனுமதி கேட்ட கணவன் மனைவியையும் இங்க ஸ்டாப் கிடையாது என்று சொல்ல.. அப்புறம் பேருந்தில் இருப்பவர்கள்.. எல்லோரும் கத்த பேருந்து நிறுத்தபட்டு அவர்கள் இறக்கிவிடபட்டார்கள்..... ஒரு கண்டர்கடர் கடமையாக இதை செய்கின்றார் என்று என்னால் சொல்ல முடியவில்லை....
நன்றாக யோசித்து பாருங்கள்... அந்த தம்பதி தாம்பரத்தில் இறங்கி இரவு 11,30க்கு மேல் ஆட்டோ பிடித்த மீண்டும் பெருங்களத்துருக்கு அந்த தூங்கும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வர வேண்டும்...
கண்டக்டர் தரப்பு சொல்வது லேட்டா போனா என் ஆபிசர் கேள்வி கேட்பார்கள்... என்று.... சரி அப்ப எதுக்கு மாமன்டூர் பக்கத்துல முல்லை ஓட்டல்ல 20நிமிஷம் நின்னுச்சி????
இறங்கியவர்கள் யாரும் மதுராந்தகம் பைபாஸ், செங்கல்பட்டு பைபாசில் இறங்க அனுமதி கேட்கவில்லை...
நான் இன்னா சொல்லறேன் என்றால்? நீங்கள் கடமையை செய்யும் நடத்துனர் மற்றும் பேருந்து ஓட்டுனர் என்றால்.. கீழ் உள்ளவற்றை இது வரை செய்து இருக்கின்றீர்களா? இல்லையா? என்பதை உங்கள் நெஞ்சை தொட்டு அல்லது ,ஞ்சை தொட்டு யோசித்து சொல்லுங்கள்...
1...உன் ஆபிசர் யாராவது வண்டலூர், பெருங்களத்தூர்ல இறங்கனும்னு சொன்ன நீ ரூல்ஸ் பேசுவியா? பேருந்தை நிறுத்துவியா மாட்டியா?
2. உங்க கூட வேலை பார்க்கற கண்டெக்டர், டிரைவர் குடும்பம் வந்தா இப்படிதான் “லா” பேசுவிங்களா?
4 ஒரு போலிஸ் ஏட்டு, யுனிபார்மோடு ஏறனா... இப்படித்தான் தாம்பரத்துக்கு டிக்கெட் கொடுத்துட்டு கெஞ்சி கேட்டும் இறங்கி விடாம போவிங்களா?
5.சரியான நேரத்துக்கு போகலைன்னா எங்க ஆபிசர் கேள்வி கேட்பாங்க என்று சப்பை கட்டும் நீங்கள்... மாமன்டுர் பக்கத்துல கவர்மெண்ட் கட்டி வச்ச ஓட்டல்ல நிறத்தாம கொள்ளை அடிக்கும் முல்லை ஒட்டல்ல 20 நிமிஷம் வண்டிய நிறுத்தனது நியாயமா?...
6.சிவப்பு லிப்ஸ்ட்டிக் போட்டுகிட்டு, ஜீன்ஸ் டி ஷர்ட் போட்டு வரும் எஸ் ஆர் எம் கல்லூரி மாணவிகள் எக்ஸ்கியூஸ்மீ என்று ஆரம்பிப்பதற்க்குள் காட்கொளத்தூர் பஸ்ஸ்டாப்பி்ல் எப்படி நிறுத்துகின்றீர்கள்..
7,வழிசீட்டு எல்லாத்தையும் ஏத்தி காசையும் வாங்கிக்கினு... அந்த குடும்பம் இறங்க பிரேக் போடலைன்னா எப்படி...? அப்படி பிரேக் போடலைன்னா வரி சீட்டு எதையும் ஏத்தாம... பிளைட்டு ஒட்டறது போல ஒட்டிகிட்டு போங்க...
இது போல் எல்லா நடத்துனரையும் நாம் குற்றம் சொல்லவில்லை.. நல்ல நடத்துனர் ஓட்டுனர்கள் இருக்கின்றார்கள்...அந்த 10 கிராமத்து மனிதர்களை கண்டு கொள்ளாது அவர்களிடம் ரூல்ஸ் பேசி கடைசி வரை நிறுத்தாமல் அலைகழித்ததுதான் எனது கோபமே...
போக்குவரத்து கழகங்களும் இரவு நேரத்தில் பயணிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கவுன்சிலிங் செய்ய வேண்டும்...
நமது நாட்டில் சட்டபடி என்று எதுவும் நடக்காத போது,ரூல்ஸ் படி என்று பேசுவது நகைப்புக்கு உரிய விஷயமாக படுகின்றது... அதே போல் வெள்ளை தோளுடன் கொஞ்சம் ஆங்கிலத்தில் பேசி இருந்தால் அந்த இடத்தில் பேருந்து நின்று போய் இருக்கும்...
இந்த பிரச்சனை இங்கே மட்டும் அல்ல தமி்ழ் நாட்டின் பல இடங்களில் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது...
அதே போல் சென்னையின் அவுட்டர் முன்பெல்லாம் தாம்பரம்தான்.. இப்போது அது செங்கல்பட்டையும் தாண்டி போய்விட்டது....
பயணிகள் உங்கள் நண்பன் என்று எழுதி வைத்தால் போதாது... நடைமுறையில் இருக்க வேண்டும்....பேருந்தில் ஏறுபவர்கள் எல்லோரும் மாடுகள் அல்ல மனிதர்கள்... மனசாட்சி படி நடந்து இருந்தால் அந்த சண்டை, அந்த கூச்சல்,மனஸ்தாபம் எதுவும் நடந்து இருக்காது......
கண்டக்டர்கள் கடவுள்கள் அல்ல, பயணிகள் யாரும் பிச்சைகாரர்களும் அல்ல...
அன்புடன்
ஜாக்கிசேகர்
(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
//
ReplyDeleteபோக்குவரத்து கழகங்களும் இரவு நேரத்தில் பயணிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கவுன்சிலிங் செய்ய வேண்டும்.//
சரியாகச் சொன்னீர்கள்...
மிக நல்ல கருத்து...
ReplyDeleteஇது எல்லா இடத்துலையும் நடக்குதுங்க. கவர்ண்மெண்ட் பஸ் கண்டக்டர்ன்னா, அவங்களுக்கு என்னவோ கடவுள்ன்னு நெனப்பு.
ReplyDeleteபோன வாரம் கோயம்புத்தூர் போயிருந்தேன் நண்பரே. சிங்கநல்லூரிலிருந்து குமுளி புறப்பட்ட பேருந்தில் நான்கு பெண்கள் ஏறியிருந்தார்கள்.இரண்டு சீட்டில் உட்கார்ந்திருந்தார்கள். "ஆம்பளைக உக்கார்ற சீட்ல நீங்க ஏன்மா உக்காந்துருக்கீங்க ?" என்று சொல்லி அவர்களை வலுக்கட்டாயமாக இறக்கி விட்டார் அந்த நடத்துனர். இத்தனைக்கும் அவர்கள் பக்கத்துக்கு கிராமத்தில் இறங்க வேண்டியவர்கள் அல்ல. வத்தலக்குண்டு இறங்க வேண்டியவர்கள். அந்த நடத்துனருக்கு பைத்தியமோ என்று கூட தோன்றியது. இப்படியும் சில ரூல்ஸ் ராமானுஜங்கள்.
ReplyDeleteமிகவும் யோசிக்க வேண்டிய
ReplyDeleteவிஷயம்
இப்படியும் சில நடத்துனர்கள் இருக்கிறார்கள் .நல்லா நாக்க புடுங்குற மாதிரி கேட்டது அந்த நடத்துனர் பயலுக்கு தெரிஞ்சா நல்ல இருக்கும் .
இப்படிக்கு
முரளி ,ஆஸ்திரேலியா
அவசியமான பதிவு இது ஜாக்கி, பெரும்பாலும் பயண நேரங்களில் பயணிப்பவர்களிடையே ஒரு ஒற்றுமை உணர்வு இன்னம் நிறைய வேண்டும். "நமெக்கென்ன" என்று நம்மில் சிலர் கண்டும் காணாமல் இருப்பதால் தான் இதுபோன்ற கார்பரேஷன் காரங்க நம்மை பதம் பார்க்கிறாங்க.அந்தவகையில் ஜாக்கி ஒரு நல்ல மனிதர் தான் என்று எங்களுக்கு தெரியும்.
ReplyDelete+ குத்தியாச்சு.
ReplyDeleteசெம காட்டு தல
ReplyDeleteதிருவண்ணாமலை பேருந்து என்றாலே அராஜகம்தான். சென்னை செல்ல வேண்டுமென்றால் முதலிலேயே புக் செய்ய வேண்டும். வழியில் இறங்க வேண்டுமானாலும், சென்னை செல்வதற்கான கட்டணம் தரவேண்டுமென வற்புறுத்துது.
ReplyDeleteமிக சரியான கேள்விகள்தான், சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து நடந்து கொண்டால் சரி.
ReplyDeleteAnne super post...
ReplyDeletePoint no5 and point no 6 are very correct.
Naan kooda antha mulai hotelin kollai patri ezhuthalaam endru irunthen. neengale solli vitteergal.
ஜாக்கி - கோபம் புரிகின்றது. மனசாட்சி இல்லாமல் நடந்து கொண்ட நடத்துனருக்கு ஒரு கொட்டு.
ReplyDeleteஅன்பின் ஜாக்கி,
ReplyDeleteபெங்களுரில் அந்த பிரச்சினை இல்லையென்று நினைக்கிறேன்.
அத்திப்பள்ளியிலிருந்து பெங்களுர் பேருந்து நிலையம் வரை எல்லா இடத்திலும் நிறுத்துகிறார்கள்.
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
இது திருவண்ணாமலை பேருந்து என்றில்லை.
ReplyDeleteஎல்லா அரசு ஊழியர்களும் செய்யும் அராஜகத்தின் இன்னொரு முகம் அவ்வளாவு தான்.
ஒரு பத்தாம் வகுப்பு படித்த நடத்துனர் சர்வ சாதாரணமாக ஒரு டாக்டரேட்
படித்தவரை கை ஓங்கி அடிக்கலாம். அதே அவர் திருப்பி அடித்தால் பஸ் ஸ்ட்ரைக் என்று கும்மாளம் போடுவார்களா இல்லையா?
அரசாங்க ஊழியன் என்பவன் நமது வேலைக்காரன் என்பது தான் நிஜம்.
நமக்கு சேவை செய்வதை அவன் ஏதோ பிச்சை போடுவதை போல் செய்வது நிறைய இடங்களில் எனக்கு
வேதனை அளித்துள்ளது.
உழைப்பு என்று வந்த பிறகு ஒரு தனியார் அலுவலகத்தில் இப்படி காட்டுமிராண்டியை போல் நடந்துகொள்ள முடியுமா?
அப்போது தனியார் நிறுவனத்தில் உழைப்பவன் எல்லாம் மனிதன் இல்லையா?
இது போல் நிறைய அராஜகங்கள் பார்த்தாயிற்று.
இது போன்ற பதிவுகள் எனக்கு எழுத நிறைய இருக்கிறது. எழுத உட்கார்ந்தால் கெட்ட கெட்ட வார்த்தைகள்
தான் வந்து விழுகின்றன. அத்தனை மன வருத்தம். இவர்கள் தின்னும் உணவில் புழு நெழியும் போதாவது உணார்வார்களா?
உடனே நான் லஞ்சம் லாவண்யம் அரசியல் தலைவர்களின் ஊழல் என்றெல்லாம் பேசவில்லை.
அடித்தட்டு மக்களோடு தொடர்புபடும் ஒரு அரசாங்க ஊழியன் அவனது கடமையை சரியாக செய்யட்டும் என்பது தான்.
லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் ஒரு சாபக்கேடாக இருந்தாலும் வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்க வேலை செய்வதென்பது
ஒரு அப்பனுக்கு பிறந்தவர்கள் எல்லோரும் செய்யலாமே?
இங்கே ஜனநாயகம் என்றால் என்ன?
ReplyDeleteஜனங்கள் நாயகர்கள் என்றா?
இல்லை. ஜனங்களின் நாயகன் என்பதே.
அதாவது கூட்டம் சேர்த்தவன் தான் நாட்டை ஆள்வான்.
உதாரணமாக ஒரு பஸ் கண்டக்டர் உங்களை அடிக்கிறார்.
உடனே கோபத்தில் நீங்கள் திருப்பி தாக்குகிறீர்கள்.உடனே உங்களை கைது செய்யும் வரை போராட
அவர்களுக்கு ஒரு கூட்டம் இருக்கிறது.
இதே நீங்கள் வேறு ஒரு துறையில் வேலை பார்ப்பவராக கொஞ்சம் செல்வாக்கு உடையவராகவும் இருக்கும் பட்சத்தில்
உங்கள் பங்குக்கு கூட்டம் சேர்த்துக்கொள்ள முடியும். எந்த கூட்டம் வலிமை இருக்குமோ அது வெல்லும்.
இது தான் ஜனநாயகம்.
இதே நீங்கள் தனி ஆளாய் இருந்து பாருங்கள். கேஸ் போட்டு உள்ளே தள்ளிவிடுவார்கள்.
என்வே இங்கே சட்டம் நீதிமன்றம் எல்லாம் காரியம் முடிந் பிறகு துக்கம் விசாரிக்க வரும்.
மற்றபடி இந்தியாவை பொறுத்தவரை ஜனநாயகம் என்பது ஜனங்களின் நாயகன் என்பதே தவிர ஜனங்கள் நாயகர்கள் என்பது அல்ல.
இந்த பின்னூட்டத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.இதற்கு மேல் அரசாங்க ஊழியர்கள் எனும் ராஜாக்களை நினைத்தால் பேட் வோர்ட்ஸ் தான் வருது.
ReplyDelete//செஞ்சியில் ஏறும் போது தாம்பரத்தில் மட்டும் நிற்க்கும் என்றும் வண்டலூரில் நி்ற்க்காது என்று சொல்லி டிக்கெட் போட்டார்...மொத்தம் பத்து பேர்.... அதில் 45 வயதுக்கு மேல் இருக்கும் 4 தலைகாய்ந்த பெண்கள்..., அதே போல் இரண்டு குழந்தைகளுடன் நடுத்தர வயது தம்பதிகள் இரண்டு பேர்... அவர்கள் பெருங்களத்தூர் இறங்க வேண்டும்... எல்லோருக்கும் தாம்பரம் டிக்கெட் போட பட்டது.... எல்லோரும் அப்போது ஒத்துக்கொண்டார்கள்..//
ReplyDeleteமேற்கூறிய உண்மையினால், பயணிகள் பெ.களத்தூரில் நிறுத்தவும் இல்லையென்றால் வன்முறை எனச்சொன்னது, நடத்துனர்தான் பாவம் எனக்காட்டுகிறது.
இப்படிப்பட்ட பயணிகளுக்காக நாம் இரக்கப்படக்கூடாது.
ஆட்டோக்காரனிடம் பேசியது ஒரு ரேட்டு; அவன் இறக்கிவிடும்போது கேட்பது ஒரு ரேட்டு என்றால், அவன் செய்வது மிரட்டல். அதைத்தான் இப்பயணிகளும் செய்தனர்.
எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் என்று நினைக்கிறேன். இரவு 10 மணிக்குப் பிறகு எந்த ஒரு பெண்மணியும், எங்கு வேண்டுமானாலும் பேருந்தை நிறுத்துமாறு கேட்கலாம், அங்கு நிறுத்தம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று ஒரு அரசாணை போடப்பட்டது.
ReplyDeleteதகவல் அறியும் சட்டத்தின் கீழ் பத்து ரூபாய் கட்டணம் செலுத்தி, போக்குவரத்து செயலர் அலுவலகத்தில் அப்படி ஒரு அரசு உத்தரவு நிலுவையில் உள்ளதா என்று கேட்டு, பதிலை இங்கு வெளியிடலாமே!
ஜாக்கி,
ReplyDeleteஇதை ஒரு கடிதமாக (அனுப்புனர் உங்கள் பெயர் மற்றும் முகவரி, பெறுனர் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் / பொது மேலாளர்)அலுவலகத்திற்கு அனுப்பவும்
பேருந்து நடத்துனர்கள் அரசு ஊழியர்களா...... ????
ReplyDeleteஎந்த விதிமுறைக்கும் letter of law, spirit of law என்று இரு வடிவங்கள் உள்ளன
ReplyDelete--
விதிமுறைகள் என்பது மக்களின் நலனுக்குத்தான்.
விரைவு பேரூந்து என்றால் தாம்பரம் வரை பயணச்சீட்டு வாங்க சொல்வது சரி. வண்டலூர் என்று அவர் பயணச்சீட்டு தந்திருந்தால் அது துறை விதிப்படி தவறு. அதை நாம் கோர முடியாது. ... இங்கு யாரும் அதை கோர வில்லை....
அதே நேரம் வண்டலூரிலும் பெருங்களத்தூரிலும் 10 நொடிகள் நின்றால் ஒன்றும் குறைந்து போகாது. தொடர்வண்டி இருப்பு பாதை கதவு அடைத்திருந்தால் நிற்பதில்லையா ??
விதிமுறைகளை ஒழுங்காக படிக்காமல், தனது அதிகாரத்தை நிலை நிறுத்த இதை ஒரு வாய்ப்பாக பயன் படுத்த நினைப்பது தான் பிரச்சனைகளுக்கு காரணம்
JAR Fernando சார்
ReplyDelete//செஞ்சியில் ஏறும் போது தாம்பரத்தில் மட்டும் நிற்க்கும் என்றும் வண்டலூரில் நி்ற்க்காது என்று சொல்லி டிக்கெட் போட்டார்...மொத்தம் பத்து பேர்.... அதில் 45 வயதுக்கு மேல் இருக்கும் 4 தலைகாய்ந்த பெண்கள்..., அதே போல் இரண்டு குழந்தைகளுடன் நடுத்தர வயது தம்பதிகள் இரண்டு பேர்... அவர்கள் பெருங்களத்தூர் இறங்க வேண்டும்... எல்லோருக்கும் தாம்பரம் டிக்கெட் போட பட்டது.... எல்லோரும் அப்போது ஒத்துக்கொண்டார்கள்..//
மேற்கூறிய உண்மையினால், பயணிகள் பெ.களத்தூரில் நிறுத்தவும் இல்லையென்றால் வன்முறை எனச்சொன்னது, நடத்துனர்தான் பாவம் எனக்காட்டுகிறது.
இப்படிப்பட்ட பயணிகளுக்காக நாம் இரக்கப்படக்கூடாது.
ஆட்டோக்காரனிடம் பேசியது ஒரு ரேட்டு; அவன் இறக்கிவிடும்போது கேட்பது ஒரு ரேட்டு என்றால், அவன் செய்வது மிரட்டல். அதைத்தான் இப்பயணிகளும் செய்தனர்
//
உங்கள் கருத்து சரிதான்
அதே நேரம்
என் கருத்து என்னவென்றால், தாம்பரத்திற்கு பயணச்சீட்டு வாங்கி விட்டு அதற்கு முன்னர் இறக்கி விடுவது இ.பி.கோவில் தண்டனைக்குரிய குற்றமல்ல :) :) :)
பெருங்களத்தூர் பயணச்சீட்டில் தாம்பரம் வரை வருவது தான் தவறு
ஜாக்கி உங்க கேள்விகள் அனைத்தும் சரியானதே....
ReplyDeleteஆனா இவனுக திருந்தமாட்டானுக....
நியாயமான கோபம் தல... கேட்டிருக்கிற எல்லா கேள்விளையும் எந்த குறையும் இல்ல...
ReplyDeleteதிட்ட ஆரம்பிச்சா நண்பர் விசா சொன்னது மாதிரி... உலக கெட்டவார்த்தைகள் எல்லாம் சொல்லி திட்டலாம். :-)
//பேருந்து நடத்துனர்கள் அரசு ஊழியர்களா...... ????//
ReplyDeleteஇல்லையா?
//இது போன்ற பதிவுகள் எனக்கு எழுத நிறைய இருக்கிறது. எழுத உட்கார்ந்தால் கெட்ட கெட்ட வார்த்தைகள்
ReplyDeleteதான் வந்து விழுகின்றன. அத்தனை மன வருத்தம். இவர்கள் தின்னும் உணவில் புழு நெழியும் போதாவது உணார்வார்களா?//
எனக்கும் இதுதான் தோன்றியது. எங்கோ படித்திருக்கிறேன் ஜாக்கி, 10 பேர் ஒரு வாழை தாருடன் ஏறியபோது வாழை தாருக்கு லக்கேஜ் கராராக கேட்க, 10 பேரும் ஆளுக்கு ஒரு சீப்பாக பிய்த்து வைத்துக்கொண்டதும், வாயய்யும் அதையும் மூடிக்கொண்டு, கண்டக்டர் ஏதும் பேசாமல் போனாராம்..
இவங்க புத்திசலித்தனமும் ரூல்ஸும் இப்படித்தான். மக்களுக்கென்று எந்த இயக்கமும், குழுவும் இல்லை, அவர்கள் காலத்துக்கும் அடிமைகள்தான், ஏமாளிகள்தான், இதே கண்டக்டர் தன் குடும்பத்தோடு, தலை நரைத்த தாயோடு வந்திருந்தால் இதேபோல் நிற்காது ரூல்ஸ் பேசி இருந்தால் எல்லாருமே ரூல்ஸை மதிக்கலாம், இல்லை ரூல்சை கொஞ்சம் மிதிக்கலாம் தவறில்லை.
வன்முறைக்கு பயந்தவர் ரூல்ஸ் பேசி இருக்க வேண்டாமே? அடி வாங்கி போலீஸ் ஸ்டேஷன் போயிருக்கலாமே? ரூல்ஸ்காக எத்துனை மணி நேரமும் செலவிட தயாராகும் இவர்கள் மக்களுக்காய் சில நொடிகள் விட்டுக்கொடுக்க மறுப்பதுதான் வன்முறைக்கு தூண்டுகிறது. அனியாய காசு கொடுத்தால்தான் மூத்திரம் போக முடியும் சுகாதாரமற்ற ஓட்டலில் பஸ் நிறுத்தி மண்டை காய வைப்பது வன்முறையில்லையா?? அதன் தொடர்ச்சிதான் இது...
இது ஆரம்பம்தான் இனி மக்கள் ரியாக்ஷன் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்:-)
ரொம்ப நாளா என் மனச உறுத்திக்கிட்டு இருந்த விஷயம். நடுநிலையாளர்கள் எல்லார் மனதிலும் உள்ள நியாயமான ரௌத்ரத்தை காட்டியது இந்த பதிவு.
ReplyDeleteஅரசு ஊழியர்களின் ‘இரக்கமற்ற’ நடத்தைக்கு அவர்கள் முழுக்கமுழுக்க காரணமல்ல என்பதை ஜாக்கி சேகரின் பதிவை உன்னிப்பாகப்படித்தால் புரியும்.
ReplyDeleteஅவர்கள் மேலதிகாரிகளின் பலநெருக்கல்களுக்கு உள்ளாகிறார்கள். மேலதிகாரிகள் அவர்கள்பால் இரக்கம் காட்டுவதில்லை. அவர்கள் நினைத்தால் ஒரு ஊழியனின் வேலையையும் மனநிம்மதியையும் கெடுக்க முடியும்.
பொதுமக்களிடம் ஊழியர்கள் கடுமையாக நடந்துகொள்வது, அல்லது இரக்கமற்ற முறையில் நடந்துகொள்வது, எப்படி ஒரு போலீசுகாரன் மக்களிடம் நடந்துகொள்வானோ அப்படி.
Letter and spirit of the law. In a situation where applying the rule causes an inhuman act, spirit of the law should cancel out the rule on that spot.
ஆனால், திரு புருனோ அவர்களே, அதைச்செய்வதற்கு ஒரு கடைநிலை அரசு ஊழியனுக்கு தைரியம் வேண்டும்.
இங்கே பாருங்கள்: ஒரு போக்குவரத்து மேலதிகாரி அப்பேருந்து நிற்கக்கூடாத நிறுத்தமான பெ.க-ஊரின் நிற்பதைப்பார்த்தார் என வைத்துக்கொள்வோம். அவரிடம் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்ளமாட்டார். ஏன் ரூலை follow பண்ணவில்லை. உன் அப்பன் வீட்டுக்காரா என்று திட்டுவார்.
அம்மேலதிகாரி, ஒரு இரக்கசுபாவம் உள்ளவராக இருந்து சரிதான் பயணிகளுக்காக நிறுத்தினாய்’ என்று சொல்பவராக இருப்பார் என்று இருப்பார் என்று எப்படி ஊகிக்கமுடியும்?
அரசு ஊழியனின் முதல் கவலை: அவன் வேலை, அதன் பாதுகாப்பு, அவன் குடும்பம், குழந்தைகள்.
பின்னர்தான், பொதுமக்கள் மீது இரக்கம் - சட்டத்தை மீறும் இரக்கம். That is is a big demand, isnt?
//கண்டக்டர்கள் கடவுள்கள் அல்ல, பயணிகள் யாரும் பிச்சைகாரர்களும் அல்ல...//
ReplyDeletenethiadi..
idhumathiri aalunga thirundhina sari..
இங்கு நடத்துனர் மனசாட்சி படி நடக்கவில்லை என்பது அனைவரின் கருத்து...
ReplyDeleteஅதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது
--
//செஞ்சியில் ஏறும் போது தாம்பரத்தில் மட்டும் நிற்க்கும் என்றும் வண்டலூரில் நி்ற்க்காது என்று சொல்லி டிக்கெட் போட்டார்...மொத்தம் பத்து பேர்.... அதில் 45 வயதுக்கு மேல் இருக்கும் 4 தலைகாய்ந்த பெண்கள்..., அதே போல் இரண்டு குழந்தைகளுடன் நடுத்தர வயது தம்பதிகள் இரண்டு பேர்... அவர்கள் பெருங்களத்தூர் இறங்க வேண்டும்... எல்லோருக்கும் தாம்பரம் டிக்கெட் போட பட்டது.... எல்லோரும் அப்போது ஒத்துக்கொண்டார்கள்..//
ஆனால் முதலில் தாம்ப்ரம் என்று சம்மதித்து விட்டு அதன் பிறகு வன்முறையை காட்டி மிரட்டும் பயணிகள் மனசாட்சி படி நடந்தார்களா என்பது குறித்து உங்களின் கருத்து என்ன
இது குறித்து பதிவர் JAR Fernando மட்டும் தான் கருத்து தெரிவித்து உள்ளார்
மற்றவர்களின் கருத்தை தெரிந்து கொள்ள ஆவல்
//இது ஆரம்பம்தான் இனி மக்கள் ரியாக்ஷன் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்:-)//
இப்படி ஒவ்வொரு விதியையும் வன்முறையை வைத்து மீறுவது ஆரோக்கியமான சமூக மாற்றமா
மதுரையில் நாளை ஒருவர் சென்னை செல்லும் பேரூந்தில் ஏறி, உளூந்தூர்பேட்டை வந்த பின்னர் துப்பாக்கியை காட்டி கோவை செல்ல சொன்னால் அது குறித்து உங்களின் கருத்து என்ன
இங்கு நான்கு கேள்விகள் உள்ளன.
ReplyDeleteஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக பதிலளியுங்கள்.
கேள்வி 1 :
தாம்பரம் பயணச்சீட்டு வாங்கியவர்கள் வண்டலூரில் நிறுத்த கோரிய போது நடத்துனர் நிறுத்த மறுத்தது - சட்டப்படி சரியா ?? தவறா ??,
கேள்வி 2 :
தாம்பரம் பயணச்சீட்டு வாங்கியவர்கள் வண்டலூரில் நிறுத்த கோரிய போது நடத்துனர் நிறுத்த மறுத்தது - தார்மீக ரீதியாக சரியா ?? தவறா ??
கேள்வி 3 :
முதலில் தாம்பரத்திற்கு பயணச்சீட்டு வாங்கி விட்டு அதன்பிறகு வன்முறையை காட்டி மிரட்டி நடுவில் பேரூந்தை நிறுத்த சொல்வது - சட்டப்படி சரியா ?? தவறா ??
கேள்வி 4 :
முதலில் தாம்பரத்திற்கு பயணச்சீட்டு வாங்கி விட்டு அதன்பிறகு வன்முறையை காட்டி மிரட்டி நடுவில் பேரூந்தை நிறுத்த சொல்வது -
தார்மீகப்படி சரியா ?? தவறா ??
உங்கள் கருத்தை கூறுங்கள்
இதே தொடர்பான எனது இடுகை
ReplyDeletehttp://balajipakkam.blogspot.com/2009_11_01_archive.html
கரெக்ட்அண்ணே இந்த கண்டக்டர் ரூல்ஸ்
ReplyDeleteபடு பயங்கரம் ஆனது...
கரெக்ட்அண்ணே இந்த கண்டக்டர் ரூல்ஸ்
ReplyDeleteபடு பயங்கரம் ஆனது...
பதிலுரை இட்ட எல்லோருக்கும் என் நன்றிகள்...
ReplyDeleteமுதலில் என்ஸ்பிரஸ் என்ற போர்டு போட்டு ஓடும் எந்த பஸ்சும்... பாயிண்டு பாயிண்டு ஆக போவதில்லை... எல்லா நிறுத்தங்களில் நிறுத்தியே செல்லும்... அதுதான் போக்குவரத்து நிர்வாகத்தின் கட்டளை..
அதே போல் அந்த பேருந்து காலியாக இருந்து இருந்தால் வண்டலூர் மற்றும் பெருங்களத்தூரில் நின்று சென்று இருக்கும்....
வழி சீட்டு கேட்டு எறும் பயணி முதலில்ஒத்துக்கொண்டாலும்.. ஸ்டாப்பிங் வரும் போது கெஞ்சி இறங்குவதும்... அதை கண்டக்டர் பெரியமனது பண்ணி நிறுத்துவதும் காலம் காலமா நடைமுறையில் உள்ள விஷயம்...
ஒருவர் கேட்டால் ஓகே.. நீ ரூல்ஸ் பேசலாம்...ஆனால் பத்து பேர்...வண்டலூர்... அந்த தம்பதி ரெண்டு பேர்...பெருங்களத்தூர்... அங்கே பத்து வினாடி நின்று செல்வதில் எந்த குடியும் முழ்கி போய்விடாது...
கண்டக்டர் கெட்டவர் என்று பதிவில் சொல்லவில்லை...
அவ்வளவு ரூல்ஸ் பேசும் கண்டக்டர் எதற்க்கு செங்கல் பட்டு முல்லை ஓட்டலில் வண்டியை நிறுத்தினார்...
செங்கல் பட்டு முல்லை ஒட்டலில் நிறத்தி் செல்லவும் என்று ஜீஓ எதாவது பஸ் செய்து இருக்கின்றார்களா?...
ஒரு மனிதன் கெஞ்சும் போது கூட மனது கசியவில்லை என்றால் .. அவன் என்ன மனுசன்...
செங்கல் பட்டு பைபசில் வண்டியை நிறுத்த சொல்லவில்லை...சென்னை புறநகர் எரியா பெருங்களத்தூர்.... வண்டலூர்தான்...
கண்டக்டர் ஆதரவாக கருத்து சொல்லுவோர்... மனைவி இரண்டு தூங்கும் குழந்தைகளுடன் வந்தால் தெரியும்.....
நன்றி புருனோ பல நாட்களுக்கு பிறகு எனது தளத்தில் நீங்கள் நன்றி..
அன்புடன்
ஜாக்கி
//கண்டக்டர் கெட்டவர் என்று பதிவில் சொல்லவில்லை..//
ReplyDeleteஎன்னது ? உங்க தலைப்பை பார்த்து கண்டக்டர் கொலை ஏதும் பன்ணிட்டார் போல -ன்னு நினைச்சேன்.
இதே சம்பவத்தில் கண்டக்டர் நீங்க சொல்லுவது மாதிரி நடந்து கொண்டால் ,நீங்களே வந்து ..இந்த கண்டக்டர்கள் அநியாயம் தாங்க முடியல்ல ..நாம அவசரமா ஒரு ஊருக்கு போகணுமிண்ணு வந்து உக்காந்தா ,நிறுத்த அனுமதியில்லாத இடத்திலெல்லாம் நிறுத்தி நேரத்தை போக்குகிறார் .இடையிலே நிறுத்த தேவையில்லாத இடங்களிலெல்லாம் நிறுத்தி இறங்கியவர்கள் இவருக்கு தெரிந்தவர் போலிருக்கிறது ..அதுக்காக விதிகளை மதிக்காமல் மற்ற பயணிகளின் நேரத்தை எடுத்துக்கொள்ளுவது அநியாயம் என பதிவு போட்டிருக்க மாட்டீர்கள் என நிச்சயம் இல்லை ..எதுக்கு தான் குறை சொல்ல மாட்டீங்க ?
ReplyDeleteஜோ நீங்க எதுக்கு பதிவு தலைப்ப பார்த்துதும் அப்படி நினைக்ககனும்... தலையும் தெரியாம? வாலும் தெரியாம... என் அப்படி நினைக்கனும்... இனிமேல் அப்படி நினைக்காதி்ங்க என்ன???? பதிவை உன்றி படிச்சி பதில் சொல்லுங்க...
ReplyDeleteஅந்த பேருந்து செஞ்சி வரை எல்லா கிராமத்து பேருந்து நிறுத்தத்திலும் நின்று வந்ததுன்னு சொல்லி இருக்கேன் அதை கவனிக்கலையா---???
பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர்ல ஏன் நிக்கலைன்னுதான் கேள்வி... ???
“நிறுத்த அனுமதியில்லாத இடத்திலெல்லாம் நிறுத்தி நேரத்தை போக்குகிறார் .இடையிலே நிறுத்த தேவையில்லாத இடங்களிலெல்லாம் நிறுத்தி இறங்கியவர்கள் இவருக்கு தெரிந்தவர் போலிருக்கிறது ..அதுக்காக விதிகளை மதிக்காமல் மற்ற பயணிகளின் நேரத்தை எடுத்துக்கொள்ளுவது அநியாயம் என பதிவு போட்டிருக்க மாட்டீர்கள் என நிச்சயம் இல்லை ..எதுக்கு தான் குறை சொல்ல மாட்டீங்க ? “‘
நிச்சயமா அப்படி கேட்போம்... எப்ப தெரியுமா? பயண நேரம் 3,40 நிமிடம்னு போர்டு போட்டு உணவகம் நில்லா பேருந்து, புறவழிசாலைன்னு போர்டு போட்டு முன்னையெல்லாம் கடலூர்மற்றும் பாண்டிக்கு பஸ் விட்டாங்க... அப்ப கேட்டோம் ஏன் வழி சீட்டு எல்லாம் ஏத்தி் நிறத்தறிங்கன்னு???...
ஏன்னா 3,45 மணி நேரத்துல கடலூர் டூ சென்னை போய் பல வேலைகள் முடிக்கனும்னு கணக்கு போட்டு ஏறுவோம்... அந்த பஸ் எல்லா நாளிலும் புல் ஆகாத காரணத்தால அந்த திட்டம் கை விடபட்டது...
நீங்க ரொம்ப சின்ன பையன் போல இருக்கு....இப்படி எல்லாம் பதிவு போட்ட எனக்கு என்ன அவார்டா தரப்போறாங்க...
இங்க நான் பதில் சொல்லமா... 30 கமென்டுக்கு மேல இருக்கு... அத்தனை பேரும் எதாவது ஒரு விதத்துல பாதிக்கபட்டு இருக்காங்க...
அன்புடன்
ஜாக்கி...
ஜாக்கி,
ReplyDeleteஎன்னுடைய இரண்டாவது பின்னூட்டத்தை ஒன்று முழுவதாக வெளியிடுங்கள் .வெளியிடாமல் அதில் உள்ள ஒரு கௌதிக்கு பதில் மட்டும் சொல்லுவது சரியில்லை ..மனமில்லையென்றால் என்னுடைய முதல் பின்னூட்டத்தை அகற்றி விடவும்.
விசு அரட்டை அரங்கம் பாணியில் காசுக்கு பெறாத விஷயத்துக்கு ஒப்பாரி வைப்பதும் அதற்கு கிடைக்கும் கைதட்டலைப்பார் என கொக்கரிப்பதும் நல்ல வேடிக்கை.
50paisa 25paisa nu thirudurvanku buthi ipadi thaan irukum ivana mari ahalu ellam gov bus la adipatu sagaporan
ReplyDelete//இது ஆரம்பம்தான் இனி மக்கள் ரியாக்ஷன் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்:-)//
ReplyDeleteஇப்படி ஒவ்வொரு விதியையும் வன்முறையை வைத்து மீறுவது ஆரோக்கியமான சமூக மாற்றமா
மதுரையில் நாளை ஒருவர் சென்னை செல்லும் பேரூந்தில் ஏறி, உளூந்தூர்பேட்டை வந்த பின்னர் துப்பாக்கியை காட்டி கோவை செல்ல சொன்னால் அது குறித்து உங்களின் கருத்து என்ன//
நான் தான் பதில் சொல்ல வேண்டும் இல்லையா? நல்லது. ஏற்கனவே அரைவேக்காடு பட்டம் எனக்கு:) ஆனால் உங்களை சந்தித்து இருக்கிறேன் பேசியதில்லை என்றவகையில் (தவறிருப்பின் நேரில் சரி செய்து கொள்ளலாம் என்ற விருப்பத்தில்:) டாக்டர்.புருனோ நான் சொல்லவந்தது ரூல்ஸ் அதனை போடுபவர்களாலேயே மீறப்படுகிறது அதுவும் அதை பின்பற்ற வேண்டிய மக்கள் முன்னாலேயே அது மீறப்படும்போது, நியாயமான வன்மம், கோபம் இயலாத பொது மக்களுக்கு வரும், அவனுக்கு ஒரு ரூலு எனக்கு ஒண்ணா என்ற கோவம் எதையும் கேட்கும். விதிகள் எதற்காக என்பது போய் மீறுவதே மதிப்பு என்பதாகிவிடும். தொட்டதற்கெல்லாம் மறியல் என்பது காரியம் சாதிக்கத்தானே ( நல்லதோ, கெட்டதோ ) நான் சொல்ல வந்தது இப்படியே ரூல்ஸ் போடுவதும் அதை மீறுவதும் ஆனால் சாதாரண மக்கள் அதனால் துன்புறுவதும் எத்துனை நாள் மக்களால் பொறுக்க முடியும்?, இது எனது கருத்தானது நான் நிகழ்ச்சிகளில் கண்ட கோபங்களால் அதனால்தான் நினைக்கிறேன் என்றேன்.
ஆரோக்கியமான சமூக மாற்றமா என்பது என்னை கேட்டால் இல்லைதான். இரண்டாவதும் கவலை தரக்கூடியதே, ஆனால் மக்களா இதற்கு பொறுப்பு? நடு வழியில் வலி வரும் தாய்க்காக, மனிதர்களுக்காக விமானங்களே தரை இறங்குவதில்லையா? ரூல்ஸ் படித்தான் என்றால் எல்லாமே அதன் படி நடக்கும்போது நானும், மக்களும் அதன்படியேதானே நடக்கமுடியும். அதனை போடுபவர்களுக்கு ஏன் விதிவிலக்கு?. என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள்
பிரதிநிதி நான் தினம் வயிற்று பிழைப்புக்காய் செல்லும் வழியில் மந்திரியாகி, காவலர் புடை சூழ துப்பாக்கியுடன் இந்த பக்கம் போக முடியாது வேறு வழியா போ என்பதும் நடக்கத்தானே செய்கிறது. அப்போது அதே வண்டி வேறு திசைக்கு திருப்பி விடப்பட்டதில்லையா??
அப்போ ரூல்ஸ் எல்லாம் எங்கே போகிறது? துப்பாக்கி மட்டும்தானே இடம் மாறி இருக்கிறது.
எதற்காய் சொன்னேன் என்பதற்கான விளக்கம். சமூகம் தந்த சிந்தனை தவறென்றால் சொல்லுங்கள்.
"மொத்தம் பத்து பேர்.... அதில் 45 வயதுக்கு மேல் இருக்கும் 4 தலைகாய்ந்த பெண்கள்..., அதே போல் இரண்டு குழந்தைகளுடன் நடுத்தர வயது தம்பதிகள் இரண்டு பேர்... அவர்கள் பெருங்களத்தூர் இறங்க வேண்டும்... எல்லோருக்கும் தாம்பரம் டிக்கெட் போட பட்டது.... எல்லோரும் அப்போது ஒத்துக்கொண்டார்கள்."
ReplyDeleteஇது போல பல இலட்சம் தலைகாய்ந்த மக்களின் வரி பணத்தில் தான் இந்த அரசு இயங்குவதும் அந்த போக்குவரத்துகழகமும் அதன் ஊழியர்களின் சம்பளங்கள் இவர்கள் போடும் பிச்சை என்பதை மறந்துவிடுகின்றனர்.
"இதை ஒரு கடிதமாக (அனுப்புனர் உங்கள் பெயர் மற்றும் முகவரி, பெறுனர் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் / பொது மேலாளர்)அலுவலகத்திற்கு அனுப்பவும்"
Or sent E-mail below address
http://www.tn.gov.in/departments/transport.html
http://www.tn.gov.in/citizen/trans-e-2005.htm#q03
சாமி பூனைக்கு மணி கட்டிட ரொம்ப கரெக்ட் . இது ஊர் உலகம் அறிந்த ரகசியம் ஆனா யாரும் ஸ்டெப் எடுக்க மாட்டங்க என்னா அது ரகசியம். எனக்கு jeyalalithaava பிடிக்காது ஆனா அவுங்க எடுத்த அரசு ஊழியர்கள் மீதான action ரொம்ப கரெக்ட். மக்களுக்கு சர்வீ ஸ் பண்றதுதான் அவுங்க வேலைன்னு யாராவது சொல்லிகுடுகனும் (ஸ்ட்ராங்கா ) அவுங்களுக்கு.
ReplyDeleteசெம காட்டு அண்ணாத்தே !! நம்ப நாட்ல நாயமா கேட்டா எதுவும் கெடைக்காது இன்னு அந்த புள்ளைங்களுக்கு லேட்டா தான் தெரிஞ்சிக் கீது !! வெத்தல பாக்கு வோணுமா இன்னா தான் , பஸ்சு இன்னா அவன் பேக கேட்டாலும் குட்துடுவான் !!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவிசு அரட்டை அரங்கம் பாணியில் காசுக்கு பெறாத விஷயத்துக்கு ஒப்பாரி வைப்பதும் அதற்கு கிடைக்கும் கைதட்டலைப்பார் என கொக்கரிப்பதும் நல்ல வேடிக்கை.//
ReplyDeleteநண்பர் ஜோவுக்கு ,
உங்களின் பின்னுட்டம் வேண்டும் என்றே பப்ளிஷ் செய்யாமல் இல்லை... எனக்கு இருந்த வேலை பளுவில் அதை பப்ளிஷ் செய்ய மறந்து விட்டேன்...
ஒரு நல்ல வீடு வாங்க அலைந்து கொண்டு இருப்பதால் சில இடங்களில் ஏற்பட்ட பணபிரச்சனையால் மறந்துவிட்டேன்...
உங்கள் இமெயிலில் கிழேயே ஒரு பதிலை போட்டு உங்களுக்கு சென்ட் பண்ணிவிட்டு, அதை என்னுடைய பின்னுட்டத்தில் காப்பி பேஸ்ட் பண்ணிவிட்டேன்...
விசுவின் அரட்டை அரங்கத்தோடு ஒப்பிட்டமைக்கு என் நன்றிகள்..
இனி காசு பெரும் விஷயத்துக்கு மட்டும் நீங்கள் ஒப்பாரி வைப்பீர்கள் என்று நம்புகின்றேன்...
உங்கள் பாணியில் நான் கொக்கரிக்கின்றேன்.. என்று சொல்கின்றீர்கள்....இத்தனை பேர் பாதிக்கபட்டவர்கள் இருக்கின்றார்கள் என்று சொல்ல ஒரு உதாரணத்தக்கு சொன்ன விஷயம் அது ...
இதில் கொக்கரி்ப்பு எங்கே வந்தது என்று தெரியவில்லை...
நன்று இனி உங்கள் பின்னுட்டத்துக்கு என் பதில் வராது...
அன்புடன்
ஜாக்கி...
கண்.....டக்......டர். பணணோணும் அப்பவங்கோட புத்தி வராது.கண்.....டக்......டர். பணணோணும் அப்பவங்கோட புத்தி வராது.
ReplyDeleteநம்ம ஊர்ல ஓடுற பஸ்களுக்கும் இவ்வளவு ரூல்ஸ் தேவையில்லைதான்..
ReplyDelete//கண்டக்டர்கள் கடவுள்கள் அல்ல, பயணிகள் யாரும் பிச்சைகாரர்களும் அல்ல...//
ReplyDeleteரிப்பீட்ட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்.....
நான் கேட்ட நான்கு கேள்விகளுக்கும் யாரும் பதில் அளிக்க வில்லையே !!!
ReplyDeleteசட்டம் என்பது தார்மீகத்தை நிலை நாட்டவா? தார்மீகத்தை வேறறுக்கவா என்பது எனக்கு புரியாததால் நான் அதற்கு பதிலலிக்கவில்லை டாக்டர்.
ReplyDeleteமேலும் விவாதம் செய்யும் அளவுக்கு நான் மெத்த புரிந்தவனல்ல, இது புரிந்து கொள்வதற்காகவே. மிக்க நன்றி.:)
-----
ஜாக்கி, மன்னிக்கவும்.
//சட்டம் என்பது தார்மீகத்தை நிலை நாட்டவா? தார்மீகத்தை வேறறுக்கவா என்பது எனக்கு புரியாததால் நான் அதற்கு பதிலலிக்கவில்லை டாக்டர். //
ReplyDeleteஇந்த குறைந்த பட்ச புரிதல் உங்களுக்கு இல்லை என்பது உங்களது முந்தைய மறுமொழிகளிலேயே தெரிந்தது :) :)
புரிதல் இல்லாமலேயே நீங்க உங்கள் கருத்துக்களை தெரிவித்தீர்கள் என்பதும் புரிந்தது !!
//மேலும் விவாதம் செய்யும் அளவுக்கு நான் மெத்த புரிந்தவனல்ல, இது புரிந்து கொள்வதற்காகவே. மிக்க நன்றி.:) //
உங்களை பற்றி உங்களுக்கே தெரிந்து கொள்ள என் கேள்விகள் உதவியுள்ளன என்று தெரிந்து மிக்க மகிழ்ச்சி :) :)
இனி வரும் காலங்களிலாவது இந்த புரிதலுடன் பதிலளித்து விவாதிப்பீர்கள் என்று நம்புகிறேன் :) :) :)
மிக்க நன்றி
----
வேறு யாரும் அந்த நான்கு கேள்விகளுக்கு விடையளிக்க வில்லையே
நான்கு கேள்விகள் உள்ளன.
ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக பதிலளியுங்கள்.
கேள்வி 1 :
தாம்பரம் பயணச்சீட்டு வாங்கியவர்கள் வண்டலூரில் நிறுத்த கோரிய போது நடத்துனர் நிறுத்த மறுத்தது - சட்டப்படி சரியா ?? தவறா ??,
கேள்வி 2 :
தாம்பரம் பயணச்சீட்டு வாங்கியவர்கள் வண்டலூரில் நிறுத்த கோரிய போது நடத்துனர் நிறுத்த மறுத்தது - தார்மீக ரீதியாக சரியா ?? தவறா ??
கேள்வி 3 :
முதலில் தாம்பரத்திற்கு பயணச்சீட்டு வாங்கி விட்டு அதன்பிறகு வன்முறையை காட்டி மிரட்டி நடுவில் பேரூந்தை நிறுத்த சொல்வது - சட்டப்படி சரியா ?? தவறா ??
கேள்வி 4 :
முதலில் தாம்பரத்திற்கு பயணச்சீட்டு வாங்கி விட்டு அதன்பிறகு வன்முறையை காட்டி மிரட்டி நடுவில் பேரூந்தை நிறுத்த சொல்வது -
தார்மீகப்படி சரியா ?? தவறா ??
உங்கள் கருத்தை கூறுங்கள்
--
இது வரை தார்மீகம், சட்டம், நடுநிலைமை, ஒரு பக்க சார்பு, நியாயம், அநியாயம், வன்முறை, ரவுடியிசம் போன்றவற்றை பற்றி புரிதல் இல்லாதவர்களுக்கு கூட இந்த நான்கு கேள்விகளுக்கு விடை அளித்தால் புரிதல் ஏற்படலாம் :) :)
நன்றி டாக்டர்.
ReplyDeleteயாரும் முன் வரவில்லை எனில் நீங்கள் புரியவைக்க பதிலளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.:)
அதெல்லாம் சரிதான்...! அதென்ன நெஞ்சைத்தொட்டு அல்லது ‘ஞ்சை’ தொட்டு.. இது கொ‘ஞ்சம்’ ஓவரா தெரியலயா?
ReplyDelete