(Jeepers Creepers) பழைய எரி்ந்த சர்ச்சும், 600 கொலைகளும்....

திகில் படங்கள் எனக்கு பொதுவாய் பிடிப்பதில்லை... ஒரு காலத்தில் அது தான் ஆங்கில படம் என்று நினைத்துக்கொண்ட இருந்த காலங்கள் அது... மென்மையான கதைகள் பார்க்காத அல்லது புரியாத காரணத்தால் இது போலான திகில் படங்களை பார்த்து தொலைத்தது வேற விஷயம்...
ஆனால் இதற்க்கான ரசிகர் வட்டம் எப்போதும் உண்டு....இன்னும் இது போல் படங்களை புல் போதையில் ரசித்து மகி்ழும் software நண்பர்கள் வட்டத்தையும் நான் அறிந்து இருக்கின்றேன்...சில நேரங்களில் சில நண்பர்களிடம் இருந்து சில அழைப்புகளை கேட்டு இருக்கின்றேன்...
jackie tell me any good horror movie... அது போலான நேரங்களில் நிறைய படங்கள் சொல்லி இருக்கின்றேன்.. இருப்பினும் அந்த படங்களை எழுதியது இல்லை.... சரி இனி அது போலான படங்களையும் எழுதுவோம்...Jeepers Creepers படத்தின் கதை இதுதான்...

Trish (Gina Philips) மற்றும் அவள் தம்பி...Darry Jenner ( Justin Long) இருவரும் கல்லூரியில் இருந்து நார்த் பிளோரிடாவில் இருக்கும் வீட்டுக்கு பழைய இம்பாலா காரில் பயணிக்கின்றார்கள்...ஒரு இடத்தை கடக்கும் போது ஒரு பழைய சர்ச் அருகில் ஒரு ஓல்டு டிரக்கில் இருந்து ஒருவன் ஒரு பெரிய பைப்பில் நிறைய பிணங்களை போட்டுக்கொண்டு இருப்பதை இருவரும் பார்க்கின்றனர்.. அது என்ன வென்று பார்க்கும் ஆவலில்அந்த சர்ச்சிக்கு அடியில் இருக்கும் பாதாள அறையில் சென்று பார்க்கும் போது பல பினங்களை பார்க்கின்றான்...600க்கு மேற்பட்ட கொலைகள்... அவர்கள் உடம்பில் இருக்கும் உறுப்புகளை எடுத்து தையல் போட்டு வைக்கபட்டுள்ளது.... அதற்க்க காரணம்... அந்த டிரக் ஓட்டும் மனிதன் ஒரு பறக்கும் உயிரினம்....அந்த உயிரிணம் 23 வருடங்களுக்கு ஒரு முறை வந்து பயந்தவர்களை சாகடித்து அவர்கள் உடம்பில் உள்ள உறுப்புகளை எடுத்து தன்னை உயிர்பித்து கொள்ளுமாம்... அந்த மனிதனை போன்று இருக்கும் விகாரமான அந்த பறக்கும் உயிரினம் ....டேரியின் மீது கண் வைக்கின்றது அவன் பிழைத்தானா...? அவள் அக்கா டிரிஷ் என்ன செய்து கொண்டு இருந்தாள்... அதற்க்கு தீர்வு என்ன? வழக்கம் போல் வெண்திரையில் பார்க்கவும்..

படத்தின் சுவாரஸ்யங்களில் சில......

ஸ்பீல்பெர்க் இயக்கிய டுயல் படத்தை போலவே கார் மற்றும் டிரக் சேசிங் இந்த படத்தில் உண்டு அது பயத்தையும் உண்டாக்கும்....

அந்த country side road shots photography super

வேறு என்ன சொல்ல படத்தை பார்த்து ரசியுங்கள்..

எல்லா திகில் படங்களிலும் சுமையை தாங்கும் திடுக்கிடும் சவுண்டு இந்த படத்திலும் பெரும் உதவி செய்து இருக்கின்றது...

இதன் பிறகு இந்த படத்தின் இன்னும் இரண்டு பாகங்கள் வந்து விட்டன.. இது முதல் பாகம்...

படத்தின் டிரைலர்....



படக்குழுவினர் விபரம்...

Directed by Victor Salva
Produced by Francis Ford Coppola
Tom Luse
Barry Opper
Written by Victor Salva
Starring Gina Philips
Justin Long
Jonathan Breck
Patricia Belcher
Brandon Smith
and Eileen Brennan
Music by Bennett Salvay
Cinematography Don E. FauntLeRoy
Editing by Ed Marx
Studio American Zoetrope
Distributed by United Artists
Release date(s) August 31, 2001
Running time 91 mins
Country United States of America
Language English
Budget $2,109,568
Gross revenue $59,217,789

அன்புடன்
ஜாக்கிசேகர்

(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே கண் விழித்து டைப்பும் என்னை உற்சாகபடுத்தும்)

குறிப்பு...

நடுவில் ஆங்கில சொல்லாடல்கள் என் ஆங்கில புலமையை வளர்த்துக்கொள்ள என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கின்றேன்...
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா....

6 comments:

  1. அண்ணே நல்லாருக்கும் இந்தப்படம். நல்ல டைம்பாஸீங்.

    இதை விட இதோட ரெண்டாம் பாகம் இன்னும் நல்லாருக்கும்...நல்ல காமிக் ஹாரர் மூவி.
    நகைச்சுவையோடு இருக்கும்...

    ReplyDelete
  2. விமர்சனம் அருமை பாஸ். பார்க்க தூண்டுது.

    ReplyDelete
  3. மீண்டும் ஒரு பின்னூட்டம் டெக்‌ஷங்கரிடமிருந்து...

    ReplyDelete
  4. நானும் இந்த படத்தை மிகவும் இரசித்து திகிலாகத்தான் பார்த்தேன். நல்ல படம் பரிந்துரைத்திருக்கிறீர்கள்.

    -
    DREAMER

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner