நாணயம் தமிழில் ஒரு ஸ்டைலிஷ் ஆன மூவி..

பெரிய நடிகர் பட்டாளம் இல்லை ஆனால் படம் எடுத்த விதத்தில் ஒரு வெறி இருப்பதை உணர முடிகின்றது...உலகம் எங்குத் 28 கருக்கனை வைத்தே படங்களை கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்... அதில்தான் எல்லா கதைகளும் அடங்கி விடுகின்றன...

உதாரணத்துக்கு காதல் என்று ஒரு படம் வந்தது இதுவரை நாம் பார்க்காத காதல் கதையா? அது.... இல்லை அது பார்த்து பார்தது சலித்து போன கதைதான்... ஆனால் அதை கொடுத்த விதத்தில்தான், வித்தியாசபட்டு இருக்கின்றார்.. பாலாஜி சக்தி வேல்.. அது போல்தான் நாணயம் படமும்....

நாணயம் படத்தின் கதை என்ன???

டிரஸ்ட் பேங்கின் சீஇஓஎஸ்பி பாலசுப்ரமணியம்.... உலகில் கொள்ளையே அடிக்க முடியாத பேங்காக தனது டிரஸ்ட் பேங்கை வடிவமைக்கின்றார்....
அந்த டெக்னிக்கல் லாக்கரை வடிவமைப்பவன் பிரசன்னா... ஏற்கனவே பாலசுப்ரமணியத்தால் அவரது பேங்கில் வேலை செஙய்யும் போது பழி வாங்க படட்வன் சிபிராஜ்.... சிபிராஜ் லாக்கர் வடிவமைத்த பிரசன்னாவை வைத்தே அந்த பேங்கை கொள்ளை அடிப்பதற்க்கு திட்டம் போடுகின்றான் அது வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே பல டுவிஸ்ட்டுகளுடன் மீதி கதை...


படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

ஒரு லோபட்ஜெட்டில் இவ்வளவு ஸ்டைலிஷ் ஆக ஒரு படத்தை எடுக்க முடியுமா? என்ற கேள்விக்கு முடியும் என்று நிறுபித்து இருக்கின்றார்கள்...நாணயம் படகுழுவினர்..

படத்தின் மிக பெரிய பலமாக நான் சொல்வது கேமராமேன் ஓம்பிரகாஷ்... சான்சே இல்லை..

ஒவ்வொரு பிரேமும் அற்புதமாக வைத்து இருக்கின்றார்கள்... மிக முக்கியமாக சிபி மற்றும் பிரசன்னா மீ்ட்டிங் பாயிண்டில் இருக்கும் லோ ஆங்கில் பிரேம்கள் அற்புதம்...மிக முக்கியமாக சின்ன பட்ஜெட்டில் ஒரு ஆங்கில படம் பார்ப்பது போன்ற ஒரு உணர்வையும் அதற்காக லோகஷன் ஸ்லெக்ட் செய்த பட குழுவையும் பாராட்ட வேண்டும்..

40, கோடி 50 கோடி செலவு செய்து என்ன சொல்ல போகின்றோம் என்று தானும் குழம்பி மற்றவரையும் குழப்பாமல் ரொம்ப நீட்டாக கதை சொல்லி இருக்கின்றார்கள்...த பேங் ஜாப் படத்தின் மைய கருவை எடுத்து படம் பண்ணி இருந்தாலும், தமிழில் சொதப்பாமல் எடுத்து இருக்கின்றார்கள்...

படத்தின் காமெடி டிராக் ஏதும் இல்லாமல் சுவாரஸ்யமாக கொண்டு போவது பெரிய விஷயம்..அதே போல் பல காட்சிகளில் சிபி வெளுத்து வாங்குகின்றார்.....இந்த படத்தில் சிபியை எனக்கு ரொம்பவே பிடித்து போய் விட்டது....

அதே போல் பேங்க் இண்டிரியர் காட்சிகளின் ரிச்நெஸ் சான்சே இல்லை...

இயக்குனர் சக்தி எஸ்ராஜன்...தேவையில்லாமல் காட்சிகளில் சஜஷன் ஷாட் எல்லாம் வைக்காமல், தேவையான கதாபாத்திரத்துக்கு மட்டும் குளோஸ் அப் வைத்து விட்டு அடுத்த காட்சிக்கு போய் இருப்பதற்க்கு பாராட்டுகள்... அதனால் நேரம் மிச்சபடும்..

பிரசன்னா இந்த படத்திலும் ஜமாய்த்து இருக்கின்றார்....

சரண் கௌதம் மேனேன் போல ஒரு அடியாளுக்கு டப்பிங் பேசி இருக்கின்றார்..

பிரசன்னாவும் ரம்யாவும் ஆடும் முதல்சாங்கின் லொக்கேஷன் எங்கே என்ற தெரியவில்லை ஆனால் கண்ணில் ஒத்திக்கொள்ளும் படியாக இருக்கின்றது..

ஒரு ரெண்டு பாட்டு இந்த படத்துக்கு ஹிட்டு கிடைத்து இருந்தால் இந்த படத்தின் ஓப்பனிங் வேறு மாதிரி இருந்து இருக்கும்.. தமி்ழ் சினிமா எதையெல்லாம் நம்பி தொலைக்க வேண்டி இருக்கின்றது....

கதாநாயகியாக நடித்த ரம்யா பக்கத்து பிளாட் பெண்ணை போல் இருக்கின்றார்... தமிழ் சினிமாவுக்கான இலக்கனம் அவர் உடம்பில் இல்லை... இருந்தாலும் பல காட்சிகளில் கல்லூரி பெண்ணை போல் சோபிக்கின்றார்.... இருப்பினும் ஒரு காட்சியில் துணிந்து நீச்சல் குளத்தில்இருந்து ஸ்வீம் சூட்டில் எழுந்து நடந்து வருகின்றார்...

என்னதான் லோ பட்ஜெட்டாக இருந்தாலும்.. நுங்கம்பாக்கம் என்று காட்டி விட்டு பாண்டிச்சேரி இந்திரா காந்தி சிலை அருகில் துரத்தல் காட்சிகளை எடுத்து இருப்பது டூமச்...

இந்த படத்தின் வெற்றி இன்னும் இது போல பல புதிய இயக்குனர்களுக்கு வழி வகுக்கும் அதனால் இந்த படத்தை தியேட்டரில் ரசியுங்கள்...


படத்தின் ஆர்ட் டைரக்டருக்கு ஒரு பெரிய பாராட்டுகள்... படம் முழுவதும் உரழப்பு தெரிகின்றது...நிறைய இடங்களில் காம்பரமைஸ் செய்து கொள்ளவில்லை என்பது படம் பார்க்கும் போது தெரிகின்றது...

இவர்களை எல்லாம் கட்டி மேய்த்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும்... பாராட்டுகள்

படத்தின் டிரைலர்...

தியேட்டர் டிஸ்க்கி....

முதன் முதலாக சென்னை சாந்தி தியேட்டரில் சாய் சாந்நி என்ற மினி தியேட்டரில் நேற்றுதான் படம் பார்த்தேன்...

இதற்க்கு முன் சாந்தி தியேட்டரில் இந்தி சுவதேஷ் தமிழ் பதிப்பு பார்த்ததுதான் கடைசி....ஒரே காரணம் டக்கெட் கட்டணம்தான்... முன்பு போல் தியேட்டர் போய் புது படம் பார்க்காமல் இருப்பதற்க்கு....

அதே நாணய்ம் படம் ரூபாய் 30க்கு திருட்டு விசிடி கிடைக்கின்றது... எனக்கு தியேட்டரில் பார்பபது ரொம்ப பி்டிக்கும் என்பதால்....

செகன்ட் கிளாஸ் 60 ரூபாய் டிக்கெட் இருக்கின்றாதா? என்ற ஒரு ரசிகர் கேட்க? 80 ரூபாய் டிக்கெட் மட்டும் கொடுக்க சொல்லி இருப்பதாகவும் 60டிக்கெட்டே இல்லை என்று சொல்ல... அப்ப காசை கொடுங்க என்ற வாங்கி சென்றுவிட்டார்...சிபி பிரசன்னாவுக்கு 60க்கு மேல செலவு செய்ய இஷ்டம் இல்லையோ? அல்லது குடும்ப வறுமையோ யார் கன்டா??

இப்படியே தியேட்டர் டிக்கெட் கட்டணம் அதிகமாயிகிகினு போயிகினே இருந்தா...திருட்டு விசிடியை ஒழிக்கவே முடியாது... எந்த படமும் ஓடாது...

முதலில் பத்து பேருடன் இருந்த திரை அரங்கு படம் ஓடும் போது 100 பேரை உள்ளே விட்டு்க்கொண்டது...

படம் ஆரம்பிக்கும் முன் ஒரு நான்கு ஜோடி சுவர் ஒர சீட்டுக்கு அலைந்து கொண்டு இருந்தது...

எனக்கு முன் புறம் உட்கார்ந்து இருந்த காதல் ஜோடி படம் ஆரம்பிக்கும் முன்னே அந்த பெண் அவனுக்கு முத்த மழை பொழிந்து கொண்டு இருந்தால்.....

படக்குழுவினர் விபரம்...

Movie : Nanayam
Director : Sakthi S Rajan
Music : James Vasanthan
Cast : Prasanna, Sibiraj, Ramya
camera/ omprakash
producer- charan

அன்புடன்
ஜாக்கிசேகர்

(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே கண் விழித்து டைப்பும் என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

29 comments:

 1. நல்ல படம். நல்ல விமர்சனம்.

  ReplyDelete
 2. //பல காட்டாறுகளை கடந்து, பல அவமானங்களை புறம் தள்ளி, இன்னும் வாளெடுத்து நாலபுறமும் சுழற்றி, வாழ்க்கை எனும் போர்களத்தில் தடைகளை தகர்த்து, முன்னேறி கொண்டு இருப்பவன்//

  தல , இதப் படிக்கும் போதே உங்க பீல்ட்டோட கஷ்டம் புரியுது , நீங்க சாதித்து கட்டிய பிறகு இந்த கஷ்டம் தெரியாது தல !! இப்பவே வாழ்த்துக்கள், சொல்லிக்கறேன் .

  ReplyDelete
 3. என்னை கவர்ந்த மிக நல்ல படம் , ஆனா பாருங்க தரமான டிஜிட்டல் சவுண்டில் மிக நேர்த்தியான ஒரிஜினல் DVD ஐ விட நல்ல பிரிண்ட் நெட்டில் வந்து விட்டது ,
  ( தமிழ் தண்டர் .காம் )

  என்ன செய்வது , அதைத் தான் பார்த்தேன் , இங்கு பக்கத்தில் எந்த தியேட்டரிலும் அந்தப் படம் போடவில்லை . ஆனால் கண்டிப்பாக இதை தியேட்டரில் பார்க்க வேண்டும் , என முடிவு செய்து விட்டேன் .

  ReplyDelete
 4. நல்ல விமர்சனம்.படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது உங்களுடைய விமர்சனம்!

  ReplyDelete
 5. அந்த பாலோயரை எப்படி டெலிட் பண்ண?

  ReplyDelete
 6. //ஒரு ரெண்டு பாட்டு இந்த படத்துக்கு ஹிட்டு கிடைத்து இருந்தால் இந்த படத்தின் ஓப்பனிங் வேறு மாதிரி இருந்து இருக்கும்.. தமி்ழ் சினிமா எதையெல்லாம் நம்பி தொலைக்க வேண்டி இருக்கின்றது....// உண்மைதான் தல இந்த நிலைமையை யார், எப்படி மாற்ற போகிறார்களோ?

  ReplyDelete
 7. படம் ஒ.கே. பிரசன்னா, சிபி நடிப்பு நல்லாயிருந்தது.


  திருட்டு விசிடிக்கு எதிராக கொதித்து எழும் திரைப்படதுறையினர் மல்டி பிள்க்ஸ் என்ற பெயரில் சென்னை தியேட்டர்களில் நடக்கும் அடாவடி ரேட்டுகளையும் அநியாய கொள்ளைகளையும் பற்றி ”மூச்” விட மாட்டார்கள். வெளியிலிருந்து குடி நீர் கூட கொண்டு வரக்கூடாது என்றெல்லாம் சில தியேட்டர்களில் சொல்றாங்க.

  சென்னை பிரபல தியேட்டர்களில் பாப்கார்ன் 50 ரூபா. கோக் 40 ரூபா. டூவீலர் பார்க்கிங் ரூ 20

  லோ கிளாஸ் & “மிடில் கிளாஸ் மாதவன்” எல்லாம் என்ன செய்ய முடியும்..?

  ஊரெங்கும் இலவச தொலைகாட்சி. டில்லி டிவிடி பிளேயார் Rs: 999/- விசிடி ரூ: 15/- மட்டுமே. எதை எப்படி தடுக்க முடியும்..?? இதெல்லாம் “மாமுலா” நடக்குதுன்னு யாருக்கு தெரியாது.

  ReplyDelete
 8. //எனக்கு முன் புறம் உட்கார்ந்து இருந்த காதல் ஜோடி படம் ஆரம்பிக்கும் முன்னே அந்த பெண் அவனுக்கு முத்த மழை பொழிந்து கொண்டு இருந்தால்.....//

  அண்ணே... ஏன்... இதெல்லாம்.... எங்க வயித்தெரிச்சலை கொட்டிக்கணும்னே இதையெல்லாம் போட்றீங்கலா...

  நல்லா இருங்க!!!!!....

  ReplyDelete
 9. பார்த்தேன். திரைக்கதையை பக்காவா அமைத்து அதை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். மற்றும் நடிகர்கள் தேர்வு. படம் முழுவதும் பிரசன்னாவின் ஆளுமைதான். அந்த லேசர் கதிரை டேன்சரை வச்சு தாண்டறதுதான் உறுத்துகிறது.
  மற்றப்படி முழுப்படத்திலும் தொயவில்லை, ரசிக்கலாம்...

  ReplyDelete
 10. நல்ல படம். அருமையான விமர்சனம். தியேட்டர் டிஸ்க்கி சூப்பர்.

  ReplyDelete
 11. [[[எனக்கு முன் புறம் உட்கார்ந்து இருந்த காதல் ஜோடி படம் ஆரம்பிக்கும் முன்னே அந்த பெண் அவனுக்கு முத்த மழை பொழிந்து கொண்டு இருந்தால்.....]]]

  இதையெல்லாம் கரெக்ட்டா நோட் பண்ணிரு..! இதுக்குத்தான தியேட்டருக்கு போற.. மவனே..

  படமெடுத்த எஸ்.பி.பி. நிலைமை என்னாச்சு தெரியுமா இப்போ..?

  கோடிகளில் கடன்..!!! ஊரைவிட்டு எஸ்கேப்பாகியிருக்கிறார்..!

  ReplyDelete
 12. எனக்கு முன் புறம் உட்கார்ந்து இருந்த காதல் ஜோடி படம் ஆரம்பிக்கும் முன்னே அந்த பெண் அவனுக்கு முத்த மழை பொழிந்து கொண்டு இருந்தால்...//
  அப்புறம் என்ன ஆச்சு? மீதி கதைய சொல்லுங்க எசமான்.

  ReplyDelete
 13. நான் கூட சாய்சாந்தியில் தான் பார்த்தேன்....
  முன்னாடி அம்பது ரூபாய் இருந்தது இப்போ
  தீடிர்னு எண்பது ரூபாய் ஆக்கிட்டாங்க.....

  ReplyDelete
 14. நான் போன வாரம் உதயத்தில் பார்த்தேன், நல்லா தான் இருந்தது, ஆனால் அந்த வில்லி (ராகினியா பேரு?) பார்ப்பதற்கு, பிரசன்னாவுக்கு பாட்டி மாதிரி தெரிந்ததால், கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் பார்த்தேன் :))

  ReplyDelete
 15. இன்னொரு பிளாக்கில் படம் நன்றாயில்லை என்று விமர்சனம் படித்தேன். நீங்க நல்லாயிருக்கும் என்று கேரன்ட்டி தர்றிங்க.உங்க ரசிப்பு தன்மை மேலே ரொம்ப நம்பிக்கை இருக்கு.பாத்துடறேன்.
  இந்த படம் இங்க வராது. ஆகவே நெட்டாண்டவரே துணை.

  ReplyDelete
 16. நன்றி துபாய் ராஜா...

  நன்றி டவுசர் பாணடி எங்கள் கஷ்ட்டம் புரிந்தற்க்கு..

  நன்றி மோகன்

  நன்றி தண்டோரா

  நன்றி இராஜபிரியன்..

  ReplyDelete
 17. சென்னை பிரபல தியேட்டர்களில் பாப்கார்ன் 50 ரூபா. கோக் 40 ரூபா. டூவீலர் பார்க்கிங் ரூ 20

  லோ கிளாஸ் & “மிடில் கிளாஸ் மாதவன்” எல்லாம் என்ன செய்ய முடியும்..?

  சூர்யா நீங்க சொல்வது உண்தைான் இந்த மாதிரி டிக்கெட் ரேட்டை ஏத்தி விட்டுட்டு படம் ஒடலைன்னா எப்படி????
  ஆம்

  ReplyDelete
 18. என்னை கவர்ந்த மிக நல்ல படம் , ஆனா பாருங்க தரமான டிஜிட்டல் சவுண்டில் மிக நேர்த்தியான ஒரிஜினல் DVD ஐ விட நல்ல பிரிண்ட் நெட்டில் வந்து விட்டது ,
  ( தமிழ் தண்டர் .காம் )


  டவுசர் பாண்டி தியேட்டர்ல பாக்கற வழி இருந்தாலும் பெரும்பாலான ஜனங்க திருட்டு விசிடிலதான் படம் பாக்கறாங்க...அந்தளவுக்கு டிக்ட் கட்டணம் எறி இருக்கு...

  ReplyDelete
 19. அண்ணே... ஏன்... இதெல்லாம்.... எங்க வயித்தெரிச்சலை கொட்டிக்கணும்னே இதையெல்லாம் போட்றீங்கலா...

  நல்லா இருங்க!!!!!....//
  ராஜன் படிச்ச உனக்கே இப்படின்னா பார்த்த எனக்கு எப்படி இருக்கும்...

  ReplyDelete
 20. அந்த லேசர் கதிரை டேன்சரை வச்சு தாண்டறதுதான் உறுத்துகிறது.
  மற்றப்படி முழுப்படத்திலும் தொயவில்லை,//

  வேற வழியில்லை பிரதாப் தமிழ் சினிமா பட்ஜெட்டை மனசல வச்சிக்கினு தாங்கி்ங்க...

  ReplyDelete
 21. நல்ல படம். அருமையான விமர்சனம். தியேட்டர் டிஸ்க்கி சூப்பர்.//

  நன்றி நான்சிரியதா

  ReplyDelete
 22. இதையெல்லாம் கரெக்ட்டா நோட் பண்ணிரு..! இதுக்குத்தான தியேட்டருக்கு போற.. மவனே..

  படமெடுத்த எஸ்.பி.பி. நிலைமை என்னாச்சு தெரியுமா இப்போ..?

  கோடிகளில் கடன்..!!! ஊரைவிட்டு எஸ்கேப்பாகியிருக்கிறார்..!//

  அவ்வளவு கடனா? நம்ப முடியலை... உண்மை தமிழன்..

  ReplyDelete
 23. எனக்கு முன் புறம் உட்கார்ந்து இருந்த காதல் ஜோடி படம் ஆரம்பிக்கும் முன்னே அந்த பெண் அவனுக்கு முத்த மழை பொழிந்து கொண்டு இருந்தால்...//
  அப்புறம் என்ன ஆச்சு? மீதி கதைய சொல்லுங்க எசமான்.0///

  ஜெரி அதை நேர்ல சொல்லறேன்.. எங்க ரொம்ப நாளா ஆளை கானோம்...

  ReplyDelete
 24. நான் கூட சாய்சாந்தியில் தான் பார்த்தேன்....
  முன்னாடி அம்பது ரூபாய் இருந்தது இப்போ
  தீடிர்னு எண்பது ரூபாய் ஆக்கிட்டாங்க.....//
  ஜெட்லி அப்புறம் எப்படி படம் ஓடும்...

  ReplyDelete
 25. நான் போன வாரம் உதயத்தில் பார்த்தேன், நல்லா தான் இருந்தது, ஆனால் அந்த வில்லி (ராகினியா பேரு?) பார்ப்பதற்கு, பிரசன்னாவுக்கு பாட்டி மாதிரி தெரிந்ததால், கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் பார்த்தேன்//

  சங்கர் ஒரு சில இடத்துல அந்த பெண் அப்படிதான் தெரிகின்றது.. உங்களுக்கு கூர்மையான பார்வை..

  ReplyDelete
 26. இன்னொரு பிளாக்கில் படம் நன்றாயில்லை என்று விமர்சனம் படித்தேன். நீங்க நல்லாயிருக்கும் என்று கேரன்ட்டி தர்றிங்க.உங்க ரசிப்பு தன்மை மேலே ரொம்ப நம்பிக்கை இருக்கு.பாத்துடறேன்.
  இந்த படம் இங்க வராது. ஆகவே நெட்டாண்டவரே துணை.//

  அது அவுங்க டேஸ்ட்டா இருக்கலம்.. படம் உங்களுக்கு போர் அடிக்கலாம்... இது எனது பார்வை மட்டுமே கைலாஷ்...

  ReplyDelete
 27. sorry....indha padathukku ippadi oru vimarsanam too much nu thonudhu...mannikkavum...idhu ennudaiya karuthu...padathai paarthu pala idangalil naan tension aanadhu dhan adhigam...pudhu muyarchi nnu solli neraya sodhappal...pl idhayellam encourage pannadheenga...namma tamil cinema innum evvalavo uyarathai ettanum...

  ReplyDelete
 28. Thala.. naan intha padathai netru thaan paarthen. Romba expectations erunthichchu.aana romba lighta eduththu mudichchittanga. But sibi was excellent.. especially his post dialogue comments during the movie.. utharanathukku..
  "periya suriya jothikaanu nenappu.."
  "paaren naama ponappuram udane aarampichiduvaanunga.. sollala.. "
  overall ennoda view .. romba expectations illama pona.. padam pidikkum.

  ReplyDelete
 29. அண்ணே, டிக்கட் விலை குறையனும்னா, கலைஞருக்கு தமிழ் மக்கள் சார்பாக ஒரு விழா எடுத்து, நமீதாவை டாப் லெஸ் ஆடவிட்டு ஒரு கோரிக்கை வைத்தால், அடுத்த நாளே அதிக பட்சக் கட்டணம் 50 ரூபாய்ணு சொல்லுவார். குடும்பம் முழுக்க சேர்ந்து பார்க்க 100 ரூபாய் பாஸ்சும் தமிழக அரசு வழங்கும்னு அறிவிக்கச் சொல்லலாம்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner