(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை
இது போன வருடத்தில் எழுதியது.... அப்போதைய அரசியல் சாயங்கள் அதிகம் அப்பிக்கொண்ட கதை இது.... பலர் ஏற்கனவே படித்தாலும் வேலை பளு காரணமாக இப்போது உங்கள் முன் மீண்டும் மீள்பதிவாக...)
இனி கதை.....
அவன் இனியவன், எல்லோரிடமும் அன்பு பாராட்டுபவன், அவன் சோகமாக இருந்த எவரும் பார்த்ததுஇல்லை பிறந்த உடன் அழுது ஆர்பாட்டம் பண்ணாத குழந்தைகளில் இவனும் ஒருவன்.
மக்கள் திலகம் எம்ஜியாருக்கு பிறகு தாய் குலத்தையும், அன்னையை மதிப்பவன். தந்தை பேச்சுக்கு கட்டுபட்டு நடப்பவன்.
எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும், எவரும் பசியோடு இருக்க கூடாது என்று நினைப்பவன் மொத்தத்தில் அவன் iso9001பிள்ளை . 24 கேரட் கோல்ட்.
அவன் பணிவை பார்த்த பலரும் இது போல் ஒரு பிள்ளை நமக்கு பிறக்க வில்லையே என ஏக்கம் கொள்வர்.பொதுவாக அவன் பக்கத்தவிட்டு பெற்றோர் தன் குழந்தைகளை திட்டும் போது,
“ என்டா? அவன் மூத்திரத்தை வாங்கி மூனு நாளைக்க குடி அப்பவாவது புத்தி வருதா பார்ப்போம் ? ”
என்று திட்டுவார்கள்.
அவன் பிறந்தது வேறு ஊர் என்றாலும் அவன் வளர்ந்தது படித்தது எல்லாம் கல்பாக்கம்தான் அவனின் பெற்றோர் கல்பாக்கத்தில் டவுன் ஷிப்பில் வசித்து வந்தனர் .
அனுசக்தி துறையில் அவனின் அப்பாவுக்கு வேலை. அவனுக்கு ஒருதம்பி ,ஒருதங்கை. டவுன்ஷிப் வாழ்க்கையில் எல்லோர் பெற்றோருக்கும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு, தன் வீட்டில் ,கார் ,டீவி இருப்பது பெருமை போல் தன் பிள்ளை நன்றாக படிப்பதும்கூட ஒரு பெருமையாக கருதினர். அந்த பெருமைக்கு பங்கம் வராமல் அவன் படித்தான்.
அவன் வீட்டில் எல்லோருமே படித்தவர்கள் என்பதால் அவர்கள் வீட்டில் வாங்கும் ஹின்டு பேப்பர் முழு பயன் அளித்தது.ஏழு மணிக்கு வரும் ஹிந்து பேப்பர் காலை பத்து மணிக்கெல்லாம் தன் முழு கற்பையும் இழந்து விடும்.
அவனை அவன் என்று மரியாதை இல்லாமல் அழைக்கிறோம் அவனுக்க ஒரு பெயர் வைக்கலாமே? எளிதில் வாயில் நுழையும் பெயராக, கமல் என்று வைப்போம்.
கமல் தன் இளவயதில் எந்த விஷயத்தை ஒருமுறைக்கு இரு முறை யோசித்து பார்த்து முடிவு எடுக்க கூடியவன். கிரிகெட்டா? படிப்பா? என்ற கேள்வி எழுந்த போது, படிப்பு மட்டுமே என்று விளையாட்டுக்கு டாட்டா சொன்னவன்.
பண்ணிரெண்டாம் வகுப்பு வரை கேந்திரிய வித்யாலயாவில் படித்தவன்.நல்ல மதிப்பெண் பெற்று , அலுவலக சகாக்கள் மத்தியில் தன் அப்பாவை, தலைநிமர வைத்தவன். வளர்ந்த பையனிடம் அம்மா உச்சி முகர்ந்த போது ரொம்பவே வெட்கப்பட்டவன். தன் தங்கையின் நண்பிகள் கை குலுக்க முன் வந்த போது ,கை கூப்பி வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டவன்.
அவன் வயது ஒத்த நண்பர்கள் எல்லோரும்,கிண்டி ஜோதி தியேட்டருக்கும்,இல்லையென்றால் சரோஜா தேவியும் படித்த போது அதை விடுத்து என்டரண்ஸ் எக்ஸாமுக்கு படித்தவன், உழைப்பின் பலனாக பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பொறியியல் கல்லுரரியில் சீட் கிடைத்தது நன்கு படித்தான் . கமல் எந்த ஆசிரியரையும் பட்ட பெயர் வைத்து அழைத்துது இல்லை.
கமலுக்கு நிறைய பெண் நண்பிகள் வட்டம், எனென்றால் சின்ன மார்போ, பெரிய மார்போ, எந்த பெண்ணாக இருந்தாலும் கண் பார்த்து பேசுபவன். ஒரு முறை அவன் தங்கை அவனை மிகவும் பாராட்டினால் காரணம் , அவள் நண்பிகள்
“ ஹேமா அண்ணன் போல் பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்தாபோல பார்க்காம ” இவ அண்ணன் ரொம்ப ஜென்டிலா இயல்பா நட்ந்துக்கிட்டான்டிஎன்று சான்றிதழ் கொடுத்தற்க்காக...
கமலுக்கு ஒரே அசைதான் தான் நன்கு படித்து நல்ல நிலையில் இருக்க வேண்டும் அம்மா , அப்பா பார்த்த மணப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். தான் எப்படி கற்புள்ள பெண்ணை எதிர்பார்க்கிறோமோ, அதே போல் தானும் ஊர் மேயவே கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டவன்.
பொறியியல் நான்கு ஆண்டு முடிந்து மேற்படிப்புக்கு அவன் தேர்வு செய்த கல்லுரரி, பீர் முப்பதுரூபாய்க்கு கொடுத்து விட்டு சைட்டிஷ் அறுபது என கொள்ளை அடிக்கும் பாண்டிச்சேரி அருகே உள்ள கல்லுரரி. எம்பிஎ நன்றாக படித்தான்.
நிறைய விஷயங்களில் கமல் நல்ல பையனாக இருந்தாலும், அவன் பீர் குடிப்பான் அதுவும் வாரத்தி்ற்க்கு ஒருமுறை. எனென்றால் அப்போதுதான் பீர் கூல்டிரிங்ஸ் லி்ஸ்டில் சேர்க்கப்ட்டது( நீங்கள் முந்திரி கொட்டை போல் அவன் குடிகாரனாகி இருப்பானோ? என்று யோசிக்க கூடாது)அப்போது கல்லுரரியில் அறிமுகமானவள் தான் நம்ம ஹிரோயின் லட்சுமி. மன்னிக்கவும் நாம என்ன ஜெயகாந்தன் காலத்துலயா இருக்கறோம்? அவ பேரு மார்டனா நிருபமானு பேர் வைக்கலாம் செல்லமா நிரு... நிருவை பார்த்த உடனே கமல் திருதிருன்னு முழிச்சான்.
சொர்னமால்யாவை பார்த்ததும் பிரகாஷராஜிக்கு எப்படி லைட் எறிஞ்சு மணி அடிச்சதோ? அதே போல இரண்டு பேருக்குமே இங்க மணி அடிச்சு லைட் எறுஞ்சுதுதான் ஆச்சர்யம்.
இப்போது நிருவை பற்றி சொல்வது என் கடமையாகிறது. கமல்ஒரு பெண்ணின் கண் தவிர்த்து பிற இடங்களை, அவன் கவனிக்கிறான் என்றால் அவளின் அழகை நீங்கள் கற்பனை செய்து பார்க்க வேண்டும்.
ஒருவரியில் சொல்வதென்றால் அந்த பெண்ணுக்கு எல்லாமே எடுப்பாக இருந்ததால் கமல் மனது எகிடுதகிடாக தடுமாற ஆரம்பித்தது. லோக்கல் பாஷையில் சொல்வதென்றால் அவள் குமால்டிக்கான அழகாக இருந்தாள்.
அந்த நொடியில் இருந்து சனியனை அவன் பனியனுக்குள் பிடித்து போட்டான், கமல் எனும் நல்லவன்.... நிரு என்கிற நிருபமா பிறப்பிலேயே பணக்காரி, எல்லாவற்றையும் பணத்தால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டவள். அதற்க்காக தமிழ் சினிமாவில் ஹிரோயின் காரை விட்டு இறங்கியதும், வயது வித்யாசம் பார்க்காமல் பளார் என்று வேலைக்காரர்களை அறையும் ரகம் அல்ல,
புதுச்சேரியில் கமல் படிக்கும் போது வாரம் இரண்டு விஷயங்களை தவறாது செய்வான் , ஒன்று வெள்ளி தோறும் அரவிந்தர் ஆசிரமம் செல்வான். சனி ஞாயிறு இரண் டு நாட்களும் கடற்கரை சென்று பாறைகள் மீது காலார நடந்து வருவான்
புதுச்சேரியில் ரத்னா தியேட்டர் என்ற திரை அரங்கம் இருக்கிறது . இப்போது இருக்கும் டிடீஸ் டால்பி சவுண்ட் எல்லாம் அந்த திரை அரங்க ஒலியுடன்
தாயம் வாங்க வேண்டி இருக்கும். அந்த அளவுக்கு மிக அற்புதமாக சவுண்ட் சிஸ்ட்ம் அமைத்து இருந்தார்கள். வாரம் ஒரு முறை ஆங்கிலப்படம் அந்த தியேட்டரில் கமல் பார்ப்பான். எல்லா படித்த பணக்கார பெண்களும் , ஆண்களும்அந்த தியேட்டருக்கு வருவார்கள். சில நேரங்களில் வெளிநாட்டினரும் இருப்பார்கள்.
கமல் ஹாரிசன் ஃபோர்டு நடித்த புது ஆங்கில படத்தை தன் நண்பர்களோடு பார்க்க போனான். இடைவேளையில் அவன் நண்பர்கள் எல்லோரும் நுரையிரலில் நிக்கோடின் நிரப்பிக்கொள்ள, இவன்மட்டும் கேண்டினில் விற்க்கும் 50 பைசா சம்மோசா வாங்க கூட்டத்தோடு கலந்தான் ( அந்த தியேட்டடிரில் 50 பைசா சமோசா ரொம்ப சுவையானது) அப்போதுதான் ஜீன்ஸ் டீ ஷர்ட்டில் அந்த அழகு பதுமையை பார்த்தான். அதான் கஷ்டப்பட்டு பெயர் வைத்தாகி விட்டதே, நம்ம நிருவை பார்த்தான்.
அப்போதுதான் கமலிடம் அச்சில் ஏற்ற முடியாத வாக்கியம் மனதில் ஓடியது....
அந்த வாக்கியம் இதுதான் , போட்டா இந்த மாதிரி பொண்ணை போ....... எழுதற எனக்கே இப்படின்னா, நேரில் பார்த்த கமலுக்கு எப்படி இருந்து இருக்கும் என்பதை உணர்த்தவே அந்த வாக்கிய பிரயோகம்
நிருபமா அப்போதுதான் ஜஸ்கிரீம் வாங்கி திரும்பவும், ஒரு மட சாம்பிராணி டீ வாங்கி திரும்பவும் கயாஸ் தியிரிப்படி இருவரும் இடித்துக்கொள்ள சூடான டீ அவள் மீது கொட்டியது. பார்த்த எல்லோரும் பதற, சூடான டீ மட்டும் ஒரு குஜாலான உற்சாகத்தோடு அவள் கை மீது பரவியது
நிரு பழக்க தோஷத்தில் வீட்டு ஞாபகத்தில் அவனை முட்டாள் என்று திட்ட அவளை நோக்கி ஒரு கும்பல் அவேசமாய் வந்து “ தே நீயும் தெரியமா இடிச்ச ,அந்த ஆளும்தெரியாம இடிச்சான்” அவனை முட்டாள்னு திட்ற, அப்ப நீஅறிவாளியா? என்று கேள்வி எழுப்ப, கமலும் அவன் நண்பர்களும் அவளை காப்பாற்ற, நிருவும் அவள் நண்பர்களும் கமலுக்கும் அவள் நண்பர்களுக்கும் நன்றி கூறினர். செல்போன் எண்கள் மாற்றிக்கொண்டார்கள். இடைவேளைக்கு பிறகு அவன் படம் பார்த்து கொண்டு இருக்கும் போதே அவன் செல்லுக்கு எஸ் எம் எஸ் வந்தது “ ரொம்ப நன்றி இந்த உதவியை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன் ” குறுந்தகவல் வந்தவுடன் கமலுக்கு படத்தின் மீது கவனம் இல்லாமல் இருந்தான்.
ஹாரிசன் போர்டு கதாநாயகி உதட்டில் ஒத்தடம் கொடுக்க, தேவையில்லாமல் கமலுக்கு நிருவின் பள பள உதடு ஞாபகத்துக்கு வர, படம் எப்போது முடியும் அவளை எப்போது பார்போம் என்று இருந்தது. அதற்க்குள் நான்கு குறுந்தகவல் கைபேசி மூலம் பறிமாறிக்கொண்டார்கள், அந்த குறுந்தகவல்களில் எந்த சவாரஸ்யமும் இல்லாததால் நான் அதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
படம் முடிந்து திரும்ப ஏதாவது பிரச்சனை வந்தால் சமாளிக்க கமல் கொஞ்சம் அலர்ட்டாகவே இருந்தான். நல்ல வேளை பிரச்சனை ஏதும் வரவில்லை. அவள் நேராக வந்து அவன் கரம் பற்றினால் ரொம்ப நன்றி என்றால். அப்போதுதான் அவன் அவள் கையை கவனித்தான், அது கொஞ்சம் கன்னி போய் இருந்தது.. அவள் அவனிடம் கார் ஓட்ட தெரியுமா? என்றால் அவன் தெரியும் என்றான், அவனை கார் ஓட்ட சொன்னாள். கமல் தனது பைக்கை நண்பர்களிடம் கொடுத்து அவள் காரில் உட்கார்ந்தான், கார் தியேட்ரில் இருந்து குபேர் பஜார் வழியாக, சின்னகடை தாண்டி கடற்கரை ரோட்டில் வேகம் எடுக்க அதற்க்குள் பிறப்பு வளர்ப்பு பிடித்தது பிடிக்காதது எல்லாம் பேசி முடித்து இருந்தார்கள்
கமலை நிருவுக்கு பிடித்து போனது அவன் கண்ணியமாக பேசியதும் காப்பாற்றியதும் அவள், அவனை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்தால்.
கமலுக்கு இன்னும் தான் காண்பது கனவா நனவாஎன்று கிள்ளி பார்த்து கொண்டான். கார் மெல்ல பாரதி பார்க் ஓரம் நிற்க, ரோட்டு ஓர கடையில் சூடான வேற்கடலை வாங்கி கொரித்த படியே வெட்டி கதை பேசியபடி அந்த கார் அங்கிருந்து நகர்ந்தது.
தியேட்டர் சம்பவம் நடந்த மூன்றாம் நாள் கமலின் கல்லூரி வாசலில் நீல நிற சுடிதாரில் நிருபமா நின்றாள். கமல் தன்னை நினைத்து ,தன் அதிஷ்டத்தை நினைத்து பெருமை பட்டான்.
அன்றிலிருந்து சரியாக நான்கே முக்கா நாளில் அதே ரத்னா தியேட்டர் இருட்டில் நிருபமா உதட்டில் கமலின் நாக்கு பேரணி நடத்தியது....
மன்மோகன் சிங் எப்படி அமெரிக்க அனுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற துடிக்கிறாறோ, அதே போல் கமல் நிருவை காதலித்த நாட்களில் துடித்து போனான்.
உலகத்தில் எல்லோரும் அழாகாக தெரிந்தார்கள் எல்லோரையும் நேசிக்க தொடங்கினான். உலகத்தில் எவறும் தவறு செய்யாதது போல் உணர்ந்தான். மொத்ததில் பருத்திவீரன் கார்த்தி போல் மாறி போய் இருந்தான்.
கடந்த மூன்று மாதகாலமாக தமிழக எதிர்கட்சி தலைவர் கோடநாட்டில் ஓய்வு எடுத்து ஜாலியாக இருப்பதுபோல் எதுபற்றியும் கவலை கொள்ளாது ரொம் ப ஜாலியான வாழ்க்கை வாழ்ந்தால் நிருபமா...எனெனில் கமல்தான் தினமும் செல்போனில் அவள் அழகை புகழ்கிறானே.
நடிகர் சத்யராஜ் மேல் புவனகிரியில் வசிக்கும் ஒருவன், இந்திய இறையான்மைக்கு வேட்டு வைத்தார் என்று பொதுநல வழக்கு போட்டு தமிழனுக்கு தமிழனே எதிரி என்று எப்படி மீண்டும் நிருபித்தானோ, அதே போல் கமலின் நண்பன் ஒருவன் கமல் பைனல் இயர் படிக்கும் போது நிருபமா அப்பாவிடம் போட்டு கொடுத்தான்.
உண்மை தமிழர்கள் எப்படி சுப்ரமணிய சுவாமியை பார்பார்களோ அதே போல் நிருவை அவள் வீட்டில் வெறுப்பாக பார்த்தார்கள் கமலின் தராதரம் தகுதி போன்றவை குறித்து கேள்வி எழுப்பபட்டது. எதிர்பார்த்த தகுதி இல்லாத காரணத்தில் நிரு பெற்றோர் கம்லை புறக்கனிக்க சொன்னார்கள். நிரு காதலித்தாலும் தொடர்ந்து பிரைன் வாஷ் செய்ததால் அவள் குழப்பிபோனாள் எனென்றால் நிருபமா பணக்கார பெண் என்று வாசகர்கள் எற்கனவே அறிந்ததுதான்
கமல் வீட்டில் அவன் காதல் தெரிந்த போது முதலில் தயங்னகினாலும் பின் தன் மகன் ஆசைக்கு குறுக்கே நிற்க்கவில்லை, ஒரே கேள்விதான் கேட்டார்கள்
“ ஏன்டா இந்த பொண்னு உனக்கு சரியா வருவாளா?” அது சொத்துள்ள பெண் என்பதற்க்கான கேள்வி அல்ல. அவள் உடை உடுத்தி கொண்ட விதம் கமல் பெற்றோரிடம் கேள்வியாக வந்தது.
கமல் எப்படியாவது அவளை கரம் பிடிக்க, நிறைய சம்பாதித்து அவள் எப்படி பிறந்த வீட்டில் இருந்தாலோ அதை விட இன்னும் சிறப்பாக அவளை வாழ
வைக்க உறுதி எடுத்தான் அவன் நேரம் அப்போதுதான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா பக்கம் பார்வையை திருப்பிய நேரம் அது...
அப்போது அம்மா ஆட்சி தொழில் தொடங்க வந்த பன்னாட்டு நிறுவனங்களிடம்
100சி என்றால் பத்து சி எனக்கு என்று கணக்கு போட, எல்லோரும் பிடரியில் கால் பட துண்டை காணோம் துணியை காணோம் என பென்ஷனர் பாரடைஸ் பெங்களுர் ஓடினார்கள் அதனால் பெங்களுருக்கு கமலும் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஐமேக்ஸ் தியேட்டர் எப்படி ஐதராபாத்துக்கு ஓடியதோ அதே போல் கமலின் நண்பர்கள் சிலர் ஐதராபாத்துக்கு ஓடினார்கள்.
கமல் நிரு உதட்டில் ஊர்வலம் நடத்தி இருந்தாலும் கல்லூரியில் முதல் மதிப்பெண் எடுத்ததால் பெங்களுருவில் அவனுக்கு மாதம்15000 சம்பளத்தில் வேலை கிடைத்தது கமல் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாண்டிச்சேரி மகளிர் கல்லூரியில் நிரு கம்யுட்டர் சயின்ஸ் முடித்தால்.
பெங்களுரில் வேலை கிடைத்ததை போன் மூலம் விஷயத்தை சொன்னான் ஏனெனில் நேரில் சென்றால் தன் மனது அவளை பார்த்ததும் மாறி விட கூடாது என்பதற்க்காக. கமல் பெற்றோரிடம் ஆசி பெற்ற பெங்களுர் வந்து வேலையில் சேர்ந்த முதல்நாள் கமல் யோசித்தான்
தான் அவசரப்பட்டுவிட்டோமோ? நிருதான் பேரழகி என்று நம்பி இருந்தான், அவன் வேலை செய்த பன்னாட்டு நிறுவனத்தில் நிறைய நிருபமாக்கள் இருந்தார்கள்
காரணமே இல்லாமல் கொஞச்ம் வெயிட் பண்ணி இருந்தால் நல்ல செல்போன் வாங்கி இருக்கலாம் .... என்ற ஜோக் ஞாபகத்துக்கு வந்தது ..உங்களுக்கு தெரியுமா? அந்த ஜோக்???தன் இயல்பான முகத்தை விட்டு விட்டு புஷ் முகம் மாட்டிக்கொண்டு அவஸ்தை படும் மன்மோகன் சிங் போல, தன் கலாச்சார முகத்தை இழந்து ஐ ரோப்பிய முகம் மாட்டிக் கொண்டுள்ள பெங்களுர்....
பென்ஷன் வாங்குபவர்களின் சொர்க புரி பெங்களுர் என்று முன்பு சொன்னார்கள் அனால் இப்போது பெங்களுர் பிரமச்சாரிகளின் சொர்க புரி என்றால் அது மிகையாகாது.
அவ்வளவு பெண்கள்.அழகழகான பெண்கள். நம்ம தமிழநாட்டை தவிர்த்து வேறு எந்த ஸ்டேட்டிலும் கள்ளி பால் ஸ்டாக் இல்லை போலும்.
கமல் முதன்முறையாக பெண்களுக்கு கொடுக்கப் போகும் 33 பர்சன்ட் இடஒதுக்கீடுக்கு கவலைப்பட்டான்.
கமல் பல்வேறு பெண்களை தான் வளர்ந்த கல்பாக்கத்தில் பார்த்து இருந்தாலும், அதே போல் எம் பி ஏ படிக்கும் போது மிக அழகான பெண்களை பாண்டிச்சேரியில் பார்த்து இருந்தாலும்,பெங்களுர் பெண்கள் ஒரு தினுசாகவே இருந்தார்கள்.
பெங்களுர் பெண்கள் பிறரை கவரவே உடை உடுத்தினார்கள். டிசர்ட் ஜி்ன்ஸ் போட்டால் டி சர்ட் உள்ளே பிரா போடுவதை தவிர்த்தார்கள், இது பற்றி தன் நண்பர்கள் வட்டத்தில் விசாரித்த போது , “உனக்கு ஏன்டா தேவையில்லாத கவலைலாம் அது அவுங்க அவுங்க சவுரியத்தை பொறுத்தது ”என்றார்கள்
கமல் நான்கு நண்பர்களுடன் சேர்ந்து பெங்களுர் மடிவாலாவில் வீடு எடுத்து தங்கினான். சிங்கிள் பெட்ரூம் அறைக்கு 5000 ரூபாய் வாடைகையும் 50000ரூபாய் அட்வான்ஸ் என்றார்கள். மாதம் ஆளுக்கு 1125 ரூபாய் அறைக்கு கொடுததார்கள் அந்த அறைக்குஐந்து ஆயிரம் வாடகை அதிகம்தான். இது போல் ஹவுஸ் ஓனருக்கு இனனும் 5 வீடுகள் இருப்பதாக சொன்னார்கள் மாத கணக்கு போட்டு கமல் வாய்பிளந்தான்.
இவர்கள் பில் கூட கொடுக்க போவதில்லை,வரியும் கட்ட போவதில்லை. எந்த ஹவுஸ் ஓனரையும் எந்த ஸ்டேட்டும் கட்டு படுத்தாது என்பதை புரிந்து கொண்டான். அப்படி அவர்களை கட்டு படுத்தினால் ஓட்டு அவர்களுக்கு வாராது ஏனென்றால் ரேஷன் கார்டு வைத்து ஓட்டு போடுபவர்கள் ஹவுஸ் ஓனர்கள்தான் , வாடகைக்கு குடியிருப்பவன் அல்ல...
பெங்களு்ருவில் அவன் சந்தோஷப்பட்ட விஷயம் தண்ணீர் பிரச்சனை இல்லாததுதான். சாபப்பட்ட சென்னை வாசிகள் போல் இல்லாமல், தண்ணீர் மிக தராளமாக கிடைத்தது, இனிப்பாக இருந்தது.
அதே போல் திருமணமாகாத பிரம்மச்சாரிகள் அறைக்கு வயது பெண்கள் வந்து போவதை எவரும் அலட்டிக்கொள்ளாதது ஆச்சாயம் அளித்தது.பெங்களுருவில் பணம் மட்டுமே பிரதானமாக இருந்நதது.
கூட்டம் கூட்டமாக பெண்கள் வீடு எடுத்து தங்கி இருந்தார்கள், எல்லோருக்கும் ஒரு பாய் பிரன்டு இருந்தார்கள்.எல்லா பெண்களுக்கும் ஒரு சோக கதை இருந்தது, அந்த சோககதைகள் மனதில் குறித்துக்கொண்டான் அதை நிரு மற்றும் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள எண்ணனினான்.
வேலைக்கு சேர்ந்த ஒரு வாரத்தில் கமல் எனும் இந்திய சாப்ட்வேர் இளைஞனின் மூளை உடல் எல்லாம் அமெரிக்க முதளாளிகளுக்கு அடிமை சாசனம் எழுதின...
அவனிடம் இந்திய அரசு உரிமையாக போட்ட சம்பளத்தின் வரியில் பல வளர்ச்சி பணிகளில் இந்தியாவும் தன் முகத்தை மாற்றி கொண்டது.
நீங்களே யோசித்து பாருங்கள் 60ஆண்டுகால சதந்திர இந்தியாவில் கடந்த பத்து வருடங்களில்எற்ப்பட்ட வளர்ச்சி சொல்லில் அடங்காதது. அந்த வளர்ச்சியில் கமலின் உழைப்பும் வியற்வையும் இருக்கிறது.
கமல் தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் அம்மாவுக்கும் நிருவுக்கும் போன் பண்ணினான்
அப்போதுதான் திருபாய் அம்பானி,, இந்தியர்கள் அதிகம் பேச ஆசைப்பட , அதுவரை ராமதாஸ் போல் ஆட்டம் போட்ட செல்போன் கம்பெனிகள் பெட்டிபாம்பாய் அடங்கிபோனார்கள்.
செல் போன் கம்பெனிகள் விலை குறைத்தன.
கமல் இரண்டு கைபேசிகள் வாங்கினான் ஒன்றை அம்மாவுக்கும் மற்றதை நிருவுக்கும் கொடுத்தான். நிரு பெற்றோர் கண்ணில் கமல் படததால்
தன் பெண்ணின் காதல் பார்த்தீபன் சீதா காதல் போல் முறிந்ததாக நினைத்துக் கொண்டார்கள்.
எப்போது கமல் வீடு வந்தாலும் அவனை அவன்தாய் இளைத்து விட்டதாக சொல்லி சொல்லி இரண்டு நாட்டு கோழிகளின் உயிருக்கு வேட்டு வைத்தாள்
கமல் குடும்பம் அவனை கொன்டாடியது. அவனும் எல்லோருக்கும் மரியாதை கொடுத்தான் .
வார வாரம் சென்னை வர ஆரம்பித்தான். நிருவை மாயஜாலில் மீட் செய்தான் தான் இன்சென்டிவ் வாங்கிய பணத்தில் நிருவை மகிழ்விக்க 80 ருபாய்க்கு மக் பாப்கானும், 150 ரூபாய் சினிமா டிக்கெட்டும் வாங்கினான்
கூட்டம் இல்லாத ஆங்கில படத்தில் இந்தியர்கள் பொதுவாய் பான்பராக் பீடா எஎஎஎஎஎஎஎஎஎஎச்சில் துப்பும் சுவற்று ஓர சீட்டை தேர்ந்து எடுத்தான்.
படம் ஓடத்துவங்கியவுடன் பயம் இல்லாது அவள் உதட்டில் தன் உதட்டால் ஊர்வலம் நடத்தியவன் மெல்ல கை நடக்கத்துடனும், கழுத்து வியற்வை பிசு பிசுப்புடன், நிரு கழுத்துக்கு கிழே கையை இறக்கினான்.
நிரு எந்த எதிர்ப்பும் காட்டாமல் தமிழ் சினிமா ஹீரோயின் போல் தன் லிப்ஸ்டிக் உதட்டை கடித்தால்....கமலுக்கு காமத்தீ பற்றிக் கொண்டது. அந்த தீ நிருவிடமும் தன் வேலையை காட்டியது.
அம்மாவை பார்க்கும் ஆசையும் நிருவை இருட்டில் பார்க்கும் ஆசையும் அதிகமாகி போனதால், கமல் வெள்ளி இரவே பேருந்து பிடித்து சனிக்கிழமை காலை சென்னை வந்து ஞாயிற்று கிழமை இரவு சென்னையில் பஸ் ஏறி விடியலில் பெங்களுர் இறங்கி காலை ஷிப்ட் என்றால் கண்ணில் ஊளையுடன் வேலைக்கு சென்று
இருக்கிறான்
கமல் போல் இன்றும் நிறைய சாப்ட்வேர் இளைஞர்கள்,இளைஞிகள் தன் பெற்றோர் மற்றும் தன் காதலனை பார்க்க வாரம் வாரம் சென்னையும், சென்னையிலிருந்து பெங்களுரும் செல்கின்றன.
இந்த சாப்ட்வேர் இளைஞர்களின் பாசத்தையும் காதலையும் தனியார் பேருந்துகள் மனசாட்சி இல்லாமல் பேருந்து கட்டணம் என்ற போர்வையில் கொள்ளை அடிக்கின்றனர்.
சென்னையிலிருந்து குளிர்சாதன ஏசி பஸ்ஸில் பெங்களுர் செல்ல தமிழக அரசு நி்ர்னயத்த கட்டண தொகை 325ரூபாய் ஆனால் எல்லா தனியார் பேருந்துகளிலும் குளிர்சாதன வசதி இல்லாமல் 450ரூபாய வசூலிக்கிறார்கள்அதுவும் விசேஷநாட்களில் அவர்கள் வைத்ததுதான் சட்டம் . ஏசி இல்லாத பேருந்துக்கு600ரூபாய் கேட்கிறார்கள், இந்த சாப்ட்வேர்காரர்களும் மாத மாதம்பெருந்தொகையை இழக்கின்றனர் இதில் கமலும் விதி விலக்கல்ல
கமல் தான் செய்யும் வேலையை காதலித்தான் எல்லோரும் 8மணி நேரம் கணக்கு பார்த்து வேலை செய்த போது 10 மணி நேரம் ஆனாலும்தனக்கு கொடுக்கபட்ட வேலையை திறம்பட தவறில்லாதமல் செய்தான்.அதனால் டீம் லீடரிடம் நல்ல பெயர் எடுத்தான்.
எல்லா ஆண்களும் வேலை நேரத்தில் பெண்கள் போதையில் மிதக்க இவன் கருமமே கண்ணாக இருந்ததால் வெகு சீக்கரத்தில் டீம் லீடர் ஆனான் .மாதம் 30,000 சம்பளம் வாங்கினான்.
பெங்களுர் பெண்கள் ஒருசிலரை தவிர எல்லோருக்கும் பாய்பிரன்ட் இருந்தார்கள். ஒருமாதம் காதல் என்ற போர்வையில் நன்றாக சுற்றுவார்கள் இன்னும் இரண்டு வாரத்தில் கல்யாணம் செய்து கொள்ள போகிறோம் கமல் என்று சொல்வார்கள் ஆனால் அடுத்த மாதத்தில் அவனோட டேஸ்ட் ஒத்து வரலை அதனால நான் கல்யாணத்துக்கு முன்னமே நான் தப்பிச்சுட்டேன் தேங்காட் என்பார்கள். கமல் அவர்களை ஆச்சர்யத்தோடு பார்பான். எல்லாம் காசு தந்த சுதந்திரம், நான் மாதம் 20,000சம்பாதிக்கிறேன் என்னை யார் கேட்க முடியும் என்ற தெனா வெட்டு....
பெற்றோர்களாலும் கேள்வி கேட்க முடியவில்லை ,எங்கே கேள்வி கேட்டால் மாதம் வரும் பணம் கூட நின்று விடும் எனெனில்,எவன் எவன் கால்ல எல்லாம் விழுந்து வட்டிக்கு வாங்கி படிக்க வச்சவனுக்குதான் அந்த வேதனை தெரியும்.
கமல் தன் செலவு மாதம் பத்தாயிரம் போக மீதி 20,000 தன் அப்பாவிடம் கொடுத்து படிப்புக்கு வாங்கிய கடன்களை அடைக்க சொன்னான்.
நிருவை பெண் கேட்டு கமல் அவள் வீடு சென்றான், பெண் கேட்டான். நிருவின் பெற்றோர்கள் இடது சாரிகள் போல் விடாப்பிடியாக இருந்தார்கள்.
ஐந்து நாள் விடுப்பில் பெங்களுரில் இருந்து வந்த கமல் அழகிரி திடும என ராயல் கேபிள் விஷன் தொடங்கியது போல் கமல் நிருவை ரிஜிஸ்டர் மேரேஜ் செய்தான்.
விஷயம் தெரிந்த நிரு பெற்றோர், மாறன் சகோதரர்களுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என அழகிரி அறிவித்தது போல் நிருவின் பெற்றோரும் அறிவித்தனர்,.
கமல் தனது கல்யாணத்துக்கான வறவேற்பை பெங்களுரிலும் கல்பாக்கத்திலும் வைத்தான் கமலுக்கு வந்து குவிந்த பரிச பொருட்களே அதற்க்கு சாட்சி. கமல் நிறைய நல்ல இதயங்களை சம்பாதித்து வைத்து இருந்தான்,
கமலும் நிருவும் தேனிலவுக்கு சிம்லா போனார்கள். தேனிலவு சாப்டர் எழுத வேண்டாம். நானும் தமிழ்படங்கள் தம்பதிகள் பால் சாப்பிட்டு பிறகு அவர்களை காட்டாமல் கேமரா குழந்தை படத்தை காண்பிக்குமே, அதே போல் விட்டு விடுவோம் மீறி நான் தேனிலவு சாப்டர் எழுதினால் சாருநிவேகிதா போல் எழுதிகிறேன் என்பார்கள் எதற்க்கு வம்பு...? அல்லது தமிழ் மணத்தில் வார்த்தை பிரயோகம் தவறு என்பார்கள்.
நானும் நிறைய காமம் என்ற வார்த்தை பயண்படுத்தி இருக்கிறேன்....
காமத்தை ரசித்தபடியே காமத்தை எதிர்க்கும் நம்மவர்களிடம் இருந்து, நான் தப்பிக்க வேண்டும் அவ்வளவே...கமல் பெங்களுருவில் வீடு பார்த்தான், எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க தனி வீடு பார்த்தான்...
ஒரு சுப யோக சுப தினத்தில் தமிழர்களை வெறுக்கும் கன்னட வெறியர்கள் மண்ணில் தன் சொந்தங்களை விட்டு குடி யேறினான்.
92ல் சொந்த நாட்டிலேயே ஈழத்தமிழர் போல் பெங்களுரி்ல் உதை வாங்கிய சம்பவங்களை அவனுக்கு கல்பாக்கம் நண்பர்கள் மூலம் ஞாபகப்படுத்தப்பட்டன..
இருப்பினும் ரோஜா படத்தில் எஸ் வி சேகர் அப்பா மதுபாலாவிடம் குழி பணியாரம் கேட்டு விட்டு, ரிஷி இந்த நேரத்தில் உன்னை காஷ்மீர் அனுப்பறத நினைச்சா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்பர். அதற்க்கு நம்ம அரவிந்சாமி, “காஷ்மீர் போக ஏன் சார் பயப்படனும், காஷ்மீர் நம்ம இந்தியாவுலதான் சார் இருக்கு”என்பார் அந்த டயலாக் எல்லாம் நினைத்து மனதை தேற்றிகொண்டான்..
வீடு குடியேறிய போது எல்லா தேவையான பொருட்களையும் கமல் அம்மா,அப்பா வாங்கி வைத்தார்கள், நிரு பெண்வீட்டு பொருளாக ஏதும் எடுத்து வராததால் எல்லா பொருட்களும் வாங்கி வைத்தார்கள்...
கமலும் நிருவும் ரொம்ப சந்தோஷமாக வாழ்வை துவங்கினார்கள். அது காங்கிரஸ் இடதுசாரி கூட்டனி போல் இருந்தது...கமலுக்கு ஒரு பழக்கம் இருந்தது தினமும் வேலை விட்டு வந்து எந்த நேரமாக இருந்தாலும் அவன் அம்மாவுக்கு போன் செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தான்
கிழே பேசும் அனைத்து டயலாக்குகளும் கமலும் நிருவும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டவை, எழுதும் எனக்கு சரியாக ஆங்கிலம் தெரியாததால்,அவரவர்கள் தங்கள் மனதில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொள்ளவும் (சாரி பார்த டிஸ்டபண்ஸ்)
“வீட்டுல குத்து கல்லு மாதிரி இருக்கேன் என்னை சாப்பிட்டியா, தூங்கினாயான்னு ட கேட்காம அப்படி என்ன அம்மா புள்ளைக்கு அப்படி என்ன கொஞ்சல் ”
“நிரு நான் ஒன்னும் எவகிட்டயும் பேசல எங்க அம்மா கி்ட்டதான் பேசனேன்...”
நிருவுக்கு தனிமை தந்த வெறுப்பும் தான் அம்மா ,அப்பாவிடம் பேச முடியவில்லையே என்று வெறுப்பும் கோபமாக வெடித்தன...
காங்கிரஸ் இடதுசாரி பிரச்சனை அனுசக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்டது போல் கமல் நிருவுக்கும் கமல் அம்மாவால் பிரச்சனை ஏற்பட்டது..
எல்லா விஷயங்களையும் கமல் அம்மாவிடம் கேட்டு கேட்டு செய்வது சுத்தமாக பிடிக்கவில்லை
அழகிரிக்கு தயாநிதி மாறனை பிடிக்காதது போல் நிருவுக்கு கமல் அம்மாவை பிடிக்காமல் போனது.
நிரு தனிமையை விரட்ட பெங்களுருவில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாள் .கமல் ஏதும் மறுப்பு சொல்லவில்லை.. மாதம் 15000சம்பளத்திற்க்கு சேர்ந்தாள்.
கமல் சின்சியாரிட்டியை பார்த்து அவனுக்கு பிடித்தம் எல்லாம் போக 60,000 கையில் வந்தது,நிருவின் சம்பளம் எல்லாம் சேர்த்து மாதம் 75,000 வந்தது..
கமல் கார் வாங்கினான், கார் வாங்கும் முன்பே தன் நண்பகள் கார் ஓட்டி இருப்பாதால் கார் அவனுக்கு பெங்களுர் சாலைகளில் அவன் சொன்ன பேச்சு கேட்டது.
நேராக அவன் தன் மனைவி வேலை செய்யும் அலுவலகத்துக்கு சென்றான். நிருவுக்கு கமல் கார் வாங்கியதை சொல்லவில்லை சின்ன சஸ்பெண்ஸ் மற்றும் அவள் அழகை ,சாரி அவள் கண் விரியும் அழகை ரசிக்க நினைத்தான்.
நிரு சீ த்ரு சாரியில் ஹை ஹில்சுடன் ஒய்யாரமாக கார் அருகே நடந்து வந்தால், யாரோட கார் இது கமல் ?என்றாள். என் எஜமானியம்மாவுக்கு என் பரிசு என்றான் கமல்..
உலக அழகி பட்டம் வாங்கியதும் ஐஸ்வார்யாராய் உட்பட இரண்டு கையையும் தாடையில் வைத்து அழகிகள் சிரிப்பார்களே அதே போல் நிருவும் சிரித்தால்...
கமல் தன் மனைவியுடன் மைசூர் ரோட்டில் 130கிலோ மீட்டர் வேகத்தில் விரைந்தான், நிரு வயிற்றை பிடித்துக் கொண்டு காரை ஓரம் நிறுத்த சொன்னாள்,காரை ஓரம் நிறுத்தியதும் கார்விட்டு இறங்கி நிரு வாந்தி எடுத்தாள்
கமல் முதலில் அது சாதரண வாந்தி என்றுதான் நினைத்தான் அப்புறம் அது கமல் நிரு இருவரும் சேர்ந்து செய்த ஓவர்டைம் வேலையால் வந்த வாந்தி என்பது நிருவின் வெட்க புன்னகையால் அறிந்து கொண்டான்.
கமல் அன்று ரொம்பவும் சந்தோஷமாக இருந்தான்.....தற்போதைக்கு நம்ம சோனியா காந்தி போல...
நிரு ஆறுமாத கர்பத்துடன் வேலைக்கு சென்றால், தினமும் காரில் நிருவை அவள் ஆபிஸில் விட்டுவிட்டு செல்வான்
பல சோதனைகள் மற்றும் வேதனைகளை தான்டி இரட்டை குழந்தைகளை நிரு பெற்றாள் நிரு அம்மாவுக்கு தகவல் சொல்லி அனுப்பபட்டது. அடுத்த பிளைட் பிடித்து தாயையும் சேயையும் பார்த்து விட்டு சென்றால் போகும் போது இரண்டு லட்சம் பணக்கட்டுயை நிரு அம்மா கமலிடம் கொடுத்தால் ,தேவையான பணம் இருக்கிறது , உங்கள் அன்பு மட்டும் போதும் என்றான்.
மாப்பிள்ளை ரொம்ப ஜென்டில் மேன் போல் நடந்து கொண்டதில் நிரு அம்மாவுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. கொஞ்சம் நாள் கழித்து நிருவின் அப்பாவும் குழந்தையை பார்க்கும் சாக்கில் வந்து ஒட்டிக்கொண்டார்
அம்மா அப்பா ஒன்று சேர்ந்ததும் நிரு மப்பு தலைக்கு ஏறிசுத்தமாக மாமனார் மாமியாரை மதிக்காமல் எடுத்து எறிந்து பேசினால் சட்டென்று ஸ்டேட்டஸ் பற்றி பேச ஆரம்பித்தால்.
கலைஞருக்கு ராமதாஸ் கொடுத்த குடைச்சல் போல் நிருவின் அனைத்து செயல்களும் இருந்தன.
நிருவன் செயல்களால் வெறுத்து போன கமல் அம்மாவும் அப்பாவும் பெஙக்ளுர் வருவதை நிறுத்திக்கொண்டார்கள். இவன் மட்டும் இரண்டு அல்லது மூன்று வாரத்திற்க்கு ஒரு முறை சென்னை வந்து பார்த்து செல்வான்.
கமலு்க்கு சம்மபளம் ஏற்றப்பட்டது எவ்வளவு தெரியுமா ?மாதம் ஒரு லட்சத்துக்கு196 ஆறு ரூபாய் கம்மியாக சம்னளம் வாங்கினான்.
சசிகலா அடம் பிடித்து டான்ஸி நிலம் வாங்க சொல்லியது போல் நிரு கமலை அடம்பிடித்து பெங்களுரில் வீடு வாங்க சொன்னாள். கமல் சென்னையில் வீடு வாங்கலாம் என்று எவ்வளவோ சொல்லியும் கெஞ்சியும் காதில் நிருபோ்ட்டு கொள்ளவில்லை.
கமல்பெங்களுரில் 65 லட்சத்துக்கு வீடு வாங்கினான். அப்போதாவது குடும்பம் நன்றாக இருக்கும் என்று நம்பினான். இரண்டு குழந்தைகளை பார்த்து கொள்வதற்க்காக நிரு அம்மா தன் மகள் கூடவே இருந்தாள்.
ஆறுமாதம் கழித்து அவள் வேலைக்குசென்றாள். கமல் எவ்வளவோ எடுத்து சொல்லியும் நிரு வேலைக்கு சென்று வந்தால், காரில் நிருவை பிக்கப் பண்ண போகும் போது எல்லாம் எல்லோரும் இந்தியர்கள் மன நிலையில் நிருவை பார்த்தார்கள்.
(இந்தியர் மன நிலை என்பது, “தன் பொண்டாட்டியை எவனும் பார்க்க கூடாது, மத்தவன் பொண்டாட்டியை எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம்”)
நிருவுக்கு அப்படி பார்பது பிடித்து இருந்தது, கமலுக்கு அப்படி இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை.
கமல்எதிர்பாராத அதிர்ச்சியாக திடிரென நிரு பிள்ளைகளுடன் சென்னை செல்வதாக கூறினாள்,அங்கே தன் கம்பெனி மாறுதல் உத்தரவு தந்து இருப்பதாகவும். மாதம் 40,000ஆயிரம் கிடைக்கும் வேலையை விட தான் தாயராக இல்லை என்றாள். அதற்க்கு மாமியார்காரியும் ஒத்து ஊதினாள்.
வேறு வழி இல்லாமல் கமலை விட்டு விட்டு நிருவும் குழந்தைகளும் சென்னையில் குடியேறினாள். பிள்ளைகளை சென்னையல் பிரபல பள்ளியில் எல் கே ஜி சேர்த்தாள்
இதற்க்குள் தன் தங்கைக்கும் தன் தம்பிக்கும் வெகு விமர்சியாக திருமனம் செய்து வைத்தான், பெங்களுர் நண்பர்கள் பலருக்கு கேட்காமலேயே உதவி செய்தான்,
மூளை கசக்கும் வேலை செய்து வீட்டுக்க வந்தால், தன் குழந்தைகளும் மனைவியும் சென்னையில் இருப்பதால்,தன் சொந்த வீட்டில் மிக வெறுமையாக உணர்ந்தான்.
மாதம் இரண்டு முறை பெங்களுரில் இருந்து கார்மூலம் சென்னை வந்து முதலில் கல்பாக்கம் போய் அம்மா அப்பாவை பார்த்து விட்டு பிறகு மாமியார் வீடு சென்று குழந்தைகளை பார்த்து விட்டு ஞாயிறு விடியலில் காரில் பெங்களுர் செல்வான். தனைக்கு சென்னையில் இருந்து பெங்களு்ரில் தங்கி வேலைபார்க்கும் நண்பர்கள் காரில் வருவார்கள்
சனிக்கிழமை மாமியார் வீட்டில் இருந்து ஞாயிற்று கிழமை தன் அம்மாவீட்டுக்கு தன் குழந்தைகள் மற்றும் நிருவை அழைத்தால் ரொம்பவே ஷோ காட்டுவாள். கமல் வீட்டில் இருக்கும் போது எப்போதும் உம் என்று உட்கார்ந்து இருப்பாள்
மாதம்ஒருலட்சம் வரை சம்பாதித்தும் தனக்கு ஏன் நிம்மதி இல்லை என்று புலம்பினான். பணம் மட்டும் இருந்தால் நிம்மதி இருக்கும் என்று சொன்னவர்களை கமல் புன்சிரிப்புடன் பார்த்தான். கமல் உனக்கு என்னடா கவலை பொண்டாட்டி 40,000 ஆயிரம் சம்பாதிக்கிறா, நீ ஒரு லட்சம் சம்பாதிக்கிற என்று கல்பாக்கம் நண்பர்கள் கேலி செய்யும் போது கமல் மனதுக்குள் அழுதான்...
கமல் தன் பிள்ளைகள் பேரில் 5 ஏக்கர் நில்ம் செங்கல்பட்டு அருகே நிலம் வாங்கி விட்டு தன் நண்பர்கள் மற்றும் அம்மா அப்பாவை பார்த்து விட்டு நிரு குழந்தைகளுடன் ஊர் சுற்றி விட்டு இரவில் தன் நண்பனுடன் காரில் பெங்களுர் நோக்கி பறப்பட்டான்
வாணயம்பாடிக்கு பக்கத்தில் ஒரு டீக்கடைக்கு சற்றுதள்ளி காரை நிறுத்தி விட்டு இயற்கை உபாதை முடித்து டீ குடித்து விட்டு காரில் முதலில் கமல் நண்பன் உட்கார கார் பின் புறமாக கமல் நடந்து வந்து டிரைவிங் சீட்டில் உட்கார எத்தனிக்கும் போது பெங்களுர் செல்லும் லாரி கண்இமைக்கும் நேரத்தில் கமல் மீது மோதியது சத்தம் பெரிதாகவும் கேட்கவில்லை .
காரில் உட்கார்ந்த கமல் நண்பன் ஏன் இன்னும் கமல் ஏறவில்லை என்று கார் விடடு இறங்கி காரை சுற்றி வந்து கமலை பார்த்த போது மூன்று நிமிடத்துக்கு முன் கலகலப்பாக பேசிய கமல் தன் ஒரு பக்க முகத்தை இழந்து ரத்த வெள்ளத்தில் துடிப்பதை பார்த்து அதிர்ச்சியில் கமல் நண்பன் தரையில் சாய,
ரொம்ப நேரமாக டீ குடித்து போயு்ம் அந்த கார் நகராமல் இருப்பதை பார்த்து டீகடைகாரர் மகன் கார் அருகே வந்து பார்த்த போது,
கமல் ஒரு ப்க்க முகம் சிதைந்து துடித்து கொண்டு இருப்பதையும் ஒருவர் சுய நினைவின்றி இருப்பதை பார்த்து ஆம்புலண்ஸ்க்கும் போலிஸிக்கும் தகவல் கொடுக்க,
ஆம்புலண்ஸ் மற்றும் போலீஸ் இரண்டும் சவகாசமாக வந்து சேர்ந்த போது கமல் நண்பன் பேய் பிடித்தது போல் பேந்த பேந்த விழிக்க,
கமல் என்ற, ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய சப்ட்வேர் இளைஞன் முகம் சிதைந்து ஏன் சாகிறோம் என்று தெரியாமலேயே செத்து போனான்
பொது மக்கள் கமலை“ பாடி” என்று அழைத்த போது கமலின் பெற்றோர் வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனை சவகிடங்குக்கு அலறலுடன் வந்து சேர்ந்தார்கள்.....கமல் விபத்தில் இறந்து பாடியை கமல் குடும்பத்தினர்பெற்று கல்பாக்கம் வந்து நிருவுக்கு தகவல் சொல்லினர். இனி நடந்தவைகளை சிறுதுளிகளாக பார்க்கலாம்
1. நிருவுக்கு கமல் இறந்த தகவல் சொன்னதும் அவள் எதையாவது கிடைத்ததை உடுத்தி வராமல் ஜீன்ஸ் பேண்டும் டீ ஷர்ட்டுமாக வந்த போது எல்லோரும் வாயடைந்து போனார்கள். அதுவும் இடுப்பில் பெல்ட் அணிந்து செல்போன் பவுச் மாட்டி வந்த போது இறுதி சடங்குக்கு வந்தவர்கள் மற்றும் பெண்கள் இது பற்றி அதிகம் பேசினர்.
2, கமல் இறப்பதற்க்கு முன்று மாதங்களுக்கு முன்பு நிரு சாயலில் உள்ள ஒரு பெண்ணை இ சி ஆர் ரோட்டில் ஒரு இளவயது ஆணுடன் பைக்கில் பார்த்ததாக சொன்ன போது கமல் அதை நம்ப மறுத்தான்
3. செய்தி கேள்வி பட்டதும் 15 டெம்போ டிராவலர் வேன்களில் எல்லாபெங்களுர் நண்பர்களும் பாலினம் பார்க்காமல் வயது வித்தியாசம் பார்க்காமல் வந்து சேர்ந்தனர்
4. இறுதி சடங்கு முழு செலவுகளை கமல் பெங்களுர் நண்பர்கள் ஏற்றனர்.
5. கமலின் பெண் குழந்தைகளை சாவுக்கு வந்தவர்கள் எல்லோரும் பரிதாபமாக பார்த்தனர்
6. நிரு என்னதான் உழுது புரண்டு அழுதாலும் அவள் இன்னும் ஒரு வருடத்தில் வேறு ஒருவனை நிச்சயமாக அவள் திருமணம் செய்து கொள்வாள் என எல்லா பெண்களும் சத்தியம் செய்யாத கறையாக பேசினார்கள்
7.பெங்களுர் நண்பர்கள் ஒரு நல்ல நண்பனுக்கு இப்படி ஒரு முடிவா என அழுது புரண்டனர்
8.கமல் குடும்பம் மற்றும் அவன் தெரு நண்பர்கள் , சுற்றம் எல்லோரும் எல்லா கடவுள்களையும் சபித்தனர்
9.கமல் பெங்களுர் நண்பர்கள் எல்லோரும் ரூபாய் 25 லட்சம் பணம் திரட்டிஇரண்டு மாதத்திற்க்கு பிறகு கமல் பெயரில் ஒருடிரஸ்ட் ஆரம்பித்து எழை குழந்தைகளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தனர். நிருவின் பெற்றோர் சாவுக்கு வந்து போனதோடு சரிஅதற்க்கு பிறகு அவர்கள் பிரேமில் வரவே இல்லை.
10.விபத்தில் கமலுடன் இருந்த நண்பன் இன்னமும் மனநல மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வருகிறான்
(முற்றும்)
best mokkai of 2010. ipdi laam yezhudi yenga naeratha waste pannadeenga. yedo yezhudureengannu daan padikka varram. paadi kadailayae thookkam varudu.
ReplyDeleteஏன் இப்படி?
ReplyDeleteஒரு வழியா படிச்சு முடிசிட்டேன். கதை ரொம்ப நல்லா இருந்தது. வோட்டும் போட்டாச்சு.
ReplyDeleteரொம்ப நல்லா இருக்குது.
ReplyDeleteHeart touching story.
ReplyDeleteI have been your regular blog reader, and this is first comments to your blog
Hats off to Jackie
Swamy
சற்றே பாரத்தை ஏற்றி விட்டது, கதை முடிவு.
ReplyDeleteithai nan engeyo padicha gnanabagam irukku, original link iruntha kodunga...........
ReplyDeleteஒரு இந்தியனா என்னால ஆண்டி க்ளைமாக்ஸோ அங்கிள் க்ளைமாக்ஸோ பிடிக்கிறதில்ல!
ReplyDeleteகதையை நான் எழுத்தாக படிக்கவில்லை.... படமாக பார்த்தேன்....
ReplyDeleteஅருமை....
super story jackie, keep it up.
ReplyDelete--kishore
கதை ரொம்ப அருமை.முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை படிக்க வைத்ததே அதற்கு சாட்சி.
ReplyDeleteJackie , Reading the story second time gave me the effect equivalent to watching re telecast of Balchandars Kaialavu Manasu . Hats off to you . Eventhough it is written second time story is interesting
ReplyDeleteஏன் இப்படி? கதை நல்லாத்தான் இருந்தது. நீளத்தை கொஞ்சம் வெட்டி இருக்கலாம். அரசியல் உவமைகளும் தேவையில்லாதது.
ReplyDeleteஎழுதி ரொம்ப நாள் ஆகியிருந்தாலும் இன்று தான் படிக்க வாய்ப்பு கிடைத்தது. இது போல பல உண்மை சம்பவங்களை கேட்டிருக்கிறேன் பெருநகர நாகரீகவாழ்வில் இதுப்போன்ற சம்பவங்கள் மிக அதிகம் என நினைக்கிறேன்.
ReplyDeletekathai bangaloreku shift anapave ennala yougika mudinjathu
ReplyDeletebest mokkai of 2010. ipdi laam yezhudi yenga naeratha waste pannadeenga. yedo yezhudureengannu daan padikka varram. paadi kadailayae thookkam varudu.//
ReplyDeleteநன்றி கண்பா...
ஏன் இப்படி?//
ReplyDeleteசில உண்மைகள் அப்படிதான் இராஜபிரியன்..
ஒரு வழியா படிச்சு முடிசிட்டேன். கதை ரொம்ப நல்லா இருந்தது. வோட்டும் போட்டாச்சு.//
ReplyDeleteநன்றி தினேண் ஓட்டுக்கு பாராட்டுக்கும்
Heart touching story.
ReplyDeleteI have been your regular blog reader, and this is first comments to your blog
Hats off to Jackie
Swamy//
நன்றி சுவாமி உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்..
சற்றே பாரத்தை ஏற்றி விட்டது, கதை முடிவு.//
ReplyDeleteநன்றி சைவ கொத்து பரோட்டா..
ithai nan engeyo padicha gnanabagam irukku, original link iruntha kodunga...........//இதற்க்கு முன் இதே கதை மாதம் ஒரு லட்சத்துக்கு 190்ருபாய் கம்மியாக வாங்கிய சார்ட்வேர் இளைஞனின் கதை என்று எழுதி இருந்தேன்...
ReplyDeleteஒரு இந்தியனா என்னால ஆண்டி க்ளைமாக்ஸோ அங்கிள் க்ளைமாக்ஸோ பிடிக்கிறதில்ல!//
ReplyDeleteநன்றி பப்பு
கதையை நான் எழுத்தாக படிக்கவில்லை.... படமாக பார்த்தேன்....
ReplyDeleteஅருமை....//
நன்றி கடலூர்காரரே எப்படி இருக்கிங்க... நன்றி தர்மா...
super story jackie, keep it up.
ReplyDelete--kishore//
நன்றி கிஷோர்..
கதை ரொம்ப அருமை.முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை படிக்க வைத்ததே அதற்கு சாட்சி.//
ReplyDeleteநன்றி கைலாஷ் மிக்க நன்றி..
Jackie , Reading the story second time gave me the effect equivalent to watching re telecast of Balchandars Kaialavu Manasu . Hats off to you . Eventhough it is written second time story is interesting//
ReplyDeleteநன்றி கைலாஷ் மிக்க நன்றி,,,
ஏன் இப்படி? கதை நல்லாத்தான் இருந்தது. நீளத்தை கொஞ்சம் வெட்டி இருக்கலாம். அரசியல் உவமைகளும் தேவையில்லாதது.//
ReplyDeleteநன்றி இப்படிக்கு
எழுதி ரொம்ப நாள் ஆகியிருந்தாலும் இன்று தான் படிக்க வாய்ப்பு கிடைத்தது. இது போல பல உண்மை சம்பவங்களை கேட்டிருக்கிறேன் பெருநகர நாகரீகவாழ்வில் இதுப்போன்ற சம்பவங்கள் மிக அதிகம் என நினைக்கிறேன்.//
ReplyDeleteநன்றி ராசா...
kathai bangaloreku shift anapave ennala yougika mudinjathu//
ReplyDeleteநன்றி எல்கே.. யுகிச்சிங்களா?
நன்றி
Sad story. Thanks for sharing.
ReplyDelete<< மாதம்ஒருலட்சம் வரை சம்பாதித்தும் தனக்கு ஏன் நிம்மதி இல்லை என்று புலம்பினான்.>>
ReplyDeleteகத இங்கு முடிஞ்சு போச்சு.. அதுக்கு அப்புறம் எதுக்கு ஒரு டிராமா
I like the narration.... . Feel sorry for Kamal and family if this is a true incident
ReplyDeleteSUPER
ReplyDeleteIntresting narration super story keep it.
ReplyDelete