(TELL NO ONE /திரில்லர்/பிரான்ஸ்)இறந்து போன மனைவி..8வருடம் கழித்து உயிருடன்...

ஒரு சில படங்கள் பார்த்தவுடன் அதன் டைட்டிலில் ஒரு வசீகரம் இருக்கும் அப்படி ஒரு வசீகரம் இந்த படத்திலும் இருந்தது....என்னை பொறுத்தவரை ஒரு படம் ஏதாவது ஒரு வகையில் பரவசபடுத்த வேண்டும்... அந்த பரவசத்தை அது எப்படி வேண்டுமானாலும் ஏற்படுத்தி இருக்கலாம்....

மாதத்திற்க்கு ஆயிரத்துக்கு மேல் டிவிடி மற்றும் சினிமாவுக்கு செலவு செய்து எகபட்டபடங்கள் கையில் இருக்கும் போது சில கேப்ஷன் சட்டென மனதில் ஒட்டிக்கொண்டு ஆர்வம் வந்து விடும்...இறந்து போன மனைவி....8 வருடம் கழித்து உயிருடன் என்றதும் இந்த படத்தை ஒரு வாரத்துக்கு முன் பார்க்க ஆரம்பித்து நேற்றுதான் அதனை முடித்தேன்... அவ்வளவு வேலை பளு.... ஆனால் இந்த படத்தை நேற்று முடிவை பார்க்காமல் திரும்பவும் ஆரம்பத்தில் இருந்து பார்த்த போது... ரொம்பவும் அசந்து போனேன்....

(TELL NO ONE /திரில்லர்/பிரான்ஸ்) படத்தின் கதை இதுதான்...


Alex Beck ஒரு டாக்டர்... டாக்டரும்,டாக்டரின் மனைவியும் மாலை வேலையில் ஒரு லேக்கில் உடம்பில் ஒட்டு துணியில்லாமல் குளித்து கொண்டு இருக்கும் போது.... டாக்டரின் மனைவி மார்கோட் மட்டும் தனியாக உடை மாற்ற செல்ல அவளை யாரோ தாக்க.... அது என்ன என்று அறிய டாக்டரும் ஓட அவருக்கும் கும்மாங்குத்து விழுந்து மயக்கம் ஆக...டாக்டர் மனைவி மிக கொடுரமாக கொலை செய்யபடுகின்றாள்.... எல்லாம் முடிந்தது... அதாவது அடாப்சி,சவ ஊர்வலம், அதன் பிறகு அந்த பினத்தையும் எரித்தாகிவிட்டது...

8வருடம் கழித்து டாக்டருக்கு ஒரு ஈமெயில் வர அதனை ஓபன் பண்ணி பார்த்தால் அவரின் மனைவி உயிருடன் இருக்கின்றாள்... யோசித்து பாருங்கள் எட்டு வருடம் கழித்து அதுவும் இறந்து போன காதல் மனைவி உயிருடன் இருந்தால் அவனின் வேதனை எப்படி இருக்கும்???? இன்னும் எடிதயாவது சொல்லி தொலைத்தால் கதையின் டெம்ட் போய் விடும்... அதன் பிறகு வேகம் எடு்க்கும் அந்த கதையில் நாம் பயணிப்பது ஒரு அற்புதமான சஸ்பென்ஸ் திரில்லர்.... மீதி வெண்திரையில்....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

எவிடன்ஸ இல்லாத டாக்டர் மனைலி கொலையை போலிஸ் சந்தேகிக்க, டாக்டர் மனைவியின் உயிர் நண்பி கொலையாகும் போது அந்த பழி டாக்டரின் மீது விழுந்து போலிஸ் துரத்த... அந்த துரத்தல் ஓட்டமும் அதன் முடிவான ஹைவேஸ் கார்களின் விபத்தும் ரொம்பவும் கச்சிதமாக படம் ஆக்கிஉள்ளார்கள்... ஸ்டெடிகேம் ஆப்பரேட்டரின் பயிர்களை ஓட விட்டு எடுத்து இருக்கின்றார்கள்...

அந்த ஹைவேஸ் விபத்து சான்சே இல்லை....

சில்லவுட்டில் ஏரியில் குளிக்கும் காட்சியில் ஒளிப்பதிவு மிகவும் ரசனைக்குறியதாக இருந்தாலும் அந்த சிறுவயது பிளாஸ்பேக் காதல் காட்சியும் அற்புதம்..

டாக்டர் உயிருடன் இருக்கும் தன் மனைவியை தேடிச்செல்லும் போது... ஆமாம் உன் மனைவியை நான் தான் உடலுறவு கொண்டேன்... அதே போல் உடலுறவின் போது உன் மனைவிக்கு என்ன செய்தால் பிடிக்கும் தெரியமா? என்று கேம்கும் போது அந்த டாக்கடர் மருகி அழும் காட்சியிலும்... என் மனைவி அப்படி பட்டவள் அல்ல என்று ஆணித்தரமாக நம்பும் காட்சியில் ஒரு அற்புதமான கணவனின் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்...

ஒரு பெண்ணிடம் போலிஸ் விசாரனை செய்து கொண்டு இருக்க அவள் எனது கணவன் காத்துக்கொண்டு இருப்பான் என்பதை சொல்லிவிட்டு வீட்டுக்குபோகும் போது.. அங்கு டாக்டரின் தங்கை இருக்க... இருவரும் லெஸ்பியன் என்பதை அழகாக சொல்லி இருப்பார்கள்...

துரத்திலின் போது டாக்டர் ஓடும் போது சாலையில் தடுக்கி விழும் அந்த காட்சி உண்மையிலேயே அற்புதமான காட்சி.. சான்சே இல்லை....

இந்த படத்தின் கதை இதே பெயரில் வெளியான நாவலில் இருந்து எடுக்கபட்டது... இப்போது இந்த படத்தை ஹாலிவுட்டில் வாங்கி இந்த வருடத்தில் எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்...

இந்த படத்தை 2008ல் சிறந்த படம் என்று உலகின் பத்து வலைதளங்கள் பாராட்டிஉள்ளது...

இந்த படம் பிரான்சில் வெளியான நாலு வாரத்தில் 17 மில்லலியன் பணத்தை சன் விளம்பரம் இல்லாமல் சாதித்து காட்டியது...

நாவல் முடிவை விட படத்தின் முடிவு நன்றாக இருப்பதாக கதை எழுதிய எழுத்தாளரே சிலாகித்து இருப்பதுதான் படத்தின் வெற்றிக்கு காரணம் என்பேன்.....
சினிமோட்டோகிராபர்Christophe Offenstein இந்த படத்திற்க்கான உழைப்பு அதிகம் என்பேன்...
படத்தின் இயக்குனர் Guillaume Canet ரசனைக்கான காட்சி ,8 வருடம் கழித்து அந்த பெண்ணை காட்ட வேண்டும்... அந்த டாக்டரின் மனைவியை ஸ்டேடிகேமி்ல் பாலோ செய்யும் காட்சி ரசனைக்கான காட்சி...

இந்த படம் four categories at the 2007 Cesar Awards in France: Best Director (Guillaume Canet), Best Actor (François Cluzet), Best Editing and Best Music Written for a Film.

படத்தின் டிரைலர்... 18+
படக்குழுவினர்விபரம்...

Directed by Guillaume Canet
Produced by Luc Besson
Pierre-Ange Le Pogam
Alain Attal
Written by Novel:
Harlan Coben
Screenplay:
Guillaume Canet
Philippe Lefebvre
Starring François Cluzet
Marie-Josée Croze
Marina Hands
Kristin Scott Thomas
Nathalie Baye
Music by Matthieu Chedid
Cinematography Christophe Offenstein
Editing by Hervé de Luze
Release date(s) France:
November 1, 2006
United Kingdom:
June 15, 2007
United States:
July 2, 2008
Running time 125 minutes
Country France
Language French
Budget €11.7 million
Gross revenue $33,385,185


அன்புடன்
ஜாக்கிசேகர்

(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே கண் விழித்து டைப்பும் என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

11 comments:

 1. நல்லதொரு படத்தை அறிமுகம் செய்திருக்கிறீர்கள் தோழா.
  //இந்த படம் பிரான்சில் வெளியான நாலு வாரத்தில் 17 மில்லலியன் பணத்தை சன் விளம்பரம் இல்லாமல் சாதித்து காட்டியது...//

  இதெல்லாம் குசும்பு.விளம்பரத்தால மட்டும் கலெக்ஷன் கொட்டிகிட்டா இருக்கா?

  ReplyDelete
 2. Jackie,

  Nice Write-up.... will try to see this movie..

  ReplyDelete
 3. படத்திற்கான உங்களின் விமர்சனத்தின் உழைப்பு பாராட்டதக்கது.

  ReplyDelete
 4. இதெல்லாம் குசும்பு.விளம்பரத்தால மட்டும் கலெக்ஷன் கொட்டிகிட்டா இருக்கா?//

  நன்றிதமிழ் இனியன் மிக்க நன்றி..

  ReplyDelete
 5. Jackie,

  Nice Write-up.... will try to see this movie..//

  நன்றி வெங்கடேசன்... கண்டிப்பாக இந்த படத்தை பாருங்கள் வாழ்வில் தவற விடக்கூடாத படம் இது..

  ReplyDelete
 6. படத்திற்கான உங்களின் விமர்சனத்தின் உழைப்பு பாராட்டதக்கது.//

  நன்றி காவேரிகனேஷ் உங்க கேமராமேன் மச்சானை பார்த்தேன்..நல்ல மனிதர் சொன்னாரா?

  ReplyDelete
 7. வித்தியாசமான கதைக்களம் போல, பார்த்துட வேண்டியதுதான்.

  ReplyDelete
 8. படிக்கும் போதே செம த்ரில்லா இருக்கே.

  ReplyDelete
 9. http://www.megavideo.com/?v=HK0UHLJN

  ReplyDelete
 10. As usual nice review. Next weekla paathuralaam. Thala ithe maathiri..
  ' Dont say a word ' , ' The Gift ', 'The Game'

  ponra padangalayum time kedaikkum bothu paarunga. Nice time pass movies. Atleast Climax varaikkum thrilla erukkum. intha padangalukkum ungal reviewvai ethripaarkiren.. :)

  ReplyDelete
 11. thanks for introduction of good movie.nice review.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner