இரண்டு வகை பெண்கள் இருக்கின்றார்கள்...எந்த விஷயத்தையும் மிக சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் ரகம்.... சின்ன விஷயமாக இருந்தாலும் அதனை பெரிசு படுத்தும் ரகம்... இந்த படத்தின் கதாநாயகி முதல் ரகம்...
ஒரு பெண்ஒருவனை காதலித்துக் கொண்டு இருக்கும் போதே... இரண்டு நாள் வெளியூரில் இருக்கும் போது இன்னொரு ஆணோடு உறவு கொள்ள முடியுமா? ஒரு ஆணுக்கு இது சாத்தியமான விஷயம்...
நட்பாய் இருக்கும் பெண்ணிடம் ஒரு ஆண் சட்டென உறவு வைத்துக்கொண்டாள்... அது பெரிய பிரச்சனையே இல்லை.. ஆனால் ஒரு பெண் அப்படி வைத்துக்கொண்டாள்... அவள் தேவிடியாவாக , உடல் இச்சைக்கு அலையும் பெண்ணாக, காதலுக்கும் கணவனுக்கும் துரோகம் செய்யும் பெண்ணாக அவளை நாம் உருவக படுத்திவிடுவோம்...
காதலும் காமமும் எவரிடம் வேண்டுமானாலும் எந்த இடத்தி்ல் வேண்டுமானாலும் எந்த வயதில் வேண்டுமானாலும் வந்து விடும்...ஆனால் அதனை தவிர்த்து அதிலிருந்து அழகாக விலகி செல்வது, குடும்பம் மற்றும் காதல் வாழ்க்கை சிதையாமல் இருக்க உதவும்... இது எந்த நாட்டு மனிதனுக்கும் பொருந்தும்....
திருமணமான பெண்ணுக்கு நம் ஊரை பொறுத்தவரை... திருமணத்துக்கு பிறகான வாழ்க்கையில் அவளுக்கு என்று ஒரு பெரிய பர்சனலை, எந்த கணவனும் அனுமதிப்பது இல்லை....எதுவாக இருந்தாலும் அவனுக்கு என்ன தெரியுமோ? அதுதான் அவளுக்கும்... ஆனால் மேலை நாடுகளில் திருமணத்துக்கு பிறகு அந்த பெண்ணுக்கு ஒரு பர்சனல் வாழ்க்கை உண்டு... அது போல் கணவனுக்கும் ஒரு பர்சனல் வாழ்க்கை உண்டு... இதில் பரஸ்பரம் இருவரும் தலையிடுவதில்லை...திருமணம் செய்து கொண்டு விட்டதால் யாரும் யாருக்கும் அடிமையில்லை என்பதான வாழ்க்கை அவர்களுடையது...
THE RETUN OF THE STORKS(navrat bocianov) ஸ்லவோக் நாட்டு திரைபடத்தின் கதை இதுதான்...
Vanda ஜெர்மன் கம்பெனி விமாணத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிகின்றாள்... வேலை முடிந்து வந்ததும் நேராக காதலனை சந்திக்க இருவரும் உறவுகொள்கின்றார்கள்... ஒரு சின்ன பிசக்கு அல்லது ஒரு சண்டை காதலனிடம் ஏற்பட அவள் கோபித்து கொண்டு மன அமைதிக்காக ஸ்லோவாக் மற்றும் யுக்ரைன் நாட்டு பார்டரில் வாழும் அவளது பாட்டியை பார்க்க செல்கின்றாள்...
காதலன் வந்து தேடி பார்க்க தான் பாட்டி வீடு செல்வதாக சொல்ல... அவனும் அவளை தேடி அவளது பாட்டி ஊருக்கு கிளம்பி வருகின்றான்... வன்தா வந்த இடத்தில் பாட்டியை பார்க்க பாட்டிக்கும் தாத்தாவுக்கம் ரொம்பவும் சந்தோஷம்...அங்கு ஒரு டிரைவரோடு நட்பு ஏற்படுகின்றது... அந்த டிரைவருக்கு, பாஸ்போர்ட் இல்லாமல் கஜக்கிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக ஸ்லோவோக்கில் குடியேறும் மக்களுக்கு சட்டவிரோதமாக வேலை செய்கின்றான்.... பணம் வாங்கி கொண்டு அதை ஒரு தொழிலாக செய்கின்றான்... அதே போல் அந்த தொழிலை அவன் தொடர்ந்து செய்ய லோக்கல் தாதாக்களால் மிரட்டபடுகின்றான்... வன்தாவுக்கு அவனுக்குமான பழக்கத்தில் ஒரு கட்டத்தில் உடலுறவுவரை போய் விடுகின்றது.... இவர்கள் இருவரும் அன்னியோன்யமாக இருப்பதை காதலன் பார்த்து விடுகின்றான்...டிரைவரின் சட்டவிரோத குடியேற்ற வேலையில் அவளும் உதவி செய்ய போக அவள் போலிசில் மாட்ட, அதே ஸ்டேசளில் காதலனும் ஐடி கார்டு விசாரனைக்கு மாட்ட இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள...டிரைவர் என்ன ஆனான்? டிரைவரிடம் நெருங்கிய வன்தா காதலனோடு வாழ்ந்தாளா? போன்ற கேள்விகளுக்கு வெண்திரையில் பதில்.....
படத்தின் சுவாரஸ்யங்களில் சில........
இந்த படம் ஒரு காதல் கதை என்றாலும் போகிற போக்கில் சட்விரோத குடியேற்றத்தையும்... அகதி மக்களின் வாழ்க்கை பிரச்சனையும் அதன் வலிகளையும்சொல்லி இருக்கின்றது இந்த ஸ்லோவோக் நாட்டு படம்...
இந்த படத்தை நமது விமர்சன ராஜாக்கள் பார்த்தால்... இது நொட்டை இது நொள்ளை என்று இந்நேரம் எழுதி கிழித்து காயவிட்டு இருப்பார்கள்... அதே போல் அகதி பிரச்சனையை முழுவதும் இந்த படத்தில் சொல்ல வில்லை என்று இயக்குனரிடம் சண்டைக்கு போய் இருப்பார்கள்...இன்னமும் டாக்குமென்ட்ரிக்கும்,திரைபடத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்...
ஸ்லோவோக் பார்டரில் இருப்பதால் எல்லைதாண்டி பிழைப்புக்கு வரும் அகதி மக்களுக்கு வன்தாவின் பாட்டியும் தாத்தாவும் உதவி செய்வது நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிகள்...
சட்டவிரோதமான குடியேற்றம் என்பதால் ஒரு குடும்பம் 4 நாட்களாக பசியில் மறைந்து இருக்கும் காட்சிகளையும் அதன் வலிகளையும் வேதனைகளையும் போகிற போக்கில் சொல்லிவிட்டு போய் இருப்பார்...
ஒரு பெண் அடுத்த ஆணிடம் நெருக்கம் காட்ட பெரிய ரீசன் தேவை இல்லை...என்று இயக்குனர்Martin Repka சொல்லிய விதமும்.... அவளுக்கு பிடித்து இருந்தது... அவளது மனநிலைக்கு அந்த சூழ்நிலைக்கும் அது சரி என்று பட்டது... அதனால் அவள் டிரைவரிடம் நெருக்கமானாள் என்பது போலான காட்சி அமைப்பு அற்புதம்...
காதலியை தேடிவரும் காதலன் நடுவில் ஒரு மோட்டார் சைக்கிள் டாக்சியில் ஏறிக்கொள்ள அதை ஓட்டும் டிரைவருக்கும் இவனுக்கும் ஏற்படும் நட்பு அற்புதம்...
அகதி குழந்தைகளிடம் வன்தா சிறு பிள்ளையாக விளையாடும் காட்சிகள் ரசிக்கலாம்....
படம் நெடுக அற்புதமான லைட்டிங்கில் ஒளிப்பதிவு செய்து இருக்கும் ஒளிப்பதிவாளர் பாராட்டுக்குறியவர்....
காதலனும் காதலியும் ஒரு ஒற்றை மரத்தின் கீழ் உட்கார்ந்து பேசும் அந்த காட்சியின் ஒளிப்பதிவும்... அதற்க்கு முன் அந்த இடத்தின் லாங் ஷாட்டுகள் கவிதை...
அதே போல் ஒரு சர்சின் லாங்ஷாட்டுகள்.. மற்றும் இயற்க்கை எழில்கொஞ்சும் இடம் என ஸ்கிரிப்ட்டில் எழுதியதை செல்லுலாய்டில் பதிந்தது அழகு....
டிரைவரும் வன்தாவும் நிர்வாணமாக குளிக்கும் அந்த ஆற்று காட்சியும், அதே போல் வீட்டில் பின் புறத்தில் குளிக்கும் போது அது படமாக்கிய விதம் அருமை...
படத்தின் முதல் காட்சியில் சிட்டி சப்ஜெக்டு போல காட்டி விட்டு பத்து நிமிடத்துக்கு பின் கிராமத்து பக்கம் போகும் கேமாரா கடைசி வரை சிட்டி பக்கம் வரவேயில்லை...
அந்த தாத்தா பாட்டி மனதில் நிற்க்கும் மனிதர்கள்.... இந்த படம் ரொம்பவும் ஸ்லோ என்பதால் இது பார்த்தே தீர வேண்டிய படம் அல்ல ஆனால் பார்க்க வேண்டிய படம்.....
படத்தின் டிரைலர்...... (must see18++)
படக்குழவினர் விபரம்....
Director:
Martin Repka
Writers:
Eugen Gindl (writer)
Martin Repka (writer)
Release Date:
20 September 2007 (Slovakia)
Genre:
Dram
Unrated, 1 hr. 36 min.
Directed by: Martin Repka
Release Date: September 20, 2007
அன்புடன்
ஜாக்கிசேகர்
(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பா
ReplyDeleteDifferent type of story Jackie sekar
ReplyDeletecant digest something like this
நன்றி தல
ReplyDeleteசற்றே வித்தியாசமான கதை போல, பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete//டிரைவரும் வன்தாவும் நிர்வாணமாக குளிக்கும் அந்த ஆற்று காட்சியும், அதே போல் வீட்டில் பின் புறத்தில் குளிக்கும் போது அது படமாக்கிய விதம் அருமை...
ReplyDelete//
என்னத்த சொல்ல!!!!!
சில காலம் முன்னால் நான் இந்த மாதிரி படங்களை பார்க்கும் பொழுது ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். இவ்வளவு தில்லாக இந்த மாதிரி கதைகளை கையாளுகிறாகளே என்று.
ReplyDeleteஆனால் இன்று நிலைமை வேறு. நம் ஊரில் இது போன்ற விஷயங்கள் மிக சாதரணமாக நடக்கிறது.
நன்றி ஞானசேகரன்...
ReplyDeleteநன்றி இராஜபிரியன்
நன்றி லுசர் பாய்..
நன்றி சைவ கொத்து பரோட்டா..
நன்றி சுப்பு
சில காலம் முன்னால் நான் இந்த மாதிரி படங்களை பார்க்கும் பொழுது ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். இவ்வளவு தில்லாக இந்த மாதிரி கதைகளை கையாளுகிறாகளே என்று.
ஆனால் இன்று நிலைமை வேறு. நம் ஊரில் இது போன்ற விஷயங்கள் மிக சாதரணமாக நடக்கிறது.//
உண்மைதான் லகுட பாண்டி...