ஏன் சினிமா வேண்டும்???? (பாகம்/7)சினிமா சுவாரஸ்யங்கள்

லென்தி ஷாட்களை பற்றி எழுதிக்கொண்டு இருந்தேன்.... அதற்கு நடுவில் இன்னும் சின்ன சின்ன சுவாரஸ்யங்களை நடு நடுவில் பகிர்ந்து கொள்கின்றேன்...


இந்த தொடர் எழுத ஆரம்பித்த பிறகு நிறைய இடங்களில் இருந்து எனக்கு மெயில்கள் வந்து கொண்டே இருக்கின்றன...கைபேசியில் சினிமாவுக்கு வாய்பு கிடைக்குமா? என்றவாறு வரும் தொலைபேசி அழைப்புகள்...

சினிமாவில் சேர வேண்டும் , சினிமாவில் புகழ் பெற வேண்டும், சினிமாவில் சாதிக்க வேண்டும், என்ற ஆசை தமிழ்நாட்டில் பல இளைஞர்களுக்கு இருக்கின்றது...

இலங்கையில் இருந்து ஒரு மெயில்....

hellow sir,im kajiban 4m srilanka.i read ur blog.it is very useful for me.because i also hav a interest in cinema field.especially in cinematography..
here there is no film institute to study.i like to come india for this purpose.but my finance is not enough now,but i"ll come oneday.In this field i dont hav a big experience like u.
but i like to learn more about it.can u help me sir?i like to hav a frienship wid u.because ur tastes&ambition are same wid me.i saw ur documentry films in ur blog.parasuram55 is good.i like it very much.can u guide me for my aim??i lyk 2 knw mor abt still photography & cinematography..
best wishes to u.....

excepting ur reply
kajiban

இந்த கடிதம் இந்த தளத்தை வாசிக்கும் இலங்கை வாசகர் எழுதிய கடிதம்....அவர் மனம் புண்பட கூடாது என்பதற்க்காக அவரின் பெயரை மாற்றி இருக்கின்றேன்... இந்த கடிதம் வந்தது கடந்த மாதம் ஜனவரி ஒன்னாம் தேதி.... ஆனால் இதற்க்கு என்னால் பதில் போட முடியவில்லை.. என்ன எழுதுவது என்றே தெரியவில்லை... குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் ஒரு நாள் சாதிப்பேன் என்று சொல்லும் அவரின் தன்னம்பிக்கைக்கு எனது வாழ்த்துக்கள்...ஆனால் சினிமா என்றால் என்ன என்று அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.... இது போலான கடிதங்கள் நிறைய எனக்கு வருகின்றது என்றாலும்... இதற்க்கு பொதுவான பதிலாக போட்டால் இன்னும் பலரை சென்று அடையும் என்பதற்க்காக இதை எழுதுகின்றேன்...

இது ஒரு சாம்பிள் மட்டுமே... சினிமா என்பது முகவரி அஜீத்தின் இசையமைப்பாளர் கனவு போன்றது என்பேன்...சிலருக்கு மட்டுமே கனவுசினிமா கை கூடி இருக்கின்றது...இன்னும் தெளிவாக குழப்பாமல் சொல்ல வேண்டும என்றால்... சேரனின் மாயக்கண்ணாடி படம் ஒரு மிகச்சிறந்த உதாரணம்...

அந்த படத்தில் ஒரு டயலாக் வரும்... இங்கு வந்து ஜெயிச்ச ஆயிரம் பேரை பார்த்து சினிமாவுக்கு வரனும்னு நினைக்கிறீங்க.. ஆனா இங்க வந்து வாழ்க்கை தொலைச்சு போன பல லட்சக்கணக்கான இளைஞர்கள் கதை உங்களுக்கு தெரிய வாய்பில்லை... அதுதான் நெஞ்சை தொடும் நிஜம்...


சென்னையில் இரண்டு விதமான சினிமா இருக்கின்றது... ஒன்று ஆழ்வார் பேட்டை சினிமா... மற்றொன்று கோடம்பாக்க சினிமா... ஆழ்வார் பேட்டை சினிமாவுக்கு உதாரணமா.. கமல், மணிரத்ணம் போன்றவர்களை உதாரணமா சொல்லலாம்.. காரணம்... கமல் அவுங்கப்பா வக்கில் அவருக்கு ரெண்டு அண்ணன்கள்... சுத்தமா திறமையே இல்லாம இருந்தாகூட அவுங்க வீட்ல உட்கார வச்சி சோறு போட்டு இருப்பாங்க... அவுங்ககிட்ட காசுபணம் இல்லாம இல்லை..
மணிரத்னம் சொந்த ஊரு மதுரை... நல்லா படிச்சவரு எம்பிஏ முடிச்சவரு.... அவங்க அண்ணன் ஒரு பெரிய புரொட்யூசர்... சப்போஸ் சினிமா வித்தை கை கொடுக்கலைன்னாலும் எம்பிஏ படிச்சதனால நல்ல வேலையாவது கெடைக்கும்.... இந்த இரண்டு பேருடைய கதைகளும் சின்னஉதாரணங்கள்தான்... இந்த உதாரணங்கள் எதுக்கு சொல்ல வரேன்னா? உங்க பேமிலி பேக்ரவுண்ட் ரொம்ப முக்கியம்... உங்களுக்கு படிப்பு ரொம்ப ரொம்ப முக்கியம்...

சரி படிப்பு எதுக்கு முக்கியம்...அரவிந்சாமின்னு ஒரு நடிகர் புகழ் உச்சில இருந்த நடிகர் ....பட வாய்ப்புகள் கொறஞ்ச போது சட்ன்னு சினிமாவை தூக்கி தூர போட்டுட்டு பிசினஸ் பண்ண போயிட்டாரு.... அதுக்குதான் படிப்பும் குடும்ப பேக் ரவுண்ட் முக்கியம்னு சொல்லறேன்...



சரி கோடம்பாக்கம் சினிமா அப்படின்னா என்ன??? இப்ப பாக்கியராஜ், சேரன்,பார்த்தீபன், ரவிக்குமார்,ராமராஜன் ,பாரதிராஜா இவுங்களை சொல்லலாம்... இதுல பாதி பேரு சென்னைக்கு வெளியே தென்மாவட்டத்துல இருந்து சினிமாவுக்கு வந்தவங்க.... இவுங்களுக்கு எந்த பின்புலமும் இல்லை... சென்னையில வந்து 3 வேலை சோறு, தங்க இடம், இதற்ககான போராட்டமே பெரிய விஷயமா இருக்கும்...

சேரனின் டுரிங் டாக்கிஸ் புக் படிச்சவங்களுக்கு அவுரு எவ்வளவு கஷ்டபட்டு இந்த இடத்துக்கு வந்து இருக்காருன்னு தெரியும்... அவரு சொல்லிட்டாரு... பலர் சொல்ல வாய்பில்லாம இருக்காங்க....

சினிமா புடிச்சிடுத்து சட்னு ஊர்ல இருந்து பஸ் புடிச்சி வந்துட்டேன்... என்று சொல்லி, தங்க இடம் இல்லாமல் சென்னையில சாப்பாட்டுக்கு கஷ்டபட்டு, சினிமா பழகி அதன் பிறகு படம் கிடைச்சி, வாழ்க்கைல செட்டில் ஆனவங்க...சில பேருதான்... இதுல சிலருக்கு அதிஷ்டம் இருக்கும் அதனால சர சரன்னு மேல வந்து இருப்பாங்க...

சிலருக்கு எல்லலா தெறமையும் இருந்தாகூட அதிஷ்டம் இல்லாத காரணத்தால இன்னும் அதே நிலைமையில இருக்கறவங்க இங்க நிறைய பேரு .....வாழ்க்கையை தொலைச்சி வயசை தொலைச்சு, இளமையை தொலைச்சவங்க ஏராளம்...

சரி சினிமாவுக்கு வர என்ன தகுதி வேணும்....... அது அடுத்த பதிவில்..

அன்புடன்
ஜாக்கிசேகர்

(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே கண் விழித்து டைப்பும் என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....



15 comments:

  1. தல நான் என்னன்னு சொல்றது ...

    ReplyDelete
  2. எல்லாம் சரிண்ணே.. சூப்பர் ஸ்டார் ரஜினிய விட்டுட்டீங்களே.. அவரும் கஷ்டப்பட்டு ஜெயிச்சவர் தானே..

    ReplyDelete
  3. Gud one...keep writing on this...i too like cheran's 'mayakannadi' though many in blog world feels it boring.

    ReplyDelete
  4. அருமையான, பொறுமையான விளக்கம்.

    ReplyDelete
  5. நேர்மையான பதிவு

    ReplyDelete
  6. Very useful advise to those who thinks cinema has wide open doors. I heard many stories. The number of failures are more than its counter part. But the one who is talented will defntly come out wid colours...

    Thanks jackie for a nice post..

    Disci: Apdiye oru 15 varushathuku munnadi VIJAY kum solli irukalam illa ;)

    ReplyDelete
  7. தமிழ் திரையுலகம் பற்றிய நல்ல அலசல்,,,,,,தொடருங்கள்.....எதிர்வரும் இடுகைகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  8. cinemavukku paattu ezuthurathu kuuda appaithaanaa jackie..

    is it that much pain ful to survive...

    ReplyDelete
  9. திரைப்படக் கல்லூரியிலிருந்து வந்தும் கூட மிளிர்ந்தவர்கள் சிலரே என நினைக்கிறேன்.

    சென்னையில் வேலையில் இருந்து கொண்டே நாடகம்,சினிமா என்று முயற்சி செய்தவர்கள் நிறைய பேர்.

    பாரதிராஜா,பாக்கியராஜ்,இளையராஜா,சேரன் வரிசை கொஞ்சம் பேர்தான்.அந்தக்காலமும் இப்பொழுது மாறி விட்டதாகவே தெரிகிறது.

    இப்பொழுது அரசியல் பலம்,வாரிசுகள் மட்டுமே இதயம் இனிக்கும் காலம்.

    தொடரட்டும் எழுத்தும் கருத்தும்.

    ReplyDelete
  10. நல்ல அறிவுரை தல. நன்றீ

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner