(changing lanes)ஒரு விபத்தும், ஏற்றத்தாழ்வுகொண்ட இரு மனிதர்களும்...


இந்த உலகில் எல்லோரும் நல்லவர்களே... சூழ்நிலை மட்டுமே... ஒரு சிலரை வேறு வாழ்க்கை வாழ்ந்து விட்டு போக நிர்பந்திக்கின்றது...சிலர் எப்போதுமே நல்லவர்கள்தான்... அவர்களுக்கு எந்த இடர்பாடுகள் வந்தாலும் தன் கொள்கையில் இருந்து மாற மாட்டர்கள்...

குருதிப்புனல் படத்தில் ஒரு டயலாக் வரும்... என் நேர்மையை கேலி செஞ்சா அது எனக்கு பிடிக்காதுன்னு....கமல் சொல்லுவார்... அப்படி வாழும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்...
ஒரு இடத்திற்க்கு வெகு அவசரமாக செல்ல வேண்டும்... நீங்கள் ஒரு வண்டியின் மீது மோதிவிட்டீர்கள்.. அங்கு இருந்து உடனே செல்ல விரும்புவீர்களா? அல்லது அங்கு இருந்து கொண்டு சண்டை போட்டுக்கு கொண்டு இருக்க விரும்புவீர்களா?... சரி நீங்கள் இடித்த வாகனம் ஸ்டார்ட் ஆகவில்லை... விபத்தில் வாகனத்தை இடி கொடுத்த நண்பரும் ரொம்ப அவசரமாக செல்ல வேண்டும்... அப்போது உங்களிடம் உதவி கேட்க நீங்கள் செய்வீர்களா மாட்டிர்காளா?


changing lanes படத்தின் கதை இதுதான்.....
Gavin Banek(Ben Affleck) பல கோடி சொத்துக்களுக்கான ஒரு முக்கிய கோப்பினை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும்... அந்த பைல்தான் அவன் வாழ்க்கையே.. அந்த பைல்தான் அவன் எதிர்கால கனவுகளுக்கும் காதலுக்கும் திறவுகோல்....அந்த பைலை கோர்ட்டில் ஒப்படைக்க அதாவது அந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை லீகலாக உரிமை கொண்டாட... அந்த பைலில் உள்ள டாக்குமெண்ட்டுகள் ரொம்பவும் முக்கியம்.... அவசரமாக கோர்டுக்கு காரில் போகும் போது எதிர்பாராத விதமாக... Doyle Gipson(Samuel L. Jackson) காரில் மோதி விடுகின்றான்...

கிப்சன் பற்றி சொல்ல வேண்டும் என்றால் குடிக்கு அடிமையாகி மெல்ல மெல்ல வெளியே வந்து தனது மனைவி மற்றும் பிள்ளைளுடன் வாழ ஒரு வீட்டு லோனுக்காக என்னை போல் அலைந்து கொண்டு இருக்கும் ஒரு நடுத்தர வர்கம்..இரண்டு ஆண் பிள்ளைகள்... அதனால் ஒரு நல்ல வீட்டில் வாழ வேண்டும் என்பதே கிபசன் மனைவியின் கனவு... அதனால் டைவர்ஸ் வரை போகின்றது... இருப்பினும் லோன் கிடைத்து ஒரு வீட்டில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற காரணத்தால் கோர்ட்டில் போய் வீட்டின் மேட்டர் சொல்லி சமாதானபடுத்தி மனைவி குழந்தைகளை அழைத்து வர வேண்டும்... ஆனால் எதிர்பாராத விதமாக இருவர் காரும் விபத்துக்குள்ளாக... அந்த நேரத்தில் கேவினின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள டாக்குமென்ட் கிப்சன் கைக்கு போய் விடுகின்றது... இரண்டு பேரின் பைலும் மாறிவிடுகின்றது.... கெவின் அவசரத்தில் கிப்சனுக்கு லிப்ட் கொடுக்காமல் போய் விட, அவசரத்தில் நம்பரும் வாங்காமல் சென்று விட.... இருவமே கோர்ட்டில் தோற்றுவிட...


பைலை கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று கெவின் தரப்பு சொல்கின்றது... மனைவிக்கு தங்க வீடு இல்லையா ? அதுக்கு லோனும் இல்லையா-.. பிரிஞ்சி போயிடுங்க என்று கோர்ட் சொல்கின்றது.... இருவரும் ஒரு வரை ஒருவர் சந்தித்து கொண்டே ஆக வேண்டும்... கெவினுக்கு கிப்சனிடம் இருக்கும் சிகப்பு கலர் பைலை வாங்கியாவேண்டு்ம்... இருவருரையும் சூழ்நிலை இணைய விடாமல் சடுகுடு ஆட்டம் எப்படி ஆடுகின்றது என்பதை வெள்ளித்திரையில்.....


படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

இந்த படம் ஒரு பில் குட் மூவீ...

பர்சூட்ஆப் ஹாப்பினஸ் போல் பல இடங்களில் கண்களில் நீரை வர வழித்து விடுவார்கள்...

நடுத்தரவர்கத்தின் ஏழ்மை இயலாமை சாமுவேல் ஜாக்சன் கண்களில்....

பணக்கார தெனவெட்டு...பென்னிடம்...

மிக முக்கியமாக பலகோடி மதிப்புள்ள பைல் காணவில்லை என்பதை கோர்ட்டில் தேடிக்கொண்டு இருக்கும் போது பதட்டம் இல்லாமல் சிரிக்கும் அந்த காட்சி அற்புதம்.... எல்லோருமே பதட்டபட்டு நடிக்கும் போது... அவன் இயலாமையை நினைத்து அந்த இடத்து சிரிப்பு சூப்பர்...

ரொம்பவும் சோகமாக.. உட்கார்ந்து கொண்டு சாமுவேல் ஒரு கட்டிங்கை அடிக்க ரொம்ப நேரம் பார்த்துக்கொண்டு அதை எப்படி அடிப்பது என்று யோசிக்கும் காட்சியில் அவன் அதை தொட்டுவிடக்கூடாது என்று பார்வையாளர்கள் பதறும் வகையில் வைக்கபட்ட அந்த பார் காட்சி அற்புதம்....

லோன் கொடுக்க மடியாது என்று காரணம் சொல்லி விட்டு அந்த காரணத்தை சரி செய்து விட்டு லோன் கேட்க மீண்டும் முடியாது என்று சொல்லும் போது.. அந்த தக்கனுன்டு கம்யூட்டருக்கு என்ன தெரியும் என் வேதனை என்று அதை போட்டு உடைத்து விட்டு போவது நடுத்தர மனிதனின் இயலாமையும் கோபத்தையும் ஒரு சேர வெளிபடுத்தும் காட்சி அது....

இந்த படத்தின் இரு மெயின் கதாபாத்திரங்களும் அவர்கள் பக்கத்தை பொருத்தவரை ரொம்பவும் யோக்கியமாணவர்கள்...

இந்த படம் சற்றே மாற்றம் செய்து இந்தியில் நானாபடேகரும் தமிழில் பசுபதியும் நடித்து வெளிவந்த டாக்சி நம்பர் 9211 படமாகும்...
படத்தின் டிரைலர்...



படக்குழுவினர் விபரம்....

Ben Affleck as Gavin Banek
Samuel L. Jackson as Doyle Gipson
Directed by Roger Michell
Produced by Scott Rudin
Scott Aversano
Written by Chap Taylor
Michael Tolkin
Starring Ben Affleck
Samuel L. Jackson
Toni Collette
Sydney Pollack
William Hurt
Amanda Peet
Music by David Arnold
Cinematography Salvatore Totino
Distributed by Paramount Pictures
Release date(s) April 12, 2002
Running time 99 minutes
Country United States
Language English
Budget $45 million
Gross revenue $94,935,764
அன்புடன்
ஜாக்கிசேகர்

(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி

10 comments:

  1. படத்தின் கதையை படிக்கும்போதே நினைத்தேன், எங்கேயோ பார்த்த நினைவு, நீங்களே சொல்லி விட்டீர்கள்.

    ReplyDelete
  2. Once திரைப்படம் பாருங்கள், அருமை. தற்செயலாக காலை 5 மணிக்கு star Movies பார்த்தால் 2 நிமிடங்களிலேயே படம் பிடித்துப் போய்விட்டது. பின் ஏழு மணி வரை படம் பார்த்து, 9 மணிவரை தூங்கி, அலுவலகம் சென்று மேனேஜரிடம் திட்டு வானிகினேன்.

    ReplyDelete
  3. அருமையான அலசல் தல, நன்றி தொடர்க உங்கள் சேவை

    ReplyDelete
  4. Jackie - As usual your own style... Nice write-up.

    ReplyDelete
  5. நன்றி தொடர்க உங்கள் சேவை...

    ReplyDelete
  6. Changing Lanes பார்க்கல, ஆனால் ஹிந்தியில Taxi No. 9 2 11: Nau Do Gyarah பார்த்தேன், தமிழில் டாக்சி நம்பர் 9211 பார்த்தேன். ஹிந்தியில பரவாயில்ல ஆனால் தமிழ் மகா சொதப்பல்.

    ReplyDelete
  7. "படத்தின் கதையை படிக்கும்போதே நினைத்தேன், எங்கேயோ பார்த்த நினைவு, நீங்களே சொல்லி விட்டீர்கள்"

    :-))))

    ReplyDelete
  8. எனக்கும் பிடித்த படம்.சூப்பரா சொல்லி இருக்கீங்க.கேபிள் விழாவுல உங்க ரொம்ப miss பண்ணோம்.ஃபார்மாலிட்டி
    டன்:)

    ReplyDelete
  9. தமிழ்ல செம சொதப்பலா இருக்கும் இந்த படம்....

    ReplyDelete
  10. தமிழ்ல செம சொதப்பலா இருக்கும் இந்த படம்....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner