ஆல்பம்...
===============
திரும்பவும் புனேவில் குண்டு வெடித்து இருக்கின்றது... வழக்கம் போல் உளவு துறை பிரியாணி சாப்பிட்டு விட்டு பல் குத்துக்கொண்டு இருந்ததா என்ன??....9/11க்கு பிறகு அமெரிக்காவில் ஒரு பொட்டு பட்டாசு கூட வெடிக்கவில்லை... சரி அவங்க கூட நம்மளை எல்லாம் கம்பேர் பண்ணாதிங்க என்று சொல்கின்றீர்களா?? சரி கம்பேர் பண்ணவில்லை... ஏதோ ஒன்னு வெடிச்சா பராவாயில்லை.... அவ்வப்பபோது வெடித்துக்கொண்டுதானே இருக்கின்றது... என்ன செய்ய... இறந்து போனவர்களுக்கு பிரதமர் நல நிதியில் இருந்து 2 லட்சம் வழங்கபட்டு இருக்கின்றது.... அது போதும்.......
======================================================
மை நேம் இஸ் கான் படத்தை தடை செய்ய முயன்ற சிவசேனாவினர் முக்குடைந்து போய் இருக்கின்றார்கள்... படத்துக்கு பம்பாயில் முதல் நாள்... ஓப்பனிங்கிலேயே நல்ல ரெஸ்பாண்ஸ்... எப்போது பார்த்தாலும் நடிகர்கள் எதாவது சொல்லிவிட்டால், அவர்களை பி்ரித்து மேய்ந்து கொண்டு இருக்கின்றார்கள்... அதே போல் பல பேர் பொது வாழ்வில் கருத்து சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்... ஆனால் அவர்களை கேள்வியே கேட்பதில்லை.... நடிகனை எதிர்க்கும் அளவுக்கு புகழ் போதை இதில் கிடைக்காது என்பதால்.....
============================================================
தெலுங்கான இப்போதைக்கு முடிவதாக தெரியவில்லை.... உண்டு இல்லை என்று சொல்லாமல் நாளுக்கு நாள் அதை ரப்பர் போல் இழுத்து்கொண்டே போய் கொண்டு இருப்பதால் பல தொழில்கள் பெருமளவு பாதித்து கொண்டு இருக்கின்றன...
====================================
மிக்சர்.....
==========================================================
வீட்டு லோனுக்கு நான் படும் பாட்டை எழுதியதும் ... பதிவர்களும் வாசகர்களும்.. என்னை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறியதும்... சிலர் உதவி செய்வதாக சொன்னதும்... என்னை நெகிழவைத்து கொண்டு இருக்கின்றன... சில விஷயங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றேன்... அது நன்றாக நடை பெற்றதும் சொல்கின்றேன்...
============================================================
போருர் பக்கத்தில் கொளப்பாக்கத்தில் ,மேக்ஸ் ஒர்த் நகரில்தான் வீடு பார்த்து இருக்கின்றேன்.... மெக்ஸ் ஒர்த் நகருக்கு முன்று வழியாக வரலாம்... ஒன்று மியோட் ஹாஸ்பிட்டல் பக்கத்தில் மணப்பாக்கம் வழியாக வருவது... மற்றது டிஎல் எப், முகலிவாக்கம் வழியாக,மூன்றாவது போருர் பாய் கடை பஸ் ஸ்டாப் வழியாக அங்கு செல்லலாம்... பொன்வித்யாசரம் பள்ளி அருகிலேயே....
========================================
இரண்டு நாட்கள் பெங்களுருக்கு போய் இளமையை புதுப்பித்துக்கொண்டேன்...அரவிந்தன் மற்றும்அக்னி பார்வைக்கு போன் செய்தேன்... ஆனால் சந்திக்க நேரம் அமையாத காரணத்தால் இருவரையும் சந்திக்க முடியவில்லை... பெங்களுரில் போரமில் என் செல்போனில் நானே எடுத்துக்கொண்டது...
============================================
இந்த வாரம் காதலர் தினம் ஞாயிறு அன்றே வந்த காரணத்தால் அம்மா ஸ்பெஷல் கிளாஸ் போயிட்டு வரேன் என்று சொல்லும்.... பப்பு வேகாத காரணத்தால் சென்னை கோயம்பேட்டில் ரோஜா விற்பனை விழ்ச்சியாம்... அதே போல் பெங்களுர் மால்களிலும் கூட்டம் குறைவுதான்...
===================================
வாழ்த்துக்கள்....
கேபிளுக்கும் பரிசலுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்... என் மாமியார் வீடு இருக்கும் பெங்களுருக்கு வீட்டு லோன் விஷயமாக மனைவி சைட் நண்பர்களை பார்க்க போய் இருந்தோம்... அதனால் என்னால் கேபிள் பரிசல் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை... இருவரும் இன்னும் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்...
==============
நண்பர் அதிஷா, மற்றும் அதிபிரதாபன் இருவரும் மாப்பிள்ளை அவதாரம் எடுத்து இருக்கின்றார்கள்... இருவருக்கும் எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்...
==================
நண்ப்ர் வீட்டில் டிவியே போடுவதில்லை...3வயது பையன் திருமதி செல்வத்தில் வரும் கேரக்டர்கள் பெயரை அப்படியே சொல்லுவதால்... பயந்து போய் இரண்டு வாரமாக டிவியே போடவில்லை .. நண்பரின் மனைவி...
=======================
==============
இந்தவார சலனபடம்...
ஒரு சிம்பிள்... கான்செப்ட் அனால் அது சொல்லும் கதைகள் ஏராளம்...
கண்டிப்பாக 18++
==========================================================
நான் எடுத்ததில் பிடித்தது.....
பெங்களுர்...லால்பார்க்கில் இரவு தொடங்கும் ஒரு மாலை நேரத்தில் ஒரு தூங்கு மூஞ்சி மரத்தின் கிளைகள்.... ஏதோ கிராமத்தின் நடந்து செல்லும் பாதை போல்.....
================
பாண்டிச்சேரியில் ஒரு பள்ளியின்... பக்கத்து தெருவில் எதிர்கால கனவுகளுக்கு உதவியாய் இந்த மிதிவண்டிகளும் காத்து கிடக்கின்றன...
====================
முட்டுக்காடு ஏரியின் ஒரு மாலை வேளை....
====================
படித்ததில் படித்தது....
இயக்குனர் கற்றது தமிழ்ராம் எழுதிய... எழுதி கிழித்த கடிதம்....கட்டுரை.......
சுத்தம் செய்யபடாத என் படுக்கையில் வீச்சம் அடிக்கும்போர்வையின் கீழ் அசுத்தங்களும், பாவங்களும்,தூரோகங்களும்,துக்கங்களும்,எச்சில் ஒழுக உறங்க,நான் பல நாள் உறங்காமல் பரிசுத்த உறக்கத்திற்க்காக காத்திருக்கற என் அறைக்கு திரும்பினேன்... உன்னை ரயிலேற்றிவிட்ட பின்...
(இந்த வார ஆனந்த விகடனில் 29ம் பக்கத்தில்.....)
நண்பர் சந்திப்பு......
புண்ணாக்கு மூட்டை என்ற பெயரில் எனக்கு பின்னுட்டம் இடும் நைஜீரியா பாலா இந்த வாரத்தில் ஒரு மதிய வேளையில் காலில் சூடுதண்ணீர் ஊற்றிக்கொண்டே வந்த வரை நானும் நண்பர் நித்யகுமாரனும் சந்தி்த்தோம்...
நான்வெஜ்.....18+
ஜோக்..... 1
ஒரு நடுத்தர வயது பெண்மணி கால் முட்டியில் அதீத வலி காரணமாக....மூட்டு வலி டாக்டரை சந்தித்தாள்... ஒரு கட்டத்தில் எல்லா செக்கப்பும் செய்து விட்டு எந்த பொசிஷனில் செக்ஸ் வைத்து கொள்கின்றீர்கள்... என்று கேட்ட போது... அவள் தயங்காமல் டாக்கி ஸ்டைல் என்றால்....டாக்டர்.. சொன்னார் அதுதான் முழங்கால் மூட்டு வலிக்கு பிரச்சனையே சோ... நீங்கள் பொசிஷனை மாத்தி கிட்ட இந்த முழங்கால் வலி பிரச்சனையே வராது... என்று சொல்ல அது மட்டும் முடியாது டாக்டர் என்று அடம் பிடித்தாள்...உங்க பார்டனரை அழைத்து வாருங்கள்... அவருக்கு புரிய வைக்கின்றேன் என்று சொல்ல சான்சே இல்லை என் வீட்டு டாபர்மேனுக்கு இந்த பொசிஷன் சொல்லிகொடுக்கறதுக்குள்ளயே... தாவு தீந்திடுச்சி..... என்று அலுத்துக்கொண்டாள்...
அன்புடன்
ஜாக்கிசேகர்
(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஎப்படி எல்லாம் யோசிக்கிறாங்க (சலன படத்த சொன்னேன்) :))
ReplyDeleteஎப்படி எல்லாம் யோசிக்கிறாங்க (சலன படத்த சொன்னேன்) :))
ReplyDeleteமுட்டுக்காடு படம் சூப்பர்....
ReplyDeleteஎழுதி கிழித்த கடிதம் உண்மையலேயே செம...
ad videos ellam enga jackie pudikreenga?....
ReplyDeletevaram varam vithyasam...keep going!!!
time pass padangal varisaiyil 'aayirathil oruvan' padathai kuripitatharkaaga ungalai vanmaiyaaga kandikindraen!!!
ReplyDeleteமுதல் & மூன்றாம் படங்கள் சூப்பர். நான்வெஜ் தான் கொஞ்சம் காரம் கம்மி. இன்னும் கொஞ்சம் பெப்’பர் சேருங்க ;-)
ReplyDeleteபடங்கள் அருமை!
ReplyDeleteஅன்புடன்,
-ரவிச்சந்திரன்
A complete post..
ReplyDeleteNice photos..very good joke..
Superb sir..
//மை நேம் இஸ் கான் படத்தை தடை செய்ய முயன்ற சிவசேனாவினர் முக்குடைந்து போய் இருக்கின்றார்கள்... படத்துக்கு பம்பாயில் முதல் நாள்... ஓப்பனிங்கிலேயே நல்ல ரெஸ்பாண்ஸ்... எப்போது பார்த்தாலும் நடிகர்கள் எதாவது சொல்லிவிட்டால், அவர்களை பி்ரித்து மேய்ந்து கொண்டு இருக்கின்றார்கள்..//
ReplyDeleteஇவனுங்களுக்கு வேற வேலையே இல்ல தல..சும்மா யாராவது பிரபளமா பாத்து பிராப்ளம் உண்டு பன்னுவானுங்க..
எல்லாம் சாப்பிட்டாச்சு பில்லையும் ஓட்டு போட்டு கட்டியாச்சு..அப்பறம் கேபிளாரின் புத்தக வெளியீட்டில் உங்களை எதிர் பார்தேன்...
hey, in USA too lot of terrorists attacks happened after sept11.
ReplyDeleteRecent example is Xmas time bombing.
Like removal of sivaraj patil, shall we change chidambaram too
நான்வெஜ் மற்றும் வெஜ் சாப்பாடு நல்லா ருசியாயிருக்கு தல
ReplyDelete\\நண்ப்ர் வீட்டில் டிவியே போடுவதில்லை...3வயது பையன் திருமதி செல்வத்தில் வரும் கேரக்டர்கள் பெயரை அப்படியே சொல்லுவதால்... பயந்து போய் இரண்டு வாரமாக டிவியே போடவில்லை .. நண்பரின் மனைவி//
ReplyDeleteடெர்ரா இருக்கு பாஸ் .
படம் சூப்பர்
ReplyDeleteமுட்டுக்காடு படம் Supper
ReplyDelete