சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(24/02/2010)

ஆல்பம்....

அஜித் அவருடைய கருத்தை சொன்னார்... அதை ரஜினி எழுந்து நின்று கைதட்டி ஆமோதித்தார்.....அஜித் சில வார்த்தைகளை சபையில் பேசிவிட்டார்.. அப்படி பேசி இருக்க கூடாதுதான்...அந்த சமாச்சாரம் இன்னமும் நீரு பூத்த நெருப்பாக புகைந்து கொண்டு இருக்கின்றது.... இது இலங்கையா? அல்லது கம்யுனிஸ்ட் சீனாவா...???சரி அதை எல்லாம் விட்டு தள்ளுங்கள்.. நமது நாடு ஜனநாயக நாட இல்லையா? அதை சொல்லுங்கள்... இதில் சாதி சாயம் வேறு பூசிக்கொண்டு இருப்பது சற்று கவலை அளிக்கின்றது....
==================
ஈழ போராட்டத்துக்கு முத்துக்குமாரை போல, தெலுங்கானவுக்காக ஒரு மாணவர் தீக்கிரையாகி உள்ளார்... அந்த மாணவனின் குடும்பத்தை யோசிக்கும் போது நெஞ்சு கணக்கின்றது... எவ்வளவு கடன் வாங்கி படிக்க வைத்தார்களோ? இறந்த மாணவனின் குடும்ப பொறுப்புகள் என்ன? என்ன? என்று தெரியவில்லை... சட்டென எடுத்த அந்த உணர்ச்சி மேலிட்ட முடிவால் எத்தனை பேர் கண்ணுக்கு தெரியாமல் பாதிக்கபட போகின்றார்கள் என்று தெரியவில்லை...

===============================

9/11ன் போது விமானம் மோதி நடந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க,டுவின் டவரில் இருந்து குதித்து உயிர் விடடவர்களை நாம் டிவியில் பார்த்தோம்... அதே போல் பெங்களுரில் நேற்று நடந்தகார்ல்டன் டவர்ஸ் தீ விபத்தில் 5 வது மாடியில் இருந்து குதித்து உடல் சிதறி இறந்து போய் இருக்கி்ன்றார்கள்.... இறந்து போனவர்களுக்கு அஞ்சலி தெரிவித்துக்கொள்வோம்...

===================
தகவல் தொழில் நுட்ப பூங்கா அருகில் உள்ள எல்லா ஆந்திரா மேஸ்களில்லும் சொல்லி வைத்தது போல் 30 ரூபாய்க்கு கொடுத்த சாப்பாட்டை 40 ரூபாய்க்கு ஏற்றிவிட்டார்கள்... இன்னும் பெட்ரோல் விலை ஏறவேயில்லை அதற்குள் ஏற்றி விட்டார்கள்... சென்னை வேளச்செரி டிசிஎஸ் பக்க்த்து சந்தில் மொட்டை மாடியில் ஒரு ஆந்திரா மெஸ் இருக்கின்றது....மதிய நேரத்தில் கூட்டம் அல்லுகின்றது... பொதுவாக ஆந்திரா மெஸ் சேவல் பண்ணையாகதான் பார்த்து இருக்கின்றேன்... ஆனால் இந்த மெஸ்சில் பல அழகு பதுமைகள் சாப்பிடுவதை பார்த்து அசந்து போய்விட்டேன்.... டிசீஎஸ் சைடு ரோட்டில் உள்ளது... கடை பெயர் மறந்து விட்டேன் யாருக்காவது தெரிந்தால் பின்னுட்டத்தில் தெரியபடுத்தவும்...

(நம்ம ரேஞ்சிக்கு போட்டி எல்லாம் வைக்க முடியுமா என்ன?....)

==================================
மிக்சர்....
நான் 5 வருடம் பணியாற்றிய இந்துஸ்தான் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ் கேளம்பாக்கம் சென்னை, காலேஜில் விஸ்காம் துறையினர் நெஷனல் லெவல் குறும்பட போட்டியை நாளையும் (25/02/2010) (26/02/2010)நாளை மறுநாளும் நடத்த உள்ளனர்... குறும்பட ஆர்வலர்கள் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்... காலை வேளையில் திரைப்பட துறையினர் கலந்து கொள்ளும் கலந்தாய்வும்...மதியத்துக்கு மேல் குறும்பட திரையிடலும் நடைபெற இருக்கின்றது... அவர்கள் தளத்தின் போட்டோ கேலரியில் நான் வேலை செய்த போது எடுத்த இரண்டு படங்களையும் போட்டு பழைய ஞாபகத்தை கிளறிவிட்டு விட்டார்கள்... அதே போல் கல்லூரியின் டைரக்டர் சுசன் மார்த்தாண்டம் என் அன்புக்கு உரியவர்.... அதே போல் என்னோடு பணி புரிந்த மீடியா டிப்பார்ட்மென்ட் நண்பர்கள் பலர் இன்றும் என்னோடு நட்பு பாராட்டுகின்றார்கள்... வேலை ஏதும் இல்லாவிட்டால் நான் இரண்டு நாளும் அங்கு போய்விட்டு வரலாம் என்று நினைக்கின்றேன்.....

பதிவர் தண்டோராவின் மகள் எங்கள் கல்லூரியின் மீடியா டிப்பார்ட்மென்டில்தான் படித்து வருகின்றார்.... தண்டோராதான் கேமராமேன் ராம்ஜி நம்பர் கொடுத்து பேச சொல்லி இருக்கின்றார்...மேலும் விபரங்களுக்குஇங்கே கிளிக்கவும் நான் கல்லூரியில் படிக்காவிட்டாலும் அந்த கல்லூரியில் வேலை செய்த போது அந்த வாழ்க்கை என் வாழ்வில் ஒரு வசந்த காலம் என்பேன்...

பொதுவாக கம்யூட்டர் இயக்க நல்ல ஆங்கில புலமை வேண்டும்.... அதற்க்கு மெத்த படித்து இருக்க வேண்டும் என்ற என் எண்ணவோட்டத்தை தவிடு பொடியாக்கிய இடம் அந்த கல்லூரி என்பேன்...சொன்னால் நம்ப மாட்டிர்கள்... முதன் முதலாக“ டி” டிரைவ் பைலை “இ” டிரைவுக்கு காப்பி பேஸ்ட் செய்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்பேன்...


==============
இந்த வார சலனபடம்.... 18+
ஒரு சிறிய கதை விளம்பரமாக.....
==========
நான் எடுத்ததில் பிடித்தது விஷுவல் டேஸ்ட்.....
திருவண்ணாமலை கோவிலின் கோபுரங்கள் சில கோணங்களில்...
==================

படித்ததில் பிடித்தது....

இப்படி பொது விஷயத்தில் எத்தகைய ஈடுபாடும் காட்டாமல் அஜித் போன்ற நடிகர்கள்... கோடிகணக்கில் சம்பளம் வாங்குகின்றார்கள்.. அதற்கான சிறு நன்றி கடனாக மக்களக்கான போராட்டங்களில் கை கோர்க்கலாமே... அதை விடுத்து தமிழ் அது இதுவென கண்ட கண்ட போராட்டங்களுக்கு வற்புறுத்தி அழைக்கின்றார்கள் என்று ஒரு வார்த்தையை சொல்லி இருப்பது கண்டிக்கதக்கது...

(இந்த வார ஜுனியர் விகடனில் தமிழர் பேரவை தலைவர் சனார்தனம்....)

நான் வெஜ்....

ஜோக்...1

கோடிட்ட இடத்தை நிரப்புக...

1. BOO_S ?
2. _ _ NDOM ?
3. F_ _ K ?
4. P_ N_S ?
5. PU_S_ ?

ANSWERS GIVEN ""BELOW""

1. BOOKS
2. RANDOM
3. FORK
4. PANTS
5. PULSE

நல்ல சிந்தனை நலம் பயக்கும்.........
=============================
ஒருசின்ன தத்துவம்....

காதல் என்து என்ன-?
யாரோ ஒருத்தன் கட்டிக்க போற பொண்ணுக்கு, ஐஸ்கிரீம்,ஸ்வீட், போ்அன்டுலவ்லி போல பல பொருட்கள் வாங்கி கொடு்த்து, ஒடம்பை தேர்த்திவிட்டு, சுடிதார், வாட்ச் , காஸ்மெட்டிக்ஸ் எல்லாம் கிப்டா வாங்கி கொடுத்து, அட்டுபிகரை அழகான பிகரா மாத்தி.... யாரோ ஒரத்தனுக்கு கட்டி கொடுக்கற வெட்டி வேலைதான் காதல்......

அன்புடன்
ஜாக்கிசேகர்

(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

27 comments:

 1. தல, தத்துவத்துல முதல் வரியும் கடைசி வரியும் ஒண்ணா இருக்கு, கொஞ்சம் மாத்துங்களேன்

  ReplyDelete
 2. //இது இலங்கையா? அல்லது கம்யுனிஸ்ட் சீனாவா...???சரி அதை எல்லாம் விட்டு தள்ளுங்கள்.. நமது நாடு ஜனநாயக நாட இல்லையா? //

  எதுவுமேயில்லை, யார் ஆட்சி செய்கிறார்களோ, அவர்களுடைய நாடு (அவர்கள் ஆட்சி முடியும்வரை)

  //உணர்ச்சி மேலிட்ட முடிவால் எத்தனை பேர் கண்ணுக்கு தெரியாமல் பாதிக்கபட போகின்றார்கள் என்று தெரியவில்லை...

  இறந்து போனவர்களுக்கு அஞ்சலி தெரிவித்துக்கொள்வோம்...
  //

  :(

  சலனப்படத்தின் கரு அப்படியே ஒரு சுஜாதாவின் சிறுகதையாயிற்றே

  //நல்ல சிந்தனை நலம் பயக்கும்.........//

  //ஒருசின்ன தத்துவம்....

  காதல் என்து என்ன-?
  யாரோ ஒருத்தன் கட்டிக்க போற பொண்ணுக்கு, ஐங்ஸகிரீம்,ஸ்வீட், போ்அன்டுலவ்லி போல பல பொருட்கள் வாங்கி கொடு்த்து, ஒடம்பை தேர்த்திவிட்டு, சுடிதார், வாட்ச் , காஸ்மெட்டிக்ஸ் எல்லாம் கிப்டா வாங்கி கொடுத்து, அட்டுபிகரை அழகான பிகரா மாத்தி.... எவனுக்கொ கட்டி கொடுக்கற வெட்டி வேலைதான் காதல்......
  //

  :-)

  ReplyDelete
 3. நானும் வருவேன்னு நினைக்கிறேன் ஜாக்கி!

  ReplyDelete
 4. வாவ் அந்த சலனப்படம் சூப்பர்

  ReplyDelete
 5. 1. BOOKS
  2. RANDOM
  3. FORK
  4. PANTS
  5. PULSE

  நல்ல சிந்தனை நலம் பயக்கும்........

  மனசு தப்பு தப்பா நினைச்சது சார்..
  நல்ல வேளை .. ஆன்சரைக் கொடுத்திட்டீங்க....

  ReplyDelete
 6. நைஸ் போடோஸ் அண்ட் மேட்டர்ஸ்.... :)

  ReplyDelete
 7. \முதன் முதலாக“ டி” டிரைவ் பைலை “இ” டிரைவுக்கு காப்பி பேஸ்ட் செய்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்பேன்...\

  வாய்ப்பே இல்லை! அவ்வளவு சந்தோஷமாயிருந்தது அந்த அனுபவம். எனக்கு கொஞ்சம் வேற மாதிரி ஆயிடுச்சு.
  Floppy-யிலிருந்து ஒரு பைலை டெஸ்க்டாப்புக்கு முதன்முறையாக மாற்றிவிட்டு குதியோ குதியென்று குதித்துக் கொண்டிருந்தேன். "நீயெல்லாம் ஒரு பைனல் இயர் Engineering ஸ்டூடன்ட்......த்தூ!" என்று அத்தனை பெண்கள் முன்னால் காறித்துப்பி அசிங்கப்படுத்திவிட்டான் நிஜமாகவே என்மீது அக்கறையுள்ள நண்பனொருவன். பொங்கி வந்த பால்ல தண்ணி ஊத்துன மாதிரி ஆயிடுச்சு. அதனால என்ன? இன்னிக்கு நான் Server Administrator. எப்பூபூடி...........?

  ReplyDelete
 8. தத்துவம் பிரம்மாதம்,, (அனுபவமோ?);
  ;
  Also nice fotos, (படித்திருந்து புடிசிங்க போல..:-P)

  ReplyDelete
 9. //நல்ல சிந்தனை நலம் பயக்கும்.........//

  :-)))))))))))))))))))))

  காதல் தத்துவம் சூப்பர்

  ReplyDelete
 10. மேட்டரு எல்லாம் சூப்பரு ஜாக்கி, சலனப்படம் ஜூப்பரு.. :)

  ReplyDelete
 11. //இந்த வார சலனபடம்.... 18+

  இதை தொடர்ந்து....

  திருவண்ணாமலை கோவிலின் கோபுரங்கள் சில கோணங்களில்...//


  ம்ம்ம்.... என்னத சொல்ல.....

  ReplyDelete
 12. ஆமா.. மெயில் அனுப்பினா... பதில் மெயில் அனுப்ப மாட்டீங்களா?...

  ReplyDelete
 13. / இது இலங்கையா? அல்லது கம்யுனிஸ்ட் சீனாவா...//
  அப்புடி போடு அருவாள.

  ReplyDelete
 14. / இந்த மெஸ்சில் பல அழகு பதுமைகள் சாப்பிடுவதை பார்த்து அசந்து போய்விட்டேன்.... //
  எங்களையும் அங்க கூட்டிட்டு போங்கப்பு,எத்தன நாள் தான் சும்மா மதுரைக்குள்ள யே சுத்திட்டு திரிறது?

  ReplyDelete
 15. அந்த நாலாவது போட்டோ நல்லா இருக்கு தலைவரே

  ReplyDelete
 16. அந்த மெஸ் பேரு சுப்ரியா மெஸ்... எனக்கு கடந்த 3 வருஷமா சோறு போட்ட மெஸ்... பக்கத்துல டிசிஎஸ் இருக்கதுனால நெறைய பொண்ணுங்க சாப்பிட வருவாங்க.... எப்பவுமே கூட்டம் அள்ளும்... மோர்க்குழம்பு அங்க ரொம்ப ஸ்பெசல்... நல்லா இருக்கும்...

  ReplyDelete
 17. அந்த மெஸ் போட்டோல ஒரு பொண்ணுக்கு பின்னாடி நிக்குறானே கோடு போட்ட சட்டை சின்னப்பையன்... நமக்கு ரொம்ப தோஸ்த்... அவ்ளோ வேகமா பம்பரம் மாதிரி வேல பாப்பான்...

  I miss Chennai Someway.... :(

  ReplyDelete
 18. //
  கோடிட்ட இடத்தை நிரப்புக...
  ..........
  ..........
  நல்ல சிந்தனை நலம் பயக்கும்.........
  //

  குசும்பு தான இதெல்லாம்!

  ReplyDelete
 19. //சிறு நன்றி கடனாக மக்களக்கான போராட்டங்களில் கை கோர்க்கலாமே.//
  சரி கலந்துகொள்ளலாம்...... ஆனா கலந்துகிட்ட மேடையில் இருக்கும் பொழுதே ஒரு சிறு தனிமனித நாகரிகம் கூட இல்லாமல் வசவு வார்த்தைகள் வந்து விழுதே ஜாக்கி; உதரணத்துக்கு சத்தியராஜ்.

  ReplyDelete
 20. உங்கள் தலைப்பு" பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்"பார்த்தாலே என் நினைவுகள் பின்னோக்கி செல்லும் .பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ஒரு நகைச்சுவை நாவலின் தலைப்பு எனக்கு ரொம்ப பிடித்த நாவல்.உங்கள் பிளாக்கும் தான் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 21. சங்கர், சைவகொத்துப்பரோட்டா , தண்டோரா ,....தர்ஷன்,பட்டாபட்டி,ஜெட்லி,vetti, ManA ,© KVR , D.R.Ashok,யோ ,வொய்ஸ் (யோகா) ராஜன், ஜெரி ஈசானந்தா,.ROMEO, ராம்குமார் ,- அமுதன் ராம்குமார் - ,RR,மைதீன் ..

  மைதீன் அந்த புத்தகத்தை தேடிக்கொண்டு இருக்கின்றேன்... உங்களிடம் இருந்தால் கொடுக்கவும் ... நன்றி உங்கள் முதல் வருகைக்கு...


  எல்லோருக்கும் என் நன்றிகள்...

  அந்த மெஸ் பெயரை சொல்ல யாரும் இல்லையா என்று நினைத்து இருந்தேன்... நனறி அமுதன்.. மற்போது பெங்களுரில் இருக்கின்றீர்களா?....


  ஜெரி சென்னைக்கு வாங்க அந்த மெஸ்க்கு ஒரு மதிய நேரத்துல போவோம்...

  ராஜன் வேலை பளுதான் காரணம் நிச்சயம் பதில் போடுகின்றேன்... கோபம் வேண்டாம்

  ReplyDelete
 22. நன்றி வெட்டி, பட்டாபட்டி, வரதராஜலு, மனா போன்றவர்களின் முதல் வருகைக்கு... என் நன்றிகள்..

  ReplyDelete
 23. நன்றி ஜாக்கி, பழைய நினைவுகளுக்கு இட்டு சென்றது உங்கள் பதிவு.
  எனக்கு தேவி தியேட்டரில் பிடித்த இடம் பார்க்கிங் முன் உள்ள படிகட்டுகள்,காற்று வாங்கி கொண்டே , ரசிக்கலாம்.

  எனக்கும் ரொம்ப பித்த இடம் அந்த இடம்தான் ... சென்னையில் தியேட்டருக்கு முன் அந்தளவுக்கு பெரிய இடம் வேறு எந்த தியேட்டரிலும் இல்லை.. அந்த படிகட்டில் உட்கார்ந்து கொண்டு பிகர் ரசிக்கலாம்...

  உண்மைதான்.....

  ReplyDelete
 24. ஜாக்கி அண்ணே
  காதல் உவமை கலக்கல்.
  நல்ல சாண்ட்விச் இந்தவாரம்

  ReplyDelete
 25. //நன்றி வெட்டி, பட்டாபட்டி, வரதராஜலு, மனா போன்றவர்களின் முதல் வருகைக்கு... என் நன்றிகள்.. //

  என்னாது, இதுதான் என்னோட முதல் வருகையா? என்னங்க?

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner