
சொந்த வீட்டு வாழ்க்கையை சிறு வயதில் இருந்தே அனுபவித்தவன் நான்... ஆனால் சென்னை பட்டணத்தில் வேலை தேடி, செக்யூரிட்டி வேலைக்கு வந்து நாயடி பேயடி பட்டு மெரினா பீச்சீல் 6 மாத பிளாட்பார வாழ்க்கையின் போது... வீ்டு என்பது எவ்வளவு பெரிய சொர்கம் என்பதையும் அதன் சந்தோஷ எல்லையையும் உணர்ந்தவன்நான்...
அதன் பிறகு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு போய் பினிக்ஸ் பறவை போல மனதை தேற்றிக்கொண்டு, சென்னை வந்து உழைத்து, வாடகைக்கு வீடு எடுத்து, அட்வான்ஸ் பிரச்சனைகளில் மாட்டி,கரண்ட் பில்லை பார்த்து மயக்கம் போட்டு விழுந்து,
பாத்ரூம் லைட்டை மறந்து போய் போட்டு விட்டு வந்த தூங்கிய தங்கையை, இராணுவ விசாரனை போல் நடத்தி,திட்டி அடித்து, தண்ணீர் லாரிக்கு நடுரத்திரியில் எழுந்து, அதன் ஹாரன் சத்ததிற்க்காக பல நாட்கள் உறக்கம் தொலைத்து,சொந்தகாரர்கள் சென்னைக்கு வருகின்றேன் என்று போன் செய்தால்,கார குழும்பு வைக்கும் அளவுக்கு வயிற்றில் புளியை கரைத்து வைக்கும், வாடகை வீட்டின் கஷ்டங்களையும் அதன் வேதனைகளையும் ஒரு சேர அறிந்தவன்நான்...
வாடகை வீடு என்பது குடும்பத்தோடு, ஒரு டைம் பாமின் மீது உட்கார்ந்து கொண்டு இருப்பதற்க்கு சமம் என்பதை இதை படிக்கும் பலர் உணர்ந்து இருக்கலாம்..
சென்னையில் முதன் முதலில் வடபழனி ராஜங்க மத்திய வீதியில் ஒரு ஆஸ்பெட்டாஸ் ஷீட் வீட்டில் வெயில் காலத்தில் வேர்வையில் நனைந்த பனியனோடு, இரண்டு ஆண்டுகள் குப்பை கொட்டிவிட்டு... அதன் பிறகு சில டார்ச்சர்களையும் திடும் என்ற வாடகை ஏற்றத்தையும் சமாளிக்க முடியாமல்...

ஆழ்வார் திருநகரில் திருநகர் அனெக்சில் இரண்டு வருடம் வாழ்க்கை... அங்ககேயும் வீட்டு வாடகை அதிகமாக.... அகதி போல் ராமாபுரம் எஸ் ஆர் எம் கல்லூரி எதிரில் முதல் மாடியில் மூன்று வருட வாசம்.... அங்ககேயும் ஐடி சுவையை அப்போதுதான் உணர ஆரம்பித்த, வீட்டு ஓனர் இன்னும் வாடகையை ஏற்ற வைக்க...திருமலைநகருக்கு அதாவது எஸ் ஆர் எம் கல்லூரிக்கு பின்புறம் ஜாகையை மாற்றினேன்.... அந்த வீட்டில் ஒரு மூன்று வருடம்.... ஒருநாள் எஸ்ஆர் எம் கல்லூரி பெண்கள் எட்டு பேர் ஒன்றாக வந்து, நான் கொடுத்து கொண்டு இருக்கும் வாடகையைவிட 2000 ஆயிரம் அதிகமாக கொடுப்பதாக சொல்ல, திரும்பவும் நான் நல்ல மாலைவேலையில்அகதியாக்கபட்டேன்........

உங்களுக்கு ஒன்று தெரியுமா? சென்னையில் வீடு மாறிக்கொண்டே இருப்பதால் 4 பாய் 4தலையனை, ஒரு கேஸ் அடுப்பு செட், கொஞ்சம் சமையல்பாத்திரங்கள்... கொஞ்சம் புத்தகங்கள், இரண்டு பெட்டிகள் அவ்வளவுதான்... என் சொத்தாக வைத்து இருந்தேன்.... நாளைக்கு நீங்க வீட்டை எனக்கு கொடுக்கனும் என்று ஹவுஸ் ஓனர் சொன்னாலும், உதட்டில் வெறுப்பு புன்னகையை வைத்துக்கொண்டு, ஒய்நாட் என்று சொல்லி உடனே வீட்டை காலி செய்து கொடுப்பேன்....நான் பிரோ கட்டில் எதுவும் வாங்க வில்லை.... ஒரு தட்டு வண்டி இருந்தால் போதும் வீடு மாற்றிவிடலாம்... அப்படித்தான் பல வருடங்கள் இருந்தேன்...
ஆனால் திருமணத்துக்கு பிறகு வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகருக்கு ஜாகை மாற்றிக்கொண்டேன்.. ஆனால் இப்போது வீடு மாற்றினால் ஒரு லாரி தேவையாய் இருக்கின்றது... அந்தளவுக்கு வீட்டில் அத்தியாவசிய பொருட்களின் ஆர்பாட்டம்...
இப்போது நான் குடி இருக்கும் வீட்டுக்கு 6000 ஆயிரம் மாத வாடகை... சரி இதில் நிம்மதியாக இருக்கலாம் என்றால் இன்னும் ஏப்பரல் முதல் வாரம் வரை கெடு கொடுத்து இருக்கின்றார் ஹவுஸ் ஓனர்.... அமெரிக்காவில் இருக்கும் சொந்த மகளுக்கு இந்த வீடு வேண்டுமாம்...
எல்லாவற்றையும் விட மாத மாதம் 6000 ரூபாயை எண்ணி வீட்டு வாடகை கொடுக்கும் போது ரொம்பவும் கஷ்டமாக இருக்கும்..... அது அனுபவிச்சவங்களுக்கு மட்டும் தெரியும்...
சரி சொந்த வீடு ஆதாவது பிளாட் வாங்கலாம் என்றால் இங்கு நான் இருக்கும் ஏரியாவில் சுதுர அடி 4200க்கு சொல்கின்றார்கள்... சரி சென்னை அவுட்டருக்கு போகலாம் என்றால் வடபழனி ஸ்டுடியோக்களுக்கு நான் வர வேண்டும் என்றால்.. இரவு எத்தனை மணிக்கு ஷுட்டிங் முடித்து விட்டு வந்தாலும் விடியற்காலை 2 மணிக்கே எழுந்து இருக்க வேண்டும்....அதனால் போருர் அய்யப்பன் தாங்கலில் வீடு பார்த்தேன்....
பதிவர் பாஸ்ட்டன் ஸ்ரீராம் கூட மடிப்பாக்கத்தில் அவர் அண்ணன் வீட்டுக்கு அருகில் வீடு பார்க்க அந்த வீட்டை பார்த்தோம்.... இடம் பிடித்து இருந்தாலும் அந்த விட்டில் தங்க முடியாது வாடகைக்குதான் விட வேண்டும்.... எனக்கு ரொம்ப தூரம்...

எல்லாவற்றையும் விட செகன்ட்ஹான்டில் வீடு பார்த்தேன்... என் எரியாவில் 20வருட வாழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கு800 சதுர அடி... ரூ/ 20 லட்சம் என்று சொல்கின்றார்கள்...காரணம் வளசரவாக்கம் மெயின் ஏரியா, கிருஷ்ணமாச்சாரி நகர் என்று காரணம் வேறு சொல்கின்றார்கள்... அதையும் போட்டி போட்டு வாங்க ஆள் இருக்கின்றார்கள்...

தனி வீடு ரேட்டை நான் எங்கயும் கேட்கவில்லை....தகுதி இல்லாத விஷயத்துக்கு நான் ஆசைபடற ஆள் கிடையாது....
ஆனால் போருர் பக்கத்தில் வீடு ஒன்று அடுக்குமாடி குடியிருப்பில் செட் ஆகி விட்டது... அந்த இடத்தை எனக்கும் என் மனைவிக்கும் பிடித்து விட்டது... அங்கு வாங்கதான் இப்போது போராடிக்கொண்டு இருக்கின்றேன்...
பிளாட்22 லட்சம்..... என் மனைவி லோன்... மற்றும் இருவர் நகைகள் விற்று வரும் பணம் மற்றும் சிறு சேமிப்பு எல்லாவற்றையும் சேர்த்தாலே அந்த தொகையை எட்ட முடியவில்லை.... மீதி 3 லட்சம் பெண்டிங்காக இருக்கின்றது.... அப்பாவின் ஆப்பரேஷன் 2 தங்கை திருமண செலவு என்பதால் பெரிய சேமிப்பு எங்களிடத்தில் இல்லை.....
இப்போது ஐடி டவுனாக இருப்பதால் இந்த விலைக்கு வருகின்றது... வீட்டை இப்போது வாங்க வில்லை என்றால் அப்புறம் எப்போதும் வாங்கவே முடியாது... இதுவே நான் நிலையான கல்லூரி வேலைக்கு போய் இருந்தால் இந்த 3 லட்சம் ஒரு பெரிய விஷயமே இல்லை...
சொந்த வீடு வாங்குத் ஐடியா இந்த மூன்று மாதத்தில் உதித்தது... இப்படி ஒரு நிலை வரும் என்ற தெரிந்து இருந்தால் சத்தியமாக கல்லூரி வேலையை விட்டு சினிமாவுக்கு வந்து இருக்கமாட்டேன்....

பெரிய உறவு கூட்டம் இல்லை என்பதாலும்... அப்படியே அவர்கள் தந்தாலும் 3பைசா வட்டிக்கு கொடுப்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்...உயிரையே கொடுப்பேன் என்று போதையில் பேசிய நண்பர்களை, பகலில் நேரில் பார்க்க போனால் மயிரை கொடுக்கவே யோசிக்கின்றார்கள்...
“ டேய் மாப்ளை மொத்தமா கேட்கலைடா? ஒரு 50 ஆயிரம் ,25ன்னு வட்டியில்லா கடனாக கொடுத்தாலும் பரவாயில்லை ...சிறுக சிறுக சேர்த்து கொடுத்து விடுவேன்... என்று நம்பிக்கை ஊட்டியும் பார்த்து விட்டேன்... ஒரு பப்பும் வேகவில்லை... ஜாக்கி,உன் இரண்டு தங்கச்சி கல்யாணத்துக்கு கொடுத்தேன் இல்லை?... இப்ப இல்லைமச்சி நான் என்ன செய்வது? என்பதே பதிலாக இருக்கின்றது... சரி சொந்த ஊர் நண்பர்கள் பராவாயில்லை... சென்னையில் நெருங்கிய நண்பர்களை கேட்ட போது... அதாவது ஜாக்கி என்று இழுத்து... தெலுங்கான பிரச்சனை போல் நழுவுகின்றார்கள்..
சினிமா வட்டாரத்தில் சான்சே இல்லை அப்படி கொடுக்க ஆள் இருந்தாலும் வட்டிக்கு மட்டுமே கொடுப்பார்கள்....

எப்படியும் கடன் அடைக்க நான் சினிமாவை விட்டு வெளியே வந்தே ஆக வேண்டும் என்று நினைக்கின்றேன்....எனெனில் வேலையின் மீது காதலை விட மானம் பெரிது அல்லவா....
கடன் என்று ஒருவரை கேட்பது எனக்கு மிகவும் புதுசு.... அது எவ்வளவு கொடுமையான விஷயம் தெரியுமா? அதே போல் ரொம்ப நெருங்கிய நண்பர்கள் அதை மறுதலிக்க அவர்கள் மென்று முழுங்க அந்த நிலையை பார்க்கவும் கொடுமையாக இருக்கின்றது..
ஒரு பில்டர் பிளான் எல்லாம் காட்டி 19 லட்சத்துக்கு முடிவானது... நாங்களும் யாரிடமும் தலையை சொறிந்து நிற்க்க வேண்டாம் என்று சந்தோஷபட்டுக்கொண்டு இருக்கும் வேலையில் முதல் தளத்தில் வீடு வாங்குபவர் பால்கனி வேண்டும் என்ற கேட்பதால் பிளானை சேன்ஞ் செய்ய.. அதையும் ஒத்துக்கொண்டோம்.. அப்போதே 23 லட்சத்துக்கு வந்தது...திரும்பவும் பிளானை மாற்றுவதாக சொல்ல, அதை கேட்க 24க்கு எடுத்து வந்து நிறுத்தினான் அந்த பில்டர்... அவனிடம் வீடு வாங்கினால் நான் மென்டல் ஆகி விடுவேன் என்பதால் அந்த பில்டருக்கு பெரிய கும்பிடு போட்டு விட்டேன்..
எத்தனை எத்தனை நடுத்தர குடும்பத்தினர் , லோன் போட்டு வீடு வாங்க பிரிஆட்சையும், சர்ச் லோக்கலையும், பார்த்துக்கொண்டு இடம் பார்க்கவருகின்றார்கள் தெரியுமா?... இதில் புரோக்கர்கள் அடிக்கும் கமிஷன் கொடுமையிலும் கொடுமை...சில பில்டர்கள் அலட்டும் அலட்டல் தாங்க முடியவில்லை.....நடுத்தர மக்களின் ஆசைகளை அவர்கள் பணம் பண்ணும் கருவியாக மாற்றிக்கொள்கின்றார்கள்...
சென்னையில் ஒருவன் சொந்த வீட்டில் இருந்தால் அவன் ஆசிர்வதிக்கபட்டவன்...வாடகை வீட்டில் இருந்தால் அவன் அகதிகேஸ்தான்....
சென்னையில் சொந்த வீட்டை கொடுத்து சொத்து சேர்த்து விட்டு சென்ற உங்கள் தாய் தகப்பனுக்கு, கிழக்கு திசைபார்த்து ஒரு நன்றி சொல்லி கொள்ளுங்கள்....

“எங்கப்பன் குடிச்சே என் குடியை அழிச்சான்...”நங்கநல்லூர்ல இரண்டு பிளாட், மடிப்பாக்கத்தில் ஒரு கிரவுண்ட்,வளசரவாக்கத்தில் சொந்த வீடு இது எல்லாம் நான் உழைச்சி வாங்கினது என்று சொல்கின்றீர்களா? உங்களை நீங்களே தட்டிக்கொடுத்து கொள்ளுங்கள்... சந்தோஷத்தில் உங்கள் மனைவி உதட்டில் முத்தமிடுங்கள்....

நான் என் சொந்த ஊரில்,சொந்த வீட்டில் இருந்து கொண்டு தூர்தர்ஷனில் பாலுமகேந்திராவின் “வீடு” படத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் போது..
“எதுக்கு இப்படி ஆசைபடனும் கஷ்டபடனும்” என்று மனதுள் கேள்வி கேட்டது... நேற்று ஒரு குவாட்டருக்கு மேல் அடித்து விட்டு, உறுக்காய் நக்கும் போது அது நினைவுக்கு வந்து தொலைக்க, அடித்தது எல்லாம் இறங்கி தூக்கம் வர விடியல் 5 ஆனது...
இன்னும் ஒன்றரை மாதத்தில் 3 லட்சம் புரட்டினால் சொந்த வீடு இல்லையென்றால்.. நான் முன்னமே சொன்னது போல் ஒரு டைம்பாம் இருக்கும் வாடகை வீட்டை தேடிப்போக வேண்டும்... அதன் பிறகு ஹவுஸ் ஒனரை பார்த்து பல் இளித்து, சலாம் போட்டு, மொக்கை ஜோக்குக்கு சத்தமாக சிரித்து வைக்க ரெடியாக வேண்டும்....
இதுக்குதான் அடுத்த ஜென்மத்துலாயாவது திருபாய் அம்பானிக்கு புள்ளையா பொறந்து தொலைக்கனும்....
அன்புடன்
ஜாக்கிசேகர்
(உங்களுக்கு மேலே நான் எழுதிய விஷயங்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே கண் விழித்து டைப்பும் என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
நான் வாழ்க்கையில் செய்த ஒரே உருப்படியான காரியம் சொந்த வீடு வாங்கியதுதான். 6 வருடங்களுக்கு முன். சதுர அடி 800 ரூ. இப்போது அங்கு 3500 ரூ.
ReplyDeleteநல்ல பதிவு ஜாக்கி. சிறிய வீடு கூட (சின்ன வீடுன்னா தப்பாயிடும்) வாங்குவது சிரமமான விஷயமாக இருக்கிறது இப்போதெல்லாம். நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பதிவில் உள்ள படங்களை பார்த்தால் நீங்கள் பங்களா அமைப்பில் உள்ள பெரிய பெரிய வீடுகளாக வாங்க நினைக்கிறீர்கள் என்று கருதுகிறேன்.
ReplyDeleteநான் வாழ்க்கையில் செய்த ஒரே உருப்படியான காரியம் சொந்த வீடு வாங்கியதுதான். 6 வருடங்களுக்கு முன். சதுர அடி 800 ரூ. இப்போது அங்கு 3500 ரூ.--//
ReplyDeleteநன்றி தண்டோரா...
தண்டோரா அதே போல உருப்படியான வேலையை இப்பநான் செய்யனும்னு ஆசைபடறேன்...
பதிவில் உள்ள படங்களை பார்த்தால் நீங்கள் பங்களா அமைப்பில் உள்ள பெரிய பெரிய வீடுகளாக வாங்க நினைக்கிறீர்கள் என்று கருதுகிறேன்.//
ReplyDeleteஅகநாழிகை நீங்க வேற... 750 சதுர அடி பிளாட் வீட்டுக்கு ஜிங்கி அடிக்கின்றேன்... அட நம்மலாள எப்படி இது போல பங்களாவுல வாழ போறமோ இல்லையோ படத்தையாவது போட்டு சந்தோஷபடலாம் இல்லையா??? அதான்..
வலது பக்க விளம்பரம் கொடுக்கும் உங்களுக்கும் வீடு பிரச்சனையா?கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு.
ReplyDeleteஅந்த 22 லட்சம் பிறகு என்னவாயிற்று?
சென்னையில் 3500 ~ 4500 சதுர அடி விலையில் தான் வீடு போகிறது.நானும் போன 6 மாதங்களாக வீடு பார்த்து அலுத்துவிட்டேன்.
முகப்பேர் வெஸ்டில் 35 லட்சத்துக்கு கட்டிய வீடு இருக்காம்,மனைவி சொன்னார்கள் வெண்டும் என்றால் கேட்டு விபரங்கள் சொல்கிறேன்.அந்த இடம் எனக்கு சரியாக வரவில்லை.
வலது பக்க விளம்பரம் கொடுக்கும் உங்களுக்கும் வீடு பிரச்சனையா?கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு.
ReplyDeleteஅந்த 22 லட்சம் பிறகு என்னவாயிற்று?--//
அப்பிடி இப்படின்னு உண்டு பொறண்டு 19 லட்சம் ஒக்கே.. இன்னும் 3 லட்சம் வேண்டும்... இருந்தா சொந்த வீடு இல்லைன்னா வாடகை வீடு...
அதே போல் வீடு விளம்பரம் கொடுத்தவர் பெரிய பில்டர் அவகிட்ட எல்லாம் போகவே முடியாது...
32 லட்சம்னா... பேங்குல கடனுக்கு பதில் கொள்ளையடிக்கலாம்...நாணயம் பிரசன்னா போல ஆளு வேனுமே நமக்கு...
நன்றி வடுவூர் குமார்...
This comment has been removed by the author.
ReplyDeleteஎங்க சார், தங்கச்சி கல்யாணம் நடுவுல இருக்கு. நானும் try பண்ணிட்டு இருக்கேன்.
ReplyDeletedont wory sekar sir...... wait for ur right time
ReplyDeleteவீட்டின் விலையையும், வாடகையையும் குறைக்க நமது தானைய தலைவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்.
ReplyDeleteகிடைத்தால் சொந்த வீடு, இல்லையெனில் நீங்கள் சொன்னது போல நாமும் அகதிகள்தான் அண்ணா :(
எங்க சார், தங்கச்சி கல்யாணம் நடுவுல இருக்கு. நானும் try பண்ணிட்டு இருக்கேன்.--//
ReplyDeleteஎன்ன செய்றது குரு... நடுததர வர்கத்து நிலமை கவலைதான்..
dont wory sekar sir...... wait for ur right time//
ReplyDeleteநன்றி வினோத்..
தலைவரே விடுங்க சீக்கிரமா உங்கள உங்க புது வீட்டுக்கு வந்து சந்திக்கிறேன். அப்போ இதுமாதிரி அரவேக்காட்டு(பில்டர்) ஆளுங்களப் பத்தி பேசி சிரிக்கலாம். வாழ்த்துகள் தல ....
ReplyDeleteம்ம்..பெருமூச்சுதான் வருகிறது, யதார்த்தங்கள் சுடுகிறது.
ReplyDeleteவிரைவில் ஆண்டவன் அருளால் சொந்த வீட்டில் குடி புகுவீர்கள் நண்பரே.
ReplyDeleteநல்லா எழுதியிருக்க ஜாக்கி. Sure it will happen.
ReplyDelete//இந்த பதிவு ஒரு சொந்த கதை... இதில் பெரிய சுவாரஸ்யம் இருக்காது//
ReplyDeleteதம்பீ....!!!!! சுவாரஸ்யமா இருப்பது எல்லாம் வாழ்க்கைக்கு உதவாது.....
//18+ வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், வாழ்க்கை பற்றிய புரிதல் உள்ளவர்களுக்கான இடம் இது//
இந்த வரியை படிச்சவங்க நாங்க.... சும்மா...அடிச்சி ஆடுங்க.....
//வீடு மாறிக்கொண்டே இருப்பதால் 4 பாய் 4தலையனை//
ReplyDeleteஒரு ஆளுக்கு எதுக்கு......4 பாய், 4 தலையணை ? (சும்மா ஜெனரல்னாலெட்ஜுக்காக கேட்டது.)
//இப்போது ஐடி டவுனாக இருப்பதால் இந்த விலைக்கு வருகின்றது... வீட்டை இப்போது வாங்க வில்லை என்றால் அப்புறம் எப்போதும் வாங்கவே முடியாது... //
ReplyDeleteகண்ண தொறந்துட்டீங்க...
//வாடகை வீட்டில் இருந்தால் அவன் அகதிகேஸ்தான்....//
ReplyDeletenaanum oru agathithaanga
எல்லாம் நல்லபடியா நடக்கும்...! கிரக பிரவேசத்துக்கு மறக்காம சொல்லுங்க..!
ReplyDeleteநான் சொந்த வீடு முயற்சிய இனிமேதான் துவங்கணும்..!
ம்ம்ம்... நான்கூட வீடு பத்திதான் ஒருபதிவு போட்டு இருக்கேன் டைம் இருந்தா பாருங்க..!
பல பேரு நிலைமை இப்படித்தான். ஆண்டுக்கு ரூ500 வாடகை ஏற்றிக் கொண்டிருக்கிறர் என் வீட்டுஓனர். இதுல வேற அடுத்த மாதத்திலிருந்து எங்க ஏரியா மாநகராட்சிக்குள் வருகிறதாம். எவன் கேட்டான் இதை.
ReplyDeleteஎல்லாம் நல்ல படியா நடக்கும் சார்
ReplyDeleteSEkar, do not worry, god knows when to give u a nice house, that day everything will come and stand infront of u, so keep trying.
ReplyDeleteவீட்டின் விலையையும், வாடகையையும் குறைக்க நமது தானைய தலைவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்.
ReplyDeleteகிடைத்தால் சொந்த வீடு, இல்லையெனில் நீங்கள் சொன்னது போல நாமும் அகதிகள்தான் அண்ணா :(--// இல்லை இளங்கோ அவுங்க செட்டில் ஆயிட்டாங்க... அவுங்க எதுக்கு நம்மல பத்தி கவலை பட போறாங்க..
தலைவரே விடுங்க சீக்கிரமா உங்கள உங்க புது வீட்டுக்கு வந்து சந்திக்கிறேன். அப்போ இதுமாதிரி அரவேக்காட்டு(பில்டர்) ஆளுங்களப் பத்தி பேசி சிரிக்கலாம். வாழ்த்துகள் தல ....//
ReplyDeleteநன்றி ராஜபிரியன் நிச்சயமா...
நன்றி சைவ கொத்து பாரோட்டா..
ReplyDeleteநன்றி இராகவன் நைஜீரியா
நன்றி சூர்யா தங்கள் வாழ்த்துக்கு...
//18+ வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், வாழ்க்கை பற்றிய புரிதல் உள்ளவர்களுக்கான இடம் இது//
ReplyDeleteஇந்த வரியை படிச்சவங்க நாங்க.... சும்மா...அடிச்சி ஆடுங்க.....//நான் என்னவோன்னு ஆரம்பத்துல நினைச்சிட்டேன்... நன்றி ராஜன்
//வீடு மாறிக்கொண்டே இருப்பதால் 4 பாய் 4தலையனை//
ReplyDeleteஒரு ஆளுக்கு எதுக்கு......4 பாய், 4 தலையணை ? (சும்மா ஜெனரல்னாலெட்ஜுக்காக கேட்டது.)// என் கூட என்4 தங்கைகளும் இருந்தார்கள்.. அதனால்தான்.. ஜென்டரல் நாலேஜ் வளர்ந்த சரி..
//இப்போது ஐடி டவுனாக இருப்பதால் இந்த விலைக்கு வருகின்றது... வீட்டை இப்போது வாங்க வில்லை என்றால் அப்புறம் எப்போதும் வாங்கவே முடியாது... //
ReplyDeleteகண்ண தொறந்துட்டீங்க...//
இல்லை ராஜன் இதுதான் உண்மை...
//வாடகை வீட்டில் இருந்தால் அவன் அகதிகேஸ்தான்....//
ReplyDeletenaanum oru agathithaanga//
நீங்களுமா பாபு???
எல்லாம் நல்லபடியா நடக்கும்...! கிரக பிரவேசத்துக்கு மறக்காம சொல்லுங்க..!
ReplyDeleteநான் சொந்த வீடு முயற்சிய இனிமேதான் துவங்கணும்..!//
நன்றி ஜீவன் மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு...
பல பேரு நிலைமை இப்படித்தான். ஆண்டுக்கு ரூ500 வாடகை ஏற்றிக் கொண்டிருக்கிறர் என் வீட்டுஓனர். இதுல வேற அடுத்த மாதத்திலிருந்து எங்க ஏரியா மாநகராட்சிக்குள் வருகிறதாம். எவன் கேட்டான் இதை.//
ReplyDeleteஅப்ப வரியை இன்னும் ஜாஸ்த்தி பண்ணுவாங்க... இதையே காரணம் வச்சி நம்மகிட்ட கசை புடுங்கிடுவானுங்க..
எல்லாம் நல்ல படியா நடக்கும் சார்//
ReplyDeleteநன்றி பேனா முடி வாழ்த்துக்கு...
SEkar, do not worry, god knows when to give u a nice house, that day everything will come and stand infront of u, so keep trying.//
ReplyDeleteமதல் வருகைக்கும் தன்னம்பிக்கை வரிகளுக்கும் பாராட்டுக்கள் நண்பா
Better try in OMR road , There flats are available by less than 20L .
ReplyDeleteRead it Before u buy a flat or home from a Builder
ReplyDeleteசொந்த வீடு வாங்குமுன் -கவனிக்க வேண்டியவை
நல்ல பதிவு ஜாக்கி. நல்லதே நடக்கும்..
ReplyDeleteHi,Really again oru veedu picture partha effect,Really Nanum banaglorela veedu vanga poraduren,But one good things chennai la panra current,thanni problem inga illa,My wishes you for a new happy home
ReplyDeleteவணக்கம் ஜாக்கி
ReplyDeleteஎலி வலை இன்னாலும் வேனும் தனி வலை அப்ப சாதரணமா சொல்லிட்டாங்க இந்த பதிவை படிக்கும் போது வீட்டு விலைகளை பார்த மயக்கமே வருது :-((
ஜாக்கி உங்கள் பணிக்காக நீங்கள் தேடும் இடத்தில் விலை இப்படித்தான் இருக்கும் இந்த விலைக்கு அவுட்டரில்தான் அமைய வாய்ப்பு. எதாவது ஒன்றை இழந்துதான் ஒன்றை பெற முடியும். அவசர முடிவுகள் இல்லாது தீர விசாரித்து முடிவெடுங்கள். அபார்ட்மெண்ட்டிலும் மாதம்1000- 2000 ரூபாய்க்கு மெய்ண்டனன்ஸ் கேட்ப்பார்கள், சொந்த வீடென்று ஒரு பொட்டியை வாங்கி மாதம் கப்பமும் கட்டவேண்டும். மழை நீர் தேங்குமா? குடினீர் எப்படி, காசு கொடுத்துதான் அதையும் வாங்க வேண்டுமானால்...
ReplyDeleteஹும்ம்.. என்ன சொல்ல நண்பா??
இந்த அவஸ்த்தை எனக்கும் இருந்தது, ஒருவழியாய் 40 கிலோ மீட்டர் தள்ளி வாங்கிவிட்டேன். நான் மட்டும் சிரமம் பட்டால் போதும் என்று.. யாரும் உதவவில்லை, கடனும் வாங்கவில்லை சொந்த கால்..:)) உங்கள் நல்ல மனதுக்கு கண்டிப்பாய் அமையும்.
ஜாக்கிசேகர், பாலுமகேந்திராவின் வீடு படம் பார்த்த மாதிரி இருந்தது உங்க பதிவு. உண்மையிலே சென்னையில் வீடு வாங்கி செட்டில் ஆவது என்பது ஒரு பெரிய அட்வென்சர் தான். வாடகை வீட்டில், வீட்டு ஓனருங்க பண்ற அலும்பு தான் தாங்க முடியாது. கூடிய சீக்கிரம் வீடு வாங்க அட்லாண்டா ஜாக்கி ரசிகர் மன்ற சார்பாக இறைவனை வேண்டுகிறோம்.
ReplyDeleteகூடிய சீக்கிரம் நல்ல விஷயம் நடக்கும். வாழ்த்துக்கள்...
ReplyDeleteஜாக்கி
ReplyDeleteநாளைக்காவது சாட்ல வா
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
ReplyDeleteஉங்கள் முயற்சியை தொடருங்கள். விரைவில் சொந்த வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
4 தங்கையா ?..எம்மைபோல்..
ReplyDeleteஎன் அண்ணாவை நினைத்த்க்கொண்டேன். என் தெய்வம் அண்ணாவும் அண்ணியும்..
வாழ்த்துகள் விரைவில் புதுமனை புக..
You can look out in Madippakkam, keelkattalai, selaiyur area or after porur side (towards kaancheepuram side).
ReplyDeleteIf you try out of the city limits, the price will be low, and life will be peaceful, enjoyable and with nature.
//எல்லாவற்றையும் விட மாத மாதம் 6000 ரூபாயை எண்ணி வீட்டு வாடகை கொடுக்கும் போது ரொம்பவும் கஷ்டமாக இருக்கும்..... அது அனுபவிச்சவங்களுக்கு மட்டும் தெரியும்...//
ReplyDeleteசரியாய் சொன்னீங்க.
dear jackie sir,
ReplyDeletedont worry, you can do...
mano
கொஞ்சம் கஷ்டம் தான்...
ReplyDeleteகொஞ்சம் கஷ்டம் தான்...
ReplyDeleteஅன்பின் ஜாக்கி,
ReplyDeleteஉங்க வாடகை வீட்டு அனுபவங்களை படிக்கும்போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு
எங்க வீடு சென்னையில 100 வருசமா இருந்துச்சு. சமீபத்துலதான் (2006) பார்த்துகொள்ள முடியவில்லை என்று வித்துட்டோம்.
எங்க வீட்ல வாடகைக்கு இருந்தவர் 54 வருடமா குடித்தனக்கு இருந்தார் ரூ 2 க்கு வாடகைக்கு வந்தவர் கடைசில 1000 வாடகை கொடுத்துகிட்டுருந்தார்.
4 வருடத்து ஒருமுறை வாடகை உயர்த்தும்போது குடித்தனக்காரர்கள்”நீங்க எல்லாம் நல்ல வசதியாதானே இருக்கிங்க, இந்த வாடகையை வச்சா நீங்க குடும்பம் நடத்தபோறிங்கன்னு” வசனம் பேசுவாங்க..
கடைசில வீட்டினை விக்கும்போது கூட எல்லா குடித்தனக்காரர்களுக்கு கை நிறைய பணம் கொடுத்துதான் அனுப்பினோம்.
இப்ப பெங்களுர்-ல மாமானர் கொடுத்த வீட்ல இருக்கேன்.சொந்த வீடு கனவு கனவாகவே இருக்கு...
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
நண்பா, மனமிருந்தால் மார்க்கபந்த்து.Best of luck.
ReplyDeleteதங்களுடைய கனவு விரைவிலேயே நினைவாக என்னுடைய பிரார்த்தனைகள்..
ReplyDeleteராமாபுரம் எஸ்.ஆர்.எம் எதிரில் என்றால் முல்லை நகரா? குறிஞ்சி நகரா? 2003-2006 வாக்கிலா?
ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்த காலத்தில் இந்த பகுதிகளில்தான் நானும் இருந்தேன்..
அன்புடன்
கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com
JACKIE THALA NAN UNGA BLOG AREA KU PUDUSU KONGA YEPDI POST PANRADU APDINU NARAYA DOUBT IRUKU AD PATHI ORU POST POTA ROMBA HELPA IRUKUM
ReplyDeleteநெம்ப பாதிக்க பட்டுடிங்க போல... நான் ரொம்ப நாள் முன்னமே பீல் பண்ணி பதிவே போட்டுட்டேன்..
ReplyDeletehttp://sureshdurairajan.blogspot.com/2009/11/blog-post.html
ஏதோ பெரியவுங்க படிச்சி பார்த்துட்டு நல்ல வார்த்த சொல்லோனும்...