கேபிள் சங்கர் தந்தை மரணமும்...இணைய எழுத்தாளர்கள் பலமும்...


நேற்று ஞாயிறு விடியலில் இருந்தே மழை வலுக்க தொடங்கி விட்டு இருந்தது... உண்மை தமிழனுக்கு போன் செய்தேன்.. அவர் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டதாகவும் கேபிள் வீட்டுக்கு வரமுடியாவிட்டாலும் கண்ணம்மாபேட்டை மயான பூமிக்கு வந்துவிட சொன்னார்... நான் சனிக்கிழமை தகவல் கிடைத்ததும் என்னால் போக முடியவில்லை...


சனிக்கிழமை அன்று என் மனைவியின் அத்தை வீடு பெருங்களத்தூரில் இருப்பதால் அங்கு செல்வதற்க்காக மெரினா பீச்சில் இருந்து செல்லும் போதுதான்... கேபிள் சங்கர் தந்தையாரின் மரண செய்தி.. குறுந்தகவலாக என் கைபேசியில் வந்து என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது... அதன் பிறகு (வண்ணத்துபூச்சி)சூர்யா கேபிளாரின் வீட்டு விலாசத்தை குறுந்தகவல் மூலம் தெரியபடுததினார்...

நல்ல மழை என்பதால் சாலை எங்கும் வெள்ளம்..நான் பெருங்களத்ததூர் போகவே மாலை 4.30 ஆகிவிட்டபடியால் என்னால் சனிக்கிழுமை கேபிளார் வீட்டுக்கு போக முடியிவில்லை...அப்படியும் நானும் என் மனைவியும் இரவு எழு மணிக்கு சைதாபேட்டை ஜெயராஜ் தியேட்டர் அருகில் இருந்து தண்டோராவுக்கு போன் செய்தால்... எல்லோரும் கிளம்பி விட்டதாகவும்... மறுநாள் ஞாயிறு காலை வந்து விட சொன்னார்....

ஞாயிறு காலை நல்ல மழை...பகல் ஒன்பது மணிக்கு இரவு 6,30க்கு ஒரு இருட்டு இருக்குமே அது போல் இருந்தது...மழை வெளுத்துக்கட்டிக்கொண்டு இருந்த போது... நான் கேபிளாரின் வீட்டுக்கு போனேன்.. அவர்கள் உறவுகூட்டம் மட்டும் இருந்தது..பதிவர்கள் யாரையும் காணவில்லை...தண்டோராவுக்கு போன் செய்தால் வந்து கொண்டு இருப்பதாக தெரிவித்தார்..

சடங்கு கீழே தொடங்கும் போது உண்மை தமிழன், வெண்பூ போன்றவர்கள் கேபிளாரின் உடன் வர கொஞ்சம் நேரத்தில் பதிவர் முரளிகண்ணனும், அதிபிரதாபனும் வந்து சேர்ந்தார்கள்...

கேபிளின் தந்தையார் உடலை சுற்றி அவர் வீட்டு பெண்கள்.. . தங்கள் பிரிவு துயரை அழுகை மூலம் வெளிபடுத்த.. கேபிள் கொள்ளிசட்டியுடன் விசும்ப... வெண்பூமற்றும் முரளி கண்ணன் முதுகு பிடித்து ஆறுதல் சொல்லி தேற்றிக்கொண்டு இருந்தார்கள்...உள்ளகரத்தில் இருந்து வந்த ஒரு டிரஸ்ட் ஆம்பூலன்சில் கேபிள் தந்தையார் உடல் ஏற்றபட்டது... முரளி மற்றும் அதிபிரதாபன் வேறுவாகனத்தில் வர.... நான்,வெண்பூ மற்றும் உண்மைதமிழன் அந்த ஆம்பூலன்ஸ் வாகனத்தை பின் தொடர்ந்து கண்ணம்மா பேட்டை இடுகாட்டிற்கு வந்து விட்டோம்....

அங்கு அவர் உடலை வைத்து சில சடங்குகள் மேற்க்கொள்ளபட்டன... அப்பா இல்லாதவங்க வாய்க்கு அரிசி இடலாம் என்ற குரல் கேட்க... அப்பா உயிரோடு இருப்பவர்களை தவிர எல்லோரும் போய் வாய்க்கு அரிசி இட்டனர்..கேபிளாரும்..அவர் வீட்டு மாப்பிள்ளையும் அழத்தொடங்க..
எல்லோரும் ஆறுதல் படுத்த...கேபிளார் தந்தையார் உடலுக்கு கொள்ளி வைக்க மின் அடுப்பில்உள் செலுத்தபட்டது...

அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்து சாம்பலுடன் பெசன்ட் நகர் அறுபடை முருகன் கோவிலுக்கு கேபிளும் ஒரு சில உறவுகளும் காரில் வர.. நான்,அதிபிரதாபன், தண்டோரா, வண்ணத்துபூச்சி, வெண்பூ, முரளிகண்ணன்,பைத்தியக்காரன் எல்லோரும் வந்து சேர்ந்தோம்... பெசன்ட் நகர் கடலில் கேபிளாரின் தந்தை சாம்பல் கரைக்கபட்டு...கேபிளார் கடலில் மூன்று முழுக்கு போட்டு அவர் அப்பாவை ஒரு குறையும் இல்லாமல் வழி அனுப்பி வைத்தார்...


கேபிளாரின் அப்பா....

கேபிளாரின் இந்த அளவு சினிமா மோகத்துக்கு முதல் காரணம்.. அவரின் அப்பாதான்..அவர் தமிழ்நாடு மின்சார துறையில் வேலை பார்த்தவர்... பல நாடகங்கள் எழுதி இயக்கி இருக்கின்றார்...கேபிளின் ஜெயாடிவி பேட்டியின் போது எவர் மனதையும் புண்படுத்தாமல் பேசினாய் என்று தன் மகனுக்கு வாழ்த்து கூறியவர்... தன் மகனை பற்றிய எந்த பத்திரிக்கை செய்தியானாலும் அதனை ஜெராக்ஸ் போட்டு ஒரு பைலை பாலோ செய்வாராம்...பல சினிமாக்களை கேபிளும் அவர் அப்பாவும்சைக்கிளில் போய் பார்த்து விட்டு வருவார்களாம்....கேபிள் அப்பா ஒரு சினிமா இயக்க முயற்ச்சி எடுத்த போது சில பல காரணங்களால்... அது நின்று போய்விட்டது... இருப்பினும் கேபிளும் அவர் அப்பாவும் நல்ல நண்பர்கள் போல் பழகுவார்களாம்...உடலுக்கு முடியவில்லை என்று சொல்லி இருக்கின்றார்... கேபிள் அப்பாவை மருத்துவமனைக்கு அழைத்து போக கார் எடுத்து கொண்டு வருவதற்குள் தன் உயிரை விட்டு இருக்கின்றார்...
நல்ல சாவு.. சட்டென இறந்து போய் விட்டார்.... கேபிள்மற்றும் அவர் சகோதரிகள் அழுவது என்பது ஒரு பெரிய விஷயம் அல்ல ... ஆனால் அவரின் மாப்பிள்ளை தன் மாமனாரின் பிரிவுக்கு அழுகின்றார் என்றால் கேபிள் அப்பாவின் நல்ல உள்ளத்தை புரிந்து கொள்ளலாம்.. கடைசி வரை அங்கு உடன் இருந்த அதாவது கண்ணம்மா பேட்டை இடுகாடுவரை வந்து இருந்த சினிமா பிரபலம்... பிரமிட் நடராஜன்அவர்கள்...



இணைய எழுத்தாளர்களின் பலம்.....

1.கேபிளின் தந்தை மரண செய்தி கேட்டு... அந்த அடை மழையிலும், அவனின் அலுவலக வேலைகள்மற்றும் பர்சனல் வேலைகளை ஒதுக்கி விட்டு,மோசமான சென்னை சாலையில் பயணித்து 50க்கு மேற்பட்டவர்கள்,விலாசம் தெரியாத வீட்டுக்கு வழி கண்டு பிடித்து, எல்லோரும் வந்து கூடியதை பார்த்து பைத்தியக்காரன் நெகி்ழுந்து போய் என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார்....

2.கேபிளுக்கு ...கைபேசி மற்றும் குறுந்தகவல் மூலம் பல பதிவர்கள் மற்றும் வாசகர்கள் தங்கள் வருத்தங்களை பகிர்ந்து கொண்டார்கள்....

3. பதிவர்களில் விஷயம் கேள்விபட்டதும் நேரே வீட்டுக்கு போய் தன் எடிஎம் கார்டை கேபிள்கையி்ல் கொடுத்து செலவுக்கு எவ்வளவு வேண்மானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்ன நர்சிம்.... ஒரு படி மேலே போய்விட்டார்...கேபிளிடம் காசு இருக்கின்றது இல்லை என்பது வேறு விஷயம்.. ஆனால் அந்த மனது வரவேண்டுமே.... பாராட்டுக்கள் நர்சிம்...

4.பதிவர்களில் பக்கவாக மாலைமரியாதை செய்தவர் தண்டோராதான்...

5. முரளிகண்ணன் இரவு வீட்டுக்கு செல்லாமல் சைதாபேட்டையில் உள்ள தன் நண்பர் வீட்டிலேயே படுத்துக்கொண்டார்... ஏனென்னறால் எந்த நேரத்திலும் உதவி தேவை படும் அல்லவா???

6.மழையில் பலரை தன் காரில் அழைத்து வந்தது.. தண்டோரா....

7. ஒரு சொந்தக்காரன் துக்க வீட்டுக்கு வருவது என்பது கடமை... அப்படி வரவில்லை என்றால் அது பின்னாளில் நடக்கும் வீ்ட்டு விசேஷத்தில் சொல்லிகாட்டி நக்கல் விடப்படும்... அனால் வேவ்வேறு பின்புலங்களில் இருந்து பதிவர்கள் வந்து தங்கள் வருத்தங்களை பகிர்ந்து கொண்டார்கள் பாருங்கள் அதுதான் கேபிளின் அப்பாவுக்கு பெரிய மரியாதை என்பேன்...

8. இந்த பதிவு எழுதும் இப்போதுவரை எனக்கு கேபிளின் அப்பா பெயர் தெரியாது...அவரை சிதையில் வைத்து விட்டு கேபிளோடு பேசும் போதுதான் அவரை பற்றி ஒரளவுக்கு தெரியும்...மின் அடுப்பில் வைக்க கால் பக்கம் உள்ள மூங்கிலை இருபுறமும் பிடித்து நின்றவர்கள்.. நானும் முரளிகண்ணனும்... இரண்டு பேருமே வெவ்வேறு பின்புலம்.... அவரின் கடைசி வழியனுப்பதலுக்கு நாங்கள் உதவி செய்கின்றோம்..... காரணம் வலை மற்றும் நண்பர்கள்... அவவ்ளவுதான்...

8. நேரில் 50க்கு மேற்ப்பட்ட பதிவர்கள் மற்றும் வாசகர்கள் வந்தார்களே... கேபிளுக்கு,அவர்கள் போனில் பேசியோ, பின்னுட்டம் இட்டோ இருப்பவர்கள் அல்ல... அதுதான் அந்த ஒழுங்குதான்... அந்த ஒற்றுமைதான் வலைபதிவர்களின் பலம் என்பதை கேபிளாரின் தந்தையின் மரணம் உணர்த்தியது...

9. பதிவர் ரம்யா கேபிளுக்கு தன் வருத்தங்களை தெரிவிக்க சொன்னார்... தெரிவத்துவிட்டேன்...

10.எழுத்தாளர்களிடம் இருக்கும் அந்த ஈகோ... இனணய எழுத்தாளர்களிடம் அதிகம் இல்லை என்பதை இந்த செயல் மீண்டும் உறுதி செய்து உள்ளது...
பைத்தியக்காரன் நெகி்ழ்வதில் அர்த்தம் இல்லாமல் இல்லை...

அஸ்த்தி கடலில் கரைத்து கேபிளாரையும் அவர் உறவினர்களையும் காரில் ஏற்றி அனுப்பி விட்டு, கொட்டும் மழையில் குடை பிடித்த படி பெசன்ட்நகர் அறுபடை வீடு முருகன் கோவில் வாசலில் ஒரு அரைமணி நேரம்... நான், தண்டோரா,பைத்தியக்காரன்,வண்ணத்து பூச்சி,முரளிகண்ணன்,வெண்பூ, அதிபிரதாபன் போன்றவர்கள் பேசினோம்...
தண்டோராவின் இடைவெளி இல்லாத பேச்சு எல்லோருடைய மனதையும் லேசாக்கியது எனலாம்...

கடலில் குளித்த உடை ஈரத்துட்ன் வாகனத்தில் வந்து கொண்டு இருந்தேன்
கிண்டி அருகில் சட்டென வானை கிழித்து கொண்டு சென்ற விமானத்தை பார்த்ததும் மீண்டும் ஒரு முறை கேபிளாரின் அப்பா ஆன்மா சாந்தி அடைய மனதில்பிரார்த்தனை செய்து கொண்டேன்...


அன்புடன்
ஜாக்கிசேகர்

70 comments:

  1. விஷயம் தெரியாம போச்சே அண்ணா... கேபிள் சாரின் தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்..!

    ReplyDelete
  2. தந்தையை பிரிந்து வாடும் கேபிளாருக்கும் அவரது குடும்பதினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். கேபிளாரின் தந்தை ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  3. ஜாக்கி அண்ணே கேபிளார் அப்பாவுக்கு அஞ்சலிகள்,பிரார்த்தனைகள், பதிவு கண்ணீரை வர வழைக்க தவறவில்லை, நல்ல பவர்ஃபுல்லான எழுத்துக்கள்.
    நட்புக்கு இலக்கணமாக கூட இருந்து நல்லபடியாக கரை ஏற்றியமைக்கு வந்தனக்கள்.

    ReplyDelete
  4. கேபிள் அண்ணாவுக்கு என் ஆழ்ந்த இரங்கள்கள்.. :(

    வலைப்பதிவர்களின் ஒற்றுமை என்னை கண் கலங்க வைத்துவிட்டது.

    கேபிள்ஜியின் அப்பாவின் ஆத்மா சாந்தி அடைய நான் எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றேன்.

    ReplyDelete
  5. என்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள் திரு. கேபிளாருக்கு .......................

    சனிக்கிழமை காலையிலேயே நான் அலுவலகத்தை விட்டு போய்விட்டேன். நேற்று ஞாயிறு என்பதால் அலுவலகம் விடுமுறை இன்று காலை வந்துதான் செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்தேன் ................


    நானும் துயரத்தில் பங்குகொள்கிறேன் ...................

    ReplyDelete
  6. கேபிளாருக்கு மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்நத இரங்கலை தெரிய படுத்த கடமை பட்டுள்ளேன்.

    ReplyDelete
  7. தந்தையை பிரிந்து வாடும் கேபிளாருக்கும் அவரது குடும்பதினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  8. கேபிளாருக்கு மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்நத இரங்கலை தெரிய படுத்த கடமை பட்டுள்ளேன்.

    ReplyDelete
  9. பதிவு மிக நெகிழ்ச்சியாக இருந்தது. நீங்கள் குறிப்பிடுவதுபோல இணைய எழுத்தாளர்களுக்குள் எந்தவிதமான ஈகோவும் கிடையாது என்பது மறுக்க முடியாத உண்மை.

    ReplyDelete
  10. நல்ல பதிவு ஜாக்கி..கேபிள் துயரிலிருந்து மீண்டு வர பிரார்த்திக்கிறேன்....

    ReplyDelete
  11. உண்மைதான் ஜாக்கி,

    சனிக்கிழமை மதியம் கேபிள் வீட்டுக்கு சென்றேன்.மொத்தம் 15 பதிவர்கள் கூட இருந்தோம்.தம்பி நர்சிம் மதியம் 12.54 க்கு கேபிளின் தந்தை இறப்பு பதிவு போட்டார்.நான் மதியம் 1.05 க்கு நர்சிமுக்கு போன் போட்டேன், எங்க இருக்குகீங்க என்று, கேபிள் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார்.10 நிமிட கால அவகாசத்தில் வீட்டுக்கு போய்விட்டார்.அதே போல் உண்மை தமிழன் பதிவும் போட்டு வீட்டு முகவரியை தெளிவாக போட்டார்.மரணமடைந்தவர்களை வைக்கும் குளிர்சாதன பெட்டியை முரளிகண்ணனும், நர்சிமும், வெண்பூ முதல் மாடிக்கு தூக்கி சென்றனர்.ரொம்பவே நெகிழ வைத்த சம்பவம்.இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்தவுடன் மனைவியிடம் சொன்ன வார்த்தை, நல்லதோ, கெட்டதோ உறவினர் வரானோ இல்லையோ எங்க பதிவர்கள் 10 வது நிமிசம் வீட்டுக்கு வந்துருவாங்க, அது தான் நான் சம்பாத்தித்தது என்று.

    ReplyDelete
  12. கேபிளாருக்கும் அவரது குடும்பதினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்..

    ReplyDelete
  13. நல்லா எழுதி இருக்கீங்க.கேபிள் மீள வேண்டும்

    ReplyDelete
  14. நல்லா எழுதி இருக்கீங்க ஜாக்கி. சில வரிகள் ரொம்ப முக்கியமானதாகவும், எதிர்காலம் பற்றி நம்பிக்கை தருவதாகவும் இருந்தன.

    அனுஜன்யா

    ReplyDelete
  15. விஷயம் தெரியாம போச்சே அண்ணா... கேபிள் சாரின் தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்..--//

    பராவாயில்லை மணி பிரார்த்தனை ஒள்றே போதுமானது...

    மிக்க நன்றி

    ReplyDelete
  16. தந்தையை பிரிந்து வாடும் கேபிளாருக்கும் அவரது குடும்பதினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். கேபிளாரின் தந்தை ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.///

    நிச்சயமாக..

    ReplyDelete
  17. ஜாக்கி அண்ணே கேபிளார் அப்பாவுக்கு அஞ்சலிகள்,பிரார்த்தனைகள், பதிவு கண்ணீரை வர வழைக்க தவறவில்லை, நல்ல பவர்ஃபுல்லான எழுத்துக்கள்.
    நட்புக்கு இலக்கணமாக கூட இருந்து நல்லபடியாக கரை ஏற்றியமைக்கு வந்தனக்கள்.//

    நன்றி கார்த்தி மிக்க நன்றி

    ReplyDelete
  18. வலைப்பதிவர்களின் ஒற்றுமை என்னை கண் கலங்க வைத்துவிட்டது.


    உண்மைதான் அக்கிலீஸ்

    ReplyDelete
  19. சனிக்கிழமை காலையிலேயே நான் அலுவலகத்தை விட்டு போய்விட்டேன். நேற்று ஞாயிறு என்பதால் அலுவலகம் விடுமுறை இன்று காலை வந்துதான் செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்தேன் ................//
    பிரார்த்தியுங்கள் அது போதும் இராஜா

    ReplyDelete
  20. கேபிளாருக்கு மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்நத இரங்கலை தெரிய படுத்த கடமை பட்டுள்ளேன்.//
    நன்றி பிஸ்கோத்துபயல்..

    ReplyDelete
  21. தந்தையை பிரிந்து வாடும் கேபிளாருக்கும் அவரது குடும்பதினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.//
    நன்றி

    ReplyDelete
  22. கேபிளாருக்கு மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்நத இரங்கலை தெரிய படுத்த கடமை பட்டுள்ளேன்.//
    நன்றி காந்

    ReplyDelete
  23. பதிவு மிக நெகிழ்ச்சியாக இருந்தது. நீங்கள் குறிப்பிடுவதுபோல இணைய எழுத்தாளர்களுக்குள் எந்தவிதமான ஈகோவும் கிடையாது என்பது மறுக்க முடியாத உண்மை.//
    உண்மைதான் சரவணகுமார்

    ReplyDelete
  24. நல்ல பதிவு ஜாக்கி..கேபிள் துயரிலிருந்து மீண்டு வர பிரார்த்திக்கிறேன்....//
    நன்றி தண்டோரா மிக்க நன்றி..பிரார்த்திப்போம்

    ReplyDelete
  25. கேபிள் சாருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்....

    நட்பிற்கு வந்தனம்!!!!

    ReplyDelete
  26. நன்றி ஹாலிவுட்பாலா..பங்கெடு்த்துக்கொண்டதற்க்கு

    ReplyDelete
  27. நல்லதோ, கெட்டதோ உறவினர் வரானோ இல்லையோ எங்க பதிவர்கள் 10 வது நிமிசம் வீட்டுக்கு வந்துருவாங்க, அது தான் நான் சம்பாத்தித்தது என்று.//

    நன்றி காவேரி கனேஷ் ரொம்ப அற்புதமா சொல்லி இருக்கிங்க...சொந்த காரன் எதிர்பாபர்புகளோடு செய்வான்.. பாடு பரதேசி அதை பற்றி கவலைபடமாட்டாகள்..

    நன்றி அழகாய் வெளிபடுத்தியமைக்கு

    ReplyDelete
  28. கேபிளாருக்கும் அவரது குடும்பதினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்..//
    நஙன்றி கிள்ளிவளவன்

    ReplyDelete
  29. நல்லா எழுதி இருக்கீங்க.கேபிள் மீள வேண்டும்//
    நன்றி சகா...(நர்சிம்)

    ReplyDelete
  30. நல்லா எழுதி இருக்கீங்க ஜாக்கி. சில வரிகள் ரொம்ப முக்கியமானதாகவும், எதிர்காலம் பற்றி நம்பிக்கை தருவதாகவும் இருந்தன.

    அனுஜன்யா//

    உண்மைதான் அனுஜன்யா...

    ReplyDelete
  31. பதிவு மிக நெகிழ்ச்சி//
    நன்றி ராதாகிருஷ்னன்

    ReplyDelete
  32. கேபிள் சாருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்....

    நட்பிற்கு வந்தனம்!!!!//
    மிக்க நன்றி ராஜேஸ்வரி

    ReplyDelete
  33. துயரத்தில் வாடும் கேபிளாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இலங்கை பதிவர்கள் சார்பில் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து விடுங்கள்.

    ReplyDelete
  34. வண்ணத்துப்பூச்சி சூர்யா அனுப்பித்தான் எனக்கு தகவல் தெரியும். கேபிளாரின் தொடர்பு எண் என்னிடம் இல்லாததால் பேச முடியவில்லை.

    எங்கள் அனைவரின் சார்பாக நீங்கள் அனைவரும் அருகே இருந்தது மகிழ்ச்சி. நன்றிகளை தெரிவிக்கும் அதே வேளையில் கேபிளாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். இறைவன் துயரத்திலிருந்து மீள துணை நிற்கட்டும்.

    ReplyDelete
  35. நெகிழ்வாக இருக்கிறது.

    //கேபிள்மற்றும் அவர் சகோதரிகள் அழுவது என்பது ஒரு பெரிய விஷயம் அல்ல ... ஆனால் அவரின் மாப்பிள்ளை தன் மாமனாரின் பிரிவுக்கு அழுகின்றார் என்றால் கேபிள் அப்பாவின் நல்ல உள்ளத்தை புரிந்து கொள்ளலாம்.. //

    இதில் முக்கியமான விஷயம். அன்று காலைதான் மாப்பிள்ளை துபாய் சென்றார். அலுவலகம் சென்றதுமே செய்தி கிடைத்திருக்கிறது. எந்த விமானத்தில் துபாய் சென்றாரோ, அதே விமானத்தில் சென்னை திரும்பியிருக்கிறார்...

    ReplyDelete
  36. நெகிழ்ச்சியான பதிவு... !

    ReplyDelete
  37. கேபிளாரின் தந்தைக்கு ஒரு மிகச் சிறந்த அஞ்சலியாகவும், பதிவுலகத்தாரின் மனித நேயமும் ஒருங்கே வெளிப்படுத்திய இந்த பதிவுக்கு என் வந்தனங்கள்!
    அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  38. கேபிள் சங்கர் மற்றும் அவர் குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
    பதிவு நண்பர்கள் செய்தது மிக நெகிழ்வான உயர்வான விஷயம்.

    ReplyDelete
  39. பதிவுலக நட்பு கேபிள் சங்கரை அரவணைத்து துயரத்திலிருந்து விரைவில் மீட்டெடுக்கும்

    ReplyDelete
  40. Jackie,

    News is shocking.

    Please convey my DEEP CONDOLENCES to Cable.

    I will send a mial to him personally as well.

    Regards,

    Bala.

    +2347034184824.

    ReplyDelete
  41. தந்தையை பிரிந்து வாடும் கேபிளாருக்கும் அவரது குடும்பதினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  42. மனிதம் இன்னும் சாகவில்லை.
    அன்பும்,தோழமையும் "நான் இருக்கிறேன் " என்னும் தைரியமும் உள்ள தந்தையை இழப்பது கொடுமை. அதை நான் 15 வயசில் அனுபவித்திருக்கிறேன்.
    நண்பரை தைரியபடுத்துங்கள்.
    role மாடல் ஆக இருக்கும் திரு.Narsim அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  43. அதிர்ச்சியான செய்தி. கேபிளாரின் அப்பா ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். பதிவர்கள் இந்த கடின நேரத்தில் உதவியாக இருந்தது இதமாக இருந்தது.

    ReplyDelete
  44. அப்பாவின் நினைவுகளில் இருந்து கேபிள் சங்கர் மீண்டு வரவேண்டும் . அவருக்கு என்னுடைய ஆறுதல் சொல்லிக்கிறேன் .

    அவர் ஒரு நல்ல நிலைமைக்கு வர இறைவனை பிராத்திக்கிறேன் .

    நான் சவுதியில் இருந்தாலும் என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .

    கேபிள் சங்கர் மற்றும் அவர் குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
    பதிவு நண்பர்கள் செய்தது மிக நெகிழ்வான உயர்வான விஷயம்.

    ReplyDelete
  45. கேபிள் சாரின் தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்..!

    ReplyDelete
  46. இந்த நட்பு இறுதிவரையில் தொடரட்டும்..!

    ReplyDelete
  47. கேபிளாரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..

    ReplyDelete
  48. கேபிள் பதிவரின் அப்பாவிற்க்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துகொள்கிறேன்....

    - ஊடகன்

    ReplyDelete
  49. கேபிள் சாரின் தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்..!

    நண்பர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.

    ReplyDelete
  50. கேபிள் சங்கர் அன்னா குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  51. கேபிள் சங்கர் அன்னா குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
  52. அன்னாரது ஆன்மா சாந்தியடையவும், இப்பேரிழப்பை தாங்கும் மனவலுவை நண்பரது குடும்பத்தாருக்கு அளிக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  53. கேபிள் சங்கரின் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த் அனுதாபங்கள்..

    ReplyDelete
  54. ஆழ்ந்த இரங்கல்கள்.ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  55. ஆழ்ந்த இரங்கல்கள்.ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  56. கேபிள் சாரின் தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்

    ReplyDelete
  57. நெகிழ வைத்த பதிவு தல..

    ReplyDelete
  58. நெகிழ வைத்த பதிவு தல..

    ReplyDelete
  59. கேபிளாருக்கும் அவரது குடும்பதினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ஹரி ராஜகோபாலன்

    ReplyDelete
  60. Our deepest heartfelt condolences to Mr.Cableshankar. May his dad's soul rest in peace.

    ReplyDelete
  61. கேபிலாருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்..

    நீங்கள் குறிப்பிட்ட இணைய எழுத்தாளர்களின் பலம் பற்றிய விடயங்கள் சத்தியமே..காரணம் எழுத்துக்களின் ஆரோக்கியமும் நேர்மையும்..

    ReplyDelete
  62. கேபிள் சங்கர் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

    அய்யாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

    -senthil.g,tiruppur

    ReplyDelete
  63. கேபிலாருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்..

    நர்சிம் எண்ணம் அவர் எழுத்துபோலவே என்பதை உணர்ந்தேன்

    ReplyDelete
  64. குற்றவுணர்ச்சி என்னை வாட்டிக்கொண்டே இருக்கின்றது. பதிவர் சந்திப்பு பற்றி கேட்க அவருக்கு ஃபோன் செய்தபோது தந்தை காலமான செய்தியைச் சொன்னார். எனக்கு பதட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் “சாரி சார்?” என்று சொல்லி வைத்துவிட்டேன். தப்பு பண்ணிட்டனோ என்று ரொம்ப நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன். பதிவுலகம் எனக்குப்புதிது என்பதால் யாரிடம் பேசுவதென்று புரியவில்லை(இயல்பாக எனக்குள்ள கூச்ச சுபாவம்). ஒரு நல்ல சகோதரனின் துயரத்தில் பங்குகொள்ளாமல் போனதும், ஒரு நல்ல மனிதனின் இறுதிப்பயணத்தில் கலந்துகொள்ள முடியாமல் இருந்ததையும் நினைக்க நினைக்க நெஞ்சு குமைகிறது. வேறொன்றும் சொல்லத் தோணவில்லை

    ReplyDelete
  65. சங்கருடன் போன வாரம் தான் அறிமுகம். மிக நன்றாக பேசினார். அதி பிரதாபன் மூலம் செய்தி அறிந்தும் இப்போது தான் தெரியும் எப்படி போவது என தயக்கத்தில் போகாமல் இருந்து விட்டேன். போகாதது வருத்தமாக உள்ளது. ஷங்கர் தந்தை பற்றி நீங்கள் எழுதியது நெகிழ்வாக உள்ளது. ஒரு நல்ல தந்தையாக இருந்துள்ளார். சங்கருக்கு இரங்கலை தெரிவிக்கிறேன். "அன்பு காட்ட எண்ணும் போது அப்பா இல்லை" என்ற சுஜாதா வரிகள் நினைவுக்கு வருகிறது.

    நீங்கள் எழுதியது உண்மை தான். பதிவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவுவது பல விதங்களில் நடக்கிறது. இது தொடரும் என நம்புவோம்.

    ReplyDelete
  66. Sorry ஜாக்கி. வேலை பளுவால் ஒரு வாரமாக சரியாக பதிவுகளை படிக்க முடியவில்லை. இன்று தான் பார்க்கிறேன். நெகிழ்ச்சியான பதிவு.

    அன்றிலிருந்து நான் நினைவில் கொள்வது.. பிளாக்கர் இருக்க பயமேன்..??

    நன்றி ஜாக்கி.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner