சில நேரங்களில் மனைவியை சட்டென பிடிக்கும்.. அதற்க்கு எந்த காரணமும் இருக்காது.. சட்டென பேன் காற்றில் பறந்து உதட்டில் பட்ட முடியை சட்டென தனது விரல்களால் விளக்குவதாக இருக்கட்டும்... அல்லது உங்களுக்கு பிடித்த விஷயத்தை நீங்கள் சொல்லாமலே அவர்கள் புரிந்து கொண்டு செய்வதாகட்டும்...அதே போல் உங்கள் உறவுக்கு அவள் கொடுக்கும் முக்கியமாகட்டும் என்று பல விஷயங்களை சட்டென பிடித்து விடும்... இப்படி சொல்லிகொண்டே போனால் பதிவை முடிக்கவே முடியாது...
ஆனாலும் சில நேரங்களில் மனம்முழுவதும் சந்தாஷமாக இருக்கையில் அவளை கலாய்க்க மனம் தயாராகும்...அப்போது எதாவது ஒரு விஷயத்துக்கு முகத்தை உர் என்று வைத்துக்கொண்டால்... அவள் என்ன காரணம் என்று அறிந்து கொள்ள எதையாவது கேட்டு வைப்பாள்...
ரசத்துல உப்பு கம்மியா இருந்துச்சே அதனாலயா?
உன்னி கிருஷ்ணன் குரலும் முகமும் அழகுன்னு சொன்னனே அதா?
கமலோட பர்சனல் கேரக்டர் பிடிக்கலைன்னு சொன்னனே அதனாலையா இந்த கோபம்?
உங்க தங்கச்சி பாலை பொங்க உட்டு அடுப்பை தொடைக்காம போயிட்டாங்கன்னு சொன்னனே... அதனாலையா?
அம்மாகிட்ட அரை மணி நேரமா போன்ல பேசிகிட்டு இருந்தனே அதனாலையா?
உலகத்துலயே எனக்கு ரொம்ப பிடிச்சவங்கன்னு என் ராதா அத்தைய சொன்னே அதனாலயா?
பிரசன்ட் பண்ணறதுல என் தம்பியை அடிச்சிக்கு இந்த உலகத்துல ஆளே இல்லைன்னு சொன்னனே அதனாலயா?
கொஞ்ச நேரத்க்கு முன்ன சர்வம் பாட்டுல திரிஷா கழுத்துக்கு கிழே என்ன டாட்டு ஒட்டி இருக்குன்னு நீ அலைஞ்சி பாக்கும் போது தொடையில வலிக்கறா போல கிள்ளிட்டேனே... அதனாலயா ?
இப்படி எல்லாம் கேட்டு விட்டு ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல்... என்ன எழவுன்னுதான் சொல்லிதொலையேன்... என்று சொல்லி அப்போதும் சொல்லி வைக்கவில்லை என்றால் தலையனையால் உதைத்தாவது விஷயத்தை வாங்கினால்தான் பொதுவாக மனைவிகளுக்கு தூக்கம் வரும்...
தான் தினம் ரசிக்கும் ஒரு மனிதன், அவனின் அசைவுகளுக்கு பல வருடங்களாய் பழக்க பட்டவள்... அவனின் சட்டென முக மாறுதலுக்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள அவள் படும் பாடுகள்..அது மட்டும் இல்லாமல் அவனுக்கு காயத்ரி என்ற பெண்ணின் பிரச்சனையை மனைவியுடன் ஏற்க்கனவே ஷேர் பண்ணி இருக்கின்றான்... அந்த பிரச்சனை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்... ... அப்போது இன்னும் அந்த மனைவி கலவரம் ஆவாள் அப்படி கலவரம் ஆன மனைவி... உம் என்று முகத்தை வைத்து கொண்டு வார்த்தை சொல்ல முடியாமல் முழுங்கி தொலைக்கும் கணவன்... அந்த இருவருடைய ஊடலும் , இங்கே கவிதையான விளம்பரமாய்.....
அந்த கவிதையான ஊடல் விளம்பரம்...
இந்த விளம்ர படம் வந்த போது தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் சென்னையில் பலமாக கால் பதித்த நேரம் அது...
அது ஐடியில் வேலை செய்து விட்டு வீட்டுக்கு வரும் ஒரு கணவனின் சில நிமிடங்களை வெகு இயல்பாய் பதிவு செய்தது போல் இருக்கும் என்பது என் எண்ணம்... காரணம் அப்போது எல்லோருக்கும் ஐடியில் வேலையை விட்டு தூக்கி கொண்டு இருந்தார்கள்... காலையில் வேலைக்கு போனதும்தான் தெரியும்... தனக்கு இனி வேலை இல்லை என்று.....
ஐடி ஆட்களுக்கு பெண் பிள்ளைகளின் சகவாசம் கொஞ்சம் அதிகம்... இதையெல்லாம் கலந்து கட்டி நிகழ்காலத்தின் அறைக்கூவலாய் ...சமுகத்தின் நிதர்சனங்களை கொடிட்டு காட்டுவதாய் ...அந்த விளம்பர படம் இருந்தது என்பேன்...
முதலில் கணவனின் தடுமாற்றத்துக்கு வேகேஷன் வேலை என்று யோசித்தவள்.... எப்படி ஏத்துக்கவன்னு தெரியலை என்று சொல்லும் போது சட்டென காயத்ரி மேட்டர் என்று போகும் போது இந்த மனைவிகள் எந்த அளவுக்கு ரொம்ப ஷார்ப் என்பதை புரிந்து கொள்ளலாம்... இந்த விளம்பர படத்தின் வசனகர்த்தாவும், இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் பாராட்டபடவேண்டியவர்கள்...
அந்த பெண்ணின் படபடபடப்பு கணவனை நேசிக்கும் எல்லா பெண்களிடமும் இதை காணலாம்... அதே போல் லவ்யூ சொல்லி விட்டு சட்டென எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அதன் பிறகு உதட்டில் வெளிபடுத்தும் மென் புன்னகை.. ஒரு தேர்ந்த நடிகனுக்கு உரியது...துள்ளுவதோ இளமை ஹீரோவின் அந்த சிரிப்பின் ரசிகனாய் மாறிப்போனேன்....
நீங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத விளம்பர படம் இது...
22 ஷாட்டுகளில் 53 செகன்டில் ஒரு அற்புதமான விளம்பரம் இது...
வழக்கம் போல் இசை சான்சே இல்லை... பேச நல்ல டைம் எனும் போது கெஞ்சம் அந்த புல்லாங்குழல் இசைஅற்புதம்...
எற்கனவே பல முறை பார்த்த விளம்பரம் என்றாலும் எனக்காக ஒரு முறை ஒரே ஒரு முறை...
ரசிப்பின் பகிர்வை பின்னுட்டம் மூலம் தெரியபடுத்துங்கள்..
அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....
ஓ அவர் துள்ளுவதோ இளமை ஹீரோவா..நிஜமா நல்லாயிருக்கும்
ReplyDeleteஅருமையான விளம்பரம். அழகான விவரிப்பு. உங்க போட்டோ கலக்குறீங்க. எதாவது ஐடியா இருக்கா ? :)
ReplyDeletejakie,
ReplyDeletesame blood. mee too enjoyed this ad :)
:-)
ReplyDeleteதீ... கொளுத்துது!!
தலீவர், இவ்ளோ ரச்க்கறீங்களே உங்க மனைவிகிட்ட ஐ லவ் யூன்னு சொல்லி இருக்கீங்களா? இல்லை என்னாட்டம் நீங்களும் ஒரு காட்டுப்பயலா?
ReplyDeleteஎனக்கு ரொம்ப பிடிச்ச ஐ லவ் யூ விளம்பரம் ‘ஐ லவ் யூ ரஸ்னா’ தாண்ணே. அது கிடைச்சா போடுங்க.
ReplyDeleteதலைப்பைப் பார்த்ததுமே இந்த விளம்பரமா தான் இருக்கும்ன்னு நினைச்சேன்.
ReplyDeleteவிளம்பரத்திற்கு நீங்க கொடுத்திருக்கிற முன்னுரை சூப்பர்
அண்ணே...
ReplyDeleteஅண்ணி வந்துட்டாங்கன்னு இந்த மாதிரி ஒரு ரசனையான பதிவா???
சாண்ட்விட்ச் பதிவ கண்ல காட்ட மாட்டேங்கறீங்க?!?! :)
ஜாக்கி,
ReplyDeleteஎன்னவாச்சி இந்த பதிவில் பழைய துடிப்பும் சரக்கும் காணோம். பொண்டாட்டி வந்தஉடன் ஒன்னும் புரியலையோ. சரக்கு கம்மியா இருக்கு.
உங்கள் மனைவிக்கு 'ஜெட்-லாக்' போயிடுச்சா. உடனே வேலைக்கு join பண்ணனுமா?
//ரசத்துல உப்பு கம்மியா இருந்துச்சே அதனாலயா?// யோவ் எந்த உலகத்துலே இருக்கே நீ? இதெலாம் ரொம்ம்ப ஓவர். ரசத்துலே உப்பு கம்மின்னா போட்டுக்க வேண்டியதுதானே. சும்மா மூஞ்சியை இஞ்சி தின்ன குரங்காட்டம் வச்சிருக்கே. போய் ஆகற வேலைய பாரு. ஏற்கனவே மூஞ்ச பார்க்க முடியாது, இதுலே வேற. - இதுதான் நாங்கெல்லாம் கேக்கறது.
அன்புடன்,
பாலா, நைஜீரியா.
+234 703 418 48 24 .
சூப்பர்
ReplyDeleteசேகர் அண்ணாச்சி,
ReplyDeleteபதிவு அருமை...உங்களின் 'Versatality' மின்னுகிறது!!!!!! கவிதையான விளம்பரம் இது... wine போல தங்களின் எழுத்து போக போக மெருகேறுவது போல் தோன்றுகிறது.. தம்பியின் இன்னொரு சின்னூண்டு ஆசை ... தங்களின் ஓய்வு நேரங்களில் அழகான புத்தகங்களை வாசித்து அதையும் பகிருங்களேன்.. வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தது போல இருக்கும். அதிக பிரசங்கிதனத்துக்கு மன்னிக்கவும்!!!!!!!
Hi buddy..
ReplyDeletereally i liked the way u narrated this topic... this has been my favourite ad for so long.. but after reading this blog it become 'the favourite'... thanks buddy
பதிவும் ரசித்த விதமும் நன்றாய் இருக்கிறது ..நல்ல ரசனை உள்ளம்..
ReplyDeleteஓ அவர் துள்ளுவதோ இளமை ஹீரோவா..நிஜமா நல்லாயிருக்கு///நன்றி அமுதா கிருஷ்ணன் தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்...
ReplyDeleteஅருமையான விளம்பரம். அழகான விவரிப்பு. உங்க போட்டோ கலக்குறீங்க. எதாவது ஐடியா இருக்கா ? :)// ஒரு ஐடியாவும் இல்லை பின்னோக்கி... நம்மல எல்லாம் எவ்ன் இப்படி போட்டோ எடுப்பான்... என் பிரண்டு எடுத்தது
ReplyDeletejakie,
ReplyDeletesame blood. mee too enjoyed this ad :)// நன்றி யாசவி தொடத் வருகைக்கும் பகிர்விற்க்கும் பின்னுட்டத்துக்கும்
தீ... கொளுத்துது!//
ReplyDeleteநன்றி கலை அதெல்லாம் ஒன்னும் இல்லை... கற்பனையை கொஞ்சம் அடக்கு
தலீவர், இவ்ளோ ரச்க்கறீங்களே உங்க மனைவிகிட்ட ஐ லவ் யூன்னு சொல்லி இருக்கீங்களா? இல்லை என்னாட்டம் நீங்களும் ஒரு காட்டுப்பயலா?//
ReplyDeleteகல்யாணத்தக்கு அப்புறம்தான் சொல்லி இருக்கின்றேன்.. பத்து வருட காதலின் போது அந்த வார்த்தையை மறந்து கூட நாங்கள் இரவரும் பயண்படுத்தியது கிடையாது...
ஐ லவ்யூ சொன்னாதான் காதலிக்கறதா அர்த்தம் கிடையாது.. இல்லையா.. குடு குடுப்பை...
சொன்னால்தான் காதலா?
எனக்கு ரொம்ப பிடிச்ச ஐ லவ் யூ விளம்பரம் ‘ஐ லவ் யூ ரஸ்னா’ தாண்ணே. அது கிடைச்சா போடுங்க//
ReplyDeleteலக்கி நீங்க சொன்னது போல் அந்த விளம்பர படமும் எனக்கு பிடிக்கும் போட்டுட்டா போச்சி...
நன்றி லக்கி தங்கள் வருகைக்கு
தலைப்பைப் பார்த்ததுமே இந்த விளம்பரமா தான் இருக்கும்ன்னு நினைச்சேன்.
ReplyDeleteவிளம்பரத்திற்கு நீங்க கொடுத்திருக்கிற முன்னுரை சூப்பர//
நன்றி கே வீ ஆர் மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கும் பாராட்டுக்கும்...
அண்ணே...
ReplyDeleteஅண்ணி வந்துட்டாங்கன்னு இந்த மாதிரி ஒரு ரசனையான பதிவா???
சாண்ட்விட்ச் பதிவ கண்ல காட்ட மாட்டேங்கறீங்க?!?! :)//
நாளைக்கு உனக்காக சாண்ட்விச் போதுமா???
உங்கள் மனைவிக்கு 'ஜெட்-லாக்' போயிடுச்சா. உடனே வேலைக்கு join பண்ணனுமா?
ReplyDelete//ரசத்துல உப்பு கம்மியா இருந்துச்சே அதனாலயா?// யோவ் எந்த உலகத்துலே இருக்கே நீ? இதெலாம் ரொம்ம்ப ஓவர். ரசத்துலே உப்பு கம்மின்னா போட்டுக்க வேண்டியதுதானே. சும்மா மூஞ்சியை இஞ்சி தின்ன குரங்காட்டம் வச்சிருக்கே. போய் ஆகற வேலைய பாரு. ஏற்கனவே மூஞ்ச பார்க்க முடியாது, இதுலே வேற. - இதுதான் நாங்கெல்லாம் கேக்கறது.
பாலா பதிவுல சரக்கு கம்மியா இருந்தா... எப்படியும் பாண்டில இருந்து வாங்கி வந்து சரக்கை ஏத்திடலாம்...
இன்னும் ஜெட்லாக் போகவில்லை.. அதற்க்குள் ஆபிசுக்கு வர சொல்லி லந்து செய்கின்றார்கள்..
ரசத்துல உப்பு கம்மிக்கு இப்படி எல்லாம வசவு வாங்குவிங்க... நான் தேவலை...
நன்றி பாலா தொடர் பகிர்வுக்கு
நன்றி நாஞ்சில் நாதம்..
ReplyDeleteநன்றி முரளி கண்ணன்
ReplyDeleteHi buddy..
ReplyDeletereally i liked the way u narrated this topic... this has been my favourite ad for so long.. but after reading this blog it become 'the favourite'... thanks buddy//
நன்றி சாஜி... உங்கள் இது போலான அன்பு பாராட்டலே... இன்னும் என்னை சுவாரஸ்யமாக எழுத மெனக்கெட வைக்கும்....
நன்றி உங்கள் பாராட்டுக்கும் பகிர்வுக்கும்
சேகர் அண்ணாச்சி,
ReplyDeleteபதிவு அருமை...உங்களின் 'Versatality' மின்னுகிறது!!!!!! கவிதையான விளம்பரம் இது... wine போல தங்களின் எழுத்து போக போக மெருகேறுவது போல் தோன்றுகிறது.. தம்பியின் இன்னொரு சின்னூண்டு ஆசை ... தங்களின் ஓய்வு நேரங்களில் அழகான புத்தகங்களை வாசித்து அதையும் பகிருங்களேன்.. வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தது போல இருக்கும். அதிக பிரசங்கிதனத்துக்கு மன்னிக்கவும்!!!!!!!//
நன்றி இவன் சிவன்...
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.. வேலை பளு காரணமாக நிறைய படிக்க நேரம் கிடைப்பதில்லை இருந்தாலும் இது வரை படித்த புத்தகங்களை விமர்சனம் செய்கின்றேன்...
நன்றி இதில் அதிக பிரசங்கி தனம் ஏதுமில்லை
பதிவும் ரசித்த விதமும் நன்றாய் இருக்கிறது ..நல்ல ரசனை உள்ளம்.//
ReplyDeleteமிக்க நன்றி நிலாமதி ... உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி
anyone knows the name of the actress in this advt. she comes in almost all advt.s these days.. hamam, lalitha jewellary,vivaaha,
ReplyDeletefound it.. her name is "Divya parameshwar". :)
ReplyDeleteஅழகான விளம்பரன்
ReplyDeleteஇப்போதுதான் தமிழில் பார்க்கிறேன்