என் இல்லாளின் வருகையும்.. சென்னை ஏர்போர்ட்டும்.....

சென்னை இரவு நேரத்தில் எழில் கொஞ்சும் ஏர்போர்ட்... புதிய பாலத்தில் இருந்து எடுத்தேன் கிளிக்கி பிரமாண்டமாய் பார்க்கவும்...

ஒரு வழியாக சனிக்கிழமை காலை அயர்லாந்து டப்ளின் ஏர்போர்ட்டில் காலை 6 மணிக்கு ஏறி... 10 மணிக்கு பாரிஸ் வந்து... பாரி்சில் இருந்து ஸ்வதேஷ் ஷாருக் போல் இந்திய மண்ணில் என் மனைவி கால் பதிக்க பயணித்து வந்த , அந்த அலுமினிய பறவை இடம் தேர்ந்து எடுத்தது...பெங்களுரில் ஞாயிறு நடு இரவு 12,30க்கு. இமிக்கிரியேஷன் செக் எல்லாம் முடித்து... போர்டிங் பாஸ்வாங்கி வெளியே போய் அவள் அம்மாவை பார்த்து பேசி விட்டு....

பெங்களுரில் விடியலில் 6,30க்கு கிங்பிஷரின் சென்னை பிளைட் ஏற வேண்டும் ... ஆனால் சென்னையில் வருணபகவானின் உக்கிர பார்வையால் புவியீர்ப்பு திசைக்கு எதிர் திசையில் பயணிக்க கொஞ்சம் சிரமமாக இருப்பதால்... அந்த பிளைட் கேன்சல் செய்யபட்டு, எழுமணி சென்னை பிளைட்டில் அனைவரையும் ஏற்றி 8,30க்கு சென்னை எர் போர்ட்டில் வந்து சேர்த்தார்கள்... நான் அங்கு முன்பே போய் எனது இல்லாளின் வருகைக்கு, எனது மச்சான் ஆனந் மற்றும் குடும்ப நண்பர் சுந்தர்ராஜனுடன் காத்து இருக்கு ஆரம்பித்தேன்...

கிங்பிஷர் விமான பணிப்பெண்கள் நமக்கு பிரஷர் ஏற்றும் வகையில் தொடை தெரிய கருப்பு காலுரை அணிந்து நடந்து போனார்கள்...

ஏர் போர்ட் முன்பு போல் இல்லை... இப்போதுதான்இந்திய விமான துறை தூக்கம் கலைந்து விரிவு படுத்தி கொண்டு இருக்கின்றார்கள்... அது அழகாகவும் இருக்கின்றது..

பத்து ரூபாய்க்கு ஏர் போர்ட்டில் விற்க்கும் காப்பி,டீ... அடை மழை காரணமாக ரொம்பவும் தண்ணியாக இருந்தது..


எல்லா இடத்திலும் நவ நாகரீக நங்கையர் தலை கோதி...பக்கவாட்டில் பார்க்கும் போது பலத்த பெருமூச்சு ஏற்பட வைத்தனர்...

எதோ ஒரு இந்திய வெளிநாட்டு அதிகாரியின் பெயரையும் வெல்கம்மையும் கடனுக்கு எழுதி போராட்டகாரர்கள் போல் அட்டை பிடித்து... அழைத்து போக வந்த கார் டிரைவர்கள் கால் கடுக்க நின்று கொண்டு இருந்தார்கள்....

எல்லா இடத்திலும் பிரிவின் வலியை வரவேற்க்க நிற்க்கும் சொந்தங்களின் கண்களில் பார்க்க முடிகின்றது...

தூரத்தில் டிராலியோடு நடந்து வரும் கணவனை பார்த்தஉடன் கண்களில் சட சடவென நீர் பெருகும் மனைவியை பார்த்தேன்...

வரும் போது மனைவியை வரவேற்க்கு எந்த பொருளும் வாங்கி செல்லவில்லை.. அது எனக்கு இதுவரை பழக்கமும் இல்லை... சரி ஏர் போர்ட்டில் போக்கே கடைக்கு போனால் ரூபாய் 150 என்றார்கள்...
நான் அந்தளவுக்கு காஸ்ட்லியாக அன்பை வெளிப்படுத்தாமல் ஒரு ஒற்றை சிவப்பு ரோஜா 20 ரூபாய்க்கு கிடைத்து... இலைகளுடன் பிளாஸ்டிக் பேப்பரில் தன்னை சிறைபடுத்த ஒப்புக்கொண்டது...


பொதுவாக விமானபயணம் என்பது இன்னும் பயம் கொள்ளும் விஷயமாகவே எனக்கு இருக்கின்றது... காரணம் அதிக ஆங்கில படம் பார்த்ததும், இதற்கு முன் அதில் நான் பயணம் செய்யாததே காரணம் என்பேன்.. சென்னை வந்த புதுதில் நங்க நல்லூர் போக ஜி எஸ்டி சாலையில் போய் கொண்டு இருக்கையில் திடிர் என்று தலைக்கு மேல் பயங்கர சத்தத்துடன் இறங்கும் அந்த எருமையை பயத்துடன் பார்த்து இருக்கின்றேன்...

நான் இதுவரை விமானம் ஏறியதில்லை...முதலில் ஒரு பாஸ்போட் எடுத்தேன் அதற்கு பத்து வருட வேலடிட்டி இருந்தது.. இந்திய அரசு முத்திரை தவிர வேறு எந்த நாட்டு முத்திரையும் குத்தாமலேயே.. கைபடாத கன்னியாகவே காலவதி ஆனது... இப்போதும் பாஸ்போர்ட் எடுத்து வைத்து இருக்கின்றேன்...ஹேர்ஹோஸ்ட்டல் கையால் சாக்லேட்டோ, சரக்கோ வாங்கி சாப்பிடும் பாக்கியம் கிடைக்கின்றதா? என்று பார்ப்போம்...

9 மணிவாக்கில் டிராலியில் பொருட்களுடன் எங்களை தேடியவாறு என் மனைவி வந்தாள் ..சென்னையில் ஏர்போர்ட்டில் அனைத்து... நெற்றியில் முத்தமிடுவது அனைவரையும் கவனிக்க வைக்கும் செயல் என்பதால்...கை குலுக்கி... 20ரூபாய் ரோசை கொடுத்து வரவேற்றேன்...கண்களில் மூன்றுமாத பிரிவுவை நான் படித்தேன்... மனதுக்கு நிறைவாய் இருந்தது...

செக்கின் போது ஏர் போர்ட்டில்... எல்லாம்பொருளின் எடை குறித்த வாக்குவாதம் இல்லாமல்... டென்ஷன் இல்லாமல்...அயர்லாந்து மற்றும் சென்னையில் எந்த பிரச்சனையும் இல்லாமல்... என் மனைவியும் மனைவியின் நண்பர்பகளும் வெளியே வந்தார்கள்... அதற்கு காரணம் அயர்லாந்து நண்பர் மேஷக்... எடை பார்க்கும் மெஷினை விருந்தோம்பலின் போதே கொடுத்து விட்டு இருந்த படியால்...முன்பே எடை பார்த்து அதற்கு ஏற்றார் போல் பொருள் அடுக்கி எந்த டென்ஷனும் இல்லாமல் வர காரணமாய் இருந்த அயர்லாந்து வாசக நண்பர்கள் மேஷாக் மற்றும் ஸ்டிபன் இருவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்....

அதே போல் அயர்லாந்தில் எனது மனைவி மற்றும் நண்பர்களை எங்கள் விட்டிற்க்கு ஏன் அழைத்து வரவில்லை என்று உரிமையோடு மேஷாக்கை கோபித்துக்கொண்ட நல்ல வாசக தமிழ் உள்ளங்களுக்கு எனது நன்றிகள்...


நண்பர் மேஷாக்கின் கடிதம்

(அன்பின் ஜாக்கி அவர்களுக்கு பதிவை படித்தேன் என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை நீங்கள் குறிப்பிட்டிருந்தபடி நாங்கள் செய்தது ஒன்றும் இல்லை. ஸ்டீபன் படித்தபோது அவருடைய கண்கள் கலங்கியதுதான்உண்மை, அவர் என்னிடம் சொல்லும்போது ஜாக்கி நம்பளை எங்கோ கொண்டுபோய் வச்சிட்டருப்பாஎன்று சொல்லிக்கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாது இங்கு இருக்கும் நண்பர்கள் ஒருவர் விடாமல் போன் செய்து சிஸ்டர் மற்றும் அவர்கள் நண்பர்களை எங்கள் வீட்டிற்கும் அழைத்து வந்தால் என்ன என்று விசாரித்தார்கள். நாங்கள் யாருக்கும் சொல்லவில்லை அவர்களே தமிலிஷ்ல் பார்த்துவிட்டு விசாரித்தார்கள் அப்புறம்தான் நானே பார்த்தேன்.என் மனைவியும் எப்பவாவதுதான் உங்களுக்கு இதுபோல உருப்படியாய் செய்யதோனும் என்று பாராட்டினாள்(? ). எங்கள் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சியே. என் மகனும் நேத்து வந்தாங்களே அந்த aunty எல்லாம் இந்தியா போயிட்டாங்களா என்று கேட்டான். நேற்றுதான் சிஸ்டேரிடம் பேசினேன் எல்லாம் ரெடி என்றும் இந்தியா சென்றதும் மெசேஜ் அனுப்புகிறேன் என்றும் சொன்னார்கள். கமெண்ட்ஸ் எழுதவில்லை என்றாலும் உங்கள் பதிவுகளை ஒன்று விடாமல் படித்துக்கொண்டிருக்கின்றோம். ஸ்டீபன் மற்றும் எங்கள் குடும்பத்தின் சார்பாக உங்களுக்கு எங்களின் அன்பு கலந்த வணக்கம். நீங்கள் மென் மேலும் வளர ஆண்டவரிடம் பிரார்த்திக்கின்றோம் . நன்றி மேஷாக் )

மேஷாக்...மற்றும் ஸ்டீபன்... இப்போதும் உங்களுக்கு சொல்கின்றேன்... நீங்கள் செய்த உதவி ரொம்ப சாதாரணம் என்று நீங்கள் சொல்கின்றீர்கள்... அது என்னை பொறுத்தவரை, என் மனைவியை பொறுத்த வரை அது ரொம்ப பெரிய விஷயம்...இன்னும் என் மனைவியின் நண்பர்கள்...என்மனைவியை ரொம்ப பெருமையாக பார்க்கின்றார்கள்.. கடல் கடந்து பல்லாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இப்படி ஒரு உதவி கிடைத்ததே என்று.....மிக்க நன்றி ...


பொருட்களை எல்லாம் காரில் ஏற்றி விட்டு என் மனைவி என் இரண்டுவார தாடியை பார்த்து விட்டு...
என்ன தாடி எல்லாம் வைத்துக்கொண்டு இருக்கின்றாய்..? என்று கேட்டாள்...நான் பிரிவு துயர் என்றேன்... 3 மாசம் என்றாள் நிறைய இருக்கனுமே... கொஞ்சம்தான் தாடி இருக்குது... என்று எதிர்கேள்வி கேட்டாள்.... இதுக்குதான் படிச்ச பொண்ணுங்களை கல்யானம் செய்ய கூடாது...யுவர் ஆனர்... (அப்பவே எங்க அப்பா கள்ளகுறிச்சி பக்கம் சிறுவந்தாடு கிராமத்துல பெண் பார்ப்பதாக சொன்னார்... அதை நினைத்துக்கொண்டேன் சும்மா சோக்கு)

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

48 comments:

  1. மீ தி பர்ஸ்ட்டா?
    இருக்கட்டும் இருக்கட்டும்!

    ReplyDelete
  2. எனக்கு விமானத்தில் செல்ல வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது.. ஆனால் பயம் இல்லை,

    பதிவு அருமை,

    ReplyDelete
  3. முன்று மாதமாக துாரமாக இருந்த வசந்தம் இன்று முதல் பலமாக வீச வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. \\கிங்பிஷர் விமான பணிப்பெண்கள் நமக்கு பிரஷர் ஏற்றும் வகையில் தொடை தெரிய கருப்பு காலுரை அணிந்து நடந்து போனார்கள்..//

    அடிகடி அந்த சைடுல போய் டென்ஷன் ஆகாதிங்க, டென்ஷன்ல இருக்குற கொஞ்ச நஞ்ச முடி கூட எகிறிட போகுது .. சும்மா ஒரு ஜோக் தான்..

    ReplyDelete
  5. // 3 மாசம் என்றாள் நிறைய இருக்கனுமே... கொஞ்சம்தான் தாடி இருக்குது//

    சூப்பர் மேட்டர் அண்ணி. நல்லா கேளுங்க.

    வாழ்த்துக்கள் தல. நல்ல அண்ணி வந்துட்டாங்க, இனி சந்தோஷமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்.. உங்கள் துனைவியாருக்கும் உங்களுக்கும்!

    ReplyDelete
  7. அடுத்து ஆக வேண்டியதை பாருப்பா..

    ReplyDelete
  8. I need your help. I have an Idea about Internet business as facebook,twitter,you tube.
    But, How to register/copywright my idea?
    regards,
    naren.
    naren73in@yahoo.com

    ReplyDelete
  9. ///
    தண்டோரா ...... said...

    அடுத்து ஆக வேண்டியதை பாருப்பா
    ///

    ரிப்பீட்டு...

    அன்பு நித்யன்

    ReplyDelete
  10. ஜாக்கி...அந்த சைடுல இருக்கிற போட்டோவை பத்திரமா வச்சுக்க(நாளைக்கு உன் புள்ள சாப்பிட படுத்தினா பயம் காட்டறதுக்கு??)

    ReplyDelete
  11. மீ தி பர்ஸ்ட்டா?
    இருக்கட்டும் இருக்கட்டும்!--//

    நன்றி சிவா.. மிக்க நன்றி

    ReplyDelete
  12. எனக்கு விமானத்தில் செல்ல வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது.. ஆனால் பயம் இல்லை,

    பதிவு அருமை,//
    நன்றி ரோமியோ பாய்

    ReplyDelete
  13. முன்று மாதமாக துாரமாக இருந்த வசந்தம் இன்று முதல் பலமாக வீச வாழ்த்துகள்.//

    நன்றி பிஸ்கோத்து பயல்.. உங்கள் அன்புக்கு

    ReplyDelete
  14. அடிகடி அந்த சைடுல போய் டென்ஷன் ஆகாதிங்க, டென்ஷன்ல இருக்குற கொஞ்ச நஞ்ச முடி கூட எகிறிட போகுது .. சும்மா ஒரு ஜோக் தான்..//

    ரேமோ பாய் நடைபாதையில் புல் வளராது.. நிறைய யோசிக்கும் மண்டையில் முடி வளராது.. சும்மா சோக்கு

    நன்றி ரேமோ பாய்

    ReplyDelete
  15. சூப்பர் மேட்டர் அண்ணி. நல்லா கேளுங்க.

    வாழ்த்துக்கள் தல. நல்ல அண்ணி வந்துட்டாங்க, இனி சந்தோஷமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன்.//

    நன்றி யோ

    ரொம்ப சந்தோஷம்.. மிக்க நன்றி

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்.. உங்கள் துனைவியாருக்கும் உங்களுக்கும்!//
    நன்றி கலை .. உனது அன்புக்கு

    ReplyDelete
  17. அடுத்து ஆக வேண்டியதை பாருப்பா..//
    சரிங்க தலைவா.

    ReplyDelete
  18. I need your help. I have an Idea about Internet business as facebook,twitter,you tube.
    But, How to register/copywright my idea?
    regards,
    naren.
    naren73in@yahoo.com//
    நன்றி நரேனுக்கு இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... எனக்கு இது பற்றிஎதுவும் தெரியாது.. வேறு யாராவது நண்பர்களை தொடர்பு கொள்ளவும்..

    ReplyDelete
  19. wish you all the best....
    happy life.....//
    நன்றி இளங்கோ.. மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு

    ReplyDelete
  20. ///
    தண்டோரா ...... said...

    அடுத்து ஆக வேண்டியதை பாருப்பா
    ///

    ரிப்பீட்டு...

    அன்பு நித்யன்//


    நன்றி நித்யன்.. மிக்க நன்றி

    ReplyDelete
  21. ஜாக்கி...அந்த சைடுல இருக்கிற போட்டோவை பத்திரமா வச்சுக்க(நாளைக்கு உன் புள்ள சாப்பிட படுத்தினா பயம் காட்டறதுக்கு??)

    தண்டோரா... ஒன்னு உங்களுக்கு தன்னம்பிக்கை இல்லாம இருக்கனும் இல்லை பயமா இருக்குனும் இல்லைன்னா, பொறாமையா ,இருக்கனும்.. அப்படியும் இல்லைனா அப்படி ஒரு போட்டோ எடுத்து பிளாக்ல போட தைரியம் இல்லை ..?, நீங்க என்ன சொல்ல வரிங்க...

    ReplyDelete
  22. //ஜாக்கி...அந்த சைடுல இருக்கிற போட்டோவை பத்திரமா வச்சுக்க(நாளைக்கு உன் புள்ள சாப்பிட படுத்தினா பயம் காட்டறதுக்கு??)//

    Good comment. I enjoyed.
    May be Jackie is using that photo to get a 'Hero Chance' in a movie.

    Jackie, don't worry, you have a better face and knowledge base than some of the leading heros of Tamil Film Industry. So photo is not bad. Only that black sun glasses are bad. Remove that and let's see.

    Now with your wife back at home after a looooong time, I think you posts will be reduce in mumber and size.

    I liked the way you presented your wait in Airport. Flight travel is interseting only for few times, and it starts to become bore, especially on long flights. Ask your wife, if she loved flight travel from Dublin to India. May be she would have liked Dublin to Paris. But Paris to Bangalore, after first 2 hours, she must have been under lot of stress, especially if she had a window seat and 2 bulky persons sitting on aisle seat. My God to get out of seat to go that toilet used by 300 people in the plane, it is nightmare. It is a pain in the back. If it is Indian Airlines or Air India, toilets smell very bad. So flights (economy class) are not comfortable for long travels. Up to 4 hours is OK.

    Once I travelled from Los Angeles to Singapore, the longest non stop flight (18 Hours 50 Minutes) across Pacific Ocean. My god, I regretted to have chosen that world's longest flight (it was well maintained Singapore Airlines, with free massage service onboard. Nice young girl will massage your body- on Business Class)after I landed. I was jet-lagged for 4 days.

    With your wife back at home, you will have a lot to listen from her about her experience, which she may not have shared with on video chatting. Further 'separation' whether its is long or short, will always make one understand the importance of other. She and you must have understood this three months. This is my personal experience.

    If you read ThiruKural, 'Kamathupaal- Pirivu and Pirivu aarttamai' adikarams, you will understand how this pirivu is and how it helps in mending a relationship so close. This existed even 200 years before.

    Enjoy your family life. All the best.

    Regards,

    Bala.
    +2347034184824,
    +919486457303

    ReplyDelete
  23. //ஜாக்கி...அந்த சைடுல இருக்கிற போட்டோவை பத்திரமா வச்சுக்க(நாளைக்கு உன் புள்ள சாப்பிட படுத்தினா பயம் காட்டறதுக்கு??)//

    Good comment. I enjoyed.
    May be Jackie is using that photo to get a 'Hero Chance' in a movie.

    Jackie, don't worry, you have a better face and knowledge base than some of the leading heros of Tamil Film Industry. So photo is not bad. Only that black sun glasses are bad. Remove that and let's see.

    Now with your wife back at home after a looooong time, I think you posts will be reduce in mumber and size.

    I liked the way you presented your wait in Airport. Flight travel is interseting only for few times, and it starts to become bore, especially on long flights. Ask your wife, if she loved flight travel from Dublin to India. May be she would have liked Dublin to Paris. But Paris to Bangalore, after first 2 hours, she must have been under lot of stress, especially if she had a window seat and 2 bulky persons sitting on aisle seat. My God to get out of seat to go that toilet used by 300 people in the plane, it is nightmare. It is a pain in the back. If it is Indian Airlines or Air India, toilets smell very bad. So flights (economy class) are not comfortable for long travels. Up to 4 hours is OK.

    Once I travelled from Los Angeles to Singapore, the longest non stop flight (18 Hours 50 Minutes) across Pacific Ocean. My god, I regretted to have chosen that world's longest flight (it was well maintained Singapore Airlines, with free massage service onboard. Nice young girl will massage your body- on Business Class)after I landed. I was jet-lagged for 4 days.

    With your wife back at home, you will have a lot to listen from her about her experience, which she may not have shared with on video chatting. Further 'separation' whether its is long or short, will always make one understand the importance of other. She and you must have understood this three months. This is my personal experience.

    If you read ThiruKural, 'Kamathupaal- Pirivu and Pirivu aarttamai' adikarams, you will understand how this pirivu is and how it helps in mending a relationship so close. This existed even 200 years before.

    Enjoy your family life. All the best.

    Regards,

    Bala.
    +2347034184824,
    +919486457303

    ReplyDelete
  24. //3 மாசம் என்றாள் நிறைய இருக்கனுமே... கொஞ்சம்தான் தாடி இருக்குது//

    :-)

    3 மாஆஆஆஆஆஆஆஆஆஆச பிரிவு, பதிவு எழுத நேரம் கிடைக்குதா!!!!!!

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் ஜாக்கி, மற்றும் புகைப்படம் அருமை இந்த கோணத்தில் இதுவரை பார்த்ததில்லை.டாக்ஸிகளின் அணிவகுப்பு அழகு

    ReplyDelete
  26. / jackiesekar said...
    ஜாக்கி...அந்த சைடுல இருக்கிற போட்டோவை பத்திரமா வச்சுக்க(நாளைக்கு உன் புள்ள சாப்பிட படுத்தினா பயம் காட்டறதுக்கு??)

    தண்டோரா... ஒன்னு உங்களுக்கு தன்னம்பிக்கை இல்லாம இருக்கனும் இல்லை பயமா இருக்குனும் இல்லைன்னா, பொறாமையா ,இருக்கனும்.. அப்படியும் இல்லைனா அப்படி ஒரு போட்டோ எடுத்து பிளாக்ல போட தைரியம் இல்லை ..?, நீங்க என்ன சொல்ல வரிங்க//

    ஏ..அப்பா...சீரியசாவா எடுத்துகிட்ட?

    ReplyDelete
  27. //தண்டோரா ...... said...
    / jackiesekar said...
    ஜாக்கி...அந்த சைடுல இருக்கிற போட்டோவை பத்திரமா வச்சுக்க(நாளைக்கு உன் புள்ள சாப்பிட படுத்தினா பயம் காட்டறதுக்கு??)

    ஏ..அப்பா...சீரியசாவா எடுத்துகிட்ட?""

    ஜாக்கி என்ன இது? தண்டோராவின் கமெண்ட்டை படிக்கும் போது எனக்கு தெரிந்த கிண்டல் தொனி உனக்கு எப்படி தெரியாமல் போனது? இதுக்கு இப்படி ஒரு சீரியஸ் பதில்?
    போன பதிவுக்கான கமெண்டில் தான் சொல்லியிருந்தேன், ஜாக்கி எவ்வளவு கலாய்ச்சாலும் தாங்குவான், என்னா அவன் ரொம்ம்ம்ப நல்ல்லவன்னு--

    பை த வே, போன பதிவின் கமெண்டுகளுக்கு பதில் இன்னும் வரவில்லை..
    என்றும் அன்புடன்
    நண்பன் பாஸ்டன் ஸ்ரீராம்...

    **சுதாவை ரொம்ப கேட்டதாக சொல்லவும்..

    ReplyDelete
  28. வருங்கால மினி தளபதி அண்ணன் ஜாக்கி சேகர் வாழ்க

    ReplyDelete
  29. //எல்லா இடத்திலும் பிரிவின் வலியை வரவேற்க்க நிற்க்கும் சொந்தங்களின் கண்களில் பார்க்க முடிகின்றது...//

    அருமையான வரிகள்.

    ReplyDelete
  30. ஹா. ஹா.. ஹா... நல்ல வேளைங்க ஸ்ரீராம்.

    போன பதிவில் நீங்க சொன்னதை நம்பி.. நான் ஜாக்கியை கலாய்க்காம விட்டேன்! :) :)

    =======

    ஜாக்கி.. இங்க கதை.. அப்படியே உல்டா! நாளைல இருந்து 3 மாசத்துக்கு... மீ த பேச்சிலர்! :)

    ReplyDelete
  31. இல்ல பாலா,
    எனக்கு தனாவைத் தெரியும், நான் இப்பவும் சொல்றேன்.. அவன் எவ்வளவு கலாய்ச்சாலும் தாங்குவான், என்னா அவன் ரொம்ம்ம்ம்ம்ப நல்ல்ல்ல்லவன்...

    ஜாக்கி பாத்தியா, மத்தவனெல்லாம் பொண்டாட்டி ஊருக்கு போனா எப்படி ஸ்மைலி போட்டு “தங்கமணி ஊருக்கு போயிட்டா”ன்னு குதிக்கிராங்க...:):)
    என்றும் அன்புடன்
    நண்பன் பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  32. கலையரசன் said...

    வாழ்த்துக்கள்.. உங்கள் துனைவியாருக்கும் உங்களுக்கும்!

    repeate

    அண்ணே சீக்கிரமே பாஸ்போர்டை புதுப்பிச்சு மலேசியாவுலயோ பான்க்காக்குக்கோ சூட்டிங் போவிங்க பாருங்க. ரொம்ப ரசித்தேன்

    ReplyDelete
  33. நல்லாருக்கிறது சென்னை ஏர்போர்ட்

    ReplyDelete
  34. //// ஜாக்கி பாத்தியா, மத்தவனெல்லாம் பொண்டாட்டி ஊருக்கு போனா எப்படி ஸ்மைலி போட்டு “தங்கமணி ஊருக்கு போயிட்டா”ன்னு குதிக்கிராங்க...:):)
    /////

    அமெரிக்காவுல பேச்சிலர்-ன்னா... அது கடவுளா பார்த்து கொடுத்த வரம்!!! குதிக்கிறேனா...??? ஹா..

    புதன் கிழமைல இருந்து பாருங்க...!! :) :) :)

    ReplyDelete
  35. With your wife back at home, you will have a lot to listen from her about her experience, which she may not have shared with on video chatting. Further 'separation' whether its is long or short, will always make one understand the importance of other. She and you must have understood this three months. This is my personal experience.

    If you read ThiruKural, 'Kamathupaal- Pirivu and Pirivu aarttamai' adikarams, you will understand how this pirivu is and how it helps in mending a relationship so close. This existed even 200 years before.

    Enjoy your family life. All the best.
    //

    பாலா நீ போட்ட பதிலை அப்படியே மனைவி படிச்சிட்டு அமோதித்தாள் .. மிக்க ந்னறி விரிாவன தகவலுக்கு..
    18 மணிநேரப்பயணம் கொடுமைதான் பாலா...

    நீ சொன்ன ஜெட்லாக் இங்கயும்தான்

    மிக்க நன்றி

    ReplyDelete
  36. //3 மாசம் என்றாள் நிறைய இருக்கனுமே... கொஞ்சம்தான் தாடி இருக்குது//

    :-)

    3 மாஆஆஆஆஆஆஆஆஆஆச பிரிவு, பதிவு எழுத நேரம் கிடைக்குதா!!!!!!//

    நிறைய நேரம் கிடைக்குது நண்பா... போதுமா? நன்றி கேவிஆர்

    ReplyDelete
  37. வாழ்த்துக்கள் ஜாக்கி, மற்றும் புகைப்படம் அருமை இந்த கோணத்தில் இதுவரை பார்த்ததில்லை.டாக்ஸிகளின் அணிவகுப்பு அழகு// நன்றி மேஷாக் உங்கள் பின்னுட்டத்திற்க்கு தொடர்ந்து எழுத முயற்ச்சியுங்கள்... பின்னுட்டம் போடுங்கள்...

    அந்த வேயிங் மெஷின் கொடுத்த உதவியதற்க்கு என் மனைவி ஸ்பெஷல் தேங்ஸ் சொல்ல சொன்னாள்..

    நன்றி

    ReplyDelete
  38. ஏ..அப்பா...சீரியசாவா எடுத்துகிட்ட?//

    தண்டோரா அப்படி சீரியசா எடுத்துக்கிட்டா நான் போன்ல சொல்ல போறேன்... என் பதில் போட போறேன்?..

    பொண்மாட்டியை கடைக்கு கூட்டிகிட்டு போயிட்டு வரதுக்குள்ள ஏன்யா? இப்படி கும்மி அடிச்சிரு...

    அவசரத்துல போஸ்ட் போட்டதால அந்த கேள்வியை ராவா கேட்டு தொலைச்சிட்டேன் தலைவா, வாய்ா போய்யா என்று அதில் கொஙசம் காமெடி கலந்து எழுதி இருந்தால் இந்த கேள்வியே வந்து இருக்காது...நீ பீல் பண்ணாத தண்டோரா... அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை

    ReplyDelete
  39. ஜாக்கி என்ன இது? தண்டோராவின் கமெண்ட்டை படிக்கும் போது எனக்கு தெரிந்த கிண்டல் தொனி உனக்கு எப்படி தெரியாமல் போனது? இதுக்கு இப்படி ஒரு சீரியஸ் பதில்?
    போன பதிவுக்கான கமெண்டில் தான் சொல்லியிருந்தேன், ஜாக்கி எவ்வளவு கலாய்ச்சாலும் தாங்குவான், என்னா அவன் ரொம்ம்ம்ப நல்ல்லவன்னு--

    பை த வே, போன பதிவின் கமெண்டுகளுக்கு பதில் இன்னும் வரவில்லை..
    என்றும் அன்புடன்
    நண்பன் பாஸ்டன் ஸ்ரீராம்...

    ஏன்ட்ா பொன்னாட்டியை வெளிய கூட்டிகிட்டு போயிட்டு வரதுக்குள்ள.. ஏன் இப்படி கும்மி அடிச்சி வச்சிரிக்கிங்க..

    நான் சிரியசா பதில் போடலை அத நானும் நக்கலாதான் கேட்டேன்... யோவ்...தலைவா அப்படி எல்லாம் போட்டு இருந்தா அது சிரியசா படிச்சி இருக்க மாட்டிங்க.. அவசரத்ல போட்டுட் இன்னைக்கு காலைல வந்து பார்த்தா? வேற கதை ஓடிக்கினு இருக்கு...

    யப்பா நான் ஒன்றும் சிரியசா ஆகலை...அப்படி அந்த பதில் இருந்தா சாரி தண்டோரா மற்றும் ஸ்ரீராம்..

    ReplyDelete
  40. வருங்கால மினி தளபதி அண்ணன் ஜாக்கி சேகர் வாழ்க// நள்றி ஜெட்லி உனது வாழ்த்தக்கு

    ReplyDelete
  41. //எல்லா இடத்திலும் பிரிவின் வலியை வரவேற்க்க நிற்க்கும் சொந்தங்களின் கண்களில் பார்க்க முடிகின்றது...//

    அருமையான வரிகள்.// நன்றி சரவன குமார் மிக்க நன்றி

    ReplyDelete
  42. ஹா. ஹா.. ஹா... நல்ல வேளைங்க ஸ்ரீராம்.

    போன பதிவில் நீங்க சொன்னதை நம்பி.. நான் ஜாக்கியை கலாய்க்காம விட்டேன்! :) :)

    =======

    ஜாக்கி.. இங்க கதை.. அப்படியே உல்டா! நாளைல இருந்து 3 மாசத்துக்கு... மீ த பேச்சிலர்! :)// பாலா ஸ்ரீ சொன்னது உண்மைதான்.. எனக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லிடுவேன்...

    என்னை நன்றாக புரிந்த வைத்திருக்கும் ஒரு சில பதிவர்களில் பாஸ்டன் ஸ்ரீராமும் ஒருத்தன்... இதுல காமெடி என்ன தெரியுமா பாலா..? நாங்க நேரி்ல் சந்திச்சு பேசனது ரெண்டு மணி நேரம்தான்..

    அத போல ஸ்ரீராம் ஒரு விணயத்தை அப்படியே பொட்டுல அடிச்சி சொலிட்டு போயிடுவாப்பல.. அதே போல தப்புன்னா இது தப்புன்னு சொல்லற ரகம்...

    பாலா என்னை புரிஞ்சவன்ற மறையில ஸ்ரீ சொன்னதுகரெக்ட்தான்.. நண்பர்க்ளுக்குள் சட்டென கோபம்வராது...

    3மாசம் ஜாலியா என்சாய் பண்ணு..

    வாழ்த்துக்கள் பாலா

    ReplyDelete
  43. ஜாக்கி பாத்தியா, மத்தவனெல்லாம் பொண்டாட்டி ஊருக்கு போனா எப்படி ஸ்மைலி போட்டு “தங்கமணி ஊருக்கு போயிட்டா”ன்னு குதிக்கிராங்க...:):)
    என்றும் அன்புடன்
    நண்பன் பாஸ்டன் ஸ்ரீராம்// ஸ்ரீ நானும் குதிப்பேன்... கொஞ்சம் நாள் ஆகட்டும்.. என்ன சரிதானே?..

    ReplyDelete
  44. வாழ்த்துக்களும்,நன்றிகளும்...

    ReplyDelete
  45. நன்றி ராஜன் மிக்க நன்றி

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner