சாண்ட்விச் அன்டு நான்வெஜ் 18+ (11/11/2009)

ஆல்பம்....

பதிவர் அண்புடன் மணிகண்டன் வேண்டு கோளுக்கு இணங்க... இந்த கலக்கல் சாண்ட்விச்....


மெரினா கடற்கரை கிரிக்கெட்....
வழக்கம் போல் மெரினாவில் கிரிக்கெட் விளையாட தடையை ரொம்பவும் மும்முரமாக அமுல் படுத்தி உள்ளனர்...அவர்கள் கிரிக்கெட் விளையாடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை... ஆனால் அந்த சர்விஸ் லேனில் வாகனம் ஓட்டி செல்கையில் எந்த பக்கத்தில் இருந்து பந்து வந்து உதை கொடுக்கும் என்று தெரியாமல் பயந்தே செல்ல வேண்டும் ...

ஒரு பொட்டிக்கடை அம்மாவின் கண் கீழே பெரிய வீக்கம் என்ன வென்று கேட்க கிரிக்கெட் கார்க் பால் பட்டுவிட்டதாகவும் கொஞ்சம் மேலே பட்டு இருந்தால் கண் போய் இருக்கும் என்று சொல்லி கண்ணீர் விட்டார்... அதற்கு என் மனைவியே சாட்சி... அந்த அண்ணாடம் காட்சி என்ன பாவம் செய்தார்....

பலதரப்ட்ட இடங்களில் இருந்து மாணவர்கள் வந்து அந்த மூன்று கிலோமீட்டர் ரோட்டில் விளையாடுகின்றனர்... எந்த தெரு, எந்த நகர் எதுவும் தெரியாது...ஒரு சிலர் டென்னிஸ் பாலில் விளையாடுகின்றனர்... அது கூட பிரச்சனை இல்லை.. ஆனால் கார்க் பால் ரொம்பவும் ஆபத்தானது... அத்த பாலில் உதைவாங்கியவர்களுக்கே அது தெரியும்... ஒரு திரில்லுக்காக ஒரு சில கிரிக்கெட் குழுக்கள் இந்த பாலை மெரினாவில் பயண்படுத்துகி்ன்றார்கள்...பல்லாயிரக்ணக்கான மக்கள் ஒன்று கூடும் இடத்தில் இந்த கார்க் பால் பிரச்சனைதான்... எந்த திசையில் இருந்து பால் உதை விழும் என்று பயந்து உட்கார்ந்து இருக்கின்றேன்....

எல்லாம் ஓக்கே அதற்க்காக மாணவர்கள் விளையாட வருவதை தடுக்க.... ஏதோ திவிரவாதிகளை பிடிக்கும் அளவுக்கு அல்லது மிரட்டும் அளவுக்கு போலிசை குவித்தது கொஞ்சம் ஓவர் என்று சொல்லலாம்...

ரிலையன்ஸ்ஆபர்...
ரிலையன்ஸ் பிரஷ்ல் ஒரு அபர் போட்டு இருக்கின்றார்கள்... அதாவது பிலிப்ஸ் 29இன்ச் டிவி மற்றும் டிவிடி பிளேயர் மற்றும் 5,1 மல்டி மீடியா ஸ்பீக்கர் எல்லாம் சேர்த்து ரூ...14990க்கு கொடுக்கின்றார்கள்.... நல்ல சகாய விலை வாங்குபவர்கள் வாங்கலாம்....

ஊட்டி நிலசரிவு...40 பேர் பலி...
சட்டென்று அந்த பெருந்துயரம் நிகழ்ந்து விட்டது... ஊட்டியில் வரலாறுகாணாத மழை பெய்து கொண்டு இருக்கின்றது... எல்லா இடத்திலும் 30 செமீட்டருக்கு மேல் பெய்து கொண்டு இருக்கின்றது.... மரங்கள் அழித்து காண்கிரிட் காடுகளாக மாறும் போது இது போன்ற நிலச்சரிவுகள் தொடர்கதையாகும் வாய்புகள் உள்ளன...

யாரும் மண்ணின் தன்மை ... அது இருக்கும் இடத்தின் புவியியல் பிரச்சனைகள் ... என்று யாரும் அலசி பார்த்து வீடுகளை கட்டுவதில்லை... அரசும் அதனை முறைபடுத்துவது இல்லை.... இப்போது கண் இமைக்கும் நேரத்தில் 40பேர் பலி... இது தொடர்கதையாகமல் இருக்க இனிமேலாவது அரசு விழித்து கொள்ள வேண்டும்...

மிக்சர்...
அந்த வீட்டு ஓனர் நாதாரியை உதைச்சா என்ன?

எனது நண்பர் கேசவர்த்தினி அருகில் ஒரு வீட்டில் வசித்து வருகின்றார்... வீட்டில் கேபி்ள் டிவியில் படம் பார்த்து கொண்டு இருந்தாலும்.. விரும்பும் சேனலை பார்க்க முடியவில்லை என்பதால்... ஏர்டெல் டிஷ் டிவியை வாங்கி வீட்டின் மீது டிஷ் ஆண்டெனாவை வைக்கும் போது... என் வீட்டில் டிஷ் வைக்க கூடாது... அதே போல் இன்னும் ஒரு வாரத்தில் இந்த வீட்டில் வரும் கேபிள் ஒயர்களையும் அறுத்து எரிந்து விடுவேன்... டிவி பார்த்து எல்லோரும் கெட்டு போய் கொண்டு இருக்கின்றார்கள் என்று விளக்க உரை வேறு அந்த ஹவுஸ் ஓனர் நாதாரி... சொற்பொழிவு ஆற்றிக்கொண்டு இருக்கின்றான்....
என்ன செய்வது சிலது இப்படியும் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.. இப்போது நண்பர் திரிசங்கு சொர்க்க நிலையில் இருக்கின்றார்.. டிஷ் விற்பனையை திரும்ப பெற முடியாது என்று ஏர்டெல் டீலர் கை விரிக்க... இப்போது நண்பர் ஏர்டெல் டீலராக மாறி ...
யாருக்காவது ஏர்டெல் டிஷ்டிவி வேனுமா?.. இது சன் டிடிஎச்சை விட நல்லா இருக்கும் என்று எல்லோரிடத்திலும் செல்லில் பேசி வருகின்றார்...

இன்னொறு நாதாரி...

மனைவியை ஆபிசில் விட்டு விட்டு திரும்புகின்றேன்... லோனில் கார் வாங்கி இருக்கும் ஒரு ஜென்மம்.. காருக்குள்ளே உட்கார்ந்து கொண்டு அது வீட்டு பெட்ரூம் அட்டாச்சுடு பாத்ரூமை திறப்பது போல் திறக்க... நான் எனது டூவிலரில் இடிக்க என் கைகளில் காயம் வராத வரையில் நல்ல அடி...கூடவே என் வாகன இண்டி்கேட்டர்கள் சரவணபவன் ஹோட்டல் அப்பளம் போல் நொறுங்கின..அந்த ஆள் கதவு திறக்கும் போது நான் வந்ததாக அந்த ஆள் சொன்ன போது... நான் ஒன்றே ஒன்று சொன்னேன்.....கதவு திறக்கும் முன் பின்னாடி என்ன வண்டி வருகின்றது என்று அந்த நாதாரி பார்த்து திறந்து இருக்க வேண்டும்... ஆனால் திறக்க வில்லை..


நான் அந்த நாதாரியிடம் சொன்னேன்....

1. நான் சண்டை போடும் மூடில் இல்லை...

2.பக்கத்தில் ஏதாவது வண்டி வருதான்னு பார்த்து கதவை திறக்க வேண்டியது நீ...

3, தப்பு உன் மேல...

4. கண்டிப்பா லோன்ல சமீபத்துல கார் வாங்கினவனதான் நீ இருப்ப....

5.இதுக்கு மேல நீ ஒரு வார்த்தை பேசினாலும்.. டீ கடையில டீ குடிக்கற உன் ஆபிஸ் பொண்ணுங்க எதிரில் நீ கேவலமா என் கிட்ட உதை வாங்குவ... ஆனா தப்பு நான் செஞ்சு இருந்தா... கண்டிப்பா.. இந்நேரம் உன்கிட்ட சாரிகேட்டு இருப்பேன்... உன் பணக்கார திமிரை போல் நான் காட்டி இருக்க மாட்டேன் என்றேன்...

6. ஒழுங்கா சாரி சொல்லிட்டு போயிடு... எனக்கு அது போதும் என்றேன்... என் வலியை பொறுத்த படி...

அவனும் அதே போல் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை சாரி சொன்னான்....


விஷுவல் டேஸ்ட் நான் எடுத்ததில் பிடித்தது....
நான்வெஜ்....

ஒருத்தன் எப்போதும் கட்டிலில் விளக்கு அனைத்தும்தான்.. எந்த வேலையும் செய்வான்.. அவன் மனைவி காரணம் தெரியாமல் நகத்தை கடித்து கொண்டு இருந்தாள்... பல வருடங்களுக்கு பின் அவளுக்கே ஒரு சலிப்பு வந்து.. இன்னைக்கு எப்படியும்... மேட்டர் நடக்கும் போது லைட்ட போட்டுடனும் என்று நினைத்து கொண்டாள்... அதே போல் மேட்டர் நடக்கும் போது லைட்ட போட்டு விட்டாள்....

தலைவர் ஒரு ரப்பர் சமாச்சாரத்தை கையில் வைத்து கொண்டு அசடு வழிந்தான்... உனக்கு வெட்கமா இல்லை என்று அவள் கேட்டாள்.. இத்தனை வருசமா இதை வச்சிதான் உன்கதையை ஓட்டினியா என்றாள்... அதற்கு கணவன் நான் அப்படிதான்... உன் கிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்... நமக்கு 3புள்ளைங்க எப்படி பொறந்துச்சு???????????


அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

41 comments:

 1. நான்வெஜ் ஹைய்யொ ஹய்யோ..

  ReplyDelete
 2. நான் வெஜ் ஜோக்குக்கு நீ இன்னும் கொஞ்சம் உழைக்கணும் ஜாக்கி..
  இதெல்லாம் அரதப் பழசு.. இண்டெர் நெட்டில் தேடிப்பாரு, புதுசா மாட்டும்...
  என்றும் அன்புடன்
  நண்பன் பாஸ்டன் ஸ்ரீராம்...

  ReplyDelete
 3. //டிவி பார்த்து எல்லோரும் கெட்டு போய் கொண்டு இருக்கின்றார்கள் என்று விளக்க உரை வேறு அந்த ஹவுஸ் ஓனர் நாதாரி... சொற்பொழிவு ஆற்றிக்கொண்டு இருக்கின்றான்....
  என்ன செய்வது சிலது இப்படியும் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்..//

  அந்த வீட்டு உரிமையாளர் கண்டிப்பாக ஒரு நாதாரி தான்!

  ஆனால் உங்கள் நண்பர் ஒரு நன்னாரி! இப்படி சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை, நான் வைப்பேன், அப்படியே விட்டை காலி செய்ய வேண்டும் எனில் 6 மாததுக்கு முன்னர் சொல்ல வேண்டும் , இப்போ காலி செய்ய சொன்னா 6 மாதத்தில் காலி செய்வேன் என்று சொல்லி இருக்க வேண்டும்,அதை விட்டு விட்டு வேறு வீடு கிடைக்காது என்ற மனோபாவத்தில் அடிமையாக மாறிவிட்டாரே...ஹீம் இப்படியும் சிலர் வாழ்கிறார்கள்!

  ReplyDelete
 4. நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக்.

  ஒரு தடவை பொறுமையா படிச்சு பார்த்துட்டு போஸ்ட் பண்ணுங்க ஜாக்கி?

  ReplyDelete
 5. விட்டு தள்ளுங்க நாதாரிகளை......
  நான் வெஜ் ஜோக் ஏற்கனவே படித்தது அண்ணே...
  இருந்தாலும் நல்லாயிருக்கு

  ReplyDelete
 6. //நான் சண்டை போடும் மூடில் இல்லை...//

  ஏன் ஜாக்கி, எனக்கு கூட இந்த மாதிரி யாராவது பண்ணினா, போட்டிருக்கும் ஹெல்மட் கழற்றி, அதாலேயே அவன் மண்டைய உடைக்கணும்னு ஒரு ஆசை, மிஸ்பண்ணிட்டீங்களே

  ReplyDelete
 7. //நான் சண்டை போடும் மூடில் இல்லை...//

  ஏன் ஜாக்கி, எனக்கு கூட இந்த மாதிரி யாராவது பண்ணினா, போட்டிருக்கும் ஹெல்மட் கழற்றி, அதாலேயே அவன் மண்டைய உடைக்கணும்னு ஒரு ஆசை, மிஸ்பண்ணிட்டீங்களே

  ReplyDelete
 8. கலக்கல் சாண்ட்விட்ச் போட்டு என்னை கவுரவப் படுத்திட்டீங்களே அண்ணே!!!
  அந்த மோட்டார் பைக் சம்பவத்தில் உங்கள் ரியாக்சன் சூப்பரு... :)

  ReplyDelete
 9. அவ்வளவு திட்டினப்புறம் அவன் என்ன பேசுறதாம்..

  ஏர்டெல் டிஷ்க்கு பதிலா கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் வாங்கறதுக்கு சொல்லுங்க.. அது ஏர்டெல்லை விட சீப்.. எல்லா சேனலையும் டிஜிட்டல்ல பார்க்கலாம்..

  ReplyDelete
 10. ரொம்பநான் கழித்து எழுதியதால் அருமையா இருக்கு!!

  //இதெல்லாம் அரதப் பழசு.. இண்டெர் நெட்டில் தேடிப்பாரு, புதுசா மாட்டும்...
  என்றும் அன்புடன்
  நண்பன் பாஸ்டன் ஸ்ரீராம்...//

  ஆமாண்ணே... கொஞ்சம் முயற்சி பண்ணுங்க!!

  ReplyDelete
 11. நன்றி சூரியன் நாளாச்சு என்பதை விட வேலை அதிகம் அதுதான்...

  ReplyDelete
 12. நான் வெஜ் ஜோக்குக்கு நீ இன்னும் கொஞ்சம் உழைக்கணும் ஜாக்கி..
  இதெல்லாம் அரதப் பழசு.. இண்டெர் நெட்டில் தேடிப்பாரு, புதுசா மாட்டும்...
  என்றும் அன்புடன்
  நண்பன் பாஸ்டன் ஸ்ரீராம்...//
  நன்றி ஸ்ரீ நீ சொல்லறது சரிதான்.. கண்டிப்பா அடுத்து நல்லா போடுறேன்...

  ReplyDelete
 13. வவ்வால் நீங்க சொல்லறது போல.. நான் கண்டிப்பா செஞ்சு இருப்பேன்.. ஆனா இப்ப அவரால அட்வான்ஸ்30000 ஆயிரம் அவர் கிட்ட இல்லை அதுதான் காரணம்.. சட்னு வீட்டை காலி பண்ண சொல்லிட்ட இரண்டு குழந்தைகளை அழைச்சிகிட்டு எங்க போறதுன்னு யோசிக்கின்றார்...

  உங்கள் கோபம் நியாயமானதே.. நன்றி தங்கள் முதல் வருகைக்கு

  ReplyDelete
 14. நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக்.

  ஒரு தடவை பொறுமையா படிச்சு பார்த்துட்டு போஸ்ட் பண்ணுங்க ஜாக்கி?// நேத்து நைட்டு கொஞ்சம் ஓவர் அதான்.... நிச்சயம் சரி பண்ணிடலாம்

  ReplyDelete
 15. விட்டு தள்ளுங்க நாதாரிகளை......
  நான் வெஜ் ஜோக் ஏற்கனவே படித்தது அண்ணே...
  இருந்தாலும் நல்லாயிருக்கு//
  நன்றி ஜெட்லி... மிக்க நன்றி...

  ReplyDelete
 16. //நான் சண்டை போடும் மூடில் இல்லை...//

  ஏன் ஜாக்கி, எனக்கு கூட இந்த மாதிரி யாராவது பண்ணினா, போட்டிருக்கும் ஹெல்மட் கழற்றி, அதாலேயே அவன் மண்டைய உடைக்கணும்னு ஒரு ஆசை, மிஸ்பண்ணிட்டீங்களே//
  நேத்து நான் கொஞ்சம் ரொமாண்டிக் மூட்ல இருந்தேன்.. அதான்... நாண் மட்டும் கொஞ்சம்ட கோவமா இருந்து இருந்தாலும் அவன் பேசினதுக்கு நல்லா வாங்கி இருப்பான்... கொஞ்சம் வேகமா வந்து இருந்தா.. என் விரல் போயிருக்கும்...

  ReplyDelete
 17. கலக்கல் சாண்ட்விட்ச் போட்டு என்னை கவுரவப் படுத்திட்டீங்களே அண்ணே!!!
  அந்த மோட்டார் பைக் சம்பவத்தில் உங்கள் ரியாக்சன் சூப்பரு... :)//
  நன்றி மணிகண்டன்

  ReplyDelete
 18. அவ்வளவு திட்டினப்புறம் அவன் என்ன பேசுறதாம்..

  ஏர்டெல் டிஷ்க்கு பதிலா கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் வாங்கறதுக்கு சொல்லுங்க.. அது ஏர்டெல்லை விட சீப்.. எல்லா சேனலையும் டிஜிட்டல்ல பார்க்கலாம்.//

  அவன் கதவு தெறந்ததுக்கு சாரி கேட்டு இருந்தா நான் எதுவும் பேசி இருக்க மாட்டேன்.. பட் என் மேலே தப்பு போல பேசினா எவ்வளவு கோபம் வரும்???

  செட்டாப் பாக்்சுக்கு டிரை பண்ண சொல்லி இருக்கேன்...

  ReplyDelete
 19. நன்றி மங்களுர் சிவா...

  ReplyDelete
 20. ரொம்பநான் கழித்து எழுதியதால் அருமையா இருக்கு!!

  //இதெல்லாம் அரதப் பழசு.. இண்டெர் நெட்டில் தேடிப்பாரு, புதுசா மாட்டும்...
  என்றும் அன்புடன்
  நண்பன் பாஸ்டன் ஸ்ரீராம்...//

  ஆமாண்ணே... கொஞ்சம் முயற்சி பண்ணுங்க!!// கண்டிப்பா கலை அடுத்ததுல சரி பண்ணிடலாம்...

  ReplyDelete
 21. sandwich after long time..

  any way nice//
  நன்றி யோ மிக்க நன்றி பாராட்டுக்கு

  ReplyDelete
 22. mixer part - nice
  gud n correct reaction..

  non-veg konjam kaaram kammi..

  totally "nach"-nu nalla irundhuchi.

  ReplyDelete
 23. நீண்ட நாட்களின் பின்னர் சாண்ட்விச் நன்றாக இருக்கின்றது. ஜோக் கொஞ்சம் பழசுதான். இனி வாகனத்தில் போகும் போது கவனமாக போகவும். விசுவல் டேஸ்ட் கலக்கல்

  ReplyDelete
 24. கார்காரனை அந்த அளவுக்கு திட்டியிருக்கவேணாம் :) (அன்னைக்கு என்னைய ரொம்ப திட்டிடீங்க பாஸ்..புரபைல்ல போட்டோ போட்டுருந்த கம்மியா திட்டியிருப்பீங்கன்னு நினைக்கிறேன்)
  ----
  ரிலையன்ஸ் டீல் நல்லாயிருக்கும் போல. ஆனா ஏற்கனவே இருக்குற டிவிய என்ன பண்றது ?
  -----
  டென்னிஸ் பால்வெச்சு விளையாட அலவ் பண்ணலாம்.
  ------
  ஹீ..ஹீ..
  ------

  ReplyDelete
 25. Hi jacki can you give me relaince fresh offer in detail? i have checke with reliance frsh rayapuram but they don't know about this.

  ReplyDelete
 26. வணக்கம் ஜாக்கி
  போட்டோ எல்லாம் சூப்பர்

  நான்வெஜ்....

  :-)))))

  நேற்று எனது பதிவில் ஒரு செல் போன் விளம்பர வீடியோ இனைத்துள்ளேன் பார்க்கவும்..

  பல நாள் திருடன் செல்லால் (ஒரு நாள் )அகப்படுவான் + 18

  ReplyDelete
 27. சாண்ட்விச் & நான்வெஜ் கலக்கல். அப்படியே அடிச்சு ஆடுங்க...

  ReplyDelete
 28. Dear Mr. J

  Another nice entertaining post.....

  Your introduction to previous post regarding 3 roses ad was excellent...

  During my MBA class our communication professor always advise us to know "the art of introducing" a product or person

  I am seeing versatility (films, incidents, news, jokes, stories, film technology, good day, bad day...ect) in your introduction. You have capability to introduce any thing with personal touch.

  Great!...I am learning that from you....

  ReplyDelete
 29. neengal sonnathil pidithadhu...
  இதுக்கு மேல நீ ஒரு வார்த்தை பேசினாலும்.. டீ கடையில டீ குடிக்கற உன் ஆபிஸ் பொண்ணுங்க எதிரில் நீ கேவலமா என் கிட்ட உதை வாங்குவ... ஆனா தப்பு நான் செஞ்சு இருந்தா... கண்டிப்பா.. இந்நேரம் உன்கிட்ட சாரிகேட்டு இருப்பேன்... உன் பணக்கார திமிரை போல் நான் காட்டி இருக்க மாட்டேன் என்றேன்...


  Super, innoru anniyan!

  ReplyDelete
 30. நன்றி சஜனா.. அடுத்த நான்வெஜ்ஜை ஆச்சி குழப்பு மிளாகாய் தூள்ல செஞ்சிடுவோம்...

  ReplyDelete
 31. ண்ட நாட்களின் பின்னர் சாண்ட்விச் நன்றாக இருக்கின்றது. ஜோக் கொஞ்சம் பழசுதான். இனி வாகனத்தில் போகும் போது கவனமாக போகவும். விசுவல் டேஸ்ட் கலக்கல்//

  மிக்க நன்றி வந்தியதேவன் .. தொடர்வாசிப்புக்கு

  ReplyDelete
 32. கார்காரனை அந்த அளவுக்கு திட்டியிருக்கவேணாம் :) (அன்னைக்கு என்னைய ரொம்ப திட்டிடீங்க பாஸ்..புரபைல்ல போட்டோ போட்டுருந்த கம்மியா திட்டியிருப்பீங்கன்னு நினைக்கிறேன்)
  ----
  ரிலையன்ஸ் டீல் நல்லாயிருக்கும் போல. ஆனா ஏற்கனவே இருக்குற டிவிய என்ன பண்றது ?
  -----
  டென்னிஸ் பால்வெச்சு விளையாட அலவ் பண்ணலாம்.
  ------
  ஹீ..ஹீ..//
  பின்னோக்கி நான் எப்ப உங்களை திட்டினேன்...

  எனக்கு புரிய வில்லை

  ReplyDelete
 33. Hi jacki can you give me relaince fresh offer in detail? i have checke with reliance frsh rayapuram but they don't know about this.//
  செந்தில் அதை நான் வளசரவாக்கம் ரிலையன்ஸ்பிரஷ்ல பார்த்தேன்.. அது மட்டும் இல்லாமல் அது மவுன்ட் ரோடு மற்றும் மயிலாப்பூர்ல மட்டும டிஸ்ப்ளே வச்சி இருக்கறதா சொன்னாங்க...

  ReplyDelete
 34. வணக்கம் ஜாக்கி
  போட்டோ எல்லாம் சூப்பர்

  நான்வெஜ்....

  :-)))))

  நேற்று எனது பதிவில் ஒரு செல் போன் விளம்பர வீடியோ இனைத்துள்ளேன் பார்க்கவும்..0//

  பார்த்தேன் சிவா கமென்ட்டும் போட்டுட்டேன் நல்ல வீடியோ...

  ReplyDelete
 35. சாண்ட்விச் & நான்வெஜ் கலக்கல். அப்படியே அடிச்சு ஆடுங்க...//
  நன்றி துபாய் ராஜா

  ReplyDelete
 36. Dear Mr. J

  Another nice entertaining post.....

  Your introduction to previous post regarding 3 roses ad was excellent...

  During my MBA class our communication professor always advise us to know "the art of introducing" a product or person

  I am seeing versatility (films, incidents, news, jokes, stories, film technology, good day, bad day...ect) in your introduction. You have capability to introduce any thing with personal touch.

  Great!...I am learning that from you....//

  நன்றி ராஜ்குமார் என்னை இவ்வளவு உயர்வாக உங்கள் மனதில் வைத்து இருப்பதற்க்கு என் நன்றிகள்..
  இந்த பாராட்டுக்கு நான் தகுதியானவனா என்பது எனக்கே தெரியவில்லை...

  ReplyDelete
 37. eengal sonnathil pidithadhu...
  இதுக்கு மேல நீ ஒரு வார்த்தை பேசினாலும்.. டீ கடையில டீ குடிக்கற உன் ஆபிஸ் பொண்ணுங்க எதிரில் நீ கேவலமா என் கிட்ட உதை வாங்குவ... ஆனா தப்பு நான் செஞ்சு இருந்தா... கண்டிப்பா.. இந்நேரம் உன்கிட்ட சாரிகேட்டு இருப்பேன்... உன் பணக்கார திமிரை போல் நான் காட்டி இருக்க மாட்டேன் என்றேன்...
  //

  நன்றி சூர்யா...இன்னோறு அந்நியன் எல்லாம் இல்லை... அந்த ரியக்ஷன் அவ்வளவுதான்...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner