ஷாட் என்றால் என்ன???(சினிமா சுவாரஸ்யங்கள் /பாகம்3)


ஷாட் என்றால் என்ன? ஷாட்டை பற்றி குப்பனும் சுப்பனும் பேசிக்கொண்டு இருப்பான்... அந்த படத்துல அந்த ஷாட் நல்லா இருந்துச்சு .. இந்த படத்துல இந்த ஷாட் நல்ல இருந்துச்சு... இப்படி பலர் சொல்ல கேட்டு இருக்கோம்...சினிமா ரசிகனா இருந்தா? இந்த விஷயத்தை பத்தி் அல்லது இந்த வார்த்தையை பற்றி நல்லா தெரிஞ்சி இருக்கனும்...

சரி ஷாட் என்றால் என்ன? கேமராவுல பிலிம் எல்லாம் லோட் பண்ணி அல்லது வீடியோ கேமராவுல கேசட் எல்லாம் போட்டு ரெடியா வச்சி.... எதை எடுக்க போறோமோ? அதுக்கான கோணத்தை எல்லாம் பார்த்து.... கேமராவுல ரெக்கார்டிங் பட்டனை ஆன் பண்ணி அது பிலிமிலயோ அல்லது கேசட்லயோ ரெக்கார்ட் ஆகும்... அதுக்கப்புறம்..நாம் என்ன நினைச்சமோ அதை காட்சிகளா செல்லுலாய்டில் சிறைபிடித்த பின்னாடி நாம் கேமராவை ஆப் செய்வோம்...

அதாவது கேமரா ஆன் பண்ணி அப் பண்ணும் போது நடுவில் பிலிமில் பதிந்த காட்சிகளுக்கு பேர்தான் ஷாட் என்று சொல்லுவார்கள்... போதுமா ஷாட் என்பது பெரிய கம்ப சூத்தரம் எல்லாம் இல்லைங்க...

சரி ஒரு ஷாட் என்பதற்க்கு எதாவது கால அளவு என்பது இருக்கின்றதா? இல்லை இல்லவே இல்லை... ஒரு ஷாட்டை ஒரு இயக்குனர் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்..

அதே போல் ஷாட்களில் பல சப் டிவிஷன்கள் இருக்கின்றது.. லோ ஆங்கிள் ஷாட், ஐஆங்கில் ஷாட்,லாங்ஷாட், குளோஸ்ஷாட், கட் ஷாட் , இண்டர்கட் ஷாட்,மிட்ஷாட் என்று பல விஷயங்கள் இதில் வரும்.... அதனை வரும் எபிசோட்களில் ஜஸ்ட் லைக்தட்டாக பார்க்கலாம்...

சரி இப்படி குட்டி குட்டியா எடுத்த காட்சிகளை ஒன்ன சேர்த்தா அதுக்கு சிக்வெண்ஸ்ன்னு பேரு... அந்த சீக்வெண்ஸ்க்கு அப்புறம் அது ஒரு சீனா உருவெடுக்கும்... ஒரு படத்துல ஒரு சீன் நல்லா இருக்குன்னு சொல்லறதுக்கு முன்ன ஒரு விஷயம் கவனிக்கனும்...

ஒரு சீன் என்பது பல ஷாட்டுகளுடைய கோர்வைதான் ஒரு சீன் என்பதாகும்....ஒரு சீன் எடுக்க பல ஷாட்டுகள் எடுக்க வேண்டும்...ஒரு படத்தில் 60லிருந்து 70பதுவரை சீன்கள் இருக்கும்...அப்படி இருக்கும் போது எத்தனை ஷாட்டுகள் எடுக்க வேண்டும் என்பதை நீங்களே யோசித்து கொள்ளுங்கள்...

ஒரு லீவிஸ் பேண்ட் ஆட் அதை பாருங்கள்.... முதலில் அதில் எத்தனை ஷாட் வருகின்றது என்பதை சொல்லுங்கள்... மிகச்சரியாக சொல்ல வேண்டும்... இவ்வளவு நேரம் கிளிபிள்ளைக்கு சொல்வது போல் சொல்லியதற்க்கு பலன் உங்கள் ஈடுபாட்டை வைத்துதான் இந்த தொடரின் அடுத்த கட்டம் டெக்னிக்கலாகவும் போகும்... வாய்ப்பு இருக்கின்றது....



தொடரும்.....
இன்டியா கிளிட்ஸ் படங்களுக்கு என் நன்றிகள்


அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

18 comments:

  1. நன்றி நைனா... இப்படி முடிஞ்ச வரை எளிதா புரிய வைக்கனும்னு நான் நினைக்கின்றேன்..பார்ப்போம்...

    ReplyDelete
  2. Very great explanation...


    67 Shots in that Add...

    ReplyDelete
  3. 58 shot கரெக்ட்டான்னு நீங்கதான்
    சொல்லனும்
    பதிவு ரொம்ப நல்லாருக்கு பயனுள்ளாதவும் இருக்கு
    தொடர வாழ்த்துகள்
    நன்றி!

    ReplyDelete
  4. 10-20 தான்னு நான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. சே.. இந்த ஷாட்டா? நான் கூட வேற என்னமோன்னு நினைச்சிட்டேன்!!
    :-)

    ReplyDelete
  6. எத்தனை ஷாட்ன்னு தெரியலை.... எப்படி கணக்கு பண்றது....?

    ReplyDelete
  7. நெறைய ஷாட்ஸ் வருது பாஸ்,

    எனக்கு தெரிஞ்சு பிரபுதேவா, ராஜு சுந்தரம் ரெண்டுபேரும் ஆடிய ஒரு டான்ஸில் நீண்ட ஒரு ஷாட் வரும், அதை எப்படி எடுத்திருப்பாங்க என நான் யோசித்திருக்கிறேன், அடுத்தது தசாவதாரத்தின் முதல் கோவில் ஷாட்..

    ReplyDelete
  8. ஹலோ ஜாக்கி,
    கலைஅரசன் சொன்னது போல்
    //சே.. இந்த ஷாட்டா? நான் கூட வேற என்னமோன்னு நினைச்சிட்டேன்!! //

    நான் கூட வேற ஏதோ நெனச்சேன். நான் நெனச்ச 'ஷாட்' Tendulkar ஷாட்டப்பா, நீ வேற எதோ நெனைக்காதே.

    அப்புறம் இப்போ மேடமுக்கு ஜெட் லாக் எல்லாம் போயே இருக்குமே. இனிமே ஜெட் லாக் வந்தா, ஒரு நல்ல மசாஜ் பண்ணி, நல்ல ஒரு எண்ணெய் குளியல் போடவச்சா எல்லாம் சரியாய் போய்டும். (ஐயோ முன்னாடியே ஏன் சொல்லலைன்னு கேட்கறது எனக்கு கேட்குது.) லேட்டா சொன்னதுக்கு மன்னிக்கணும்.

    சமயத்துலே லாகோஸ் இருந்து சிங்கப்பூர் போய் உடனே மீட்டிங் அட்டென்ட் பண்ணும்போது நம்ம உடம்பு இன்னும் லாகோஸ் biological clock இல் இருக்கும். அப்போ Lagos ல் இரவு 12 மணியா இருக்கும். தூக்கம் சொக்கும். என்ன பண்றது. வாழ்க்கை அப்பிடி ஆகி போச்சி.

    மிக நல்ல பதிவு. Cable மற்றும் உங்களுடைய பதிவை படிக்கும் போது, Cinema வை பற்றி நெறைய அறிந்து கொள்கிறோம்.

    மிக்க நன்றி,

    பாலா.
    நைஜீரியா.

    ReplyDelete
  9. மொத்தம் 56 ஷாட்'ன்னு நெனைக்கிறேன்.... பதிவு சான்ஸே இல்லைண்ணா.. செம இண்டரஸ்டிங்...

    ReplyDelete
  10. ஜாக்கி, கேள்வி கேக்கறாங்கன்னுதான் காலேஜ விட்டு பாதியிலேயே ஓடி வந்துட்டேன், கேள்வியில்லாம் கேட்டா உன் பதிவு பக்கமே வரமாட்டேன் சொல்லிட்டேன், வேணா கேள்விய பதிவில் முதல்ல கேட்டுட்டு பதிவின் கடைசியில் நீயே சொல்லிடு, என்னா சரியா??
    அப்புறம், அந்த லோ ஆங்கிள் ஷாட் - நடிகைக்கு குட்டை பாவாடை போட்டு விட்டு எடுக்குறதுதானே? எப்படி என் சினிமா அறிவு?
    என்றும் அன்புடன்
    நண்பன் பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  11. I counted approximatively jackie, it's 56-60 shots, am i right..please continue this kinda of information sharing about your filed to your fan..cheers

    ReplyDelete
  12. Dear Mr. J
    Woooooooooooooowwww....nice article.

    Think that ad has one shots per second. The ad stops at 56th second...so there can be 56 shorts.

    >50 shorts < 56 shorts....?

    ReplyDelete
  13. ஜாக்கி ரொம்ப பிஸியாக இருப்பதால், பதில் போடலைன்னு நினைக்கிறேன்,
    ஜாக்கி பதில் போட்டிருந்தா இப்படித்தான் இருக்கும்

    1.கிரேட் எல்லாம் இல்ல லோகு, தெரிஞ்சத சொன்னேன்
    நம்பர் தப்பு, மறுபடியும் பாருங்க

    2. வருகைக்கு நன்றி நெடுன், எண்ணிக்கை தவறு

    3. பாராட்டுக்கு நன்றி பிஸ்கோத்துப்பயல், மறுபடியும் எண்ணுங்க

    4. இப்படி குன்ஸா சொல்லக்கூடாது பப்பு, நீங்களும் மறுபடியும் எண்ணுங்க

    5. வேறெந்த ஷாட்டுன்னு நெனைச்சீங்க கலையரசன்

    6. இதக் கூட கணக்கு பண்ணத் தெரியலன்னா எப்படி ராஜன்

    7. நன்றி சிவா

    8. நெறயன்னு தெரியும், எவ்வள்வுன்னு சொல்லுங்க யோ வாய்ஸ். அந்த ரெண்டு ஷாட்டும் எனக்கும் பிடித்தவை.

    9. நான் வேறெதும் நெனைக்கல பாலா, நீங்களும் நெனைக்க வேண்டாம், அப்புறம் நைஜிரியா எப்படி இருக்கு?

    10. நன்றி மணிகண்டன், சரியா எண்ணுங்க

    11. ஸ்ரீராம், டேய் அடங்க மாட்டியா நீயி..

    12. நன்றி விமல், நேரம் கிடைக்கும் போது எழுதறேன்.

    13. நன்றி ராஜ்குமார், shot சரி, short தவறு.

    ReplyDelete
  14. 20ஆ இருக்கலாம். பதில் சொல்லாம ஓடிப்போயிட்டீங்களே தல? இங்க எல்லாரும் உங்களோட பதில் டெம்ப்ளேட்ட கண்டு பிடிச்சு பப்ளிஷ் பண்ணி விளையாடுறாங்க..

    ReplyDelete
  15. Quite Interesting. Plz continue.

    Keep it up my dear Jacky..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner