அயர்லாந்து நண்பர்கள் மேஷாக் மற்றும் ஸ்டீபனுக்கு என் நன்றிகள்..

சில நாட்களுக்கு முன் அயர்லாந்தில் எனக்கு கிடைத்த உதவி என்று ஒரு பதிவு போட்டு இருந்தேன்...என் மனைவி அயர்லாந்து போனதும்... அங்கு யாராவது தமிழ் பதிவர்கள் அல்லது வாசகர்கள் இருக்கின்றார்களா? என்று கேட்டு எழுதி இருக்க... மேஷாக் என்பவர் கல்பாக்கத்தில் இருந்து அயர்லாந்தில் செட்டில் ஆகி இருப்பதாகவும் எனது எழுத்துக்களை... தொடர்ந்து வாசிப்பதாகவும்.. அயர்லாந்தில் ஏதாவது உதவி என் மனைவிக்கு, வேண்டும் என்றால் உடனே தன்னை தொடர்பு கொண்டு ,எந்த தயக்கமும் இல்லாமல் கேட்க வேண்டும்... என்று கேட்டுக்கொண்டார்...

எனக்கு அப்போது ஏற்ப்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.. அதற்கு காரணம் இப்படி எழுதி இருந்தேன்..
பொதுவாக தமிழர்கள் இல்லாத தேசம் இல்லை என்றாலும்... முக்கியமாக வாசிக்கும் பழக்கம் இருக்க வேண்டும்... தமிழில் பிளாக் என்று விஷயம் பற்றி தெரிந்து இருக்க வேண்டும்... அப்படியே தெரிந்து இருந்தாலும அவர்கள் தொடர்ந்து தமிழ் மணம், தமிளிழ் போன்ற திரட்டி தளங்கள் பற்றி அறிந்து இருக்க வேண்டும்... அப்படியே இருந்தாலும்.. எனது எழுத்தை அவர்கள் வாசிக்க வேண்டும்.. அப்படியே வாசித்தாலும் அது சுவாரஸ்யமா இருக்க வேண்டும் ... இவ்வளவு வேண்டும் இருப்பதால் நம்பிக்கை இல்லாமல்தான் நான் அந்த உதவி வேண்டும் என்ற பதிவை போட்டேன்...

ஆனால் இரண்டு நாட்களில் அயர்லாந்தில் இருந்து...மேஷாக் கடிதம் போட அதனை சுருக்கி உங்கள் பார்வைக்கு வைத்தேன்.. எனக்கு ரொம்ப சந்தோஷம் மற்றும் வியப்பு...எனது எழுத்தையும் ஏதோ ஒரு மூலையில் வாசித்து உதவிக்கு வருகின்றேன் என்று சொன்ன போது .. சில நேரங்களில்.. தூக்கம் கண்களை தழுவ பதிவு போட்டது ஞாபகத்துக்கு வருகின்றது..

கடந்த ஞாயிறு அன்று எனது மனைவி அயர்லாந்தில் உள்ள மேஷாக் வீட்டிற்க்கு,அவரது அழைப்பின் பேரில், அவளது அலுவலக நண்பர்களுடன் செல்ல.. அங்கு சிறப்பான விருந்தோம்பல் அவர்களுக்கு அளிக்கபட்டது...

அங்கு போன பிறகுதான்... ஸ்டீபன் என்ற அவரது நண்பரும் எனது பதிவுகளை ரெகுலராக வாசித்து வருவதும் அவரும் வரவேற்ப்பில் ஈடுபட்டதும் தெரிய எனது மனைவி மற்றும் அவளது அலுவலக சகாக்கள் சந்தோஷத்தில மிதந்து இருக்கின்றார்கள்... இவர்களை அழைத்து போக இரண்டு கார்களை எடுத்து வந்து, அவர்களை அழைத்து போய் இரவு உணவு கொடுத்து மறுநாளுக்கும் உணவை தயார் செய்து கொடுத்த அனுப்பி அவர்களை ஸ்டேஷன் வரை வந்து வழி அனுப்பி நெகிழ வைத்து இருக்கின்றாகள்...

என் மனைவி போனதில் இருந்து எனது பதிவுகைளை பற்றி அதிகம் பேசி இருக்கினறனர்.. எல்லாவற்றையும் விட நான் கஷ்டபட்டு முன்னேறி இருப்பதை ரொம்ப பெருமையாக பேசி இருக்கின்றனர்...இதையெல்லாம் பார்த்து விட்டு எனது மனைவியின் நண்பர்களும், என் மனையின் நண்பி மேரியும் இப்படி சொன்னார்களாம்... கடல் கடந்து உங்க புருஷனை பத்தி யாரொ ரெண்டு பேர் பாரட்டுறதை கேட்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா,பெருமையா இருக்கு.... என்று சொன்னது மட்டும் அல்லாமல்... இனி அவர் எழுத நீ ரொம்ப ஹெல்ப் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்களாம்... எனக்கு சிரிப்புதான் வந்தது...ரொம்ப பெரிய லெவல்ல பீல் பண்ணிட்டாங்க.. என்ன செய்ய.. எல்லாம் நேரம்...

யாரும் என் கையை பிடித்து எழுத சொல்லி கட்டாய படுத்தவில்லை... என் ஆத்ம திருப்திக்காக எழுதுகின்றேன்...நான் ரொம்ப இலக்கிய வாசனையோடு எழுதுபவன் அல்ல... எனது வாசிப்பு உலகம் மற்றும், உலக ஞானம்... மற்றவர்களின் எழுத்துக்களை பார்க்கையி்ல் ரொம்ப கம்மிதான்... எனது படைப்புகள் எந்த பத்திரிக்கையிலும் அதிக அளவில் வந்தது இல்லை... இருப்பினும்.. இந்த உதவியும் பாராட்டும்.. எல்லாம் வல்ல பரம் பொருளின் விளைவாய் கிடைத்ததாக நினைக்கின்றேன்...
(நண்பர் மேஷாக் மற்றும் அவரது மகனுடன்...அவரது நண்பர் ஸ்டீபன்...)

என் மனைவி குகிள் டாக்கில் பேசும் போது அவர்கள் ரொம்ப உயர்வாய் மரியாதையாக நடத்தியது குறித்து சொல்லி சந்தோஷபட்டாள்...அவரது மனைவியின் விருந்தோம்பல் மற்றும் அவரது நண்பர் ஸ்டீபன் போன்றவர்களோடு உரையாடியதையும்,அந்த கணங்களை சொல்லி ரொம்பவே சந்தோஷபட்டாள்...

(எனது மனைவியின் அலுவலக நண்பர்களுக்கு விருந்தோம்பல் செய்யும் மேஷாக் நண்பர் ஸ்டீபன்....)

மேஷாக் அவர்களின் கடிதம்...


அன்பின் ஜாக்கி அவர்களுக்கு, மன்னிக்கவும் நீங்கள் சாட்டிங்கில் வரும்போது நான் வெளியே சென்றிருந்தேன்,இரவுதான் பார்த்தேன். பிறகு சண்டே அன்று தங்கள் மனைவி மற்றும் அவர்கள் நண்பர்களோடு வந்து எங்களை கௌரவபடுதியதர்கு மிகவும் நன்றி. சீக்கிரமாய் இரவு ஆகிவிட்டபடியால் எங்களால் அவர்களை பக்கத்திலுள்ள ஷோப்பிங்கிற்கு கூட நேரம் கடந்தே போகும்படி ஆகிவிட்டது. இங்கு ஸ்டீபன் என்ற நண்பரும் எங்களுக்கு உதவியாய் இருந்தார் அவர்தான் அடிக்கடி உங்களை கேட்டுக்கொண்டே இருப்பார். நாங்கள் இந்தியா வரும்போது அவசியம் உங்களை சந்திப்போம்.மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்கள் உங்களுக்கு அழகாக வருகிறது விட்டுவிடாதீர்கள். நமக்கெல்லாம் படிப்பதற்க்குமட்டுமே வரும் கமெண்ட்ஸ் போடுவதற்குள் தாவு தீர்ந்துவிடும். உங்களுக்காக ஆண்டவரிடம் பிரார்த்திக்கின்றோம் குடும்பமாக. என் மனைவியும் உங்களை விசாரித்ததாக சொல்லசொன்னர்கள்.

என்றும் அன்புடன்.
மேஷாக்


எங்கேயோ பிறந்து எப்படியோ வளர்ந்து.. ஏதோ ஒரு தூர தேசத்தில் வாசம் செய்யும் குடும்பம்... என் வலைபக்கம் மூலம் அறிமுகம் ஆகி நட்புபாராட்டியதை இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமே...

நண்பர் மேஷாக் அவரது துனைவியார்மற்றும் அவரது பிள்ளைக்கு

எனது அன்பும் கனிவும்...

அதே போல் மேஷாக்கோடு தோள்கொடுத்து விருந்தோம்பிய... நண்பர் ஸ்டீபனுக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது நன்றியும் வணக்கமும்... இரு குடும்பத்தினரும்... சென்னைவந்தால் இந்த ஜாக்கியின் வீட்டீற்க்கு வருகைதரவேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்..

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

27 comments:

  1. நெகழ வைத்து விட்டது ....தாங்களோ தங்கள் மனைவியோ அமெரிக்கா வந்தால் வரவேற்று உபரசரிக்க நான் இருகிறேன் ..
    இப்படிக்கு ,
    உங்கள் பதிவை படித்து விட்டு online அத்தனை படத்தை பார்க்கும் முகமறியா தம்பி ..
    சூரியா :)

    ReplyDelete
  2. ரொம்ப சந்தோஷமாக இருக்கு ஜாக்கி..

    நண்பர்களுக்கு நன்றிகள் பல..

    தமிழன் இல்லாத நாடே இல்லை.. ஆனால் தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லையே..?? அது நடக்காதா என்று நினைக்கும் போது மனம் வேதனை படுகிறது..

    ReplyDelete
  3. நீ ரொம்ப நல்லவன்டா உன் மனசுக்கு எல்லாம் நல்லாவே நடக்கும்....


    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்..

    ReplyDelete
  4. உதவி என்றால் ஓடோடி வரும் இவர்களை பார்க்கும் போது அவர்கள் உங்களின் எழுத்துகளை எப்படி நேசித்து இருபார்கள் என்று தெரிகிறது.

    ReplyDelete
  5. போட்டோல செம கலக்கலா போஸ் குடுத்து இருக்கீங்க?? அண்ணி ஊருல இல்ல என்கிற தைரியமா ?? என்னமோ போங்க ஆளு ஸ்மார்ட் ஆகிடு வர மாதிரி இருக்கு ..

    ReplyDelete
  6. //தமிழன் இல்லாத நாடே இல்லை.. ஆனால் தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லையே..?? அது நடக்காதா என்று நினைக்கும் போது மனம் வேதனை படுகிறது..//

    த்ரீசம் ரிப்பீட்டேடேடேடடட!!

    ReplyDelete
  7. படிக்கவே மனசு சந்தோசமா இருக்கு.

    ReplyDelete
  8. விருந்தோம்பல் நம் தமிழனின் பண்பு என்பதை நிருபித்த அந்த நண்பர்களுக்கு நன்றிகள்.

    நண்பா ஜாக்கி, இந்த நட்பைப் பெற பெரிய இலக்கிய எழுத்தாளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தங்களின் எழுத்தும், கருத்தும் சென்றடையும் இதயங்களின் அன்பின் ஆழம் இது. :-)

    ReplyDelete
  9. எல்லா புகழும் ப்ளாக்கர்கே....

    ReplyDelete
  10. தமிழன் என்றொரு இனம் உண்டு..
    தனியே அவனுக்கொரு குணம் உண்டு..
    என்பது இதுதான் ஜாக்கி...

    தமிழினம் அளவிற்கு வாசிப்பறிவும், உலக நாடுகள் எல்லாம் சுற்றிய அனுபவமும், எல்லோரிடமும் ஒத்துப்போகும் பொறுமையும், சகிப்புதன்மையும் அதே நேரம் சிறுமை கண்டு பொங்கும் குணமும் கொண்ட இனம் இந்த உலகில் எங்குமே இல்லை...

    வாழிய தமிழ், வாழிய நற்றமிழர்... வாழிய..வாழிய.. வாழிய..வாழிய பல்லாண்டு...

    அயர்லாந்து நண்பர்களின் அருமையான விருந்தோம்பலுக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்,நன்றிகளும்...

    தங்களது நெகிழ்வான பகிர்விற்கும் நன்றி நண்பரே...

    ReplyDelete
  11. நெகிழ்வாக இருந்தது...
    அப்புறம்... ஸ்டைல் எல்லாம் ஏத்தி/மாத்தி ஒரே கலக்குறாப்புல தெரியுது???
    :)

    அன்புடன் மணிகண்டன்

    ReplyDelete
  12. நண்பரே ஜாக்கி,

    மானுடம் இன்னும் செத்து விடவில்லை என்று காட்டுகிறது உங்களின் நண்பரது செயல்.

    பலர் உள்ளனர் உலகத்தில். அவர்களால் தான் உலகில் இன்றும் மழை பெய்கிறது.

    ஒருமுறை நான் சென்னைலிருந்து புவனகிரி காரில் சென்றுகொண்டிருந்தேன். திண்டிவனத்திற்கும் பாண்டிக்கும் நடுவில் ஒரு பஸ் பழுது அடைந்து நின்று கொண்டிருதது.

    Bus must have been full, so I could notice people trying stay on the middle of the raod trying to get a ride to next place (Pondy) on anything. I decided long before I reached the place that I will give lift to old aged and people with infants and children becuause it was close to 6pm. I usually drive fast ( I could reach 140-160kmph between Dindivanam-Pondy and even 180kmph between Chengalput to Dindivanam). But that day I was very slow. Airport to Dindivanam my record is 50 minutes.

    I pulled over the side and stopped opening the window and saying only only aged and children please. But bunch of youth all lessthan 30 years of age overpowered the aged and women with kids entered the car. I said only old and children please. No one was ready to get down. 5 were sitting in the rear and 3 were sitting one above another in the front like animals. I asked all ofthem to get out. the purpose of me stopping my new car was not solved. I said with 9 people onboard, my car can't move. But no one was ready to get down. They all were saying "we are in urgency, we will adjust and sit". I said, "it is not the matter whether you sit or not, my car can't move with so many in it".

    Finally one from front got down. I noticed a old couple trying get in was left behind. I pity them. I was really not happy to have those youths inside in my car.

    Finally I had to drive with 7 persons in my car. I had no words for those people. When I stopped to get 2 of them down, one tried offer me Rs.10. I said, " I made big blunder by taking you all. The car was stopped to help only those who are physically weak. But you all fucked the purpose".

    I was explaining this to my wife. She was angry saying, "why did you stop at an unknown place to take unknown people in the car". She asked me, "what happens if one of them is a criminal- if possess kanja or illegal matter or a weapon. Please don't show your soft heart like this. You could land into trouble". She too is correct. I was also correct.

    Who is more correct?

    Another time I took someone like from Cuddalore and landed into trouble. Sometime later I will explain that. Then I felt my wife was correct.

    I wish all the best for your friend.

    Regards ,

    Bala.

    ReplyDelete
  13. சூப்பர்.

    மேஷாக், ஸ்டீபன் & family வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  14. நெகழ வைத்து விட்டது ....தாங்களோ தங்கள் மனைவியோ அமெரிக்கா வந்தால் வரவேற்று உபரசரிக்க நான் இருகிறேன் ..
    இப்படிக்கு ,
    உங்கள் பதிவை படித்து விட்டு online அத்தனை படத்தை பார்க்கும் முகமறியா தம்பி ..
    சூரியா :)--//தம்பி சூர்யாவுக்கு உனது பின்னுட்டம் மூலம் நீயம் என்னை நெகிழவைத்து விட்டாய்...
    நன்றி தம்பி சூர்யா..

    ReplyDelete
  15. ரொம்ப சந்தோஷமாக இருக்கு ஜாக்கி..

    நண்பர்களுக்கு நன்றிகள் பல..

    தமிழன் இல்லாத நாடே இல்லை.. ஆனால் தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லையே..?? அது நடக்காதா என்று நினைக்கும் போது மனம் வேதனை படுகிறது..//ஆம் சூர்யா நீங்கள் சொல்வது போல் அது ரொம்ப வேதனை மிகுந்த விஷயம்...

    ReplyDelete
  16. நீ ரொம்ப நல்லவன்டா உன் மனசுக்கு எல்லாம் நல்லாவே நடக்கும்....


    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்..//
    நன்றி ஸ்ரீ.. ஏதோ ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு சொன்னாமாதிரி இருக்கு மிக்க நன்றி ஸ்ரீ

    ReplyDelete
  17. உதவி என்றால் ஓடோடி வரும் இவர்களை பார்க்கும் போது அவர்கள் உங்களின் எழுத்துகளை எப்படி நேசித்து இருபார்கள் என்று தெரிகிறது.//

    நன்றி ரோமியோ பாய்... மிக்க நன்றி

    ReplyDelete
  18. /தமிழன் இல்லாத நாடே இல்லை.. ஆனால் தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லையே..?? அது நடக்காதா என்று நினைக்கும் போது மனம் வேதனை படுகிறது..//

    த்ரீசம் ரிப்பீட்டேடேடேடடட!!//
    நன்றி கலை...

    இப்போது தமிழ்நாடா? அல்லது அமீரகமா? அதன் பிறகு போனே செய்யவில்லை...

    எது எப்படியும் கிரஹபிரவேசம் நன்றாக நடந்து முடிந்து இருக்கும் என்று நம்புகின்றேன்..

    ReplyDelete
  19. போட்டோல செம கலக்கலா போஸ் குடுத்து இருக்கீங்க?? அண்ணி ஊருல இல்ல என்கிற தைரியமா ?? என்னமோ போங்க ஆளு ஸ்மார்ட் ஆகிடு வர மாதிரி இருக்கு//

    நன்றி ரோமியோ பாய்.. அது ஒரு 2 வருஷத்துக்கு முன்ன என்னோட பர்த்டேவுக்கு எடுத்தது... நண்பரோட மாடலிங் ஸ்டுடியோவுல..

    ReplyDelete
  20. படிக்கவே மனசு சந்தோசமா இருக்கு//
    நன்றி உலக நாதன் மிக்க நன்றி ... பகிர்விற்க்கு

    ReplyDelete
  21. விருந்தோம்பல் நம் தமிழனின் பண்பு என்பதை நிருபித்த அந்த நண்பர்களுக்கு நன்றிகள்.

    நண்பா ஜாக்கி, இந்த நட்பைப் பெற பெரிய இலக்கிய எழுத்தாளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தங்களின் எழுத்தும், கருத்தும் சென்றடையும் இதயங்களின் அன்பின் ஆழம் இது. :-)//

    நன்றி ரோஸ்விக் மிக்க நன்றி... நீங்கள் சொல்வது உண்மைதான்.. ஏற்றுக்கொள்கின்றேன்

    ReplyDelete
  22. எல்லா புகழும் ப்ளாக்கர்கே....//
    நன்றி ஜெட்லி.. மிக்க நன்றி

    ReplyDelete
  23. அயர்லாந்து நண்பர்களின் அருமையான விருந்தோம்பலுக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்,நன்றிகளும்...

    தங்களது நெகிழ்வான பகிர்விற்கும் நன்றி நண்பரே...//
    நன்றி துபாய்ராஜா.. தங்கள் தொடர் வாசிப்புக்கும் பின்னுட்டத்துக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  24. நெகிழ்வாக இருந்தது...
    அப்புறம்... ஸ்டைல் எல்லாம் ஏத்தி/மாத்தி ஒரே கலக்குறாப்புல தெரியுது???
    :)

    அன்புடன் மணிகண்டன்//

    என்ன செய்றதுடா? எவனும் நம்மை கூப்பிட்டு இப்படி போட்டோ எல்லாம் எடுத்து விகடன் அட்டைபடத்துல போட போறது இல்லை... நம்மை தளத்தல போட எவன்கிட்டயும் அனுமதி கேக்கபோறதும் இல்லை அதான்....

    போட்டோ நல்லா இருக்கா இல்லையா?

    ReplyDelete
  25. பாலா உண்ணை போல்தான் நானும் ரோட்டில் ஒரு வளைவில் கல் இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளேன்... என்னால் வாகனத்தில் சட்டென கடக்க முடியாது.. இறங்கி அந்த கல்லை எடுத்து சாலை ஓரத்தில் போட்டு விட்டுதான் செல்வேன்.. உன் மனைவி சொன்னதில் நியாயம் இல்லலாமல் இல்லை..
    நன்றி விரிவான அனுபவ பகிர்விற்க்கு

    ReplyDelete
  26. vaalthugal thala, ungalukkum annikku uthviya andha nanbarukkum enadhu vaalthugal

    ReplyDelete
  27. வாழ்த்துக்களும்,நன்றிகளும்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner