சாண்ட்விச் அண்டு நான்வெஜ் (18/11/09) (ஒருவாரம் விடுப்பு)

ஆல்பம்....

கேபிளாரின் தந்தை இறுதி அஞ்சலிக்கு உதவிசெய்ததிற்க்கு எனக்கு பலர் தொலைபேசியில் நன்றி தெரிவித்து கொண்டு இருக்கின்றார்கள்...விழுப்புரத்தில் ராஜபிரியன் எனும் நண்பர் சாட்டில் வந்து நன்றி தெரிவித்தார்...இணைய எழுத்தாளர்களின் பலமும் அவர்களின் உணர்ச்சிகளை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது....

இரண்டு நாளுக்கு பிறகு நேற்று கேபிளுக்கு போன் செய்து பேசினேன்... எனது பதிவுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்... அவர் அம்மா எனது பதிவை படித்து விட்டு அழுது விட்டதாக சொன்னார்.... அதே போல் அவர் வீட்டு மாப்பிள்ளை எப்படி இப்படி எல்லாம் கவனித்து எழுதுகின்றார்கள்... என்ற கேள்வி எழுப்ப.. எங்கள் ஆட்கள் மிகவும் திறமைசாலிகள் என்று அடித்து விட்டு இருக்கின்றார்...

நன்றி...

சென்னை சாலைகள் பற்றி நாம் சுட சுட பதிவு போட்டாலும் அதனை மக்கள் மத்தியில் பரிந்துரை செய்த திரட்டிமற்றும் தெனாலி தளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்....பத்திரிக்கைகளும் மோசமான சாலைகள் பற்றி எழுதி கிழிக்கின்றார்கள்... எப்போது விமோசனம் கிடைக்கம் என்று தெரியவில்லை...

செல்போன் நிறுவனங்கள் வைத்த ஆப்பு.....

ஒரு செகன்டுக்கு ஒரு பைசா என்ற விளம்பர படுத்த எல்லாரும் போய் விழுந்தடித்து போய் பிளான் மாற்றியவர்கள் எல்லாம் தலையில் கை வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.... லோக்கலில் ஒரு நிமிடத்துக்கு அதே நெட்ஒர்க்கில் பேச..10 பைசா... மற்ற நெட்ஒர்கக்கு பேச50 பைசா எஸ்டிடி 1 ரூபாய்.... ஆனால் இங்கு லோக்கலில் அதே நெட்ஒர்க்கில் பேச ஒரு செகன்டுக்கு 1 பைசா என்றால் ஒரு நிமிடத்துக்கு60 பைசா ஆகி விடுகின்றது..ஆப்பு வைத்த குரங்காக எல்லோரும் பிளானை மாற்ற எல்லோரும் ஓடிக்கொண்டு இருக்கின்றார்கள்... ஒரு செகன்டுக்கு ஒரு பைசா யாருக்கு பொறுந்தும் என்றால்? நான் சத்தியம் தியேட்டர்ல இருக்கின்றேன் பத்து நிமிஷத்துல வெளியே ந்துடுவேன் என்று போனை கட் செய்பவர்களுக்கு ஓகே...
ஆனால் என்ன படத்துக்கு போனே? எதாவது நல்ல பிகர் வந்து இருக்கா? என்று பேச்சு நீண்டால்......................... நஷ்டம் உங்களுக்கு லாபம் நெட்ஒர்க் வழங்கும் நிறுவனத்துக்கு...

திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி தொகுதிகாரர்களுக்கு அதிஷ்டம் கூரையை பிச்சிகிட்டு கொட்டபோகின்றது... ஒன்னுமில்லை... இடைதேர்தல் அங்கு நடைபெற போகின்றது.... அப்ப அந்த தொகுதி வாசிங்க அதிஷ்ட வாசிங்க தானே..?
மிக்சர்....

2012 படம் நானும் என் மனைவியும்... ஜோதி தியேட்டரில் பார்த்தோம்... எல்லா தியேட்டர்களும் ஹவுஸ்புல்..... அதனால் ஜோதி....தியேட்டர் ஏசி செய்யபட்டுள்ளது...மேல்தட்டு மக்கள் குடும்பத்தினருடன்
தியேட்டருக்கு வர ஆரம்பித்து விட்டார்கள்.. இரவு காட்சிக்கு
மழை வேறு அதனால் கூட்டம் குறைவாக இருக்கும் என்று நான் போட்ட கணக்கு தப்பாக விட்டது...பயங்கர கூட்டம்... ஒரு சீட் கூட காலி இல்லை. நல்ல ஓப்பனிங் படத்திற்க்கு கிடைத்துவிட்டது.... படம் வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு கொழுத்த லாபம் இந்த படம்... படத்தில் பனியனோடு வந்த பெண்ணை பார்த்ததும்ஒரே காட்டு கத்தல்... இருவரும் முத்தம் இட்டு கொள்ளும் போது இன்னும் கத்தல்... நம்மவர்கள் இன்னும் காய்ந்து போய் கிடக்கின்றார்கள்...தியேட்டரில் இரண்டு ரீலை முதலில் ஓட்டி பிழை கண்டு பிடித்து இரண்டாவது முறை அதே காட்சிகளை திருமபவும் ஓட்டினார்கள்... தலையெழுத்து.. அது முதல் காட்சியாக இருந்தாலும் பரவாயில்லை இரண்டாம் நாள் இரவு காட்சிக்கு இந்த கூத்து....தியேட்டரில் ஒரே காட்டு கத்தல்...

மதுரை காமராஜர் அஞ்சல் வழி கல்வியில் மாஸ்டர் ஆப் கம்யூனிகேஷன் ஜேர்னலிசம் படித்து கொண்டு இருக்கின்றேன்.. சில பல காரணங்களால் டுயூ டேட் தள்ளி டிடி எடுக்க இப்போது நான் எக்சாம் எழுதுவதில் சிக்கல்... இங்கு சென்னை சென்டரில் வாங்கி கொள்ள மறுக்கின்றார்கள்... எனது வீட்டில் தண்ணீர் வந்த பிரச்சனை எல்லாம் காரணமாக சொல்லி ஒரு கவரிங் லட்டர் வைத்து மதுரையில் உள்ள வாசகர் நண்பர் முருகன்...மூலம் அங்கே பல்கலைகழகத்தில் எனது பிரச்சனை குறித்து சொல்ல சொல்லி இருக்கின்றேன்... பார்ப்போம் என்ன ரிசல்ட் வருகின்றது என்று???? வேண்டிக்கொள்ளுங்கள் அடுத்த மாதம் எனக்கு எக்சாம்... இல்லையென்றால் அடுத்த வருடம் மே மாசம்தான் எழுத வேண்டும்.... எது எப்படி இருந்தாலும் மதுரை முருகனுக்கு என் நன்றிகள்...

காஞ்சிபுரம் கடவுளின் கருவரையில் செய்த லீலைகளுக்காக இப்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கின்றார்...... செல்போனில் அவரே எடுத்து ரசித்த கொள்ள எடுத்தது.. பின்பு செல் மக்கார் செய்ய சர்விஸ் சென்டரில்... கொடுக்க அங்குதான் அவருக்கு விதி விளையாடியது... அவன் செல்லில் உள்ள பைல்கள் காப்பி செய்து கொள்ள இப்போது.. அவரே போய் சரண்டர்... ஆகிவிட்டார்....சரி இவரை நம்பி ஏமாந்த பெண்களையும் விசாரிக்க வேண்டும் என்று போலிசார் குண்டை தூக்கி போட்டு இருக்கின்றார்கள்...

சென்னை கடற்கரை அழகு படுத்தபட்டுவிட்டது.... அங்கு எடுத்த படங்கள் விஷுவல் டேஸ்ட்டில் போட்டு இருக்கின்றேன்... வெளிநாட்டு வாழ் தமிழர்கள் பார்த்து பயன்பெறவும்...


விஷுவல் டேஸ்ட்..... சென்னை கடற்கரை....
எல்லாம் மழை வருகின்ற அவசரத்தில் எடுத்து.. இன்னொருநாள் ரிலாக்ஸ் ஆக எடுக்கின்றேன்.... படத்தை கிளிக்கி பார்க்கவும்...
நான்வெஜ்.....

ஜோக்கு....

உலக அளவில் ஒரு ஆராய்சி நடந்து கொண்டு இருந்தது.. அதாவது செமனில் எந்தளவுக்கு குளுக்கோஸ் இருக்கின்றது என்ற ஆராய்சி... அதற்க்கான கருத்து அரங்கு நடந்து கொண்டு இருந்தது... உலகம் எங்கும் உள்ள ஆராய்சியாளர்கள் அங்கு ஆண் பெண் பேதம் இல்லாமல் குழுமி இருந்தனர்.... கருத்தரங்கில் ஒரு பெண் எழுந்து கேட்டாள்? சார் உண்மையிலேயே... அதில் குளுக்கொஸ் இருக்கா? கருத்தரங்கை நடத்திக்கொண்டு இருந்த பேராசிரியர்.. சில ஆதாரங்களை ஸ்லைடு போட்டு காட்டினார்... அப்படியம் அந்த பெண் கேட்டாள்? அது இனிப்பாக இல்லையே என்றாள்... உடனே ஆண்கள் பக்கம் சிரிப்பொலி வர... அவள் சட்டென்ற அந்த அரங்கை விட்டு வெட்கத்துடன் வெளியேறினாள்... அவள் போனதும்.. அந்த பேராசிரியர் சொன்னார்... எதையும் நாக்கின் நுனியில் வைத்தாள்தான் சுவை உணர முடியும் என்றார்...

குறிப்பு...ஹைதராபாத்தில் ஷுட்டிங்.. உடனே போகின்றேன்...எப்படியும் ஒரு வாரத்துக்கு மேல் ஷுட்டிங் நடக்கும் என்ற நினைக்கின்றேன்... இன்னும் ஒரு வாரம் ஹைதராபாத் வாசம்...திரும்ப நேரம் கிடைக்கும் போது உங்களை சந்திக்கின்றேன்...
நன்றி

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

18 comments:

  1. // அதே போல் அவர் வீட்டு மாப்பிள்ளை எப்படி இப்படி எல்லாம் கவனித்து எழுதுகின்றார்கள்... என்ற கேள்வி எழுப்ப.. எங்கள் ஆட்கள் மிகவும் திறமைசாலிகள் என்று அடித்து விட்டு இருக்கின்றார்...//

    ஆகா..ஓகோ..பேஷ் பேஷ்..!

    ReplyDelete
  2. வெட்டி விளம்பரம் அடிக்கற எல்லாருக்கும் வெப்பேண்டா வேட்டு..!

    ReplyDelete
  3. ஜாக்கி
    நீ ரொம்ப லீவு போடுறே, அப்புறம் மெமோ கொடுக்க வேண்டியிருக்கும், சொல்லிட்டேன்...

    போயிட்டு வா நண்பா, போன் பதிவு மாதிரியே இதுக்கும் நானே கமெண்டுகளுக்கு பதில் போட்டுடறேன்
    :)
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  4. //ஜாக்கி
    நீ ரொம்ப லீவு போடுறே, அப்புறம் மெமோ கொடுக்க வேண்டியிருக்கும், சொல்லிட்டேன்...//

    ரீப்பீட்டு...

    ReplyDelete
  5. //காஞ்சிபுரம் கடவுளின் கருவரையில் செய்த லீலைகளுக்காக இப்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கின்றார்...... செல்போனில் அவரே எடுத்து ரசித்த கொள்ள எடுத்தது.. பின்பு செல் மக்கார் செய்ய சர்விஸ் சென்டரில்... கொடுக்க அங்குதான் அவருக்கு விதி விளையாடியது... அவன் செல்லில் உள்ள பைல்கள் காப்பி செய்து கொள்ள இப்போது.. அவரே போய் சரண்டர்... ஆகிவிட்டார்....சரி இவரை நம்பி ஏமாந்த பெண்களையும் விசாரிக்க வேண்டும் என்று போலிசார் குண்டை தூக்கி போட்டு இருக்கின்றார்கள்..//

    எப்படியெல்லாம் சிக்குறாய்ங்க..

    ReplyDelete
  6. /ஒரு செகன்டுக்கு ஒரு பைசா //

    நல்லவேளை பயபுள்ளைக மாத்த சொன்னாலும் நானெல்லாம் மாத்தலேல..

    ஒரு தடவ கால போட்டோம்னா வைக்கிறதுக்கு 2 மணி நேரம் ஆகும் ..

    ReplyDelete
  7. All the best for your Hyderabad shooting, so we are going to get Hyderabad experience....

    ReplyDelete
  8. சாண்ட்விச் சூப்பர் அண்ணே....

    ReplyDelete
  9. அண்ணோவ்... சாண்ட்விட்ச் சூப்பர்.. நீங்க தேர்வு எழுத வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்... உங்க ஹைதராபாத் அனுபவங்களுக்காக மீ தி வெயிட்டிங்.... :)

    ReplyDelete
  10. போய்ட்டு வேலையை செஞ்சிட்டு நிம்மதியா வாங்க தலை நாங்க வெயிட் பண்ணுறோம்.

    ReplyDelete
  11. Good except Non veg.

    Yarappa athu Pattasu Pondi. Engairunthuthan killaamparayenga, onnum puriyalayey

    ReplyDelete
  12. இந்த வருட 250வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. /
    செல்போன் நிறுவனங்கள் வைத்த ஆப்பு.....
    /

    தேவையானவங்க மட்டும் மாறினால் போதும் எனக்கு மிக பயனுள்ளதாய் இருக்கிறது. இருந்த போதும் Dual SIM போன் வெச்சிருக்கோம்ல
    :))))

    ReplyDelete
  14. BPL நிறுவனம் இந்த ஒரு செகண்ட்க்கு ஒரு பைசா என்கிற scheme கொண்டு வந்து அப்பறம் அதை திரும்ப பெற்று கொண்டது.

    ReplyDelete
  15. ஜாக்கி,

    நல்ல வாயன் சம்பாதித்தை நாறவாயன் தின்னுபார்த்த கதையாஇருக்கு இந்த செல் போன் கம்பனிகாரங்க கதை. பாவம் மக்கள் எப்பிடியாவது ஒரு செல் போன் வசிக்கலாம்முன்னு நினைக்கிறது கெட்டுபோகும் போல் தெரிகிறது.

    ஒரு லச்சம் ரூபாய் சம்பாதிக்க நம்ப ஆள் எப்பிடி நாக்கு தள்ளி போறான் பாருங்க. ஆனா செல் போன் கம்பெனி மற்றும் தொலைதொடர்பு மந்திரி சம்பாதிகறது எத்தனை கோடி ????

    கொஞ்சம் பணம் சம்பதிகறது தான் கஷ்டம் போலிருக்கு, நிறைய சம்பாதிகறது ரொம்ப ஈசி போல.

    ஜாக்கி வா, நாம நேரா நிறைய சம்பாதிக்க போகலாம்.

    நன்றியுடன்,

    பாலா,
    நைஜீரியா

    ReplyDelete
  16. ஜாக்கி,

    யாரு அந்த பய 'பட்டாசு பாண்டி'? சரியான லூசு மாதிரி பேசுறான். அவன் blog யை பார்த்தால், எதோ ஒரு பொண்ணு துணியெல்லாம் அவுத்து போட்டுட்டு துப்பாக்கிய கையிலே எடுத்துகிட்டு பறக்குது. சரியான கிறுக்கனா இருப்பான் போல.

    கேபிள் வீட்டு துக்கதைப்பற்றி பேசுனா
    //ஆகா..ஓகோ..பேஷ் பேஷ்..!//
    ன்னு சொல்லுறான். கேனயன் னா இருப்பானோ. எப்பிடி அடுத்தவன் துக்கத்துல சந்தோசம் கிடைக்கிறதோ இவனுக்கெல்லாம்.' சைசோ பாண்டி'ன்னு பேரு வசிக்கலாம் அவன்.

    இப்படிக்கு,

    பாலா,
    நைஜீரியா.

    ReplyDelete
  17. வெளிநாட்டு வாழ் தமிழர்கள் பார்த்து பயன்பெறவும்...
    I like this PUNCH.

    Another nice post. Looking forward for your future posts regarding Hyderabad

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner